BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும்

Go down 
AuthorMessage
lakshana

avatar

Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 30
Location : india, tamil nadu

PostSubject: ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும்   Sun Apr 11, 2010 11:26 am

மலையாளப் படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழர்கள் இழிவாகச் சித்த‌ரிக்கப்படுவது ஒரு பேஷனாகிவிட்டது. திரைப்படங்களில் இந்த மனோபாவம் எப்படி வெளிப்படுகிறது என்று மலையாளப் படங்களில் தமிழர் சித்த‌ரிப்புகள் என்ற கட்டுரையில் (2008 மார்ச்) வி‌ரிவாக எழுதியிருந்தோம். இந்த இரண்டு வருடங்களில் இந்த வியாதி மலையாள திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் படர்ந்து பந்தலித்துள்ளது.

மலையாள சேனல்கள் ஒளிபரப்பும் காமெடி நிகழ்ச்சிகளில் தமிழ் அடையாளம் அதிக அளவில் நையாண்டிக்குள்ளாகிறது. குறிப்பாக அவர்களின் தோற்றம். கருப்பு பெயின்ட் பூசப்பட்டவனையே தமிழன் என்று காட்டுகிறார்கள். பிச்சையெடுப்பவன், குறி சொல்கிறவன், அம்மி கொத்துகிறவன், நாக‌ரிகமில்லாத குடிகாரன் இவர்களே தமிழர்களாக சித்த‌ரிக்கப்படுகிறார்கள்.

FILE
இதன் தொடர்ச்சியாக‌தான் நடிகர் ஜெயராம் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கறுத்து தடித்த எருமை போன்ற தமிழச்சி என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இது குறித்து அவரை தொடர்பு கொண்டவர்களிடம் காமெடிக்காக அப்படி குறிப்பிட்டதாக பதிலளித்துள்ளார். ஜெயராம் சொன்னது உண்மை. தமிழர்களின் அடையாளம்தான் இன்று மலையாள தொலைக்காட்சிகளில் காமெடிக்கான கருப்பொருள்.

சிங்களனுக்கு தமிழர்கள் மீதுள்ள வன்மத்தைப் பற்றி குறிப்பிடும் ஊடகவியலாளர் ஒருவர், தமிழர்களின் படிப்பும், அறிவும், உழைப்பும், முன்னேற்றமும் சிங்களனுக்கு ஏற்படுத்திய தாழ்வு மனப்பான்மைதான் அவனுக்குள் தமிழர் மீதான வன்மத்தை ஊட்டி வளர்த்தது என்கிறார். தமிழ‌ரின் அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகத்தை அவன் தீயிட்டு கொளுத்திய சம்பவத்தை இதற்கு உதாரணமாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.

மலையாளிகளின் தமிழ் அடையாளங்கள் மீதான தாக்குதலும் தாழ்வு மனப்பான்மையின் பாற்பட்டதே. திரைத்துறையைப் பொறுத்தவரை செல்வராகவன், சேரன், பாலா, அமீர், சசிகுமார், வசந்த பாலன், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற இள ரத்தம் மலையாளத்தில் பாயவேயில்லை. ஜெயராமே ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் என 25 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இன்றும் அங்கு முன்னணி நட்சத்திரங்கள். வீ‌ரியமான அடுத்த தலைமுறை அங்கு கருக்கொள்ளவேயில்லை. திலீப்பை தவிர மற்றவர்கள் உதி‌ரிகளே.

ஆனால் தமிழில் அ‌ஜித், விஜய், விக்ரம், சூர்யா என்ற அடுத்த தலைமுறையும், தனுஷ், சிம்பு, பரத், நகுல் என்ற அதற்கு அடுத்த தலைமுறையும் வெற்றிகரமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இசை, ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி, நடனம், எடிட்டிங், கிராஃபிக்ஸ் என எல்லா‌த் துறைகளிலும் தமிழில் பிரவாகிக்கும் ஓட்டத்தையும், கேரளாவில் மந்தமான தேக்கத்தையும் நாம் காணலாம்.

தமிழில் வெளியாகும் படங்கள் அதே நாள் கேரளாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுவதும், தமிழ் திரையிசைப் பாடல்கள் கேரளா முழுவதும் ஆர்வத்துடன் ரசிக்கப்படுவதும் இன ‌ரீதியாக மலையாளிகளை தூண்டக் கூடியதே. சூப்பர் சிங்கர் தொடங்கி மலையாள சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்துப் பாடல், ஆடல் நிகழ்ச்சிகளில் தமிழ் திரையிசைப் பாடல்களின் அணிவகுப்பு நம்ப முடியாதது. சராச‌ரி ரசிகனின் மனதில் மலையாளப் பாடல்களைவிட தமிழ் திரையிசைப் பாடல்களுக்கே அதிக இடம் என்பது மலையாள அறிவு‌‌ஜீவிகளால் ‌ஜீரணிக்க முடியாத விஷயம்.
Back to top Go down
View user profile
 
ஜெயராமும் மலையாளிகளின் ஈகோவும்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: