BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 வீடாக மாறிய குப்பை தொட்டி

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 35

PostSubject: வீடாக மாறிய குப்பை தொட்டி   Sun Aug 11, 2013 1:11 pm



மனிதன் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவைகளில் வீடு ஒன்றாகும். இதை அவரவர் செல்வ வசதி, தேவைக்கு ஏற்ப அமைத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள புரூக்லின் நகரை சேர்ந்த ஜார்ஜ் கொலோகென் என்பவர் ஒரு குட்டி வீட்டை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளார். அப்படி என்ன அதில் புதுமை என்றால் குப்பை சேகரிப்பு தொட்டியே வீடாக மாறி இருக்கிறது.

இந்த வீட்டிற்குள் குளியல் அறை, படுக்கை, சமையல் செய்ய இடவசதி மற்றும் மேல் தளம் ஆகியவை அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வாசல் மட்டும் உண்டு. குளியல்–கழிவறைக்கு தேவையான தண்ணீருக்காக கூரைப்பகுதியில் 6 காலன் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங் இருக்கிறது. அதில் மழைநீரை சேமிக்கும் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி ஜார்ஜ் கூறுகையில், ‘நீங்கள் வாழ வழி எது? என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்த பிறகு இந்த வீட்டை வடிவமைக்கும் எண்ணம் ஏற்பட்டது. கீழ்ப்பகுதியில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதால் வீட்டை எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி கொண்டு செல்ல முடிகிறது. ஒரு நபர் வசதியுடன் தங்க முடியும்’ என்கிறார். இந்த குட்டி வீட்டை உருவாக்க 2 ஆயிரம் டாலர்களை (ரூ.1 லட்சம்) அவர் செலவிட்டு இருக்கிறார்.
Back to top Go down
View user profile
 
வீடாக மாறிய குப்பை தொட்டி
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: