BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகவிதை தொகுப்பு  Button10

 

 கவிதை தொகுப்பு

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

கவிதை தொகுப்பு  Empty
PostSubject: கவிதை தொகுப்பு    கவிதை தொகுப்பு  Icon_minitimeTue Jul 17, 2012 5:48 am

அன்பு நண்பர்களே!! இந்த வார கவிதை நேரத்தில் வந்த கவிதைகளின் தொகுப்பு உங்களின் அன்பான பார்வைக்கு படித்து விட்டு மறக்காமல் கவிதை எழுதிய நண்பர்களை பாராட்டுங்கள் நன்றி ..


AruNesh:


நம் உள்ளங்களில் வஞ்சம் இல்லையெனில் ..
இவ்வுலகில் அன்பிற்கு பஞ்சம் இருக்காது!!
அன்பு காட்டும் நெஞ்சம் இருப்பின்…..
உறவுகள் உன்னிடத்தில் தஞ்சம் பெரும்..



anbuselvi20052000:


ஐந்து வயதில்செய்த குறும்புகளை மறந்தேன்
அம்மா சொல்ல கேட்டு மகிழ்ந்தேன்
பள்ளி பாடங்களை பல தடவை மறந்தேன்
ஆசிரியரின் உதவியால் அதனை அறிந்தேன்
ஆசைப்பட்ட பெண்ணின் பின்னால் அலைந்தேன்
அவள் வெறுத்தால் என்னையே மறந்தேன்
வாழ்க்கையில் வெற்றிபெற நாளும் உழைத்தேன்
அதில் என் பசி தூக்கம் என் வயதையும் மறந்தேன்
அன்பானவர்கள் மறைவில் மீளா துயரில் ஆழ்ந்தேன்
ஆறுதல் வார்த்தைகளின் அரவணைப்பில் துன்பம் மறந்தேன்
மறதி மனித மனதுக்கு மருந்து
நன்றல்லது அன்றே மறக்க மறதி வேண்டும்



newdust:


ஏதும் சாதிக்காத மனிதனுக்கும்
சாதித்து நிலைபெற்ற மனிதனுக்கும்
நெஞ்சத்தில் வஞ்சம்...
இப்போது வஞ்சம் பொது உடமை சொத்து
வீராப்பாய் பேசி செல்வர். ஊரார்க்கு வீரம்காட்டி
அப்பாவி வறியவனை கூரிய வாள் போல்
சொற்கள் வீசி தப்பாது வஞ்சம் தீர்ப்பர்
பிறர் தம் தாழ்வில் வஞ்சம் சேர்ப்பதை விட ,
வாழ்வில் முன்னேறி வஞ்சம் தீர்ப்பது அழகுக்கும் அழகன்றோ !!!



ramKL:


சிலபேர் mic எடுத்தால் mute
போடுகிறோம் ...சிலபேர் பேசும்போது கேட்கவே இல்லை என்கிறோம் ...அதற்கு காரணம் மறதி ... எதனால் ?
Unmute செய்ய மறப்பதால் தானே ...



sochweet:


மறந்தால் மனிதன்
வஞ்சகம் இருந்தால் மிருகம்



sweetstronger:


மழையே உனக்கு கிடைத்த
அதிர்ஷ்டம் கூட எனக்கில்லை உன் பாதம் தொட…
அந்த அதிர்ஷ்டம் கூட என்னை மறந்து போனது ...


KaNcHaNaSuGi:


மனிதனின் மிகப்பெரிய
சக்தியே -மறதிதான் எவ்வளவு பெரிய
துயரையும் பிரிவையும் மறக்கின்றான் !
மறந்து தன் நிலை இழந்து ஆடுகின்றான் !
எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும் உறவையும் மறக்கின்றான் மறந்து தன்னிலை இழந்து
துயர் கொடுக்கின்றான் மனிதன்


KaNcHaNaSuGi:


நீ தான் தங்கம்
என்று மனதில் நினைத்து வந்தேன்
வந்த பிறகு தான் தெரிந்தது
உன் மனதில் எல்லாம் வஞ்சம்



karthis:


1.மனதில் வேண்டும் உறுதி
மூளையின் சோர்வு மறதி
மறதிக்கு மருந்து அடி
உன் தலையில் விழ இடி

2. நாட்டில் நிலவுது பஞ்சம்
மக்கள் மனதில் இருக்குது
வஞ்சம் அரசாங்கத்தில் வாங்குறான்
லஞ்சம் நீ ஒரு கஞ்சம்


priyan:


காலையில் பார்த்தேன் உன்னை மாலையில்
பேச நினைத்தேன் அது நீயா என்று மறந்து விட்டேன்


priyan:


உன் இதயம் சுட்டவளை இமைக்கும் முன் மறந்துவிடு உன் இதயம் தொட்டவளை இறக்கும் வரை மறக்காதே



sangeet7:



ஆர்வமாக சமையல் செய்யும்
போது உப்பு போடாமல் இருப்பது மறதி
அதே கோவமாக சமையல் செய்யும்போது உப்பு
போடாமல் இருப்பது வஞ்சம்


Rulespoochandi:


ஓவ்வொரு வாரமும் கவிதை நேரம் உறுதி
இன்று நமக்கு கொடுக்கப்பட்ட
தலைப்போ மறதி!! தலைப்பை எடுத்து
வைத்தேன் எண்ணத்தில் கருதி
மனிதனுக்கு மகாதேவனின் பரிசாம் இந்த மறதி!!
அந்த பரிசுமொரு காரணமென்பது உறுதி
நான் இன்று கவி பேசாததற்கு!!!!



dust:


மறதி இறைவன் இரக்கப்பட்டு மனிதனுக்கு கொடுத்த கொடுப்பினை மறதி மட்டுமே நம்மை உதடு விரித்து சிரிக்க வைக்கிறது 1000 அடிகள் வாங்கியும் சுவடு மறந்து பறக்க வைக்கிறது கறைகள் துடைத்து கண்கள் சிரிக்க
சிறைகள் உடைத்து இறக்கை விரிக்க
மறதி மனிதனுக்கு மாபெரும் சொத்து ..


ramKL:


மறதி ஒரு தேசிய வியாதியானால்
வஞ்சம் ஒரு உலகவியாதிதானே


AruNesh:


மறதி மனிதருக்கு ஒரு வரம் ,
என்று எவரோ ஒரு கவிஞ்ன்
எழுதியதினால் தானோ ,,
ஒவ்வொரு முறை ஆட்சிக்கு
வரும் பொழுதும் மறந்து விடுகின்றார்கள் மக்களை


priyan:


உன்னை தொடர்புகொள்ளும் ஒவ்வொரு
முறையும் துண்டிக்கப்படுகிறேன் ! நீ இன்றி
நீளும் ஒவ்வொரு இரவுகளிலும் உன் நினைவுகளால்
தண்டிக்க படுகிறேன் ! என் இதய துடிப்பின்
ஓசையை விட உன்னைப்பற்றிய நியாபகங்களின்
ஓசைகள் என் தனிமையான உலகத்தில் ...!
நிழலோடு வாழ்ந்து நிஜத்தோடு
வீழ்ந்து மறந்தும் மறக்காமல் கடந்து
போகின்றேன் நீ இல்லாத வாழ்கையை தினம் தினம்
போலியாய்
priyan: ஒவ்வொரு மணிக்கு ஒரு முறை
சத்தமிடும் கடிகாரத்தின் ஓசையில்
மீண்டும் துயில் கொண்டுவிடுகிறது சற்று
முன்வரை நான் மறந்து போனதாய்
நினைத்த உன் நியாபகங்கள் ! உன்னை
மறப்பேனா மறந்துதான் போவேனோ !!!
Back to top Go down
 
கவிதை தொகுப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» மொக்கைகளின் தொகுப்பு
» தமிழ் கவிதைகள்
» கவிதை நேரம்
» நட்பு கவிதை
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES-
Jump to: