BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகவிதை நேரம்  Button10

 

 கவிதை நேரம்

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

கவிதை நேரம்  Empty
PostSubject: கவிதை நேரம்    கவிதை நேரம்  Icon_minitimeTue Aug 28, 2012 1:46 pm



PaTTaaSU: ======
சிந்தனை பேழையை
திறக்கும்
திறவுகோல்.
கற்பனை

PaTTaaSU: ========உண்மை
வாயிலை கடந்து,
காதல் கதவினுள் நுழைந்து,
கற்பனை ஊஞ்சலில்
நான் தொடுத்த
வார்த்தை மாலைகள்,
என்றென்றும் உனக்காகவே
வாடாமலிருக்கும்.

PaTTaaSU: =======
சிந்தையில் மலர்ந்த
யோசனையோடு,
மகரந்தசேர்க்கை செய்த
கற்பனையில்,
உருவானவை
கவிதைகள்.

PaTTaaSU: =======
கற்பனை வானில்
சிறகடித்து பறக்கும்
சிந்தனை பூக்கள்
கவிதைகள்


Arunesh:


கற்பனை என்னும் ஒரு விதையில் தான் …
க‍விதை என்னும் பல மரங்கள் வளர்கிறது …
அம்மரங்கள் பூப்பதும், காய்ப்பதும் ,கனிவதும்
உன் கற்பனையிலே ..
__________________________________
கற்பனைக்கே எட்டாத கவிதை நீ ..!
உனக்கு கவிதை எழுத வார்த்தைகள் யோசித்தே..
வற்றிப்போகிறது….என் தாய்மொழி…
__________________________________
தாய்மொழியாம் தமிழ் பயின்று
ஒருவரிகவிதை கூட எழுத உதவாத
உங்கள் கற்பனைகள் எதற்கு .?
விட்டுவிடுங்கள் அதை விற்பனைக்கு ..
__________________________________
விற்பனைக்கு வாங்க முடியாத
ஒரே சொத்து உந்தன் கற்பனை ..!
__________________________________




veera:


கற்பனைக்கு கடிவாளம் தகுமோ !!
மாதா பிதாக்களின் கற்பனை -
மருத்துவராக, பொறியாளராக
மாபெரும் தொழில் அதிபராக
தங்கள் மகவின் வாழ்க்கை
தரத்தை உயர்த்த

பிள்ளைகளின் கற்பனை -

அப்துல்கலமாக, பில்கேட்ஸ்
ஆக, அண்டத்தை ஆராய்பவனாக
பூமியில் மாந்தர்களின்
வாழ்வாதாரத்தை உயர்த்த

பெற்றோர்களே !

மக்களின் கற்பனைக்கு
கடிவாளம் வேண்டுமோ?
ஆரோக்கியமான கற்பனைக்கு
அடியுரம் இடுங்கள்
அவர்களுடன் சேர்ந்து
நீங்களும் விண்ணை
தொடுங்கள் !!





karthis:


கற்பனை மையூற்றும் பேனா இல்லை
எனவே என்னிடம்
கவிதையும் இல்லை!!

Lakshana:

தீவிரவாதம் இல்லா இந்தியா....
மின்தடை இல்லா தமிழகம்...
லஞ்சம் வாங்கா அரசியல்வாதி...
முதியோர் இல்லம் இல்லா மாநிலம்...
இவை அனைத்தும் என் கற்பனையே.....
நாம் யோசித்தால் நாளை சாத்தியமே!!

உன்னுடன் வாழும் வாழ்கை கற்பனையானாலும் ...
மரண மேடை வரை நீடிக்க யாசிக்கிறேன்.....


new _dust :


யோசனை :

வெற்றி என்னும் தேன் சுரக்கும் !!
மகிழ்ச்சி என்னும் பூ பூக்கும் !!
வேதனை எல்லாம் சாதனை ஆகும் !!
வாழ்க்கை பயணம் எளிதாகும் !!
கேட்டுப்பார், உன் தாயின் யோசனையை !!

கற்பனை :

சிறகடித்து பறந்து பார்த்தேன்..!
குயிலோடு சேர்ந்து கூவி பார்த்தேன்..!!
அரண்மனை மாடங்களில், அழகான தோட்டங்களில்
ஐஸ்வர்யா வுடன் ஆடி பார்த்தேன் !!
உசேன் போல்டுடன் 100 மீட்டர் ஓடி பார்த்தேன்..!!
நண்பன் என்னை உலுக்கியதும்,
கண் விழித்து தேடிப்பார்த்தேன் !!
கற்பனையில் கிடந்து நான் உழன்ற காட்சிகளை !!




aargeeba :


யோசித்து யோசித்து பார்த்தேன்..,
கற்பனைகளை யாசித்தும் பார்த்தேன்..!!
வரவே இல்லை வார்த்தைகள் !!!
sindhu:
காதலுக்கு கற்பனைகள் அழகு .!
ஆனால் ..,
கற்பனையில் மட்டும்தான் காதல் அழகு . ..


anbuselvi:


ஏருழவர் பயிர்செய்ய கழனிகளில் நெல் நிறைய
மாந்தர்களின் மனம்குளிர மழையளவு அதிகமாக
கடலிலே மீனவர்கள் கவலையின்றி மீன்பிடிக்க
காற்றிலே மாசுஎனும் களங்கம் நீங்கிவிட
பறவைகளின் பாடலிலே விலங்கினங்கள் நடனமாடும்
உவகையான காட்சி நம் உள்ளத்தை நிறைத்துவிட
மண்ணில் மக்களெல்லாம் மகிழ்வான வாழ்வுபெற
இயற்கையன்னையின் இனிய அரவணைப்பில்
நாளும் ஆனந்தம் நம்மில் நிறைந்துவிடும்
எதிர்காலம் ஒன்றைத்தான் எதிர்பார்த்து நிற்கின்றோ
கற்பனையாய் இருப்பதெல்லாம் கனவாக மாறாமல்
நினைவாக நிறைவேற நாளும் முயன்றிடுவோம்



Anbuselvi :


விட்டுக்கொடுப்பதை வேதமாகக் கூறுபவர் சண்டையிட்டுக் கொள்வதேன்
வீணாகும் குழாய்நீரை பார்த்தும் பாராமல் வேகமாகச் செல்வதேனோ
அழிவுக்கு வழிவகுக்கும் பிளாஸ்டிக் பைகளை ஆர்வமுடன்
பயன்படுதுவ்தேன்
புகை நமக்குப் பகையென்று தெரிந்த பின்னும்
மனிதர்கள் புகைப்பதேனோ
சாதிக்க நினைக்காமல் பேதலித்து இளைஞ்ரெலாம்
போதைக்கு அடிபணிவதேனோ
அழியும் உடம்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து
நன்னெறிகளை மறப்பதேனோ


எதிர்கால சந்ததிக்கு எடுத்துக்காட்டாய் இல்லாமல்
எண்ணியபடி நடப்பதேனோ
மாறிவரும் உலகிலே மாற்றத்தை ஏற்படுத்த
மனிதர்கள் முயலாததேனோ
ஆக்கப்பணிகள் ஆயிரம் இருந்தும்
அழிவினைப் பற்றி சிந்திப்பதேனோ
தனக்கென வாழ்கின்ற தன்னலம் மிக்கோர்
பிறர்க்கும் அளிக்க முன்வராததேனோ
மனமாற்றம் வாராமல் மக்கள் இனம்
முன்னேற்றப் பாதையை மறந்ததேனோ
நல்லெண்ணம் நம்மிடையே வளர்ந்து
நாடு முன்னேறுவது எப்போது
யோசித்து வழி காண்போம்
வாழ்வில் வெற்றிபெற!!


Ramya:

கற்பனை என்பது கவிஞ்ர்களுக்கு நீருற்று
ஆனால் நமக்கோ கானல் நீர்
கானல் நீர் நிஜமல்ல நிழல்
நிழல் ஒரு நாள் நிஜமாகும்!! எப்படி ?
சிறந்த குதிரைக்கு சிறப்பு கடிவாளம்
கற்பனை குதிரைக்கு சிறப்பு
முயற்சி எனும் கடிவாளம்
கற்பனையோடு முயற்சி இணைந்தால் ....
கற்பனை என்பது நமக்கும் நீரூற்றே!!
Back to top Go down
 
கவிதை நேரம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: