BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஉறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல Button10

 

 உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல Empty
PostSubject: உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல   உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல Icon_minitimeMon Mar 29, 2010 4:09 am

பாசமிகு BTC உறவுகளே.. வணக்கம்!

இன்று ஒரு சிறு கதை. நான் படித்து.. என் மனதை உருக்கிய இந்த கதையை உங்களுக்கு தந்துள்ளேன், குற்றம் இருப்பின் மன்னிக்கவும்.

கண் திறந்தது

என் அம்மாவுக்கு ஒரு கண் மட்டுமே. அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இனம் புரியாத வெறுப்பும் எரிச்சலும் ஏற்பட்டது, அவரை அம்மா எனச் சொல்லிக் கொள்ளவே மிகவும் கேவலமா இருந்தது. தன் ஒற்றைக் கண்ணுடன் தான் செய்யும் சிறு கைவினைப் பொருட்களை அருகிலிருந்த சந்தையில் விற்று என்னைப் படிக்க வைத்தார். அவரை மிகவும் வெறுத்த நான் ஒரு நாள் நான் கல்வி கற்ற பாடசாலைக்கு வந்த போது அவர் மீது கேவலமாக வீசிய பார்வையில் அப்படியே சுருண்டு திரும்பினாள்.

வகுப்பிலிருந்த எல்லோரும் “ உன் அம்மாவுக்கு ஒற்றைக் கண்ணா ?” எனக் கேட்ட போது நான் அடைந்த அவமானம் சொல்லுந்தரமன்று.

என் மனதில் அடைத்து வைத்திருந்த வெறுப்பை ஒரு நாள் நேரிடையாகவே அவரிடம் கொட்டினேன், “ ஒரு கண்ணுடன் எனக்கும் அவமானத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை விட, நீங்கள் ஏன் இந்த உலகை விட்டே போய் விடக் கூடாது “ என, அவர் ஒன்றும் கூறாமல் மௌனமாக அந்த இடத்தை விட்டகன்றார், நான் சொன்ன சுடுசொல் எனக்குள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தினாலும் இதுகால வரை மனதுக்குள் வைத்து மறுகியதைக் கொட்டி விட்ட நிம்மதியுடன் தூக்கமாகி விட்டேன்.

நடுஇரவு, மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்படவே, அடுக்களை விரைந்த போது அங்கே என் அம்மா, மூலையில் இருந்து தன் ஒற்றைக் கண்ணால் கண்ணீர் வடித்து விம்மி அழுது கொண்டிருந்தார், அழுகைச் சத்தத்தில் என் நித்திரை குழம்பிவிடக் கூடாது என தன் புடவையால் வாய் பொத்தியபடி இருந்தது என் நெஞ்சைப் பிழிந்தது, அமைதியாக அங்கிருந்து நகர்ந்து கொண்டேன்.

அப்போது மனதில் நினைத்துக் கொண்டேன், கவனமாகப் படித்து முன்னேறி இந்த வறிய சூழ்நிலையிலிருந்தும் அசிங்கமான அம்மாவிடமிருந்தும் சீக்கிரம் விலகிவிட வேண்டும் என, அவரை உதாசீனம் செய்தது மனதை உறுத்தியவாறு இருந்தாலும் என் தொடர் வெற்றிகளால் காலப் போக்கில் யாவையும் மறந்தேன்.

வேலை செய்து கொண்டே பட்டப்படிப்பை முடித்து, அழகான நல்ல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிதான குடும்ப வாழ்வை, செல்வச் சிறப்போடு வாழ்ந்தேன். என் அம்மா பற்றிய எண்ணங்களை முற்றிலுமாக என் நினைவுகள் என் வேலைகளாலும், குடும்பத்தாலும் மறக்கப்பட்ட வேளையில், அவர் இறந்தாரா இருக்கிறாரா என அறிந்து கொள்ளக் கூடி விளையாத மனசாட்சி அற்ற என் முன்னால் அவர் ஒருநாள் வந்து நின்ற போது வானமே தலையில் விழுந்தது போல விக்கித்து போனேன்.

என் செல்ல மகள் வீரிட்டுக் கத்தினாள், அம்மாவின் அசிங்கமான ஒற்றைக்கண் முகத்தைப் பார்த்து. மனம் வந்து அவரை நோக்கி “ யார் நீ ? உனக்கு என்ன வேண்டும் ? என் குழந்தையை பயமுறுத்தி விட்டாயே ? “ என கூச்சலிட்டேன். “ சீக்கிரம் இந்த இடத்தை விட்டு நகர்” என அதட்டவும் செய்தேன்.

“ என்னை மன்னியுங்கள் ஐயா !, தவறான விலாசத்துக்கு வந்து விட்டேன் என நினைக்கிறேன் “ என மிகப் பணிவாகக் கூறி சட்டென அவ்விட்த்தில் இருந்து மறைந்து போன அவர், இனி மேல் என் திசை நோக்கி வரவே மாட்டார் என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நன்றாக உரு மாறிவிட்ட என்னை அடையாளம் காணவில்லை என்றே நான் நம்பினேன்.

இந்த சம்பவம் நடந்து சில காலத்தின் பின்னர் கிராமத்தில் நான் படித்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் பற்றிய அழைப்பைப் பார்த்த போது, கலந்து கொள்ள ஆர்வம் தலை தூக்கியது. கூட்டம் முடிந்ததும், அம்மாவால் வீடு என்று அழைக்கப்பட்ட அந்த சிறு கொட்டிலைப் பார்க்க ஏனோ மனம் எண்ணியது. சரி ஒரு எட்டுப் பார்க்கலாம் என விரைந்தேன்.

குடிலினுள் குளிர்ந்து போன கட்டாந்தரையில் என் அம்மா வீழ்ந்து கிடந்தார், எனக்குள் சிறு பதட்டமும் இல்லை, மெல்ல அருகில் சென்றேன், கையில் சுருட்டிய ஒரு கடதாசி....... ஆம் அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் அது.


அன்பு மகனே.....என் இந்த உலக வாழ்வு இத்துடன் போதும் என நினைக்கிறேன், உன்னைப் பார்க்க உன் வீட்டுக்கு இனிமேல் நான் வர மாட்டேன், ஆனால் நீயாவது எப்போதாவது என்னை வந்து பார்த்துவிட்டுப் போக மாட்டாயா ? , உன்னை எவ்வளவு நான் நேசித்தேன் என்றும், எத்தனை தூரம் உன் பிரிவினால் துன்பப்பட்டேன் என்றும் சொல்ல முடியாது. பாடசாலை கூட்டத்துக்கு நீ வருவதை எப்படியோ அறிந்து கொண்டேன். அங்கு வந்து உன்னை அவமானப் படுத்த மாட்டேன், இக் கடிதத்தை உன்கையில் எப்படியாவது சேர்த்து விடுவேன் மகனே.

நீ குழந்தையாக இருந்த போது, ஏற்பட்ட ஒரு விபத்தில் உன் ஒரு கண் பறிபோனது. ஒற்றைக் கண்ணுடன் என் மகன் வளரப் போவதை ஒரு தாயாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...........அதனால் என் ஒரு கண்ணை உனக்கு ஈந்தேன்.

இன்று நான் மிகவும் பெருமையாக உள்ளேன், என் கண்ணால் முழு உலகத்தையும் என் மகன் பார்க்கிறான், படிக்கிறான், இத்தனை உயர்ந்த நிலைக்கு அவன் வர இதைவிட பெரிய உதவி என்னால் செய்திருக்க முடியாது. நீ வெறுத்த போதெல்லாம் நான் கோபப்படவில்லை என் மகனே... என்னிடம் இருக்கும் பாசத்தினாலே தான் நீ என்னைடம் உரிமையாகக் கோவிக்கிறாய் ...............”

குனிந்து பார்க்கிறேன், அவர் இரு கண்களும் மூடியுள்ளன.............

அம்மா.............என் அம்மா, முதல் தடவையாக கண்களில்ருந்து கண்ணீர் உருள்கிறது என் அம்மாவுக்காக.

உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல


-- நன்றியுடன்.. ப்ரியமுடன்
Back to top Go down
 
உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உறவுகளை மதியுங்கள், உருவத்தை அல்ல
» இது கதை அல்ல .....இது நிஜம்
» கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல!
» இது கதை அல்ல ~~ சிறுகதை
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: