BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 பேக்கிங்முட்டைக்குழம்பு

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: பேக்கிங்முட்டைக்குழம்பு   Sat Mar 27, 2010 2:21 pm

தேவையான பொருட்கள்

* முட்டை - 5
* வெங்காயம்(சிறிதாக வெட்டியது) - பாதி
* கரட் (சிறிய)(துருவியது) - பாதி
* லீக்ஸ் (சிறிதாகவெட்டியது) - சிறிதளவு
* தக்காளிப்பழம்(சிறிதாக வெட்டியது) - 2
* கருவப்பிலை(சிறிதாகவெட்டியது)- தேவையானளவு
* பச்சைமிளகாய்(சிறிதாகவெட்டியது) - 1
* மிளகாய்த்தூள் - தேவையானளவு
* மட்ராஸ்கறித்தூள் - தேவையானளவு(விரும்பினாள்)
* மஞ்சள்தூள் - சிறிதளவு(விரும்பினாள்)
* கடுகு - அரை தேக்கரண்டி
* பெருஞ்சீரகம் (தனியா) - அரை தேக்கரண்டி
* இஞ்சி(சிறிதாகவெட்டியது) - மிகமிகசிறியதுண்டு
* உள்ளி(பூண்டு)(சிறிதாகவெட்டியது) - 4 பல்
* உப்பு - தேவையானளவு
* எண்ணைய் - தேவையானளவு
* பால் . தேவையானளவு
* தண்ணீர் -தேவையானளவு
* பழப்புளி (கரைத்தது) - தேவையானளவு
* அஜினோமோட்டோ -கால்தேக்கரண்டி (விரும்பினாள்)

செய்முறை

* (1)ஒருபாத்திரத்தில் முட்டையை உடைத்து போடவும்.
* (2)அதனுடன் துருவியகரட்,சிறியதாகவெட்டிலீக்ஸ், சிறிதாகவெட்டியதக்காளிப்பழம்,சிறிதாகவெட்டிய சிறிதளவு கருவப்பிலை,ஒரு பச்சைமிளகாய்,கால் கரண்டி மிளகாய்த்தூள்,மிகமிக சிறியதுண்டுஇஞ்சி, சிறிதாகவெட்டிய 2 பல் உள்ளி(பூண்டு),சிறிதளவு உப்பு ஆகியவற்றை கிரைண்டரில்(மிக்ஸியில்) போட்டு நன்றாக(கலந்து)அடிக்கவும்(இதில் கலந்தவை யாவும் நன்றாக அரைக்கப்பட்டு முட்டைநுரைத்து காணப்பட வேண்டும்).
* (3)பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்)அடித்தவற்றை ஒரு தட்டையான பாத்திரத்தில் அல்லது நீராவியில் வேகவைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போடவும்.
* (4)தட்டையான பாத்திரத்தில் போட்டால் அதனை மைக்கிறோவே அவனில் வைத்து பேக் செய்யலாம் அல்லது நீராவியில் வைக்ககூடிய உயரம் குறைந்த பாத்திரத்தில் போட்டால் அதை நீராவியில் அவிக்கவும்.
* (5)இவை பேக்செய்த அல்லது நீராவியில் அவித்த பின்பு அதை ஓரளவு சிறிய சதுர அல்லது விரும்பிய அளவில் அல்லது விரும்பிய வடிவில் துண்டுகளாக வெட்டவும்.
* (6)அடுப்பில் ஒருபாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு அது கொதித்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
* (7)பின்பு அதில் வெட்டிய வெங்காயத்தை போடவும் .
* (Coolவெங்காயம் ஓரளவுபொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(தனியா)போட்டு தாளிக்கவும்.
* (9) தாளித்த பின்பு அதில் மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கலக்கவும்.
* (10)அதன் பின்பு மிகுதியாக உள்ள தக்காளிப்பழத்தை போட்டு நன்றாக கலக்கவும்.
* (11)பின்பு அதனுடன் மிகுதியாக உள்ள உள்ளி(பூண்டு)கருவப்பிலை,மட்ராஸ்கறித்தூள்,மஞ்சள்தூள்,உப்பு பால்,சிறிதளவு தண்ணீர்,கரைத்தபழப்புளி,அஜினோ மோட்டோ ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
* (12)கலந்தவற்றை நன்றாக கொதிக்கவிடவும் .
* (13)அவை நன்றாக கொதித்ததும் அதில் வெட்டிய முட்டைதுண்டுகளை போட்டு கலந்து கொதிக்கவிடவும் (விரும்பினாள் பிரட்டல் கறியாகவும் செய்யலாம்).
* (14)கறிகொதித்ததும் சுவையானதும் வித்தியாசமானது மான முட்டைகுழம்பு தயாராகிவிடும்.
* (15)பின்பு அடுப்பிலுள்ள பாத்திரத்தை இறக்கி வைக்கவும்.
* (16)அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்திலுள்ள குழம்பை சோற்றுடன்(சாதத்துடன்)அல்லது இடியப்பம், புட்டு,பாண் இட்லி,தோசை,சப்பாத்திஆகியவற்றில் எதனுடனாவது சேர்த்து பரிமாறவும்.
Back to top Go down
View user profile
 
பேக்கிங்முட்டைக்குழம்பு
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: