BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள் ----

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள் ----   Sun Mar 28, 2010 4:24 pm

ஆதிமந்தியார்
***********


ஆதிமந்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் புலவர். தமிழிலும் மட்டுமல்லாமல் ஆடலிலும் பாடலிலும் இவர் சிறந்திருந்தார். இவர் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னின் மகள். இவர்ர் ஆத்தி என்ற சேர நாட்டு மண்ணனை காதலிந்த்து மணந்தார். இவன் ஒரு நீர் விளையாட்டில் மூழ்கி இழந்தான். இந்த துயரத்தை தனது பாடல்களில் வெளிப்படுத்தினார்.



குற மகள் இளவெயினியார்
*********************

ஏறைகோன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட குறிஞ்சி நிலக் குறமகள் இப்புலமையாளர். இவர் இளமையிலேயே புலமைத் திறம் வளரப்பெற்று, அருங்கவி பல பாடியிருந்தாலும் புறநானூற்றில் ஒரு பாடல் (பாடல்:157) மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.


ஒக்கூர் மாசாத்தியார்
****************

பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் எனும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). இந்த ஊரில் பிறந்து வாழ்ந்த மாசாத்தியார் புத்த சமயத்தைத் தழுவிய சங்க காலத்தவர்.


இளவெயினி
**********

பரணர் காலத்தைச் சேர்ந்த பெண் புலவர் இவர். குறவர் சமுதாயத்தில் பிறந்த இவர் போர்க்களத்தில் பிணந்திண்ணும் பேய் மகளிரை வியந்து பாடிய சிறப்பால் “பேய்மகள்” என்கிற சிறப்புப் பெயருடன் பேய்மகள் இளவெயினி என்று அழைக்கப்படுகிறார். இவர் இயற்றிய பாடல் ஒன்று (பாடல்:11) மட்டும்
புறநானூற்றில் காணப்படுகிறது. பிற பாடல்கள் கிடைக்கவில்லை.


அள்ளூர் நன்முல்லையார்
********************

பாண்டிய நாட்டில் சிறந்து விளங்கிய அள்ளூர் எனும் ஊரில் தெளிந்த புலமையுடன் விளங்கிய நன்முல்லை எனும் இக்கவிஞர்
“கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூ”
என்கிற அகநானூற்றுப் பாடலில் (பாடல்:46) தனது ஊரின் புகழைத் தெரிவித்துள்ளார். இவரது பாடல்கள் அகநானூற்றில் ஒரு பாடல்(பாடல்:46), புறநானூற்றில் ஒரு பாடல் (பாடல்:306) மற்றும் குறுந்தொகையில் ஒன்பது பாடல்கள் (பாடல்:32, 67,68,93,96,140,157,202,237) என்று மொத்தம் பதினொன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.


குமுழி ஞாழல் நப்பசையார்
*********************

உருண்டையான கொன்றை மரம் போன்ற தோற்றமுடையவர் என்பதால் இவர் “குமுழி ஞாழல் நப்பசையார்” என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒரு பாடல் (பாடல்: 160) மட்டும் பாடியுள்ளார்


இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (பாடல்:314, 384), குறுந்தொகையில் ஐந்தும் (பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275) புறநானூற்றில் ஒன்றுமாக (பாடல்: 279) இடம் பெற்றுள்ளது.



வெண்ணிக் குயத்தியார்
*******************

வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. குயவர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.


புறநானூறு 66" நல்லவனோ அவன்!

பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை: அரச வாகை.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!



பொன்முடியார்

***********
சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. இவரது கடமைப்பாட்டு என்ற தனிப்பாட்டுக்காக அறியப்படுகிறார்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே!


புறநானூற்றுப் பாடல்
---------------------
310. உரவோர் மகனே!
பாடியவர்: பொன்முடியார்
திணை: தும்பை துறை : நூழிலாட்டு

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.

பெருங்கோப்பெண்டு
***************

கி.மு. 245 ஆம் ஆண்டில் வாழ்ந்த ஒல்லையூர்ந்த பூதப்பாண்டியன் எனும் மன்னனின் துணைவியார் இவர். இம்மன்னன் இறந்து விட்டபின்பு அவனை நினைத்துப் பாடிய இவர் பாடல் புறநானூற்றில் பாடல்:246 ஆக இடம் பெற்றுள்ளது. இம்மன்னனின் இறப்பின் போது அவனுடைய சிதைக்கு மூட்டிய தீயில் பாய்ந்து இவளும் உயிர் நீத்தாள்.


பாரிமகளிர்
********

தற்போது பிரான்மலை என அழைக்கப்படும் பரம்புமலை சூழ்ந்த 300 ஊர்களைக் கொண்ட வளநாட்டின் மன்னனாக இருந்த பாரி மன்னன் மகளிர் இருவர். பாரி மன்னன் கொல்லப்பட்ட பின்பு புலவர் கபிலர் அவர்களை அழைத்துச் சென்ற போது பாரி மகளிர்
“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்
இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்
வென்று எரிமுரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே?”

-என்று இவர்கள் தம் தந்தையை இழந்த துயரத்தைப் பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது
Back to top Go down
View user profile
 
சங்கத் தமிழ்ப் பெண் புலவர்கள் ----
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: