BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமுள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு? Button10

 

 முள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு?

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

முள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு? Empty
PostSubject: முள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு?   முள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு? Icon_minitimeWed Mar 31, 2010 3:09 pm

இந்தப் பழம் பார்த்திருக்கிறீர்களா நண்பர்களே? ரம்புத்தான் என்றழைக்கப்படும் இதனை முள்நாறிப் பழம் என்றும் அழைக்கலாம் என்று ஒரு தமிழாசிரியர் சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மையென எனக்குத் தெரியவில்லை. 'ரம்புத்தான்' எனப்படும் சொல்லில் உள்ள 'ரம்புட்' எனும் மலாய் சொல்லுக்கு முடி என்று அர்த்தம். இப்பழத்தின் மேல் முடி போன்று உள்ளதால் இதற்கு இந்தப் பெயர் வந்ததாக கூறுகிறார்கள். மஞ்சள் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கக்கூடிய இப்பழம் பெரும்பாலும் கிழக்காசிய நாடுகளிலேயே அதிகம் விளைகிறது. பூமத்திய ரேகையின் மிதமான வானிலையே இதற்குக் காரணமாகும். பெரும்பாலும் மே, ஜூன், ஜுலை மாதங்களில் மிகவும் வழக்கமாக சந்தைகளில் கிடைக்கக்கூடிய பழங்களில் இதுவும் ஒன்று. இப்பழத்தின் சுளை வெண்மையாகவும், சுவை இனிப்பாகவும் இருக்கும்.

'லைச்சி' பழ குடும்பத்தைச் சேர்ந்த ரம்புத்தான் பழ மரத்தைப் பயிரிடுவது மிக எளிதான ஒன்றே. நீங்கள் சாப்பிட்ட பழத்தின் விதையை பயிரிட்டாலே சில தினங்களில் முளையைப் பார்க்கலாம். இம்மரமானது சுமார் 10 முதல் 20 மீட்டர் உயரம் வரை வளர கூடிய தன்மை வாய்ந்தது.
ரம்புத்தான் பழத்தை அப்படியே பழமாகவும், 'ஜெல்லி' செய்தோ சாப்பிட சுவையாக இருக்கும். வெறும் சுவை மட்டுமில்லாமல் இதில் சில மருத்துவ குணங்களும் அடங்கியிருப்பது ஆச்சிரியமே. இதில் பத்து சுளைகளை எடுத்து 3 குவளைத் தண்ணீர் விட்டு, 1 1/2 குவளை வரும் வரை கொதிக்க வைத்து அருந்தினால் எப்படிப்பட்ட சீதபேதியும் குணமாகும் என்கிறார்கள் அறிந்தவர்கள். அதோடு இந்தப் பழமானது உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் உதவுவதாக சொல்கிறார்கள். சாப்பிட்டுதான் பாருங்களேன்![b]
Back to top Go down
 
முள்நாறிப் பழம் தெரியுமா உங்களுக்கு?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா?
» என் தோழி ஒருத்தியை உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகின்றேன்.
» உங்களுக்கு பிரச்சனயா ? இதை அவசியம் படிங்க ...
» காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது
» உங்களுக்கு ஒரு சவால்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: