BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் Button10

 

 அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் Empty
PostSubject: அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்   அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் Icon_minitimeThu Aug 16, 2012 12:31 pm

காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)

* அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.

சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.

இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.

வாய் நல்லதானால் ஊர் நல்லது.

கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.

காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.

மயிர் சுட்டுக் கரியாகாது.

ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.

விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)

திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)

பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)

ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.

ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.

ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.

தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.

அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.

அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.

தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.

எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.

வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.

சாமி காட்டுமே தவிர ஊட்டாது.

அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.

இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.

உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.

கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.

தெய்வம் பாதி திறமை பாதி.

தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.

ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.

சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.

தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.

அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.

மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.

கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.

கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.

பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.

குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.

பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.

அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.

எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.

அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.

முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.

கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

அக்காள் இருந்தால் மச்சான் உறவு.

முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.
Back to top Go down
 
அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!
» சில பழமொழிகள்
» பழமொழிகள்
» தமிழ்ப் பழமொழிகள
» பழமொழிகள் வழி பண்பாடு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: