BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 நாட்டு மருத்துவம்

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: அகத்தி கீரையின் மருத்துவம்   Mon Apr 05, 2010 10:22 pm

அகத்தி கீரையின் மருத்துவம்
அகத்தி கீரை:- இது செஸ்பேனியா (Sesbania) என்ற இனத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் செஸ்பேனியா கிராண்டிஃவுளோரா (Sesbania grandiflora) என்ப்தாகும். நமது அகத்தின் தீயை அகற்றுவதால் இது அகத்தி என்ற பெயர் பெற்றது.
.
ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும் அகத்தி கீரை :-அகம்+தீ+கீரை என்றால் பித்தம் போக்க கூடியது. இதில் வைட்டமீன்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உயிர் சத்து, தாது பொருட்கள் அதிகமாக உள்ளது.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.

கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

வைசூரி போன்ற நோய் குணமாக அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம்

அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும்.

இந்த அக்த்தி கீரையானது வயிற்றில் இருக்கும் புழுவை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்கும்.

இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் சுரம் போய்விடும்.

வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.

அகத்திகீரை தொடர்ந்து சாப்பிட்டால் மூளைக் கோளாறு சரியாகும்.

பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா ஆகியவற்றை பிடிப்பதால் உண்டாகின்ற விஷ சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் இது அகற்றும்.

அகத்தி கீரையின் தீமைகள்-
வேறு மருந்து சாப்பிடும்போது இககீரையை சாப்பிட்டால் மருந்தின் வீரியம் குறைந்துவிடும். அதனால் மருந்து சாப்பிடும் காலங்களில் இந்த கீரையை சாப்பிடக்கூடாது.

இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டால் இரத்தம் கெட்டுப் போக வாய்ப்புண்டு. சொறியும், சிரங்கும் வரலாம். இரத்த சோகையும் வரலாம். வயிற்று வலியும் பேதியும் வரலாம்.

இது வாயு கோளாறை உருவாக்கும். அதனால் வாய்வுக் கோளாறு இருப்பவர்கள் இந்த கீரையை சாப்பிடக் கூடாது.
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: நாட்டு மருத்துவம்   Wed Apr 07, 2010 10:11 pm

நெல்லிகாய்
இது முதுமையை துரத்தி இளமையை தரும் பித்தத்தை குறைக்கும் வாய்ப்புண் தீரும். தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும். நெல்லிச்சாறை தேனுடன் கலந்து தினமும்
காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமலும தடுக்கும்

இஞ்சி
அஜீரணம் குணமாக்கும் உமிழ்நீரைப் பெருக்கும் பசியைத் தூண்டும்; உஷ்ணத்தை உண்டாக்கும் வயிற்று உப்புசம் புளியேப்பம் வாந்தி குடல் கோளாறு கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். சுவாசகாசம் இரைப்பு
சுவாச இருமலுக்கும் சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல்
தொல்லை கொடுக்கும்போதும் இஞ்சி கஷாயம் சாப்பிடலாம்

வல்லாரை
இது கற்பக மூலிகையாகும். வாய்ப்புண், ஆசனவாய்க் கடுப்பு மற்றும் எரிச்சல் யானைக்கால் மேகப்புண் நெறிகட்டுதல் தொழுநோய் ஆகியவற்றை குணமாக்கும். ஞாபக சக்தியை உயர்த்தும்

அகத்தி கீரை
சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.

துத்திகீரை
இது மூலத்தை குணமாக்கும். துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

ரோஜா
இது துவபர்ப்பு சுவையுடையது. இது உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் தரும். அஜீரணம் வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும்

அன்னாச்சி பூ

தாவரவியல் பெயர்-இலிசியம் வீரம்
தாவரவியல் குடும்பம்-மேக்னோலியேசியே (இலிசியேசியே)
நாட்டு மருந்து கடையில் போய் அன்னாசிப்பூ அல்லது தக்கோலம் என்று கேட்டால் தருவார்கள். இதன் பூ மற்றும் பழங்கள் சுரத்தை குறைக்கும் .இதிலிருந்து எடுக்கப்படும் சிக்கிமிக் அமிலமானது எச்1என்1 வைரஸ் கிருமிகளை அழிக்கும்.
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
Fréédóm Fightér

avatar

Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 32
Location : Vcitoria,Vergin Island

PostSubject: பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி!   Mon Apr 12, 2010 3:42 pm

பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.

தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் - 4 கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை..

கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்..

10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம் - 1. இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள். இதனால், தோல் இறுக்கமாகும். .
Back to top Go down
View user profile http://wwww.myacn.eu
Sponsored content
PostSubject: Re: நாட்டு மருத்துவம்   

Back to top Go down
 
நாட்டு மருத்துவம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: