BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 வெள்ளிவீதியார்

Go down 
AuthorMessage
Fathima

avatar

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 33
Location : srilanka

PostSubject: வெள்ளிவீதியார்   Mon Mar 29, 2010 3:44 am

சங்கப் பாடல்களில் காதலை எடுத்துரைப்பது தனிச் சிறப்பானது. நான்கைந்தே வரிகளில் செவ்விய முறையில் காதல் உணர்வை கூறும் பாங்கு, அப்பப்பா! எவ்வளவு சுவையானது? சங்க காலப் பெண் புலவர்களில் ஒளவையாருக்கு அடுத்ததாக அதிகமாக அறியப்பட்டவரான வெள்ளிவீதியார் எழுதியுள்ள ஒரு பாடலை இங்கே காண்போம். காமத்தையும் (காதல்) உயிரையும் இணைத்து கபிலர் “”உயிர்தவத் சிறிது காமமோ பெரிதே” என்று கூறியுள்ளார். ஆனால் வெள்ளிவீதியாரோ காமத்தையும், உயிரையும் ஒப்பிட்டு பாடியிருக்கிறார். காமம் வந்தால் பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம் எனப்படும் வெட்கமும் போய் விடும் என்று அவர் அப்பாடலில் கூறுகிறார்.
இனி பாடலை காண்போம் வாருங்கள்.

“”"அளிதோ தானே நாணே, நும்மொடு
நனிநீ டுழந்தைன்று மன்னே, இனியே
வான்பூங்கரும்பி னோங்கு மணல்
சிறுசிறை தீம்புன னெரிதர வீய்ந்துக்
காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில்லாதே
” (குறுந் தொகை 149)

இதன் பொருள்: நாணமே, நெடுங்காலம் உன்னோடு இருந்து வருந்தியது போதும். இனிமேல் கரும்புக்கு நீர் பாய்ச்சுவதற்கு மண்ணால் இடப்பட்டிருந்த சிறு மணல் பாத்தியின் கரை நீர் நெருங்கி அடிக்கும் போது அக்கரை உடைந்து விடுவது போல தாங்கும் அளவைத் தாங்கி காமம் (காதல்) மென்மேலும் நெருக்க என்னிடம் இருந்த நாணமும் போய் விட்டது என்று தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களிடம் இயல்பாகவே இருக்கும் நாணம், காம மிகுதியால் உடைந்து போயிற்று; இல்லாது போயிற்று என காதல் பரிமாணத்தை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
காதலை கவிநயத்துடன் எடுத்துரைக்கும் சங்கப் பாடல்கள் ஏராளம் உள்ளன. அவற்றுள் இப்பாடலும் சுவையானது. அழகான ஒப்புமை இப்பாடலில் சிறப்பாக அமைந்துள்ளது. காதலைப் போலவே அதன் சிறப்பையும் அதனால் மனிதர்களுக்கு இயல்பாக ஏற்படும் உணர்வுகளையும் கூறும் இது போன்ற சங்கப் பாடல்கள் என்றென்றும் நமக்கு இலக்கிய இன்பம் தருவதாகும்.


இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல், ஆற்றினோ நன்று மன்தில்லை
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோயன்று கொளற்கரிதே. ” (குறுந் தொகை )
-வெள்ளிவீதியார்

வெள்ளிவீதியார் என்னும் இந்தச் சங்காலப் பெண் புலவர் என்ன சொல்ல
வருகிறார் ?
காதல் என்னும் நோய் இருக்கிறதே ! அது வந்து விட்டாலோ தாங்க முடியாது
போங்கள் என்கிறார் ? மெல்லவும் உடியாஅல், விழுங்கவும் முடியாமல்
இருக்கும் நிலை என்பார்களே ! அது போலத்தான் என்கிறார் இந்த அற்புதப்
புலவர்.


உச்சி வெய்யிலில் பாறை மீது வைக்கப்பட்ட வெண்ணேய் உருகுவதைக் கண்ணுற்றவன்
ஒரு கையில்லாத ஊமையெனில் அதை எடுக்கவும் முடியாமல் , காப்பதற்கு
ஒருவரையும் அழைக்கவும் முடியாமல் தவிப்பானாம்.
இந்த உவாஅனத்தை வெள்ளிவீதியார் காதல் நோயில் விழுந்தோருக்கும் உதாரணங்
காட்டுகிறார்.


குறிஞ்சி
******

அம்ம வாழி, தோழி!-நம் ஊர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ?-
தண்டுடை கையர், வெண்தலைச் சிதவலர்,
"நன்றுநன்று" என்னும் மாக்களோடு
இன்று பெரிது என்னும், ஆங்கணது அவையே.

தலைமகன் தமர் வரைவொடு வந்து சொல்லாடுகின்றுழி, "வரைவு மறுப்பவோ?" எனக்
கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.பாலை
******

அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.

உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.


[b]
Back to top Go down
View user profile
 
வெள்ளிவீதியார்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: