BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 நளவெண்பா

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: நளவெண்பா   Fri Apr 02, 2010 12:40 pm

தமிழ் கூறும் நல்லுலகத்தில் உலவும் காவியங்கள் பல.அவை ‘கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப ‘ச் சுவை மல்கும் காவியங்கள், இறவாத புகழுடையன; பிறனாட்டு நல்லறிஞர் பேணிப் புகழுந்தகையன; இயற்கையையும் செயற்கையையும் செப்புவன.அக்காவியங்களில் ஒன்றே ‘நளவெண்பா’ என்னும் நூல்.ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தண்டமிழ்ப் புலவர் புகழேந்தியார் பாடிய இன்னூலுள் ஒவ்வொரு பாவும் படித்துப் படித்து நினைத்து நினைத்துச் சுவைத்தின்புறத் தக்கது.

இன்னூல் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். புகழேந்தியாரும் தம் நூலைச் ‘ சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம் , கலி நீங்கு காண்டம் ‘ என முக்காண்டமாக்கி மொழிவாராயினார்.’காண்டம்’ என்பது நூலிலின் பெரும்பகுதியைக் குறிப்பதாகும்.

முதற்காண்டமாகிய சுயம்வர காண்டம் இன்பச்சுவை பொதிந்து விளங்குவது; இரண்டாவது காண்டமாகிய கலிதொடர் காண்டம் அவலச் சுவை அமைந்தது; மூன்றாவது காண்டமாகிய கலி நீங்கு காண்டம் எனும் பகுதியில் இன்பமும் துன்பமும் கலந்துள்ள நிலையைக் காண்கின்றோம்.

முதற்காண்டம் தமயந்தி எனும் தையலாள் தானே கணவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுகின்ற செய்தியைக் கூறலின் , ‘சுயம்வர காண்ட ‘ மாயிற்று . தமயந்தி தேவர்க்கு மாலையிடாததால் சினந்த கலி, நளனையும் தமயந்தியையும் தொடர்ந்து துன்பம் விளைவிக்கின்ற பகுதியாதலின், ‘கலி தொடர் காண்டம்’ மாகிறது. மூன்றாம் காண்டம் ‘ கலி நீங்கு காண்டம்’ தொடர்ந்த கலி நீங்குவதை தெரிவிப்பதாகும்.

காட்டில் நாடு முதலியவற்றைத் துறந்த தருமர் வருந்துகிறார் . அங்கே வந்த வியாசர் , தருமருக்குத் தேறுதல் கூறுகிறார். அப்போது அவர் சொல்வதாக இக்கதை தொடங்குகிறது.

சுயம்வர காண்டம்

கலிதொடர் காண்டம்

கலி நீங்கு காண்டம்
Back to top Go down
View user profile
 
நளவெண்பா
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: