BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபணம் சேமிக்கப் பத்து வழிகள் ! Button10

 

 பணம் சேமிக்கப் பத்து வழிகள் !

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பணம் சேமிக்கப் பத்து வழிகள் ! Empty
PostSubject: பணம் சேமிக்கப் பத்து வழிகள் !   பணம் சேமிக்கப் பத்து வழிகள் ! Icon_minitimeSun Apr 04, 2010 1:07 pm

'ஒரு ரூபாய் சேமிப்பது, ஒரு ரூபாய் ஈட்டிய மாதிரி' என்பார்கள். பணத்தைச் சேமிக்க நாங்கள் தரும் பத்து வழிகள் இங்கே...

1. படம் பார்த்தல்

திரையரங்குக்கு அவ்வப்போது திரைப்படத்துக்குச் செல்வோர் அதற்கு ஆகும் மாதச் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஆயிரத்தைத் தாண்டும். 'மல்டிப்ளெக்ஸ்'களில் காலைக் காட்சிக்கான கட்டணம் 40 முதல் 60 சதவீதம் வரை குறைவாக இருக்கும். அதைப் பயன்படுத்திக்கொம்ளலாம். வீட்டில் 'டிவிடி'யில் பார்ப்பது அதைவிடச் சிக்கனம்.

2. வாகனம்

ஒரே பகுதியில் வசிக்கும் சிலர் ஒன்றுசேர்ந்து திட்டமிட்டால், பள்ளிகளுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வது, ஒரே பகுதியில் வேலைக்குச் செல்வது ஆகியவற்றுக்குப் பேசி வைத்துக்கொண்டு ஒரு சுழற்சி முறையில் வாகனங்களை, கார்களை பொதுவாகப் பயன்படுத்தலாம். அதன்மூலம் நேரம், பணம், எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.

3. மின் கட்டணம்

டியூப் லைட்கள், குண்டு பல்புகளுக்குப் பதில் 'சி.எப்.எல்' எனப்படும் 'காம்பாக்ட் புளோரசன்ட் லைட் பல்பு'களை பயன்படுத்துங்கள். அவை குறைவான மின்சக்தியைப் பயன்படுத்துபவை. நீடித்து உழைப்பவை. பிரிட்ஜ் கதவை நீண்டநேரம் திறந்துவைப்பதைத் தவிர்ப்பது போன்ற சிறுசிறு விஷயங்கள் மூலமும் மின்சார செலவைக் குறைக்கலாம்.

4. வீட்டுக்கு வண்ணம் பூசுவது

வீட்டுக்கு வண்ணம் பூசும் வேலையை நாமே செய்யலாம் என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? இது ஓர் எளிமையான, எல்லோரும் கற்றுக்கொம்ளக்கூடிய வேலைதான். எவ்வளவு பெயிண்ட் தேவைப்படும், எப்படிப் பயன்படுத்துவது என்கிற விவரங்களை எல்லாம் கடைக்காரர் மூலமாகவே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

5. கிரெடிட் கார்டு பில்கள்

கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு பில்களுக்கு உரிய தொகையை உரிய காலத்துக்கும் செலுத்தி தாமதக் கட்டணத்தையும், கூடுதல் வட்டியையும் தவிருங்கள்.

6. செல்போன்

செல்போன் பில் தொகை எகிறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், பிரிப்பெய்டு முறைதான் சிறந்த வழி. நாம் எவ்வளவு தொகைக்குப் பேசுகிறோம் என்பதை அவ்வப்போது அறிந்துகொள்ளவும், அதற்கேற்ப 'பேச்சை' குறைத்துக்கொள்ளவும் அது உதவும்.

7. ஷாப்பிங்

கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது ஒரே கடை என்றில்லாமல், மூன்று, நான்கு கடைகளில் விசாரித்தால் ஒரே பொருள் மற்றொரு கடையில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விலை குறைவாகக் கிடைப்பதைக் காணலாம். சூப்பர் மார்க்கெட்களில் மளிகைச் சாமான் வாங்கப் போகும்போது பட்டியலுடன் சென்றால் தேவையற்றதை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

8. தள்ளுபடி

சில்லறை விற்பனை நிறுவனங்கள் அவ்வப்போது அறிவிக்கும் தள்ளுபடி, சலுகை விலை வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம். தள்ளுபடி என்றாலே தரமற்றதைத்தான் தள்ளிவிட நினைப்பார்கள் என்று எண்ண வேண்டாம். விற்பனையாகாமல் உள்ள இருப்பை விற்பதற்கும் தள்ளுபடி, சிறப்புச் சலுகையை அறிவிப்பார்கள்.

9. மாதாந்திரச் செலவுகள்

மாதாந்திரச் செலவுகளுக்குத் திட்டமிடுவதிலும், அப்படியே அதை நடைமுறைப்படுத்துவதிலும் அலட்சியம் வேண்டாம். செலவுப் பட்டியலை அன்றாடம் எழுதிவந்தால், நீங்கள் எந்த முறையில் செலவழிக்கிறீர்கம், அதில் எவையெல்லாம் தவிர்க்க வேண்டியவை எனத் தெரியவரும்.

10. மற்ற வழிகள்

வீட்டிலோ, அலுவலகத்திலோ நீங்கள் இல்லாத இடத்தில் அல்லது தேவையில்லாத இடத்தில் விளக்கை எரிய விடவேண்டாம், மின்விசிறியைச் சுழல விட வேண்டாம். உணவு இடைவேளையின்போது கம்ப்யூட்டர் மானிட்டரை அணைத்துவிடுங்கள். வீட்டில் அளவுக்கு அதிகமாகச் சமைக்க வேண்டாம். குறுகிய காலமே பயன்படுத்தக் கூடிய மளிகைப் பொருட்களை அதிகமாக வாங்காதீர்கள்.
Back to top Go down
 
பணம் சேமிக்கப் பத்து வழிகள் !
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிறந்த மூளைத் திறனுக்கான பத்து பழக்க வழக்கங்கள்!
» ~~ பொது இடங்களில் பின்பற்ற தங்க விதிகள் பத்து~~
» பணம் செய்ய விரும்பு
» பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா?
» அப்பாவை மாமாவாக்கும் பணம் தேவைதானா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: