BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 kavithai neram

View previous topic View next topic Go down 
AuthorMessage
ramyabtc



Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

PostSubject: kavithai neram    Fri Nov 09, 2012 3:12 pm

இந்த வார தித்திக்கும் தீபாவளி கவிதை நேரத்தில் வந்த கவிதைகள் உங்கள் பார்வைக்கு

1. new_dust :

தித்திக்கும் திருநாளாய்.,
எத்திக்கும் பெருநாளாய்,
ஐப்பசியில் ஒரு நாள்,
தீப ஒளி திருநாள் !!
சிலநாட்கள் செலவழித்து,
பலகாரம் சுட்டு வைப்பர்.
புத்தாடை புதுவாசமாய்,
அயலாருக்கும் பகிர்ந்தளித்து,
அன்புடனே மகிழ்ந்திடுவர்..!
வருடத்திற்கொருமுறை
வரவு தரும் தீப ஒளி திருநாள்.,
மத்தாப்பூ சத்தத்திலே,
உயிர் செலவின்றி முடிந்தாலே,
சிறப்பாகும், மானுடம் செழிப்பாகும்.

2. karthis


தீபாவளி
தீப ஒளியுடன் கொண்டாட வேண்டியது
தீப ஒலியுடன் அல்ல.


3. karthis


தெளிவான நீல வானத்துடன்,
மலர்களின் வாசனையுடன்,
வண்ண நிற கோலங்களுடன்,
மற்றும் ஒளி பட்டாசுகளுடன்,
கொண்டாடுவோம்,
மகிழ்ச்சியான தீபாவளியை,
வெற்றித் திருநாளாய்.

lavanya:


தீபங்கள் ஏற்றும் திருநாள்,
நெய் மணக்கும் பண்டங்களும்.,
மலர்களின் வாசனையுடன் சேர்ந்து,
என் இல்லம் புதுவாசம் பெறும்.
வெடிச்சத்தம் காதை பிளக்கும்
என் வீட்டு வாசலில்...
புத்தாடை புத்துணர்ச்சி தரும்
அனைவரது நெஞ்சத்தில்,
தித்திக்கும் தீபாவளி..,
எங்கள் வீட்டு தீபாவளி !!!

kaviasmi:


ஏற்ற தாழ்வுகளை,
வெட்ட வெளிச்சமாய்
காட்டும் பணக்கார பண்டிகை
தீபாவளி !!
பிஞ்சு உள்ளங்களில் ஏக்கமாய்
நஞ்சை கலக்கும் வானவேடிக்கை !
தீபாவளியா தீராத வலியா ?!

பனித்துளி :

தீபாவளி !! தீபம் என்றால் ஒளி விளக்கு
ஆவளி என்றல் வரிசை
வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி
ஒளி தரும் பண்டிகையே இந்த தித்திக்கும் தீபாவளி

keerthana:


தீபஒளி
பரபரப்பில்
பற்றிக்கொண்ட
விழாக்கால
கடைகளையெல்லாம்
வெள்ளக்காடாய்
மிதக்கவைத்துவிட்டு
வெளியேறி
சொந்த ஊரு
சென்றுவிட்ட
என் தமிழ்
இளைஞர்களைபற்றி
உருமாறிப்போன
வீதிகளும்
பெருமூச்சு
விட்டுக்கொண்டே
ஒன்றுக்கொன்றாய்
வினவிக்கொள்கின்றன
அசுரனை
கொன்றுவிட்ட
இந்நாள்தான்
இவர்களுக்கு
இனியநாளாமென்று...!

macho :


நீ திரி கிள்ளிய சந்தோஷத்தில்
செத்துப் போகிறது பட்டாசு

Ramya:

தீப ஓளியில் மறைந்திருக்கும் கண்ணீர்த்துளி ..
சரவெடியில் மறைந்திருக்கும் சஞ்சலம்
காசெல்லாம் கரியாக்கி
தீபாவளியை களிக்கின்றோம் பலர்
ஆனால் காசில்லாமல் தங்கள் வாழ்க்கையை .திரியாக ..கழிக்கின்றனர் சிலர்
எதனை துயரங்கள் மறைந்திருந்தாலும் தீபாவளி என்றதும் துள்ளலும் மகிழ்ச்சியும் தான் தோன்றுகிறது
தீபத்திருநாளில் அனைவரின் இல்லத்திலும்
இருள் என்னும் துயர் நீங்கி வெளிச்சம் என்னும்
இன்பம் வர வேண்டிடுவோம்

Anbuselvi:

மன இருள் எனும் அறியாமை அகல வாய்மை ஒளியாகும் தீமைகள் விலகி நன்மைகள் பெருக
நல்ல எண்ணங்களே நமக்கு வழிகாட்டும் ஒளியாகும் நல்லதே நினைப்போம் நன்மையே செய்வோம்
இன்பம் என்னும் ஒளி நம்மை சூழ நல்லெண்ணெய் ஊற்றி் தீபமேற்றாமல் நல்ல எண்ணம் கொண்டு
தீபமேற்றுவோம் வாருங்கள்



Pattasu:



வெடிசத்தத்தில்
மறைந்த
பிஞ்சுகளின்
மௌன அவலம்,


சிவகாசியில் அரங்கேற்றம்..............
============================

மத்தாப்பூக்களின்
சிதறல்களில்
ஒளியிழந்த
சிசுக்கள்
பாடசாலை மறந்து


கந்தக தொழிற்சாலையில்
============================

கண்கவர்
வானவேடிக்கை வானில்.
செய்தவரின்
வாழ்க்கை
வேடிக்கையாக மாறும்
கொடுமை


சிவகாசியில்
============================

வந்தேறிகள் மட்டுமில்லை
அவர்களின் பண்டிகையும்
தமிழர்களின்
உயிரை
காவு கேட்கிறது


தீபாவளி ஊடாக
============================

உழைப்பிற்கு கூலி
கொடுத்து
ஊக்கப்படியாக
உயிர் காவு
கேட்கிறது


கேட்டால் தீபஒளி திருநாளாம்!!!!!!!


Back to top Go down
View user profile
 
kavithai neram
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: