BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசிலப்பதிகாரம் Button10

 

 சிலப்பதிகாரம்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சிலப்பதிகாரம் Empty
PostSubject: சிலப்பதிகாரம்   சிலப்பதிகாரம் Icon_minitimeFri Mar 26, 2010 2:57 am

சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலை சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர்.
சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் ஆவார்.
சிலப்பதிகாரம் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
சமண மதத்தைச் சார்ந்த முனிவரான இளங்கோ, தன்னுடைய காவியத்தின் எவ்விடத்தும் தனது மதக் கருத்துக்களையோ, அல்லது தனது சேர நாட்டின் பெருமையை மற்ற நாடுகளை இழித்துரைத்தோ கூறாதது இந் நூலின் நடுநிலைமைக்கு மேலும் அணி சேர்ப்பதாக திகழ்கிறது.


கதைச் சுருக்கம்
*************

சோழ நாட்டைச் சார்ந்த மாசாத்துவான் எனும் பெரு வணிகனது மகன் கோவலனும் மாநாய்க்கன் என்பவனது மகள் கண்ணகியும் மணம் புரிந்து மகிழ்வுடன் வாழ்ந்துவந்தனர். தலைக்கோல் பட்டம் பெற்ற, ஆடற்கலை அழகி மாதவி கணிகையர் குலத்திற் பிறந்தவளாவாள். அவளின் கானல் வரிப்பாடலின் போது மனம் மயங்கி கண்ணகியைத் தவிர்த்து மாதவியுடன் இன்பத்தில் திளைத்து தன் செல்வம் முழுதும் இழந்தான் கோவலன்.
கோவலன் தன்னைப் பிரிந்து சென்றபோதும் கற்பொழுக்கம் சிறிதும் பிறழாமல் அவனுடன் மனதளவிலேயே வாழ்ந்துவந்தாள் கண்ணகி. செல்வம் முழுதும் இழந்த கோவலன் மாதவியை நீங்கி கண்ணகியிடம் சேர்ந்தான். கண்ணகியின் காற்சிலம்பை விற்று வரும் பொருளில் வாணிகம் செய்ய விரும்பி, பாண்டிய நாட்டுக்கு அவளுடன் பயணம் மேற்கொண்டான்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தனது மனைவியின் காற்சிலம்பை செப்பனிட தன் பொற்கொல்லனிடம் அதை அளித்திருந்தான். அதை களவாடிய பொற்கொல்லன் சிலம்பை காணவில்லை என பாண்டியனிடமே முறையிட்டிருந்தான்.
இந்த நிலையில் பாண்டிய நாட்டிற்கு சிலம்பு விற்க வந்த கோவலன், தனது மனைவி கண்ணகியை புத்த துறவி கவுந்தியடிகளது பாதுகாப்பில் இருத்தினான். கண்ணகியின் விலைமதிப்பற்ற காற்சிலம்பை அரசனுக்கு விற்க விரும்பி, அவளது ஒரு காற்சிலம்பை மட்டும் எடுத்துக்கொண்டு அரசவை பொற்கொல்லனை சந்தித்தான். கண்ணகியின் காற்சிலம்பு அரசியின் சிலம்பை ஒத்திருந்தது. வஞ்சம் மிகுந்த பொற்கொல்லன், காவலர்களை அழைத்து கோவலனே அரசியின் சிலம்பை களவுசெய்தவன் என பொய்யுரைத்தான்.
வழக்கை தீர விசாரிக்காத நெடுஞ்செழியன், "கொண்டக் கள்வனை கொணர்க" என்பதற்கு பதில் "கொன்றக் கள்வனை கொணர்க" என்று கூறி விட்டான். ஆதலால் கோவலனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கருதி அவன் கொலைக் களத்தில் கொல்லப்பட்டான்.
கோவலன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த கண்ணகி, தன்வசமிருந்த மற்றொரு காற்சிலம்புடன் அரசவை விரைந்தாள். அரசனிடம் நீதி கேட்டாள். அரசியின் ஒரு காற்சிலம்பில் இருந்ததோ முத்து மணிகள். கண்ணகியின் காற்சிலம்போ மாணிக்கப் பரல்களைக் கொண்டிருந்தது.
தவறிழைத்ததை உணர்ந்த நெடுஞ்செழியன், "யானோ அரசன்? யானே கள்வன்" என்றுரைத்தவண்ணம் தரையில் வீழ்ந்து உயிரிழந்தான். பின்னர் பாண்டியமாதேவியும் உயிரிழந்தாள்.
கோபம் தணியாத கண்ணகி, தன் மார்பைக் கிள்ளி மதுரையின் மீது எறிந்தாள். அவளது கற்பின் கணலைத் தாங்க இயலாமல் மதுரை கொழுந்துவிட்டு எரிந்தது.
பின்னர் சேரநாட்டுக்கு வந்தாள் கண்ணகி. கோவலன் இறந்து 14 நாட்கள் கழி்ந்தபின்னர் விண்னுலகிலிருந்து விமானம் ஒன்று இறங்கியது. அதிலிருந்த வந்த கோவலன், கண்ணகியை அழைத்துச் சென்றான்.
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை தோன்றினாள். கணிகையர் குலத்திற் பிறந்திருந்தாலும், கோவலனையன்றி வேறொரு ஆடவனை மனத்தும் நினையாது வாழ்ந்த மாதவி புத்தமதத்தைத் தழுவி துறவறம் பூண்டு வாழ்ந்தாள்.
சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நிலைப்பாடுகளாவன
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றுவர்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்


கதாப்பாத்திரங்கள்
**************

கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள்.
கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழிவினை காரணமாக உயிரிழந்தவன்.
மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே
வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய்.


THANKS:


WIKIPIDIA
Back to top Go down
 
சிலப்பதிகாரம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: