BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசங்கம் காண்போம் (05) Button10

 சங்கம் காண்போம் (05)

Go down 
AuthorMessage
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: சங்கம் காண்போம் (05)   சங்கம் காண்போம் (05) Icon_minitimeSat Apr 10, 2010 12:52 pm

தோழன், நேற்று தலைவனிடம் "நீ விரும்பும் தலைவியின் உயிர்த்தோழி, கோவிலுக்கு அருகில் இருக்கும் நந்தவனத்தில் உன்னைச் சந்திப்பாள். நீ உன் மனதில் உள்ளவற்றை அவளிடம் கூறலாம்" என்று சொன்னதன் பேரில் இதோ.. இங்கே.. தலைவன் நந்தவனத்தில் காத்திருக்கின்றான் தோழியின் வருகையை எதிர்நோக்கி!!

தான் இது போல் ஒரு பெண்ணை யாசித்து நிற்போம் என்று அவன் நினைத்திருக்கவில்லை. 'எப்படி இந்த நிலைமை ஏற்பட்டது..?' என்று எண்ணிப் பார்த்தான். 'எப்போது முதன்முதலாக தலைவியைப் பார்த்தேன்' என யோசித்தான். நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன.

ஆம்..! ஒரு நாள் நண்பர்களோடு பூங்காவில் அமர்ந்திருந்தான். தோழர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்தவாறு அமர்ந்திருந்தனர். அப்போது இவன் மீது ஒரு பந்து வந்து விழுந்தது. திரும்பினான்... ஒரு பெண்! அன்றலர்ந்த மலரில் காணப்படும் பனித்துளி போல புத்துணர்வோடு இருந்தாள். அலை போன்ற கூந்தல் முகத்தில் விழ, கைகளால் அவற்றை ஒதுக்கியவாறு.. "பந்து.." என்று மெதுவாகக் கேட்டாள். தலைவனும் முகத்தில் புன்னகையோடு பந்தை எடுத்துக் கொடுக்க அந்தப் பெண்ணும் புன்னகையோடு பந்தை வாங்கிக் கொள்ள, கைகளை நீட்டினாள். அதற்குள் அங்கிருந்த தோழன் "..முடியாது.. பந்தைக் கொடுக்க முடியாது" என்று கோபமாகக் கூறினான். அதற்குள் அந்தப் பெண்ணின் கண்களில் வருத்தம் தெரிந்தது. அப்போது அவளை விட மூத்தவளாக இருந்த ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் அந்தப் பெண்ணின் தோள்களில் தட்டி, ஆறுதல் கூறி.. இவர்களிடமிருந்து பந்தை வாங்கிக் கொள்ள, இருவரும் ஓடி விட்டனர். இதுதான் முதல் சந்திப்பு! காதல் என்ற உணர்வு தோன்றுவதற்கு முன் ஏற்பட்ட சந்திப்பு. அன்றோடு அந்தப் பெண்ணை மறந்தான் தலைவன்.

'சொத்'தென்ற சத்தத்துடன் ஒரு காய் விழ அவனுடைய எண்ண ஓட்டம் தடைப்பட்டது. 'எங்கே தோழி..? வரவில்லையே.. வருவாள்... நிச்சயம் வருவாள்.. வரும்போது வரட்டும்' என்று வாட்டமாக ஒரு இருக்கையைப் பார்த்து அமர்ந்தான்.

'இரண்டாவது முறையாக எப்போது பார்த்தேன்..? ஆம்! முதல் சந்திப்பிற்குப் பின், சரியாக இரண்டாம் நாள்... ஊரில் இருக்கும் சிற்பக் கலைக்கூடத்தில்..' என்று அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான். ஒவ்வொரு தூணிலும் மிக அழகாகவும், திறமையோடும், தத்ரூபமாகவும் செதுக்கியிருந்த சிற்பங்களை ரசித்துக்கொண்டே வந்தவன்... ஒரு பெண்ணின் மேல் மோதி விட அப்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பார்க்காமல் நிகழ்ந்ததற்காக பல்முறை மன்னிப்புக் கேட்டு வருந்தினான். அதற்குள் அப்பெண் சுதாரித்துக் கொண்டு எழுந்து விட்டாள். "சிற்பங்களைப் பார்த்துக் கொண்டு வந்ததில்... உங்களைப் பார்க்கவில்லை. இடித்து விட்டேன்.. அடி ஏதேனும் பட்டுவிட்டதா" என்று கேட்ட போதுதான் அவளைப் பார்த்தான்.

அதே பெண்! அதே அழகான முகம்!. மீண்டும் பேச ஆரம்பிப்பதற்குள்.. அன்று பார்த்த அதே தோழி வந்தாள். "என்ன இது! பார்த்து வரக்கூடாதா? ஏதாவது ஆகியிருந்தால்.." என்று சற்றுக் கடுமையாக தலைவனிடம் கேட்டாள். உடனே தலைவி, "இல்லை.. நானும்தான் கவனிக்காமல் வந்து விட்டேன்.." என்று கூற, தோழி அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றாள். வானத்தில் மின்னல் தோன்றி சட்டென்று மறைந்தது போல் இருந்தது தலைவனுக்கு. ஒன்றும் விளங்காமல் அங்கே நின்று கொண்டிருந்தான்.

சற்று தூரம் சென்ற அந்தப் பெண் தலைவனைத் திரும்பிப் பார்த்தாள்… சிரித்தாள்… தலைவனின் உச்சந்தலையில் இரத்தம் சூடாக பாய்வது போல உணர்ந்தான். அவனுக்கு அப்பெண்ணை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது.. 'இதுதான் காதலா..' என்று யோசித்தான். யார் அவள்..?

'மூன்றாவது முறை எப்போது சந்தித்தேன்..?' என்று யோசித்தவாறு.. நிகழ்ந்ததை எண்ணிப் பார்த்தான். ஒரு நாள் தலைவன் தன் வீட்டின் வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்போது தூரத்தில் அந்தப் பெண் தன் தோழிகளுடன் வந்துகொண்டிருந்தாள். 'கனவா? நனவோ?' என்று தடுமாறினான் தலைவன். இல்லை உண்மைதான்! தலைவியின் அழகு முகத்தைப் பார்த்து ரசித்தான். முகத்தில் என்ன பொலிவு! 'மழைக் காலத்தில் பூக்கும் பிச்சிப் பூவின் இளமையான செழிப்பான மொட்டுகள் போன்ற கண்கள்... அந்த மொட்டுகளின் புறப்பகுதியின் இளம்சிவப்பு போல.. செவ்வரியோடிய கண்கள்' என்று மனதிற்குள் கவிதையே எழுதி விட்டான். அவளும் அவனைப் பார்த்தாள். ஆனால் நாணத்தால் தலை குனிந்தவாறு.. கால்கள் பின்னலிட... ஓரக்கண்ணால் இவனைப் பார்த்தவாறு.. இவனைக் கடந்து சென்றாள். இதயம் துள்ள வீட்டினுள் சென்று உடை மாற்றிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தான் தலைவன்.

அவர்கள் பேச்சும் சிரிப்பொலியுமாக ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருக்கும் தெப்பத்தில் ஏறிக் கொண்டனர். தலைவன் ஆற்றங்கரையில் நின்றவாறு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவளின் அழகை இங்கிருந்தும் அவனால் உணர முடிந்தது. அசைந்து அசைந்து செல்லும் தெப்பத்திற்கேற்ப அவள் அசைவது நாட்டியமாக இருந்தது அவனுக்கு. அன்று பூங்காவிலும், சிற்பக்கூடத்திலும் பார்த்த அந்தத் தோழி, தாய் போல் அன்பும், அரவணைப்பும், உரிமையும் கொண்டவளாக, எல்லோரையும் வழி நடத்திக் கொண்டிருந்தாள். கூட்டத்தில் இருக்கும் மற்றப் பெண்களைக் காட்டிலும் தலைவி இவளிடமே மிகுந்த அன்பு உடையவளாக இருக்கின்றாள் என்பதைப் புரிந்து கொண்டான் தலைவன்.

'அதோ அந்தத் தோழி தெப்பத்தின் தலைப் பகுதியைப் பிடித்துக் கொண்டால் நம் தலைவியும் அதே இடத்தைப் பிடிக்கின்றாள். தோழி தெப்பத்தின் கடைப் பகுதியைப் பிடித்தால் தானும் அதையே செய்கிறாள். அவள் நின்றால் இவளும் நிற்கிறாள். அவள் அமர்ந்தால் இவளும் அமர்கிறாளே..' என்று சிரித்துக் கொண்டான் தலைவன். 'ஒரு வேளை தோழி தவறுதலாக கைகளை விட்டு விட்டு தண்ணீரில் விழுந்து நீரோடு முழ்கிப் போனால்.. .நம் தலைவியும் நிச்சயம் அவளைப் போலவே மூழ்கி விடுவாள்' என்று நினைத்துக் கொண்டான். உடனே அவனுக்கு ஒரு எண்ணம் பளிச்சிட்டது. 'இந்தத் தோழியின் மூலம் நம் காதலைத் தெரிவிக்க முடிந்தால்..?' அந்த நினைவே அவனுக்கு இன்பமாக இருந்தது. தன் தோழனின் உதவியோடு இதோ.. இன்று.. தோழியை சந்திக்கக் காத்திருக்கின்றான்.

அதோ துரத்தில் தோழி வருவது தெரிய, தன் காதல் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் தோழியை வரவேற்க ஆயத்தமாகின்றான்.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

தலைவன் கூற்று
குறிஞ்சித்திணை

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோடு ஒழுகின்
ஆண்டும் வருகுவள் போலும்! மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிரன் னோளே
- சிறைக்குடி ஆந்தையார்.

தெப்பத்தின் தலைப்பக்கத்தைத்
தோழி பிடித்தால்
தானும் அதையே பிடிக்க..
கடைப்பக்கத்தைப் பிடித்தால்
தானும் அதையே செய்ய..
தவறுதலாய், தோழி,
தெப்பத்தைக் கைவிட்டு நீரில் மூழ்கினால்..
நிச்சயமாய்
அதையும் செய்வாள்,
மழைக் காலப் பிச்சிப்பூவின்
நீர் ஒழுகும் இளமொட்டின்
புறப்பகுதி சிவப்பு போல
செவ்வரியோடிய கண்களையும்
பனித்துளி தவழும் தளிர் மேனியையும்
உடையவளாகிய என் தலைவியே![b]

THANKS:

நெல்லைச்சாரல்

Last edited by Fathima on Sun May 30, 2010 8:48 am; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: சங்கம் காண்போம் (6)(7)   சங்கம் காண்போம் (05) Icon_minitimeSun Apr 18, 2010 7:32 am

சில நாட்களாக விடாது பெய்த மழையால் ஆங்காங்கே தண்ணீர் நின்று கொண்டிருந்தது. பொன் நிறத்தில் கொன்றை மலர்கள் பூத்து மின்னின. பிச்சிப் பூக்களும் பூத்து மணம் பரப்பிக் கொண்டிருந்தன. வண்டுகள் உற்சாகமாக ரீங்காரமிட்டு இங்கும் அங்குமாக மகரந்தங்களை இறைத்திருந்தன. இவை அனைத்தும் ‘கார்காலம் வந்து விட்டது’ என்பதைக் காட்டின.

வழியில் மலர்ந்திருக்கும் பிச்சிப் பூக்களைப் பறித்தவாறு, பெரும் மகிழ்ச்சியோடு தலைவியைக் காணச் சென்றாள் தோழி!

இரண்டு நாட்களுக்கு முன் தலைவன், மன்னன் இட்ட பணியை செம்மையாக முடித்து தன் ஆருயிர் மனைவியின் துன்பத்தைத் துடைக்க வந்திருக்கிறான். கார் காலத் தொடக்கத்தில் வருவதாகக் கூறியவன், இரண்டு வாரங்கள் கழித்துதான் வந்திருக்கிறான். பல நாட்கள் பிரிந்தவர்கள்... அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று எண்ணிய தோழி, தலைவியின் வீட்டுப் பக்கம் செல்லவே இல்லை. இன்றுதான் வருகிறாள்.

தலைவியின் வீட்டை நெருங்கும்போது பேச்சொலியும், சிரிப்பொலியும் அவளை வரவேற்றன. ‘தலைவியின் முகச்சோர்வெல்லாம் எங்கே போயிற்று? இத்தனை அழகாக இருக்கிறாளே! என்ன மாயம் செய்தார் தலைவர்?’ என்று வியந்தாள் தோழி!

“வா தோழி... எங்கே இத்தனை நாட்களாகக் காணோம்? இன்றுதான் வழி தெரிந்ததா?” என்று பொய்க் கோபத்துடன் கேட்டாள் தலைவி.

தலைவியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள் தோழி!. தோழியின் சிரிப்பிற்கு தலைவிக்கு அர்த்தம் புரியாதா என்ன?

தோழி, தலைவனின் பொதுவான நலத்தையும், அவன்தம் கடமைகள் பற்றியும் விசாரித்தாள். தலைவனும் எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினான். பின்னர், “தோழி! உனக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்” என்று கைகூப்பினான்.

பதறிய தோழி “என்ன இது தலைவரே! எதற்கு... எனக்கு..” என்றாள்.

“மோப்பக் குழையும் அனிச்சம் மலரைப் போன்ற மென்மையான என் ஆருயிர்த் தலைவியை, என் பிரிவின்போது நல்ல முறையில் பேணி பார்த்துக் கொண்டுள்ளாய். என் தலைவியின் தனிமைத் துன்பத்தைப் போக்கி அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கின்றாய். உனக்கு நான் எவ்வாறு கைம்மாறு செய்வது!” என்று உருக்கமாகப் பேசினான் தலைவன்.

“ஓ.. அதற்காகவா..! தலைவரே! உங்களின் உண்மையான காதலையும், பரிவையும், அன்பையும் அனுபவித்த இவளால், உங்களின் பிரிவைத் தாங்கத்தான் முடியவில்லை. போதாதற்கு மழை பெய்து கொன்றைப் பூக்களும், பிச்சிப் பூக்களும் மலர்ந்து தலைவிக்கு உங்களின் சத்திய வார்த்தைகளை நினைவுபடுத்தின. நாளுக்கு நாள் உடல் மெலிந்து, பொலிவிழந்து.. உண்ணாமல் உறங்காமல் தவித்தாள்” என்று தலைவியின் நிலைமையை விவரித்தாள்.

“தோழி! கேட்பதற்கே வருத்தமாக இருக்கின்றது. நீ எப்படி இவளைத் தேற்றினாய்?” என்றான் ஆர்வத்தோடு.

“என்னிடம் கேளுங்கள்” என்ற தலைவி, “இந்தத் தோழி மகா கெட்டிக்காரி! இது கார் காலம் அல்ல.. பருவம் தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்து விட்டது என்று ஏதேதோ கூறி என்னை சமாதானம் செய்தாள்” என்று நகைத்தபடி கூறினாள்.

“நல்ல கற்பனை” என்று தலைவனும் ரசித்தான்.

“உங்கள் தலைவி சாமானியப்பட்டவளா? நான் கூறுவதை நம்புவது போல காட்டிக்கொண்டாலும், அவள் மனத்துயரை அவள் உடல் காட்டிவிட்டது” என்றாள்.

“பின் எப்படித்தான் சமாதானம் செய்தாய்?” என்று ஆதங்கத்துடன் கேட்டான் தலைவன்.

“நல்ல வேளையாக, உங்கள் வீட்டின் வாசலில் ஒரு காகம் அமர்ந்து கரைந்தது. அதைக் காட்டி சமாளித்தேன்” என்றாள் தோழி.

“காகம் கரைவது இயல்புதானே தோழி! இதில் ..என்ன..?”என்றான் தலைவன்.

“இயல்புதான்! ஆனால் காகம் கரைந்தால் புதிய விருந்தினர் வருவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் காகம் கரையும் போதெல்லாம் ‘நிச்சயம் நீங்கள் வந்து விடுவீர்கள்’ என்று தலைவிக்கு நம்பிக்கை ஊட்டி தேற்றினேன். அதனால் உங்கள் நன்றியைக் காகத்திற்குக் கூறுங்கள்” என்று நகைத்தாள் தோழி.

“போ தோழி!... நீ கேலி செய்கிறாய்” என்று சிணுங்கினாள் தலைவி.

“சரி தலைவி! காகத்திற்கு நாம் எப்படி நன்றி சொல்வது?” என்று கவலையுடன் கேட்டான் தலைவன்.

விளையாட்டாகக் கேட்கிறான் என்று நினைத்த தோழி, தலைவனைப் பார்த்தாள். ஆனால் அவன் கண்களில் தீவிரம் தெரிந்தது. அதனால் தோழியும் தன் மனதில் எண்ணியதைக் கூறலானாள்.

“தலைவரே! இந்த மலையின் மன்னர் இருக்கிறாரல்லவா?”

“யார் நள்ளியா?”

“ஆம்! அவருடைய பாதுகாவலில் இருக்கும் பசுக்கள் தரும் நெய் அனைத்தையும் எடுத்து, தொண்டி நகரில் விளைந்திருக்கும் நெல் அனைத்திலும் சேர்த்து, சோற்றுக் கவளங்களாக்கி ஏழு கலங்களில் வைத்து, காக்கைக்குப் படையுங்கள்” என்று சிரித்தபடி கூறினாள்.

“தோழி! என் மனைவியின் துன்பத்தைப் போக்கிய அந்தக் காகத்திற்கு இவை போதுமோ?” என்று நன்றி உணர்ச்சி மேலிடக் கேட்டான் தலைவன்.

தலைவியின் மீது தலைவன் கொண்டிருக்கும் காதல், பாசம், பரிவு இவையனைத்தும் தெளிவாகத் தெரிய, தோழி நெகிழ்ந்தாள். அதை மறைத்துக் கொண்டு, கிண்டலாக “போதாதுதான்.. பரவாயில்லை.. ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்” என்று சிரித்தாள்.

கணவனின் அழுத்தமான அன்பும், காதலும், பரிவும் சுகமாக இருக்க, தலைவி, தலைவனின் கைகளை இறுகப் பற்றினாள்.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

திணை - முல்லை தோழி கூற்று

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிதுஎன் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
வருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
- காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்.

திடமான தேரினையுடைய நள்ளியின்
காட்டில் மேயும் பசுக்கள்
அளித்த நெய்யுடன்
தொண்டி நகரில் விளையும்
நெற்சோற்றுடன் கலந்து
கவளங்களாக்கி
ஏழு கலங்களில் வைத்துக் கொடுத்தாலும்
சிறியதாகுமே! என் தலைவியின்
பெருந்தோள்கள் மெலியச் செய்த
பிரிவுத்துயருக்கு மருந்தாகி
விருந்தினர் வருவதாய் கரைந்த
காக்கையின் பலிக்கு!

****************************************************************************************************************************************************************************************************************************************************************
கலக்கம் மிகுந்தவளாய், தலைவியின் தாய் வீட்டினுள் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தாள். இந்தக் காட்சி வித்தியாசமாக இருக்கவே, தலைவியின் தந்தை, “என்னம்மா! வீட்டினுள் வேலை இல்லையா.. ஏன் பரபரப்புடன் இருக்கிறாய்?” என்று விசாரித்தார்.

“திருமணமாகி சென்ற நம் மகளைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். எப்படி தனியாகக் குடித்தனம் செய்கிறாளோ?” என்றாள் தாய்.

“என்ன செய்வது? கடலில் விளையும் முத்து, யாருக்கோ அணிகலனாகி விடுகின்றது. மலையில் வளரும் சந்தனம் யாருக்கோ வாசனைப் பொருளாகி விடுகின்றது. அதைப் போலத்தான் பெண்களும்!” என்று பெருமூச்சு விட்டார் தந்தை.

“அய்யா! குழந்தை பிறந்த அன்றிலிருந்தே இந்த எண்ணத்தோடுதான் எல்லா தாய்மார்களும் தம் பெண்ணை வளர்ப்பார்கள். அதனால் தேற்றிக் கொண்டு விட்டேன்” என்றாள் தாய்.

“பின் வேறென்ன பிரச்சினை?” என்று கேட்டார்.

“அய்யா! நம் மகள் எப்படி உணவு சமைக்கிறாளோ என்றுதான் கவலை. பொதுவாக ஆண்கள், தங்கள் மனைவிமார்கள் நன்றாக சமையல் செய்பவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நம் பெண்ணிற்கு சரியாக சமையல் செய்யத் தெரியாது. அதற்காக நம் மருமகனார், மகளைக் கோபிப்பாரோ என்று அச்சமாக இருக்கிறது” என்று கண்களில் நீரோடு பேசினாள்.

“என்னம்மா இது! ஏன் கலங்குகிறாய்? ஒன்றும் ஆகி விடாது. சரி! நீ நல்ல முறையில் பயிற்சி அளித்திருக்கலாமே?” என்று பரிவுடன் கேட்டார்.

“அய்யா! நான் பல முறை முயன்றிருக்கிறேன். ஆனால் நம் மகள் விளையாட்டுப் பருவம் மிகுந்தவளாக இருந்ததால், நான் கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளவில்லை” என்றாள்.

இப்போது தந்தைக்கும் அச்சம் ஏற்பட்டது. “சரி.. நாம் சென்று பார்த்து விட்டு வரலாமா?” என்று கேட்டார்.

”வேண்டாம். அதற்குத்தான் நான் செவிலித்தாயை அனுப்பியுள்ளேன். நேற்றே வருவதாகச் சொன்னாள். இன்று வரை காணோம்..” என்று தாய் முடிப்பதற்குள், தந்தை, “ஓ..ஏற்பாடுகள் செய்து விட்டாயா?அதற்குத்தான் உலாவுகிறாயா..” என்று சிரித்தார். “அதோ பார்! அங்கே! செவிலி வருகிறார்” என்றார்.

தாயும் வாசலைப் பார்த்து, “வா செவிலி! ஏன் தாமதம்? மகள் எப்படி இருக்கிறாள்?” என்று படபடப்பாக வரவேற்றுப் பேசினாள்.

உடனே தந்தை, “கொஞ்சம் பொறுமையாக இரு! வாருங்கள் செவிலி! அமருங்கள்! தண்ணீர் அருந்துங்கள்” என்று உபசரித்தார்.

“நன்றி, அய்யா!” என்றவள், தாயைப் பார்த்து “நேற்றே என் வீட்டிற்கு வந்துவிட்டேன். பயணக் களைப்பால் வர முடியவில்லை. மன்னிக்கவும். உங்கள் மகளும், மருமகனும் சுகமாக இன்பமாக இருக்கின்றனர்” என்று முகம் மலர கூறினாள்.

“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி! என் மகள் என்ன செய்கிறாள்? வேலைகள் பழகி விட்டனவா? எப்படி இருக்கிறாள்?”என்று வரிசையாக அடுக்கினாள் தாய்.

“இருங்கள், அம்மா! நான் கண்ட அந்த அற்புதக் காட்சியை அப்படியே கூறுகிறேன். நான் அதிகாலையில் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். அப்போது நம் மருமகனார் பணிக்குச் சென்றிருந்தார். மகள் மட்டுமே இருந்தாள். என்னைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து உங்களைப் பற்றியெல்லாம் வெகுவாக விசாரித்தாள். எனக்குக் களைப்பாக இருப்பதாகக் கூறி நான் படுத்துவிட்டேன். தூங்குவது போல் பாவனை செய்து நம் அருமை மகளின் செயல்களைக் கவனித்தேன்” என்று பெருமிதத்தோடு கூறினாள்.

“செவிலி! அருமை! சரியாகச் செய்தாய்’ என்று மகிழ்ந்து ஆரவாரித்தாள் தாய்.

“சொல்லுங்கள், செவிலியாரே! என்ன உணவைச் செய்தாள்?” என்று ஆர்வமாகக் கேட்டார் தந்தை.

“முதலில் அவள் கட்டித் தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதைத் தன் காந்தள் மலர் போன்ற விரல்களால் நன்றாகக் கலக்கினாள்...” என்று கூறுவதற்குள், “ஆம், செவிலி! அவள் கைவிரல்கள் எவ்வித வேலையும் செய்து பழகாததால் மலர் போன்று மென்மையாகத்தான் இருக்கும்” என்று கண் கலங்கினாள் அன்னை.

“பின், அந்தக் கைகளை அப்படியே அவள் உடுத்தியிருந்த பட்டுப் புடவையில் துடைத்துக் கொண்டாள்” என்று செவிலி கூறிக்கொண்டிருக்கும் போதே தாய் குறுக்கிட்டாள்.

“என்ன பட்டாடையா? ஏன் அதை உடுத்திக்கொண்டு சமைக்கிறாள்? ஏன் கைகளை அதில் துடைக்கிறாள்?” என்றாள் அன்னை கோபமாக!

“நம் மருமகனார் நல்ல வளமான குடியில் பிறந்தவரல்லவா? அதனால் மனைவியைப் பட்டாடை அணியச் சொல்லியிருப்பார்” என்று தன் மருமகனாரின் செல்வச் செழிப்பைக் கண்டு பூரித்தார் தந்தை.

“தாயே! எனக்கும் பதைபதைப்பாக இருந்தது. அந்தப் புடவையை அவள் மாற்றவும் இல்லை. பிறகு என்ன செய்தாள் தெரியுமா? அவளுடைய குவளை மலர் போன்ற கண்களிலிருந்து நீர் வழிய, புகை மூட்டத்திற்கு நடுவில், புளிக்குழம்பு செய்து கணவன் வருவதற்கு முன்பாக சமையலை முடித்து விட்டாள்” என்று விவரித்தாள் செவிலி.

“என் பெண்ணல்லவா!" என்று கொண்டாடினாள் தாய்.

“நம் மருமகனாருக்குப் பிடித்திருந்ததா?” என்று கேட்டார் தந்தை.

“கேளுங்கள் அதை! கணவனுக்கு மிக அழகாகப் பரிமாறினாள். ஒரு கவளம் உண்ட நம் மருமகனார், மனைவியின் கைகளைப் பற்றி இழுத்து ‘மிகவும் நன்றாக உள்ளது’ என்றார். அவ்வளவுதான்! நம் மகளின் முகத்தில் இருந்த சோர்வு, களைப்பு எல்லாம் எங்கோ ஓடி ஒளிய, முகம் மகிழ்ச்சியால் மின்னியது. என்ன அருமையான காட்சி! ஆனந்தமாக இருந்தது” என்றாள் செவிலி கண்களை மூடி ரசித்தவாறு!

ஓடிச் சென்று செவிலியை அணைத்துக் கொண்டு, “நன்றி, செவிலி! மிக்க நன்றி!” என்று நா தழுதழுக்கக் கூறினாள் தாய்.

செவிலிக்கு நன்றி உரைத்த தந்தை, தாயிடம் “நாம் அங்கு சென்று வரலாம்” என்றார்.

அச்சொற்கள் தாய்க்கு ஆறுதலாக இருந்தன. இப்போது தன் மகளுக்குச் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தால் ஆர்வமாகக் கேட்டுக் கொள்வாள் என்று தாய் உறுதியாக நம்பினாள்!

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

திணை - முல்லை செவிலித்தாய் கூற்று

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தாந்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!

- கூடலூர் கிழார்

கட்டித் தயிரை மெல்லிய காந்தள்மலர் விரல்களால்
பிசைந்து
உடுத்தியிருந்த பட்டாடையில்
அவசரமாகத் துடைத்து
குவளைமலர் கண்கள் கலங்குமாறு
தாளித்து
புளிக்குழம்பைப் பக்குவமாய் செய்ய
இனிமை என்று கணவன் சுவைத்து உண்ண
நுட்பமாக மகிழ்ந்து ஒளி வீசியது அவள் முகமே!

[b]
Back to top Go down
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: சங்கம் காண்போம் (8) (9)   சங்கம் காண்போம் (05) Icon_minitimeSun Apr 18, 2010 7:35 am

தலைவிதான், தோழிக்கு தைரியம் சொல்லி அவளுடைய தமையனார் திருமணத்திற்கு அனுப்பி வைத்தாள்.

போன வாரம் ஒரு நாள், தோழி மன வருத்தத்தோடு இதைச் சொன்னாள், “தலைவியே! நீயோ யானையினால் முறிக்கப்பட்டு கீழும் விழாமல், மரத்திலும் ஒட்டாமல் தவிக்கும் மரக்கிளை போல தவிக்கின்றாய். இந்த நிலையில் உன்னைத் தனியே விட்டுச் செல்ல அச்சமாக இருக்கிறது”

உடனே தலைவி, “இல்லை தோழி! என்னுடைய இன்பமும் துன்பமும்தான் உனக்கு வாழ்க்கையாக இருக்கிறது. இப்போதுதான் முதன்முதலாக உனக்கென்று ஓரு கொண்டாட்டம் வந்திருக்கின்றது. நீ கண்டிப்பாக மகிழ்ச்சியோடு கலந்து கொள்ள வேண்டும். நான்கு நாட்கள்தானே! கவலைப்படாதே! நான் சமாளித்துக் கொள்வேன். எங்கே, என்னைப் பார்த்து சிரி” என்று தோழியைத் தேற்றி அனுப்பினாள் தலைவி.

இரண்டு நாட்கள் ஓடின. ஓடின என்று சொல்லக் கூடாது. நகர்ந்தன! தோழியின் அருகாமை துயரத்தைப் பெருமளவு குறைக்கின்றது என்பதை முழுமையாக உணர்ந்தாள் தலைவி. பாவம் தோழி! இந்த நான்கு நாட்களாவது மகிழ்வோடு திருமணத்தில் கலந்து கொள்ளட்டும் என்று எண்ணினாள். திருமணம் என்று நினைத்ததும், தனக்கும் தலைவனுக்கும் இது போன்ற ‘ஒரு நிகழ்ச்சி நிகழுமா’ என்ற ஏக்கம் ஏற்பட, கண்களில் நீர் பெருகியது.

உலகில் எந்தப் பணி செய்கின்றவர்களுக்கும் தடைகளும் தாமதங்களும் ஏற்படும் என்றாலும், நித்தம் நித்தம் உயிருக்குப் போராடும் அவலம் இல்லை. ஆனால் கடலைச் சார்ந்து வாழ்கின்ற மக்களுக்கு எது சத்தியம்?.. எது சாசுவதம்? ஆம்! தலைவன் பொருள் ஈட்டுவதற்காக கடலில் சென்றிருக்கிறான். பொதுவாக எல்லாப் பெண்களும் தலைவன் பொருளோடு வருவானா அல்லது பொருள் ஈட்டித் தன்னை மறந்து விடுவானா என்று வருந்த, இந்நெய்தல் நிலப்பெண்கள் மட்டும்தான், தலைவன் உயிருடன் வருவானா என்ற அச்சத்தையும் சுமந்து வருந்துகின்றனர். தலைவிக்கும் இந்த வருத்தம், அச்சம், வேதனை எல்லாம்!

எப்படியோ நான்கு நாட்களைக் கடத்தி விட்டாள் தலைவி! அதோ! தொலைவில் தெரிகிறாள் தோழி! ஓட்டமும் நடையுமாக வருகிறாள். ‘பாவம்! மகிழ்ச்சியை முழுமையாக அனுபவித்தாளோ இல்லையோ’ என்று வருந்தினாள் தலைவி!

“வா தோழி! வா!திருமணம் நன்றாக நடந்ததா? மகிழ்ச்சியாகக் கலந்து கொண்டாயா?” என்று ஆர்வத்தோடு தோழியின் கைகளைப் பற்றினாள் தலைவி.

“தலைவி திருமணம் சிறப்பாக நடந்தது. நான்கு நாட்களில் நடந்த மகிழ்ச்சியான செய்திகளை உன்னுடன் பகிர்ந்து கொள்ள ஓடோடி வந்து விட்டேன். ஆமாம்! நீ எப்படி இருக்கிறாய்? உடல் மெலிந்து விட்டது போல் இருக்கிறதே? கண்களில் கருவளையம்.. ஏன் உறங்கவில்லையா?”என்று கரிசனத்தோடு வினவினாள்.

“ஒன்றும் இல்லை. உனக்கு என் மீது தீராத அன்பு. அதனால்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறது” என்றாள் தலைவி.

“சரி போகட்டும்! நான்கு நாட்களாகத் தனியாக என்ன செய்தாய்?” என்று கேட்டாள் தோழி.

“தனியாகவா?.. நானா.” என்று ஆரம்பித்த தலைவி, “இரு தோழி. முதலில் உனக்கு நன்றி சொல்ல வேண்டும். எப்போதும் நீ என்னுடன் இருப்பதால் என்னுடைய துன்பச் சுமைகளை உன்னிடம் சுமத்தி விடுவேன். ஆனால் இந்த நான்கு நாட்களில்தான் நான் வாழ்க்கையின் உண்மை நிலையை உணர ஆரம்பித்திருக்கிறேன்” என்றாள்.

“தலைவி! என்ன இது விபரீதமாகப் பேசுகிறாய்?”என்று அஞ்சியவாறு கேட்டாள் தோழி.

“அஞ்சாதே தோழி! தலைவன் என்னை விட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து தினம் தினம் இரவில் உறங்காமல் கடலைப் பார்த்துக் கொண்டிருப்பேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்” என்று தலைவி முடிப்பதற்குள், தோழி “தலைவி! இது எனக்குத் தெரியும். அதனால்தான் உன் கண்களில் கருவளையம்” என்றாள் தோழி.

“கேள், தோழி! அதைப் பார்க்கும்போது எனக்குத் துக்கம் பொங்கி வரும். உலகமே ‘கவலையில்லமல் உறங்குகின்றதே, என்னால் முடியவில்லையே’ என்று என் மீது நானே கழிவிரக்கம் கொள்வேன். ஆனால் இந்த நான்கு நாட்களாகப் பகல் நேரத்திலும் என் துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாததால், வெகுநேரம் கடலைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அதோ.. அந்த அலைகள்தான்! அதே ஓசைதான்! குமுறிக் குமுறி அழுது கொண்டே ஓடி வருவதைப் பார்த்தாயா? அதைப் பார்த்தவுடன் திடீரென்று பொறி தட்டியது போல் இருந்தது.

என்னைப் போலவே ஓயாமல் தலைவனைத் தேடி, ஒப்பாரி வைத்தபடி ஓடி ஓடி வருவதைப் பார்த்த எனக்கு ஒரு உண்மை புரிந்தது. தோழி! எனக்காவது நீ இருக்கிறாய் ஆறுதல் கூற! ஆனால் இந்த அலைகள்.... இரவு பகல் பாராமல்.. நாள் கிழமை இல்லாமல்... ஆண்டாண்டுகளாக ஓயாமல் தேடுகின்றன. பெருங்குரல் எடுத்துத் தேடுகின்றன. அதோ பார், தோழி! அலை எவ்வளவு வேகமாக ஓடி வருகிறது! மீன் உண்ணக் காத்திருக்கும் கொக்குகளும் அஞ்சிப் பறக்கின்றன, பார்! தலைவனைக் காண முடியாத ஏமாற்றத்தால், கரையில் இருக்கும் அனைத்துச் செடி கொடிகளையும் சாய்த்து விட்டுச் செல்கின்றது பார்த்தாயா?” என்று தலைவி கடலைப் பார்த்தவாறு பேசினாள்.

“தலைவி அமைதியாக இரு! தலைவன் வந்து விடுவான்” என்று சமாதானப்படுத்த முயன்றாள் தோழி.

“தோழி, வருந்தாதே! நான் தெளிவாக இருக்கிறேன்! என்னைப் போலவே.. என் உணர்வு நிலையில் இருக்கும் - சொல்லப் போனால் என்னை விட வருந்தத்தக்க நிலையில் இருக்கும் இந்தக் கடலை என் தோழியாகவே எண்ண ஆரம்பித்து விட்டேன்” என்று கூறினாள் தலைவி.

தன்னைத்தானே ஆற்றிக்கொள்ளக் கூடிய மனப் பக்குவத்தைத் தலைவி பெற்று விட்டாள் என்பதை உணர்ந்த தோழி மன நிறைவுடன் தலைவியை அணைத்துக் கொண்டாள்.

இக்காட்சி அமைந்துள்ள குறுந்தொகைப் பாடல் இதோ!

திணை - நெய்தல்

தலைவி கூற்று

யார் அணங் குற்றனை கடலே! பூழியர்
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
மீன்ஆர் குருகின் கானலம் பெருந்துறை
வெள்வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும்நின் குரலே

- அம்மூவன்

யார் பிரிவால் வருந்துகிறாய் கடலே!
பூழிநாட்டு வெள்ளாட்டுக் கூட்டம்
எங்கும் பரவி நிற்பது போல
மீன் உண்ணும் கொக்குகளும்,
வெண்தாழம்பூக்களும் பரவியிருக்கும்
கரையை மோதி மோதி செல்லும்
உன் குரல்
நள்ளிரவிலும் கேட்கின்றதே!

************************************************************************************************************************************************************************************************
தோழி தன் தாய்க்கு உதவியாக மலர்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு பெண் மூச்சிரைக்க ஓடி வந்தாள். “தோழி! தோழி! உன் தலைவியின் கணவர் வந்திருக்கிறார்..” என்று சொல்ல ஆரம்பித்தாள்.

“என்ன சொல்கிறாய்? நீ கண்ணால் பார்த்தாயா? எப்போது வந்தார்?” என்று படபடப்புடன் கேட்டாள் தோழி. “ஆமாம்! கண்களால் பார்த்தேன். உன் தலைவியின் வீட்டுப் பக்கம் சென்றதைப் பார்த்தேன். அதனால்தான் ஓடி வருகிறேன்” என்றாள் அந்தப் பெண்.

தோழி தன் தாயைப் பார்த்தாள். உடனே தாய், “நீ அவள் வீட்டிற்குச் சென்று இருவரையும் சமாதானம் செய்து விட்டு வா. வேறு பெண்களைத் தேடிச் சென்ற ஆண்கள் திரும்பி வருவதே அதிசயம். அதனால் தலைவியிடம் பக்குவமாகச் சொல்லி அவருடன் இணைந்து வாழச் சொல்” என்றாள். தன் தாய்க்கு நன்றி தெரிவித்து தலைவியின் வீட்டை நோக்கிக் கிளம்பினாள் தோழி.

எத்தனையோ மகிழ்ச்சியோடுதான் அவர்களின் காதல் வாழ்க்கை தொடங்கியது. நிலத்தை விடப் பெரியதாக, வானத்தை விட உயர்ந்ததாக, கடலை விட ஆழமானதாகத்தான் அவர்கள் காதல் இருந்தது. ‘ஒருவரின்றி ஒருவர் வாழ முடியாது’ என்ற நிலை ஏற்பட்ட போதுதான், தலைவியின் வீட்டினர் தலைவனை ஏற்க மறுத்தனர்.

எத்தனையோ துன்பங்கள் தலைவிக்கு! ஆனால் தலைவி அஞ்சவில்லை; வருந்தவில்லை. உண்மைக்காதல் எப்படியும் வெல்லும் என்று காத்திருந்து...காத்திருந்து..மெதுவாக பெற்றோர்களின் மனதை மாற்றி.. அவர்களின் சம்மதத்துடன் தலைவனை மணந்து கொண்டாள். எத்தனை மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினாள் தலைவி! கனவுகள் நனவாகி விட்டதாக ஆனந்தக் கூத்தாடினாள். ஆனால் எல்லாமே.. இன்று.. சிதைக்கப்பட்டு.. நொறுங்கிக் கிடக்கின்றது. யாரைக் குறை கூறுவது?

தோழி தலைவியின் வீட்டை அடைந்து விட்டாள். வீட்டினில் நுழைவதற்கு முன்னரே தலைவரைப் பார்த்தாள் தோழி. அவர் முகம் களை இழந்து, குற்றவுணர்வுடன் இருந்தது. ஏற்கெனவே தலைவர் தலைவியிடம் பேச்சை ஆரம்பித்திருக்கிறார் என்பதைத் தோழியால் உணர முடிந்தது. என்ன பேசியிருப்பார் என்று யோசிப்பதற்குள், தலைவி கோபமாக, “இப்போது எதற்காக வந்தீர்கள்? நான் உயிருடன் இருக்கிறேனா என்று பார்ப்பதற்காகவா?” என்றாள்.

தோழி அச்சத்தோடு பதறியவாறு “தலைவி!” என்று அழைத்தாள். “நீ அமைதியாய் இரு” என்று தலைவி தோழியை அடக்கி விட்டாள்.

“தலைவி, நான்தான் சொன்னேனே! தவறு செய்து விட்டேன்.. புத்தி தடுமாறி விட்டேன்..”என்று மெதுவாகப் பேசினான் தலைவன்.

“உங்களால் நான் பட்ட துன்பத்தைச் சொல்ல வார்த்தை இல்லை. எங்கே போயிருக்கிறீர்கள், எப்போது வருவீர்கள் என்று தெரியாமல்.. இன்று வருவார் நாளை வருவார் என்று... எதிர்பார்த்து எதிர்பார்த்து... வெறுப்படைந்து விட்டேன்” என்றாள்.

“தலைவி..” என்று ஆரம்பித்த தலைவனைப் பேச விடாமல், “இருங்கள். இன்னும் நான் முடிக்கவில்லை. உங்களுடைய பிரிவு ஒரு புறம்; ஊரார் பேசுகின்ற பேச்சுகள் ஒரு புறம்; ‘அந்தப் பெண்ணுடன்’, ‘இந்தப் பெண்ணுடன்’ என்று உங்களோடு என் மானமும் காற்றில் பறந்தது. என் பெற்றோர்களின் முகத்தில் விழிக்க அஞ்சி அவர்கள் வீட்டுப் பக்கம் செல்லவே இல்லை” என்று தலைவி கோபமும் வேதனையும் வெளிப்படப் பேசினாள்.

“தலைவி, நான் ஒருவன்தான் தவறு செய்வது போல பேசுகிறாய்? இந்த சமுதாயத்தில் நடக்காததா? நான்தான் தவறிழைத்து விட்டேன் என்று சொல்லி விட்டேனே!” என்று தலைவனும் சற்றுக் கோபமாகப் பேசினான்.

“ஆமாம்! இது சமுதாயத்திற்குப் புதிதில்லைதான்! ஆனால் எல்லாப் பெண்களையும் போல் என்னால் இதை சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. உங்களுடன் சிரித்துப் பேசியதையே பாவமாக எண்ணுகிறேன். எப்படிச் சொல்லி என் வெறுப்பை வெளிப்படுத்துவேன்!” என்று புலம்பி வெறிபிடித்தாற் போல இங்கும், அங்கும் பார்த்தாள் தலைவி.

“தலைவி என்ன வேண்டும்? அமைதியாக இரு” என்று தோழி சமாதானம் செய்தாள்.

“அதோ பாருங்கள்! அந்தப் பெரியப் பாத்திரம்! அதை ஏன் தனியாக வைத்திருக்கிறோம்?” என்று கேட்டாள். தலைவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

தோழிதான் கூறினாள். “அதில் எப்போதும் இறைச்சி வைப்பதால் ஒருவித துர்நாற்றம் வீசும் என்பதால் வீட்டினுள் வைக்காமல் தனியாக வைத்திருக்கிறோம். தலைவி எதற்காக..இதை..” என்று முடிப்பதற்குள் தலைவி, தலைவனிடம் “கேட்டீர்களா? அதன் நாற்றம் என்றும் நீங்காமல் இருக்கும். அதனால் அதில் எந்தப் பொருளும் வைப்பதற்கு அருவெறுப்பாக இருக்கும். அது போலத்தான் உங்களோடு வாழ்வதும்!” என்றாள்.

தலைவி பேச்சின் முழு அர்த்தத்தைத் தலைவன் உணரவில்லை என்றாலும், தலைவி அவனை வெறுப்பதை உணர்ந்து கொண்டு கோபம் அடைந்தவனாய், “பாத்திரமாம்.. இறைச்சியாம்” என்று கோபத்தோடு காலால் தரையை உதைத்தான்.

உடனே தலைவி, “என்ன புரியவில்லையா? உங்கள் மீதும் நீக்க முடியாத, துர்நாற்றம் வீசுவதால் உங்களோடு காதல் வாழ்வு வாழ எனக்கு வெறுப்பாக உள்ளது” என்று அழுதுகொண்டே கூறினாள்.

இந்த பதிலைத் தாங்க முடியாதவனாக தலைவன் தலை குனிந்தவாறு வெளியே செல்ல ஆரம்பித்தான். உடனே தலைவி, “இன்னொன்றையும் தெரிந்து கொள்ளுங்கள்! உங்களை வெறுத்து விட்டு நான் யாருக்காக வாழ்வது? அதனால் என் உயிரும் அழிந்து போகட்டும்” என்று அழ ஆரம்பித்தாள்.

தலைவன் மௌனமாக வெளியேறினான். தோழி தலைவியை அணைத்தவாறு சமாதானம் செய்தாள்.இக்காட்சி குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

திணை-மருதம் தலைவி கூற்று

சுரம்செல் யானைக் கல்உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய! மற்றுயாம்
நும்மொடு நக்க வால்வெள் எயிறே
பாணர்
பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும்புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர்எம் உயிரே

- வெள்ளிவீதியார்.

பாறையை மோதி உடைந்த
காட்டுயானையின் கொம்பு போல்
உம்முடன் கூடி சிரித்த
என்னுடைய வெண்பற்கள்
உடைந்து சிதைவதாக!
பாணர்களின்
பச்சை மீன்கள் வைத்த
மண்டை என்னும் பாத்திரம் போல
எனக்கும் காதல்
பெரும் வெறுப்பைத் தந்து
உம்மை அடைய முடியாமல் போவதாக!
என் உயிரும் அழிந்து போவதாக!

[b]
Back to top Go down
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: சங்கம் காண்போம் (10)(11)   சங்கம் காண்போம் (05) Icon_minitimeSun Apr 18, 2010 7:39 am

தலைவியின் வீட்டை அடைந்த தோழி, “தலைவி, விளையாட வருகிறாயா?” என்று கேட்டாள். தலைவிக்கும் விளையாட ஆசையாக இருந்தது. அதனால் தோழியிடம் “சற்று அமர்ந்திரு! நான் என் அன்னைக்கு உதவியாக தானியங்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன். அரை நாழிகையில் வந்து விடுகிறேன்” என்றாள்.

தோழியும் முன் அறையில் அமர்ந்து கொண்டாள். அங்கிருந்து தலைவியைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். ‘நன்கு நேர்த்தியான முகம்; எடுப்பான மூக்கு; பார்ப்பவர்களை மரியாதையுடன் வணங்கச் செய்யும் முக அமைப்பு. இதற்குக் காரணம் அவளுடைய மனத் திண்மைதான்’ என்று தோழி மனதிற்குள் வியந்தவாறு எண்ணிக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்து பார்த்த தலைவி, “என்ன தோழி! கற்பனையில் மிதக்கிறாயா?”என்று கேட்டு சிரித்தாள்.

“இல்லை” என்று சிரித்த தோழி மீண்டும் நினைவலைக்குள் சிக்கினாள். ‘தலைவியின் தலைவர் மட்டும் சாமானியரா? எப்படிப்பட்ட வீரர்! அகன்ற தோள்களும், கருணை மிகுந்த கண்களும், கூர்மையான அறிவும், ஏழை எளியோர்க்கு உதவும் கருணையும்... அடடா! என்ன பொருத்தம் இருவருக்கும்!’

தோழி, தலைவியின் பெற்றோரிடம் அவர்களின் காதல் வாழ்க்கை பற்றிக் கூறலாம் என்று நினைத்த போதுதான், தலைவர், தான் பொருள் தேடிச் செல்லவிருப்பதாகவும், வந்த பின்னர் பேசலாம் என்றும் சொல்லி விட்டார்.

“வா தோழி! என் வேலைகள் முடிந்து விட்டன” என்று தோழியின் கைகளைப் பற்றினாள் தலைவி.

நினைவுகளிலிருந்து மீண்ட தோழி, “வா! அதோ! நமக்காக அந்தப் பெண்களும் காத்திருக்கிறார்கள். அவர்களுடன் விளையாடலாம்” என்று அழைத்துச் சென்றாள்.

அவர்கள் அனைவரும் வெகுநேரம் மகிழ்ச்சியோடு விளையாடிவிட்டுப் பின் சற்று ஓய்வாக மணலில் அமர்ந்தனர். தாகம் எடுத்தது. அருந்துவதற்கு அங்கு நீர் இல்லாததால் அவரவர் தத்தம் வீட்டிற்குச் சென்று விட்டனர். தலைவியும், தோழியும் எழுந்தனர். தலைவியின் மௌனம் தோழிக்கு வியப்பாக இருந்தது.

“தலைவி” என்று அவளைக் கூப்பிட்டுத் திருப்பினாள் தோழி! தலைவியின் கண்களில் கண்ணீர்! “என்ன தலைவி?“ என்று படப்படப்பாகக் கேட்டாள் தோழி!

“என்ன! தலைவர் பற்றி எண்ணுகிறாயா? அவர் நிச்சயம் வந்து விடுவார். உன் நினைவாகத்தான் அவரும் இருப்பார். வருந்தாதே!” என்று தோழி ஆறுதல் கூறினாள்.

“அதுவல்ல தோழி..!” என்று விசும்பினாள் தலைவி. “பின் என்ன? நீதான் தலைவருக்கு ஆறுதலும், தைரியமும், நம்பிக்கையும் ஊட்டி அனுப்பினாய். இப்போது நீயே.. என்ன ஆயிற்று..?” என்று கலக்கத்துடன் கேட்டாள் தோழி.

“தோழி, நீ சொல்வது சரிதான்! எத்தனைதான் பொருள் இருந்தாலும் ‘குந்தித் தின்றால் குன்றும் அழியும்’தானே! அவருடைய பாட்டனார் சொத்தெல்லாம் எத்தனை நாட்களுக்கு? சுயமாக உழைத்து வாழ்வதுதான் சிறந்தது என்று என் தலைவர் விரும்பினார். அவருடைய உயர்ந்த குறிக்கோளுக்கு நான் தடையாக இருந்துவிடக் கூடாது என்று அவர் பிரிவிற்கு சம்மதித்தேன். அதனால் பிரிவிற்காக நான் வருந்தவில்லை, தோழி! என் தலைவர் நிச்சயம் என்னைக் கைவிட மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால்..” என்று தலைவி தயக்கத்தோடு நிறுத்தினாள்.

“தலைவி, உன்னைப் போல் தெளிந்த அறிவோடு வாழ்ந்தால் பெண்களுக்குக் கவலையே இல்லை! பின் ஏன் கலங்குகிறாய்?" என்று கேட்டாள் தோழி!

“தோழி! சிறிது நேரம் விளையாடிய நமக்கே, தாங்க முடியாத நீர் வேட்கை ஏற்பட்டு.. எப்போது தணியும் என்று தவித்தோம். ஆனால், தலைவர் சென்றுள்ள வழியோ பாலைவனம்! வெயில் சுட்டெரிக்கும் இடம். தங்குவதற்கு மரங்களோ, நிழலோ இல்லாத பொட்டல் காடு! எத்தனை நாட்கள், எத்தனை தூரம் அவரால் நடக்க முடியும்? நீர் வேட்கை ஏற்பட்டால் என்ன செய்வார்..?”என்று மீண்டும் அழலானாள்.

“தலைவி, நீ சொல்வது போல பொட்டல் காடுதான்! ஆயினும் ஆங்காங்கே சிறு சிறு நீர்நிலைகள் இருக்கின்றனவாம். மேலும் நீர் வேட்கையைத் தணிக்கும் நெல்லிக்கனி மரங்களும் இருக்கின்றனவாம். என் அண்ணன்மார்கள் கூறியுள்ளனர். அதனால் நீ வருந்தாதே” என்று சமாதானப்படுத்தினாள் தோழி!

கண்களைத் துடைத்துக் கொண்ட தலைவி, “அங்கு புலிகளும், யானைகளும் மிகுந்த பசியோடு அலைந்து கொண்டிருக்குமாம். மேலும் வழிப்பறி கொள்ளையர்கள் கூரான அம்பினால் அங்கு வருகின்றவர்களை அவர்களுடைய கைப்பொருளுக்காகக் கொன்று விடுவார்களாம். கொன்று குவிக்கும் பிணங்களைத் தின்ன, பருந்துக் கூட்டங்கள் வெறியுடன் அலையுமாம். உனக்குத் தெரியுமா?” என்று பேச முடியாமல் அழுதாள்.

தோழிக்கும் வருத்தமாக இருந்தது. தலைவி கூறும் அனைத்தும் உண்மைதான்! ஆனாலும் தன் தலைவனுக்கு ஏதும் நிகழாது என்ற நம்பிக்கையில்தான் பெண்கள் வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கையை தன் தலைவி இழந்து விடக்கூடாது என்று எண்ணிய தோழி “தலைவி, நீ கூறும் அனைத்தும் சரிதான்! ஆனால் நம் தலைவர் சென்றுள்ள பாலை வழியில் அவர்மட்டும் செல்லவில்லை. எத்தனை எத்தனையோ தலைவர்கள் செல்கின்றனர். எல்லோருக்கும் அந்த வழி புதியதுதான்! அதனால் ஒருவருக்கொருவர் நண்பராய் உதவி செய்தவாறு செல்வார்கள். எனவே அச்சம் கொள்ளாதே! உயர்ந்த குறிக்கோளுடன் வாழும் உன் தலைவருக்கு எந்தக் கெடுதலும் நிகழாது! நம்பிக்கையோடு இரு!” என்று சமாதானம் செய்தாள் தோழி.

இக்காட்சி அமைந்துள்ள குறுந்தொகைப் பாடல் இதோ..

திணை-பாலை தலைவி கூற்று

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவுஎனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி!என்றும்
கூற்றத்து அன்ன கொலைவேல் மறவர்
ஆற்றுஇருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடைப் பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீர்இல் ஆறே

- பாலை பாடிய பெருங்கடுங்கோ

பாட்டனார் தேடி வைத்த
பொருளைச் சிதைப்போர்
‘செல்வர்’ என்று கருதப்படார்!
தன் முயற்சியால் தேடாமல்
வாழ்வது,
இரந்து வாழ்தலை விட
இழிந்தது என்று தெளிவாக
விளக்கித்தான்
சென்றுள்ளார் தலைவர்!
எமனைப் போல்
கொலைத் தொழில் செய்யும்
ஆறலைக் கள்வர்கள் பதுங்கியிருந்து
வருகின்ற மக்களை வெட்டிக் குவிக்க,
அப்பிணங்களுக்காகப் பருந்துகள்
காத்திருக்கும்
நீர்நிலையற்ற பாலையில் சென்றுள்ளாரே!

************************************************************************************************************************************************************************************************

தலைவியின் பணிப்பெண் தன் வீட்டிற்கு வருவதைப் பார்த்தாள் தோழி. அப்பெண் தோழியிடம் "தலைவி உன்னை இன்று அவசியம் வரச் சொன்னாள்" என்று கூறி விட்டுச் சென்றாள். 'என்ன காரணத்திற்காகத் தலைவி தன்னை வரச் சொல்லியிருப்பாள்' என்று யோசித்தாள் தோழி.

இதற்குள் தோழியின் தாய், "ஏன் நீ பத்து நாட்களாக தலைவியின் வீட்டிற்குச் செல்லவில்லை? இன்று இவள் வந்தாளே என்ன செய்தி? இருவருக்கும் தகராறா?" என்று வினவினாள். அதற்குத் தோழி, "தகராறு ஒன்றும் இல்லை. சிறு மன வருத்தம். அவ்வளவுதான்! இன்று தலைவியின் வீட்டிற்குச் சென்று விடுவேன்" என்று சிரித்தவாறு கூறினாள்.

"என்னவோ இன்னும் விளையாட்டுப் பிள்ளைகளாகவே இருக்கிறீர்கள்!" என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே தாய் உள்ளே சென்றாள்.

தோழி ஏன் பத்து நாட்களாக தலைவியைக் காணச் செல்லவில்லை? தோழியின் மனக் கண்ணில் அந்த நிகழ்ச்சி ஓட ஆரம்பித்தது.

தலைவியின் காதலை அவளுடைய பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேதோ காரணங்கள் கூறி மறுத்து விட்டனர். வேறு வழியின்றி தோழி தலைவிக்கு ஆறுதல் கூறி தேற்றி, நம்பிக்கையும், மன தைரியமும் கொடுத்து தலைவனுடன் சென்று விடுமாறு யோசனை கூறினாள். தலைவன் நற்பண்புகள் நிறைந்தவனாக இருந்ததோடு, தலைவியை மகிழ்வோடு வைத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையில் செல்வம் மிகுந்தவனாகவும் இருந்தான். அதனால், தலைவி தலைவனுடன் செல்வதில் தவறு ஒன்றுமில்லை எனக் கருதிய தோழி தலைவியிடம் பேசினாள். முதலில் கலங்கினாலும் இறுதியாக ஏற்றுக் கொண்டாள் தலைவி.

தோழி தலைவனிடம் இதனைக் கூறி, இருவரும் சந்திக்க வேண்டிய இடம், நேரம், அனைத்தையும் முடிவு செய்து, இருவரும் செல்வதற்கு அனைத்து ஆயத்தங்களையும் செய்தாள். குறிப்பிட்ட அந்நாளில் தலைவியை அழைத்து வர தோழி தலைவியின் வீட்டிற்குச் சென்றாள். தலைவியைப் பார்த்த தோழிக்கு ஒரே அதிர்ச்சி! அவள் கிளம்புவதற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

"என்ன ஆயிற்று தலைவி? தலைவர் காத்துக்கொண்டிருப்பார். ஏன் கிளம்பவில்லை?" என்று கேட்டாள் தோழி.

"தோழி! நான் ஏதோ அறியாதவளாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து விடு! என்னால் என் பெற்றோரை மட்டுமல்ல, என் நாணத்தையும் விட்டு வர முடியாது. நாளை இச்செய்தி ஊருக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்! என்னால் முடியவில்லை. தலைவரிடம் பக்குவமாகக் கூறி விடு" என்று தோழியை அணைத்துக் கொண்டு அழுதாள் தலைவி. அதிர்ந்துவிட்டள் தோழி!

தலைவனிடம் என்ன சொல்வது, இக்கட்டான நிலைமையை எப்படி சமாளிப்பது என்று திகைத்தாள். வேதனையும், ஏமாற்றமும், வருத்தமும் மேலிட, தலைவியைப் பிரிந்தாள் தோழி! பத்து நாட்களாக வெளியே செல்லப் பிடிக்கதவளாக, வீட்டிற்குள் அடைந்து கிடந்து, இதோ இப்போதுதான் தலைவியைக் காணச் செல்கிறாள்.

தலைவியின் வீட்டிற்குள் சென்ற போது வீடு வெறிச்சோடியிருந்தது. 'எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்' என்று எண்ணியவாறு தோழி இங்கும் அங்குமாகப் பார்த்தாள். தலைவி வேகமாக ஓடி வந்து தோழியை அணைத்துக் கொண்டாள். "தோழி! நீ மகா அழுத்தக்காரி.." என்று அழ ஆரம்பித்தாள். "இல்லை.. அழாதே!.. வந்துவிட்டேன்.." என்று தோழியும் தலைவியை அணைத்தவாறு அழலானாள்.

"என்ன செய்தி, தலைவி! வீட்டில் யாருமே இல்லையே? எங்கே?" என்று கேட்டாள் தோழி.

"தோழி.. நீ ஏற்பாடு செய்த அன்றே நான் தலைவனுடன் சென்றிருக்க வேண்டும். தவறு செய்து விட்டேன். என் வீட்டினர் எனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர். அது தொடர்பாக வெளியே சென்றுள்ளார்கள். கலக்கமாக இருக்கின்றது" என்று தலைவி கூறினாள்.

"தலைவி! உன் மனதில் நினைத்திருப்பதைத் தெளிவாகக் கூறு. உன் விருப்பம், உன் முடிவு என்ன?" என்று கேட்டாள் தோழி.

"தோழி.. அன்று உன்னை ஏமாற்றி விட்டேன் என்பதற்காகத்தானே இப்படி பேசுகிறாய்? உன் முடிவுதான் என்னுடையதும்.. என் தலைவன் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை.."என்று அழ ஆரம்பித்தாள் தலைவி.

"இல்லை தலைவி! உன்னைப் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை. உன் மனதின் விருப்பம் எதுவோ அதைக் கூறு. அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுகிறேன்" என்று ஆறுதலாக அணைத்துக் கொண்டாள் தோழி.

"தோழி! நான் தலைவனோடு சென்று விட வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் என் பெற்றோர்களின் அன்பு மட்டுமல்ல, என் நாணமும் தடையாகவே இருக்கும். எப்போதும் என் நாணத்திற்கும், என் காதலுக்கும் போராட்டம் நடந்துகொண்டேயிருக்கும். அந்த நேரங்களில் எல்லாம் நாணம்தான் வென்றிருக்கின்றது. என் நாணத்தைத் துறந்தால்தான் தலைவனுடன் செல்ல முடியும்" என்று வருத்தத்தோடு கூறினாள் தலைவி.

"தலைவி! நீ கூறுவது சரிதான். ஆனால் நீ எப்போது நாணத்தைத் துறந்து.. எப்போது தலைவனைச் சேர்ந்து.." என்று நிறுத்தினாள் தோழி.

"அவசரப்படாதே தோழி! நான் என் நாணத்தைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், என் பெற்றோர் என்னை வேறொருவருக்குத் திருமணம் முடித்து விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால்.." என்று நாணத்தோடு தலை குனிந்தாள் தலைவி.

தோழி புரிந்துக்கொண்டாலும் விடுவதாக இல்லை. தலைவியின் தலையை நிமிர்த்தி, "அதனால்.. என்ன..?" என்று கேட்டாள்.

"போ தோழி!" என்று நாணத்தோடு கூறிய தலைவி, "அமைதியாக செல்லும் ஆற்றில் புதிய வெள்ளம் வந்தால் எப்படி அதன் கரை உடைந்து எல்லை மீறுமோ அதுபோல... என் நாணமும் முடிந்தவரை தாங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது காதல் என்கிற புது வெள்ளம் பொங்கி எழுந்து.. நாணத்தை உடைத்து விட்டது. அதனால்.. தோழி.. நீதான் எங்கள் காதல் வாழ்விற்கு உதவ வேண்டும்" என்று தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் தலைவி.

"கவலைப்படாதே, தலைவி! இப்போதே தலைவனிடம் பேசி நல்ல முடிவுடன் வருகிறேன்" என்று மகிழ்ச்சியோடு சென்றாள் தோழி.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது

திணை - பாலை தலைவி கூற்று

அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீடு உழந்தன்று மன்னே,இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துஉக் காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக்
காமம் நெரிதரக் கைந்நில் லாதே
- வெள்ளிவீதியார்

இரங்கத்தக்கது நாணமே!
நீண்ட காலமாகத் துன்புற்றது
என்னோடு! இனி
வெண்பூக்கள் கொண்ட
கரும்புகளின் கரையானது,
புதுப்புனல் வெள்ளத்தால்
அழிந்தது போல
தாங்க முடியும் வரை தாங்கிய
என் நாணமும்
காதலின் நெருக்குதலால்
நிலை பெறாமல் செல்லட்டும்!
[b]
Back to top Go down
Fathima

Fathima

Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: சங்கம் காண்போம் (12)(13)   சங்கம் காண்போம் (05) Icon_minitimeThu Apr 29, 2010 3:10 pm

தலைவியின் வீட்டிற்குள் நுழைந்த செவிலி அங்கு ஒருவிதமான மயான அமைதியை உணர்ந்தாள். பொலிவிழந்து, களையிழந்து அழுத கண்களுடன் தலைவின் தாய் அமர்ந்திருந்தாள். தமையன்மார்கள் கோபத்தில் கொதித்திருந்தனர். தலைவியின் தந்தையோ சோகமாக இருந்தார். என்ன ஆகியிருக்கும் என்று செவிலியால் உணர முடியவில்லை. 'தலைவி எங்கே' என்று யோசித்தவாறு தாயிடம் சென்றாள்.

''அன்னையே! ஏதேனும் துக்கம் நிகழ்ந்துவிட்டதா?'' என்று வினவினாள். அவ்வளவுதான்! மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் பெருக தாய் அழுதவாறு, ''செவிலி! நம் பெண் மோசம் செய்து விட்டாள்'' என்று கேவினாள். செவிலிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. என்ன கூறித் தாயைத் தேற்றுவது என்று தெரியாமல் சட்டென்று எழுந்தாள். ''தாயே! பொறுங்கள். வந்து விடுகிறேன்'' என்று கூறி வெளியே நடக்க ஆரம்பித்தாள். தலைவியின் பெற்றோரும், தமையனார்களும் எதுவும் புரியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தலைவியின் வீட்டை விட்டு வந்தவள் நேராகத் தோழியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தலைவிக்கும் தலைவனுக்கும் காதல் மலர்ந்திருந்ததை செவிலி அறிந்திருந்தாள். தலைவியின் பெற்றோர்களும் அறிந்திருந்தனர். ஆனால் தலைவியின் தமையன்மார்கள் அதனை ஏற்கவில்லை. தலைவியைக் கண்டித்தனர். அவள் தலைவனை மறந்துவிட்டு வேறொருவனை மணந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் தலைவி வேதனையில் துடிப்பதையும், உடல் மெலிவதையும் கண்டு வருந்தினாள் செவிலி. எத்தனையோ முறை தாயிடம் எடுத்துக் கூறியுள்ளாள் இவள். தாயும் பெண்ணின் துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல் தன் பிள்ளைகளிடம் பேசினாள். ஆனால் தலைவியின் தமையன்மார்கள் அதை ஏற்காத போது என்ன செய்வாள் தாய்..?

அரக்க பரக்க வரும் செவிலியைப் பார்த்த தோழி, ''என்ன செவிலி?'' என்று வினவினாள். ''தலைவியைக் காணவில்லை. அவளுடைய பெற்றோர்கள் இடி விழுந்தது போல கலங்கியுள்ளார்கள். உனக்குத் தெரியாமல் அவள் போயிருக்க மாட்டாள். அவள் எங்கே சென்றிருக்கிறாள்? அவர்களை நான் பிரிக்க மாட்டேன். அவளுடைய தமையனார்களிடம் பேசி மண ஏற்பாடுகள் செய்கிறேன்''என்று வேதனையாகப் பேசினாள் செவிலி.

''செவிலியே! தலைவனின் வீட்டினரும் இவர்களின் காதலை ஏற்கவில்லை. அதனால் இருவரும் பாலை வழியைக் கடந்து வேறு ஊருக்குப் போக திட்டமிட்டுள்ளனர். செவிலி! இத்தனை வசதிகள் கொண்ட தலைவி யாரும் இல்லாத அனாதை போல் போயிருப்பது எனக்கும் வேதனையாக இருக்கிறது'' என்று தோழி அழ ஆரம்பித்தாள்.

தோழிக்கு ஆறுதல் கூறி விட்டு செவிலி தலைவியைத் தேடிக் கொண்டு பாலை வழியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தலைவியைப் பெற்றெடுத்ததுடன் அவள் தாயின் கடமை முடிந்துவிட்டது. செவிலிதான், தலைவியை மார்பிலும், தோளிலும் சுமந்தாள். பசியறிந்து பால் புகட்டி, தேவையறிந்து சேவை செய்து, இரவு பகலாக தலைவியின் மகிழ்வே தன் மகிழ்வாக வாழ்ந்த செவிலிக்குக் கண்களிலிருந்து நீர் வழியலாயிற்று. எப்படியும் தலைவியையும், அவள் காதலனையும் பார்த்து விட வேண்டும் என்று தீர்மானித்தாள்.

கடும் வெயிலின் காரணமாக மணல் சுட ஆரம்பித்திருந்தது. செவிலி மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். ஆயாசமாக இருந்தது. மரங்களோ, நிழலோ இல்லாமல் பொட்டல் காடாக பரந்து விரிந்திருந்தது பாலைவனம். 'எங்கே செல்வது?', 'எப்படித் தேடுவது' என்று புரியாமல் ஒரு நிமிடம் நின்றாள். தலைவியின் அன்பு முகம் கண்களில் தெரிய வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

சிறிது தூரம் சென்றதும் நின்றாள். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நாலாபக்கங்களிலும் பார்வையைச் சுழல விட்டாள். 'அதோ! இருவர் வருகின்றனரே!' உற்சாகம் மிகுந்தவளாக முன்னேறினாள். அருகே செல்லச் செல்ல செவிலியின் உற்சாகமும், நம்பிக்கையும் குறைந்தன. ஆம்! அவர்கள் அவள் தேடி வந்த ஆசை மகளும் அவள் காதலனும் அல்ல. பாலைவன கானல் நீர் போல, வருகின்ற ஜோடிகளையெல்லாம் தன் மகளாக எண்ணி எண்ணி ஏமாந்தாள் செவிலி! 'தான் காண எண்ணுபவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் கண்களில் தெரிகின்றனரே' என்று வருந்தினாள் செவிலி.

பாலை வழியில் வானத்து விண்மீன்கள் போல் இத்தனை ஆண்களும் பெண்களும் செல்வதைக் கண்டு, தன் மகளுக்குத் துணையாக பலர் இருக்கின்றனர் என்று மனம் சற்று அமைதியடைந்தாலும், 'பாலும், பழமும் உண்டு, பந்து வைத்து விளையாடும் சிறு பெண்ணான தலைவி இக்கொடிய பாலை வழியில் சென்றுள்ளாளே' என்று எண்ணி கண் கலங்கினாள் செவிலி.

நீர் வேட்கை மிகுந்தது. நடந்து நடந்து கால்கள் ஓய்ந்தன. தன் மகளோ என்று ஒவ்வொருவரையும் கூர்ந்து கூர்ந்து பார்த்து கண்கள் ஒளியிழந்தன. வளர்த்த பாசம் கண்களில் நீராய்ப் பெருக, உடலும், மனமும் தளர்ந்த நிலையில் செய்வதறியாது திரும்பி வந்தாள் செவிலி!

'பாலை வழியில் எத்தனையோ காதலர்கள் செல்கின்றனரே, இறைவா! அவ்வழியில் வெயிலின் சீற்றம் குறைந்து மழை பொழிய வேண்டும்' என்று வேண்டிக் கொண்டாள்.

செவிலித்தாயின் இந்த அன்பு மனதைப் படம் பிடித்து காட்டும் குறுந்தொகைப் பாடல் இது:

செவிலித்தாய் கூற்று
திணை - பாலை

காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள்இழந் தனவே
அகல்இரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே

- வெள்ளிவீதியார்

காலே நடை மறந்தன கண்ணே
தேடித் தேடி ஒளியிழந்தன
பரந்துவிரிந்த வானத்து
விண்மீன்களைக் காட்டிலும்
பலர் உள்ளனர் இவ்வுலகத்தில்
மகளன்றி பிறரே!

********************************************************************************************************************************

தலைவியின் வீட்டினர் தலைவியின் மனம் அறிந்து அவள் விரும்பிய தலைவனுடன் திருமண ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனால் தோழியின் மனச்சுமை பெருமளவு குறைந்திருந்தது. ஆனாலும் மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. திருமண வாழ்விற்குத் தேவையான பொருளைத் தேடும் முயற்சியாகத் தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் வருவதற்கு இன்னும் ஐந்தாறு மாதங்கள் ஆகலாம். தோழிக்கு அது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மென்மையான மனம் கொண்ட தலைவி எவ்வாறு தாங்குவாள் என்று வருந்தியிருந்தாள் தோழி! ஆனால் தோழியின் அந்தக் கவலையைத் தலைவி எளிதாகப் போக்கினாள். எப்படி?

இவ்வுலகில் உன்னதமான பிறவி என்று கருதப்படுபவர்கள் கலைஞர்கள்தாம். அவர்கள் சாகாவரம் பெற்ற கலைப் படைப்புகளைப் படைப்பதால் மட்டுமல்ல. அப்படைப்புகள் அவர்களுடைய வாழ்வின் இன்ப துன்பங்களுக்கு வடிகாலாகவும் அமைவதால்தான்! ஆம்! இந்தத் தலைவியும் ஓவியம் புனைவதில் சிறந்து விளங்கினாள். அவள் மனதில் எழக்கூடிய இன்ப துன்பங்களைச் சித்திரங்களாகத் தீட்டி தன் மனச் சுமையைத் தீர்த்துக் கொள்வாள். அதனால் தலைவனின் பிரிவு அவளைப் பெருமளவு பாதிக்கவில்லை என்று மகிழ்ந்தாள் தோழி. அவ்வப்போது தலைவியின் வீட்டிற்குச் சென்று தலைவியின் ஓவியத்தைப் பார்த்துப் பாராட்டுவதோடு தலைவிக்கு உற்சாகமும் ஊட்டினாள் தோழி.

இதோ இன்றும் தோழி தலைவியின் ஓவியத்தைக் காணச் சென்று கொண்டிருக்கிறாள். தோழியைக் கண்ட தலைவி, ''வா தோழி! வா! எங்கே நீ இன்று வராமல் போய் விடுவாயோ என்று எண்ணியிருந்தேன். நல்லவேளை வந்து விட்டாய்'' என்று ஆரவாரத்தோடு வரவேற்றுப் பேசினாள்.

''என்ன தலைவி! இன்று ஒரே மகிழ்ச்சி! அப்படி என்ன அதிசயமான ஓவியத்தை இன்று வரைந்துள்ளாய்? பார்க்கலாமா?'' என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டாள் தோழி.

அப்போது அங்கு வந்த தலைவியின் தாய் தோழியின் நலம் விசரித்து விட்டு, ''இன்று உன் தலைவி வரைந்துள்ள ஓவியம்தான் மிகச் சிறந்ததாம். போய்ப் பார்'' என்று சிரித்தவாறு கூறிச் சென்றாள்.

இருவரும் தலைவியின் அறைக்குள் சென்றனர். வண்ணக் கலவையில் குழைத்தெடுக்கப்பட்ட அம்சமான நேர்த்தியான ஓவியம். கதிரவனையும், நிலவினையும் கண்முன்னே காட்டும் அதி அற்புதமான ஓவியம். ஆனால் தோழி யோசித்தவாறு இருந்தாள்.

''என்ன தோழி ஒன்றும் பேசாமல் இருக்கிறாய்?'' என்று கேட்டாள் தலைவி.

''உண்மைதான் தலைவி! உன் திறமையைக் கண்டு வாயடைத்து நிற்கிறேன். மிக அற்புதமாக பார்க்கின்றவர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது. ஆனால் ஓவியத்தின் பொருள் எனக்கு விளங்கவில்லையே!'' என்றாள் தோழி.

''சரி தோழி! நீ பார்க்கும் காட்சிகளை விவரி..'' என்றாள் தலைவி.

''கடலின் அடிவானத்திலிருந்து நிலா மெல்ல மெல்ல எழுகின்றது. அதன் ஒளி வெள்ளம் கரையில் நிற்கின்றவர்களைத் தொடுகின்றது...

''ம்..பிறகு..'' என்று தூண்டினாள் தலைவி.

''பின்னர் அருகில் ஒளி பொருந்திய கதிரவன், அதை நோக்குகின்ற நெருஞ்சி மலர்.. என்ன தலைவி இது! நிலவும், கதிரவனும் எப்படி ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தோன்ற முடியும்? குழப்பமாக இருக்கின்றது. ஆனால் ஓவியம் மிக அற்புதமாக இருக்கின்றது. உன்னுடைய ஆற்றல் எனக்கு பிரமிப்பைத் தருகின்றது'' என்று கூறினாள் தோழி.

''பாராட்டுக்கு நன்றி, தோழி' என்று நாணத்தோடு கூறினாள்.

''தலைவி, ஓவியம் மூலம் என்ன கூற விரும்புகிறாய்...?''என்று யோசித்தவாறு கேட்டாள் தோழி.

''தோழி! நீ கூறுவது போல் இந்த உலகியல் வாழ்க்கையில் நிலவும் கதிரவனும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தோன்றுவது சாத்தியம் இல்லைதான். ஆனால் என் தலைவனின் மலை நாட்டைக் கொஞ்சம் எண்ணிப்பார்! அதோ! அந்த அடி வானத்தில் பாதிமதியாக எழுந்துள்ள நிலவின் ஒளிவெள்ளம் அக்கரை வரை பரவுவது போல என் தலைவனின் மலையிலிருந்து வெண்ணிற அருவி பாய்கின்றது அல்லவா?"

''ஆம் தலைவி! தலைவனின் கரிய நிறமுடைய மலையும், அதிலிருந்து 'ஓ' என்ற சத்தத்துடன் விழும் அருவியையும் அறியாதவர்கள் யார் இருப்பார்? ஓ.. நீ தலைவனின் மலையழகை வரைந்துள்ளாயா? சரி, அருகில் இருக்கும் கதிரவனும், நெருஞ்சி மலரும்..'' என்று இழுத்தாள் தோழி!

''புரியவில்லையா? குணக்கடலில் தோன்றி மெல்ல மெல்ல தன் கதிர்களை வீசி, சுட்டெரிக்கும் வெயிலாய் நடுவானில் ஜொலித்து, உலகத்து உயிர்களுக்கெல்லாம் பசுமையையும், செழுமையையும் வழங்கி மெல்ல மெல்லச் சாயும் அந்தக் கதிரவன் போன்றவர் என் ஆருயிர்த் தலைவன்..'' என்று நாணம் மேலிடக் கூறினாள் தலைவி.

''ஆஹா..! எத்தனை சிறப்பாகத் தலைவனை வடித்திருக்கிறாய்!'' என்று வியந்த தோழி, ''எனக்குப் புரிந்து விட்டது, நானே கூறுகிறேன்'' என்று குதூகலத்துடன் கூறினாள்.

''கதிரவன் செல்லும் திசையைப் பார்த்து மலர்ந்து, கதிரவன் பயணிக்கும் பாதையில் பயணித்து, கதிரவன் மறைந்ததும், முகம் கூம்பி, மறுநாள் கதிரவன் வரவிற்காகக் காத்திருக்கும் அந்த நெருஞ்சி மலர், வேறு யாருமில்லை.. நீதான்! சரியா?'' என்று கேட்டாள் தோழி.

''சரிதான்! ஒரு சின்னத் திருத்தம். என்னை நெருஞ்சி மலராகக் கூறுவதை விட, தலைவனை எண்ணும் என் நெஞ்சையும், தலைவனின் அணைப்பிற்காக ஏங்கும் என் தோள்களையும் நெருஞ்சி மலர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்'' என்று நாணம் மிகுந்தவளாக முகத்தை மூடிக் கொண்டாள் தலைவி.

தலைவியின் மெலிந்த தோள்கள் அவள் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்த, தோழி அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

தலைவி கூற்று
திணை-குறிஞ்சி

எழுதரு மதியம் கடற்கண் டாஅங்கு
ஒழுகுவெள் ளருவி ஓங்குமலை நாடன்
ஞாயிறு அனையன் தோழி!
நெருஞ்சி அனையஎன் பெரும்பனைத் தோளே
மதுரை வேளாதத்தன்

***

கடலிலிருந்து எழுகின்ற
நிலவொளி போல்
வெள்ளருவி வீழ்கின்ற
மலையை உடைய நாடன்
ஞாயிறு போன்றவன் தோழி!
நெருஞ்சிமலர் போன்றது
என் பெரும்பனைத்
தோளே!!
Back to top Go down
Sponsored content

சங்கம் காண்போம் (05) Empty
PostSubject: Re: சங்கம் காண்போம் (05)   சங்கம் காண்போம் (05) Icon_minitime

Back to top Go down
 
சங்கம் காண்போம் (05)
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சங்கம் காண்போம்
» சங்கம் காண்போம் (02)
» சங்கம் காண்போம் (03)
» சங்கம் காண்போம் (04)
» தமிழ்ச் சங்கம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: