BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 சிந்தித்ததை செயல்படுத்துங்கள்

View previous topic View next topic Go down 
AuthorMessage
Fathima



Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 32
Location : srilanka

PostSubject: சிந்தித்ததை செயல்படுத்துங்கள்   Sun Apr 04, 2010 1:00 pm

சிந்தனை சிறப்பானதுதான். ஆனால் செயல்பாடுதான் பலன்தரும். எல்லோரின் மனதிலும் சிந்தனைகள் எழும். அதை செயல்படுத்துபவர்களே வெற்றி பெறுகிறார்கள். உங்களுக்கும் வெற்றி வேண்டுமா? அதற்கான செயல்பாடுகளை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான வழிகளை எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் நாம் அறிந்து வைத்திருப்பதை செயல்படுத்தாமல் இருப்பதே ஆகும். நற்செயல் என்பதும், வெற்றி என்பதும் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது.

இப்படி செய்ய வேண்டும் என்பது விïகம். ஏன் இதைச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பது விவேகம். அதை திட்டப்படியே செய்வதுதான் திறமை.

அறிவை பெற்றுள்ள அனைவரும் ஆற்றல் மிக்கவர்களே என்பது பொதுவான நிலைப்பாடு. ஆனால் முடிவை சரியாக செயல்படுத்த முடியாமல் போகும்போது இந்த நிலைப்பாடு சரியானதாக அமையாது. அவர்களின் ஆற்றல் தாகம் தீர்க்காத தண்ணீர் போல் பயனற்றதாகிவிடும். செயல்படும்போதுதான் அவர்களும் ஆற்றல் மிக்கவர்கள் ஆகிறார்கள். செயலும் ஆக்கப்பூர்வமானதாக மாறுகிறது.

எளிமையான செயலை செய்வது என்பது ஆற்றல் உடையவராக அடையாளம் காட்டாது. ஆழமான அக ஒழுக்கத்தின் அடிப்படையில் செயல்படுபவர் செய்ய வேண்டியதை செய்வார். ஒருபோதும் மனம்போன போக்கில் செயல்படமாட்டார்.

அப்படிப்பட்டவர் பிடித்த உணவு என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிடமாட்டார். பொழுதுபோக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எப்போதும் தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என்று அவற்றை பார்ப்பது, கேட்பதற்கென்று அதிக நேரம் ஒதுக்க மாட்டார். தேவையான அளவே ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்கும் பழக்கத்தைக் கொண்டவராக இருப்பார்.

வெறும் வார்த்தைகளை மட்டுமே கேட்டு ஒரு கொள்கை அல்லது ஒரு செயல் எத்தகைய பலனை அளிக்கும் என்று யாராலும் முழுமையாக உணர முடியாது. அனுபவம்தான் பல பரிமாணங்களில் புரிந்து கொள்ள உதவும். ஒரு பெரியவர் அவரது வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர்ந்த மகிழ்ச்சியை பிறரும் உணர வேண்டும் என்று விரும்புவார்.

தினமும் நீந்துவது உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று அவர் தனது நண்பர் ஒருவரிடம் கூறினார். அதை கேட்ட நண்பரும் மனதளவில் ஒத்துக்கொண்டார். ஆனால் செயல்படுத்த முன்வரவில்லை. அவர் மீது அதிக அன்பு கொண்ட முதியவர் அவருக்கான நீச்சல் பயிற்சிக்கான ஆண்டு கட்டணத்தை செலுத்திவிட்டார். தன்மேல் அக்கறையாக முதியவர் பணம் கட்டியதை உணர்ந்தவுடன் அவரது நண்பர் நீந்துவதற்குச் செல்ல ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் இதுவரை நீந்திப் பழகாத நண்பருக்கு நீந்துவது கடினமாகத் தோன்றியது. இருந்தபோதும் தனக்காக முதியவர் பணம் கட்டியது வீணாகிவிடக் கூடாது என்று தொடர்ந்து தினமும் நீந்தச் சென்றார். நாளடைவில் அது பழக்கமாகிவிட்டது.

படிப்படியாக நீந்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர ஆரம்பித்தார். தானாகவே முன்வந்து பணம் கட்டிய முதியவரிடம் அவர் கட்டிய பணத்தை திருப்பிச் செலுத்தினார். அதன்பிறகு தானே பணம் கட்டி நீந்துவதை பழக்கமாக்கிக் கொண்டு உடல் ஆரோக்கியத்துடனும் மனமகிழ்வுடனும் விளங்கினார்.

மனதளவில் புரிந்து கொண்டதைவிட அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வது என்பது களத்தில் இறங்கும்போதுதான் சாத்தியம். தண்ணீரில் இறங்காமல் இருக்கும்வரை குளிர்வது போல் தோன்றும். தண்ணீரில் இறங்கி ஒருமுறை மூழ்கி எழுந்துவிட்டால் குளிர்போய் விடுகின்றது. அனுபவம் என்பது வேறு, மனதளவில் புரிந்து கொள்வது என்பது வேறு.

எண்ணம் மட்டுமே உயர்வாக இருப்பதால் எந்தவித பயனும் இல்லை. சிறிதளவே இருந்தாலும் செயல்பாடுதான் சிறப்புச் சேர்க்கும். ஒருமுறை ஒரு விவசாயி வயலில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் ஒரு சிறுவனின் அலறல் கேட்டது. உடனே சத்தம் கேட்ட திசைநோக்கி ஓடினார் அந்த விவசாயி. அங்கு ஒரு சிறுவன் நீரில் மூழ்கி கொண்டிருந்தான். உடனே அந்தச் சிறுவனை காப்பாற்றி கரையில் சேர்த்து முதலுதவி செய்து அனுப்பி வைத்தார்.

இவரிடம் உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்திருந்தால் எந்தப் பயனும் இëல்லை. செயலில் இறங்கியதுதான் சிறுவனின் உயிரைக் காப்பாற்றியது. மறுநாள் வழக்கம்போல் தனது பணிகளை செய்வதைத் தொடர்ந்தார் அந்த விவசாயி. அப்போது காப்பாற்றப்பட்ட சிறுவனின் தந்தை நேரில் வந்து தனது மகனின் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவித்தார்.

காப்பாற்றப்பட்ட சிறுவனின் தந்தை பெரிய செல்வந்தர். அப்போது விவசாயியுடன் நிற்பது அவரது மகன் என்று தெரிந்து கொண்டார். சிறுவனின் தோற்றப் பொலிவைப் பார்த்து வருங்காலத்தில் இச்சிறுவன் பெரிய விஞ்ஞானியாக வந்து தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பான் என்று வாழ்த்தினார். மேலும் முன்வந்து பொருளாதார உதவியும் செய்து படிக்க உதவினார்.

சில ஆண்டுகள் சென்றன. தண்ணீரிலிருந்து காப்பாற்றப்பட்ட அதே சிறுவன் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டான். இப்போது விவசாயினுடைய மகன் ஒரு விஞ்ஞானியாகி இருந்தான். அவனே பென்சிலின் என்னும் நோய்தடுப்பு மருந்தை கண்டுபிடித்து செல்வந்தரின் மகனுக்கு கொடுத்தவுடன் நோய் குணமானது.

பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங்தான் அந்த விவசாயியின் மகன். நிமோனியாவில் தவித்த செல்வந்தரின் மகன்தான் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்சன்ட் சர்ச்சில். இந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து உரிய நேரத்தில் உதவியதும், காப்பாற்றியதும் எவ்வளவு பெரிய மனிதர்களை உருவாக்கி உள்ளது என்பதை உணர முடிகிறதல்லவா?

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்போது கூட பலர் படித்து மனதில் வைத்துக் கொண்டாலே போதுமானது என்று செயல்படுவர். அவர்கள் தேர்வின்போது கோர்வையாக எழுத முடியாமல் சிரமப்படுவதை காணமுடியும். எழுதி எழுதிப் பழகி இருக்க வேண்டும் என்று அப்போது உணர்வதால் எந்தவித பயனும் ஏற்படாது.

பலர் செயல்பட தயங்குவதற்கு காரணம் கடினமான சூழல் நிலைகளை எதிர்கொள்ள போதிய அனுபவமின்மையே காரணம். ராணுவம், விமானம், ராக்கெட் போன்றவை சார்ந்த பணிகளில் முன்பெல்லாம் பெண்கள் முன்வந்து செயல்பட தயக்கம் காட்டுவர். இப்போது அந்த நிலை வெகுவாக மாறிவிட்டது.

ஒரு செயலில் ஈடுபட தயங்குவதற்கு காரணம் எதிர்மறையான சிந்தனையே ஆகும். அப்படி தள்ளிப்போடுவதாலேயே பலரால் நினைத்ததை நடைமுறைப்படுத்த முடிவதில்லை. துணிந்து வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் செயலில் இறங்கி முயற்சிக்கும்போது தடைக்கற்கள் படிக்கட்டுகளாக மாறிவிடும். வாழ்க்கையில் அதிகளவு பாடம் கற்றுக்கொள்வது கடுமையான அனுபவங்களை எதிர்கொள்ளும்போதே சாத்தியமாகிறது.

பூகம்பம் வந்ததால்தான் ஜப்பான் அதை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கடலில் துணிந்து பயணம் செய்ததால்தான் புதிய கடல்மார்க்கத்தை வகுக்க முடிந்தது.

பள்ளி, கல்லூரிகளில் படித்து திறன்களை மேம்படுத்திக் கொண்டாலும் சரியான நேரத்தில் பயன்படுத்தத் தவறினால் திறமை இருந்தும் பயனில்லை. எந்தவொரு திறனையும் கற்றவுடன் அனுபவமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் கற்பது முழுமையாக பலன்தரும். இளைஞர்கள் இத்தகைய மனோபாவத்தை வளர்த்துக் கொண்டால் இலக்கிற்கான இடைவெளி குறைந்துவிடும். வெற்றிப் பாதையில் நடைபோட உதவும்.
Back to top Go down
View user profile
 
சிந்தித்ததை செயல்படுத்துங்கள்
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: