BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 காடு வளருங்கள்; நாடு வளரும்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 36

PostSubject: காடு வளருங்கள்; நாடு வளரும்   Wed Apr 07, 2010 4:04 am

அன்றே சொல்லியது வேதம்..!

வேதங்களில் இயற்கையையும், இயற்கை சார்ந்தவற்றையும் பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் அனைத்தும் பாடல்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் யாராவது ஒரு வியாபாரி தன் லோகோவோடு "Save Water, Save Environment, Save Energy" என்று ஆங்கிலத்தில் சொன்னால் மட்டுமே நாம் கேட்போம்!

வேதங்களிலிருந்து சில உதாரணங்கள் இங்கே..

ரிக் வேதம் (6:48:17) - மரங்களை வெட்டக்கூடாது, அவை காற்றைத் தூய்மைப்படுத்துகின்றன.

யஜுர் வேதம் (5:43) - வானத்தைக் கிழிக்காதீர்கள், ஆகாசத்தை மாசுபடுத்தாதீர்கள்.

சரக சம்ஹிதம் - ஒரு காடு அழிந்தால் ஒரு நாடு அழிகிறது. மீண்டும் ஒரு காட்டை உருவாக்குவதை விட எளிதாக ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்பதால், காடுகளைக் காக்க வேண்டும். காடுகளில் உள்ள மிருகங்கள் காட்டின் வளர்ச்சிக்குத் தேவையாக இருப்பதால், அவற்றைப் பாதுகாப்பது நம் சடங்கு எனக் கருத வேண்டும்.

(நன்றி : விதூஷ் வலைப்பதிவு)

தவிர்க்க முடியாதோ!

"பெரும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் சேர்ந்து உருவாக்கும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் ஒரு தவிர்க்க முடியாத சமூக விளைவு. பண முதலைகளுக்கு இவர்கள் தேவைப்படுவது போன்றே, பற்றிக் கொள்ள ஏதுமற்ற எளிய மனிதர்களுக்கும் தேவைப்படுகிறார்கள்.

இந்தியர்களுக்கு ஒருவன் தலைவனாகவோ கடவுளாகவோ இருப்பதைப் போன்ற ஆபத்தான காரியம், இந்த உலகிலேயே வேறு எதுவும் இருக்க முடியாது.

வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான்"

(மனுஷ்யபுத்திரனின் கருத்துப் பதிவுகளில் இருந்து சில பகுதிகள்)

யாருக்கு செல்வாக்கு?

தேசிய அளவிலும், தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கு மிக்க 10 பேர்களின் பட்டியலை இந்தியா டுடே இதழ் வெளியிட்டிருக்கிறது. அதில் எழுத்து, இதழியல், பதிப்பு சார்ந்த பங்களிப்புகளுக்காக மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மனுஷ்யபுத்திரனுடன் இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் :

1. வேணு ஸ்ரீனிவாசன் (தலைவர், டி.வி.எஸ்.மோட்டார் கம்பெனி)
2. என்.ஸ்ரீனிவாசன் (எம்.டி, இந்தியா சிமெண்ட்ஸ்)
3. ஏ.சக்திவேல் (தலைவர், பாப்பீஸ் குழுமம்)
4. ப்ரீத்தா ரெட்டி (நிர்வாக இயக்குனர், அப்போலோ குழுமம்)
5. உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரைதயாநிதி அழகிரி (ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் க்ளவுட் நைன் ஃபிலிம்ஸ்)
6. கமல்ஹாசன் (நடிகர், இயக்குனர்)
7. கே.டி. ஸ்ரீநிவாச ராஜா (எம்.டி. அடையாறு ஆனந்த பவன்)
8. மயில்சாமி அண்ணாதுரை (தலைவர், சந்திராயன்)
9. ஆர்.ஆர்.கோபால் (ஆசிரியர், பதிப்பாளர், நக்கீரன்

(நன்றி : இந்தியா டுடே)

நடிப்பு

ஒரு முகத்தை மறைத்து
இன்னொன்றைக் காட்டினார்கள்..
சாமியார் ஒருவரும்
சபலமுற்ற ஒருத்தியுமாக...
அட!
ரெண்டுபேருமே நடிகர்களென்று
துண்டுபோட்டாற்போல்
சொல்லியிருக்கலாம்...
ஏமாந்த கூட்டத்தின்முன்
இருவரும் நடிக்கிறார்கள்
அவள் திரையிலும்,
அவன் தினசரி வாழ்க்கையிலுமாக..!

(நன்றி : குறிஞ்சி மலர்கள் வலைப்பதிவு -- சுந்தரா)

ஒரு மொக்கை

ஆசிரியர் : "அங்கே ஓர் அழகான பெண் சென்று கொண்டிருக்கிறாள்." இதை ஒரு ஆச்சரிய வாக்கியமாக மாற்று..?

மாணவன் : "மச்சான்.. அங்க பாருடா.. ! சூப்பர் ஃபிகர் போவுது..!"
Back to top Go down
View user profile
 
காடு வளருங்கள்; நாடு வளரும்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: