BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inவெண்டைக்காய் புளி குழம்பு Button10

 

 வெண்டைக்காய் புளி குழம்பு

Go down 
2 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

வெண்டைக்காய் புளி குழம்பு Empty
PostSubject: வெண்டைக்காய் புளி குழம்பு   வெண்டைக்காய் புளி குழம்பு Icon_minitimeSat Apr 03, 2010 4:03 am

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பல்லு
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
நல்லெண்ணை - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்க்ரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. சின்ன வெங்காயத்தை தோல் உரித்து, அதில் பாதியை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. வெண்டைக்காயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.

3. புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. தேங்காயை அரைத்து பாலை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

5. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு தோல் உரித்து நறுக்காமல் வைத்துள்ள பாதி வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். இதனுடன் பூண்டு, தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும்.

6. வதங்கியதும் மல்லித்தூள், மிளகாய் தூள் போட்டு லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைத்து, பின்னர் விழுதாக அரைக்கவும்.

7. அடுப்பில் பாத்திரத்தை வைத்து மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

8. பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயம் போட்டு சிவக்க வதக்கவும். இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு நன்கு வதக்கவும்.

9. அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்.

10. பின்னர் அதில் புளி கரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். பிறகு தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

11. குழம்பு சுண்டி கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

குறிப்பு

1. வெந்தயத்திற்குப் பதில் வெந்தயத் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

2. வெண்டைக்காய்க்கு பதில் சேனைக்கிழங்கு, கருணைகிழங்கு சேர்த்தும் செய்யலாம்.
[b]
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

வெண்டைக்காய் புளி குழம்பு Empty
PostSubject: சுறா மீன் புட்டு   வெண்டைக்காய் புளி குழம்பு Icon_minitimeSat Apr 03, 2010 4:05 am

தேவையான பொருட்கள்

சுறா மீன் - 1/4 கிலோ
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1/4 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேஜைக் கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கோப்பை
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


செய்முறை

1. சுறா மீனை வேக வைத்து எடுத்து, மீன்களை உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

2. அதில் சிறிது உப்பு, சீரகத்தூள், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவும்.

3. வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

5. பிறகு தக்காளி, மிளகாய்த் தூளை சேர்த்து வதக்கவும்.

6. இப்போது உதிர்த்து வைத்துள்ள மீனையும் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் வேகவிட வேண்டும்.

7. கடைசியாக தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.

குறிப்பு

1. சுறா மீன் வாங்கியதும் அதில் அரை கிலோ எடுத்து அதில் உப்பு, இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள் எல்லாம் சிறிது சேர்த்து இரண்டு குவளை (டம்ளர்) தண்ணீர் சேர்த்து வேக வைத்து முள்ளுடன் உள்ள மீனை குழம்பிற்கும் (சால்னா) முள்ளில்லாதவைகளை பிரித்தெடுத்து கட்லெட் (அ) புட்டு செய்ய எடுத்து கொள்ள வேண்டும்.

2. குழம்பு செய்யும் போது மிளகு சேர்த்து செய்ய வேண்டும், புளி சேர்க்க கூடாது. இது பிள்ளை பெற்றவர்களுக்கு மிகவும் நல்லது.



தக்காளி சாதம்
*************

தேவையான பொருட்கள்

அரிசி - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை - 3
கிராம்பு - 4
மராட்டி மொக்கு - 1
ஏலக்காய் - 1
அன்னாசி மொக்கு - 1
பிரியாணி இலை - 1/2
சோம்பு (பொடித்தது) - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
மசாலாதூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கோப்பை
பால் - 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு, மராட்டி மொக்கு, ஏலக்காய், அன்னாசி மொக்கு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளிக்கவும்.

3. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மசாலா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

4. பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

5. தக்காளி நன்கு வதங்கியதும், நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

6. பின்னர் அதனுடன், 2 1/2 டம்ளர் தண்ணீர் (அரிசிக்கு இரண்டரை மடங்கு), பால், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

7. கொதி வந்ததும், கழுவிய அரிசியை போட்டு குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை (குக்கரைப் பொறுத்து சாதம் குழைய விடாமல்) வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்பு

1. வெங்காயம் தயிர் பச்சடி தக்காளி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

[b]
Back to top Go down
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

வெண்டைக்காய் புளி குழம்பு Empty
PostSubject: NICE..NICE   வெண்டைக்காய் புளி குழம்பு Icon_minitimeSat Apr 03, 2010 12:53 pm

NICE..NICE
Back to top Go down
http://wwww.myacn.eu
Sponsored content





வெண்டைக்காய் புளி குழம்பு Empty
PostSubject: Re: வெண்டைக்காய் புளி குழம்பு   வெண்டைக்காய் புளி குழம்பு Icon_minitime

Back to top Go down
 
வெண்டைக்காய் புளி குழம்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கொத்துகறி உருண்டைக் குழம்பு
» வெண்டைக்காய் - முளைகட்டின பயறு சாலட்
» 30 வகை அசத்தல் குழம்பு காய்கறிகள் இல்லாமல் கலக்கலான சமையல்
» பால் கறி குழம்பு
» கருவாட்டுக் குழம்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: