BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! Button10

 

 மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்!

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! Empty
PostSubject: மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்!   மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! Icon_minitimeTue Apr 20, 2010 7:04 am

சுனாமியால் ஏற்பட்ட அழிவுகளை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போன்ற பல பேரழிவுகள் பூமி வெப்பமடைதல் மூலமும் ஏற்படலாம். பூமி வெப்பமடைவதற்கு மின்னாற்றலும் ஒரு காரணம்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் நீங்கள் உங்கள் வீட்டில், அலுவலகங்களில் எடுத்துக் கொள்ளும் சில நொடி அக்கறை வெப்ப சுனாமியை சில நிமிடங்கள் தள்ளிப் போடலாம்.

இன்றைய காலகட்டத்தில் மி‎ன்சாரத் தேவைகளும் அதிகமாகிவிட்டது. உற்பத்தியும் பற்றாக்குறை ஆகிவிட்டது. அதனால் மின்சாரத்தை சிக்கனமாகப் பய‎ன்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.

மி‎ன்சாரத்தை முறையாக உபயோகப்படுத்தும் வழிமுறைகள் இங்கே தொகுத்துத் தருகிறோம். வாருங்கள்.. ஜோதியில் கலப்போம்.

* வெளியில் செல்வதற்கு முன் உங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் உள்ள விளக்குகள், தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, வானொலி, DVD பிளேயர்ஸ், வீடியோ கேம்ஸ் போன்றவற்றை அணைத்து உள்ளீர்களா? என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

* தேவையற்ற இடங்களில் விளக்குகள், யாரும் பார்க்காமலே ஓடிக் கொண்டிருக்கும் டிவி, கணினி போன்றவற்றை நிறுத்துங்கள்.

வெளியூர் செல்லுகிறீர்கள் என்றால் மேற்கூறிய அனைத்து உபகரணங்களிலும் மின் சப்ளையை நிறுத்த, பிளக்குகளை பிடுங்கிவிட்டு செல்லுங்கள். ஏனெனில் இத்தகைய மின்சாதனங்களில் stand-by என்னும் வசதி உள்ளதால், நீங்கள் சாதனத்தை நிறுத்தியிருந்தாலும் சிறிதளவு மின்சாரத்தை எடுத்துக் கொண்டிருக்கும்.

* ஏசி அல்லது ஹீட்டர் ஓடிக் கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளை திறப்பதைத் தவிருங்கள்.

* பல் விளக்கும் போதும், சிறு குளியல் போடும் போதும், தண்ணீர் குழாயை மடமடவெனத் திறந்து விடாமல் தேவைப்படும்போது மட்டும் கொஞ்சமாகத் திறந்து கொள்ளுங்கள். தண்ணீர் வீணாகாமலும், தண்ணீரை டேங்க்கில் ஏற்றுவதற்கான மி‎ன்சாரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

* உங்களின் வாட்டர் ஹீட்டர் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுகிறது எனக் கண்டறியுங்கள். ஒருவேளை மிக அதிக மின்சாரத்தை அது எடுத்துக் கொண்டால், மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்துங்கள். வாட்டர் ஹீட்டர் மற்றும் தண்ணீர் வரும் குழாய்களின் இன்சுலேசனையும் அவ்வப்போது கவனியுங்கள். இரண்டு நாள்களுக்கு மேல் வெளியூர் செல்லுவதாக இருந்தால், வாட்டர் ஹீட்டர் பிளக்கை பிடுங்கிவிட்டுச் செல்லுங்கள்.

* பகல் நேரங்களில் கூட விளக்குகளைப் போடுவதைத் தவிருங்கள். அலங்காரத்திற்காய் சில சிறிய விளக்குகளைப் போடுவதைத் தவிர்த்து, ஒரு பெரிய விளக்கைப் பயன்படுத்துங்கள் .உதாரணமாக இரு 60 வாட்ஸ் பல்பைவிட ஒரு 100 வாட்ஸ் பல்ப் குறைந்த மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.

* 75% குறைந்த மின்சாரம் தேவைப்படும் ஃபுளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். அதிக வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் மிகக் குறைந்த வாட்ஸ் பல்பை உபயோகியுங்கள். வீட்டின் வெளிப்புறங்களில் பகல் நேரத்தில் விளக்குகளை எரிய விடுவதைத் தவிருங்கள்.

* ஃபிரிட்ஜின் காயில்களை முறையாக சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் மின்சார பில் குறைவதுடன், ஃபிரிட்ஜின் வேலைத்திறனும் அதிகரிக்கும். உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜின் உள்ளே வைப்பதற்கு முன் அறையின் வெப்பநிலைக்கு குளுமையாகும் வரை காத்திருந்து பின் உள்ளே வையுங்கள்.

* அவனில்(oven) ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளைத் தயாரியுங்கள். அவன் பயன்பாட்டில் உள்ள போது அதன் கதவுகளை திறந்து திறந்து மூடாதீர்கள். உறைந்த (frozen) உணவு அறை வெப்பநிலைக்கு வரும் வரை வெளியே வைத்து பின் அவன் அல்லது மைக்ரோவேவ் அவனில் பயன்படுத்துங்கள்.

* வாஷிங் மெஷினில் எப்போதும் முழு அளவு துணிகளை குளிர்ந்த நீரில் துவையுங்கள். டிரையரிலும் முழு அளவு துணிகளைக் காய வையுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட முறை காய வைக்க வேண்டி இருந்தால், முதலில் போட்ட துணிகள் காய்ந்தவுடன் அடுத்த முறைக்கான துணியைப் போடுங்கள். டிரையர் சூடாக இருப்பதால் சீக்கிரம் இரண்டாவது முறை போட்ட துணிகள் காய்ந்துவிடும். டிரையரின் லின்ட் பில்டரில் உள்ள அழுக்குகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். சூரிய ஒளி நன்றாக அடிக்கும் நாட்களில் துணிகளை வெயிலில் உலர்த்துங்கள்.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவான மின்சாரம் சேமிக்கும் வழிகள். இனி ஒவ்வொரு மின் சாதனத்திலும் எவ்வாறு மின்சாரத்தை சேமிக்கலாமெனப் பார்க்கலாம்.


மின்விசிறி:

சீலிங் •பேன் ஒரு இரவு முழுவதும் ஓடினால் 22 யூனிட் மின்சாரத்தை ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். பலரும் நினைப்பது போல வேகமாக ஒடும் மின்விசிறி அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுவதில்லை. குறைந்த வேகத்தில் ஒடும் மின்விசிறியால் ரெகுலேட்டரின் சூடாகி ஆற்றல் வீணாகும். சாதாரண ரெகுலேட்டர் 20 வாட்ஸ் அதிக மின்சாரத்தைக் குறைந்த வேகத்தில் ஓடும் போது எடுத்துக் கொள்ளும். இதை மின்ணணு ரெகுலேட்டரை உபயோகிப்பதால் குறைக்கலாம். பழைய மின்விசிறியில் சத்தம் வரக் காரணம் அத‎ன் மேல்புறத் தட்டு சரியாக பொருத்தப்படாமல் ‏இருந்தாலோ, தவறான இணைப்புகளினாலோ இருக்கலாம். அதை உடனடியாக கவனித்து சரி செய்யுங்கள்.

குளிர்சாதனப் பெட்டி:

வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள் பெரும்பான்மையான வீடுகளில் மாதத்திற்கு 30-35 யூனிட் மின்சாரத்தை எடுக்கும். 10 வருடத்திற்கு மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டி 1.5 மடங்கு அதிக மின்சாரத்தை இழுக்கும். அத்தகைய நிலையில் அதை உடனடியாக மாற்றுங்கள். குளிர்சாதனப் பெட்டியின் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் பெட்டியின் உள்புற வெப்பநிலை அதிகரித்து அதிக மின்சாரத்தை எடுக்கும். தேவைப்படும் நேரங்களில் மட்டும் திறந்து மூடுங்கள்.

நடைமுறையில் உபயோகப்படுத்தப்படும் 165 லிட்டருக்குப் பதில் முடிந்தால் சிறிய பெட்டியைப் பயன்படுத்துங்கள். நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 80லி குளிர்சாதனப் பெட்டியே போதுமானது. குளிர்சாதனப் பெட்டியின் அளவு, மாடலைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1.2 முதல் 4 யூனிட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

குளிர்சாதனப் பெட்டியை நீங்கள் வைத்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் அதன் பயன்பாடு மாறுபடும். அடுப்புக்கு அருகிலோ, சூரிய ஒளி நேராகப் படும்படியோ வைப்பதைத் தவிர்த்து வெளிப்புறச் சுவற்றுக்கு அருகில் வையுங்கள். சில இன்ச் இடைவெளி பெட்டியைச் சுற்றி இருக்குமாறு வைப்பதால், காற்றோட்டம் நன்றாக இருக்கும்.

குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே மற்றும் •பிரிசரையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். ஜஸ் கட்டிகளால் நிரம்பிய •பிரிசர் இயங்க அதிக ஆற்றல் தேவைப்படும். அப்பகுதியை சுத்தம் செய்வதால் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குளிர் காற்று வெளியேறுவதைத் தடுக்க, பெட்டியின் கதவுகளை அதிக நேரம் திறந்தே வைத்திருப்பதைத் தவிருங்கள். பெட்டியின் சீலையும் (seal) அடிக்கடி பரிசோதியுங்கள். அதன் மூலமும் குளிர்ந்த காற்று வெளியேறலாம்.

சூடான உணவுப் பொருட்களை அப்படியே பெட்டியின் உள்ளே வைப்பதால், அவற்றை குளிர்விக்க அதிக மின்சாரம் செலவாகும். அறை வெப்பநிலைக்கு வந்த பின் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.

அயர்ன் பாக்ஸ்:

ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை ஒன்றாக அயர்ன் செய்வதை வழக்கமாக்குங்கள். அதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் உங்களின் நேரமும் மிச்சமாகும்.

டிவி மற்றும் டிவிடி:

டிவியைப் போட்டுவிட்டு வேறு வேலைகளைக் கவனிப்பதைத் தவிர்த்து, நீங்கள் பார்க்கும்போது மட்டும் டிவியை ஆன் செய்யுங்கள். டிவி மற்றும் டிவிடி போன்றவற்றை ரிமோட்டால் நிறுத்தாமல் சுவிட்சையே நிறுத்துங்கள். ரிமோட்டால் நிறுத்தும் போது டிவி முழுமையாக நிறுத்தப்படாமல் stand-by முறையில் இயங்க சிறிது மின்சாரத்தை பயன்படுத்தும். ரிமோட்டால் நிறுத்துவதன் மூலம் 6 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரத்திற்கும், டிவியிலேயே ஆப் செய்வதால் 0.5 முதல் 1 வாட்ஸ் வரையும் மின்சாரத்தை டிவி பயன்படுத்தும். அதனால் பிளக் பாயிண்டிலேயே டிவியை நிறுத்துங்கள். பிளக்கை பிடுங்க வேண்டிய அவசியம் டிவி, சிடி பிளேயருக்கு இல்லை.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஓடும் டிவி ஒரு மாதத்திற்கு 30 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். செல்போன், சிடி/டிவிடி, மைக்ரோவேவ் போன்ற உபகரணங்களும் மெயின் சுவிட்சில் நிறுத்தப்படுவதால் தேவையற்ற மின்சாரப் பயன்பாடு தவிர்க்கப்படும்.

வாஷிங் மெஷின்:

ஆடைகளை சிறிய லோடுகளில் துவைப்பதால் நேரமும், மின்னாற்றலும் வீணாகிறது. அதைத் தவிர்க்க மெஷின் நிரம்பும் அளவிற்கு ஆடைகளைத் துவையுங்கள். டிரையரில் போடும் முன் ஆடையில் தண்ணீர் முழுவதும் வடிந்து சற்றே உலர்ந்த நிலையில் இருக்கிறதா.. என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விளக்குகள்:

ஒரு கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டில் 20% விளக்குகளுக்கு செலவாகிறது. முடிந்தளவு பகல் நேர வெளிச்சத்தையும், இரவில் லெட் லைட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அளவைக் குறைக்கலாம். உபயோகத்தில் இல்லாத போது விளக்குகள், மின்விசிறி, கொசுவர்த்தி மேட் போன்றவற்றை சுவிட்ச் ஆப் செய்வது மிக முக்கியம். ஒரு மணி நேரம் எரிவதற்கு 5 வாட்ஸ் மின்சாரத்தை கொசுவர்த்தி மேட் எடுத்துக் கொள்ளுகிறது. Thermostat நிலையில் இருக்கும் போது 1-1.5 யூனிட் மின்சாரம் செலவாகிறது.

LED எனப்படும் ஒளி உமிழும் விளக்குகளை இரவு நேரங்களில் பயன்படுத்துங்கள். குறைந்த ஒளி உமிழும் LED விளக்குகளை பயன்படுத்தி முக்கியமான பெரிய விளக்குகளின் பயன்பாட்டைக் குறையுங்கள்.

நம் தினசரி வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்து கடைபிடிப்பதன் மூலம் அதிகளவில் மின்னாற்றலை சேமிக்க முடியும். உதாரணமாக சில மணி நேரம் வெளியில் செல்லுகையில் கணினியை நிறுத்தி விடுதல், உபயோகிக்காதபோது கணினித் திரையை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் மின்சாரம் மற்றும் பணம் மட்டும் சேமிக்கப்படுவதில்லை, சுற்றுச் சூழல் மாசுபாடு குறைகிறது

ஏ/சி:

உங்கள் அறையின் அளவு மற்றும் அதிலுள்ள பொருட்கள், மனிதர்களைப் பொறுத்து ஏசியின் மின்சாரப் பயன்பாடு இருக்கும். 1.5 டன் ஏசி ஒரு மணி நேரத்திற்கு 2-2.5 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

ஏசியிலுள்ள ஏர் ஹோல்கள் ஹெர்மேடிக்கல் சீல்ட் ஆப் (hermetically sealed off) செய்யப்படுவதால் அதன் மின்சாரப் பயன்பாடு குறையும். மிகச் சிறந்த பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குறிப்பாக அறையின் மேற்கூரை முழுவதும் பாதுகாப்பு உறை போடுவதால் குளிரூட்டியின் வேலைத் திறன் அதிகரிக்கும். வெப்பநிலையைக் கட்டுப்படுத்த சரியான தெர்மோஸ்டாட் (thermostat) பயன்படுத்துதல் அவசியம். இல்லையென்றால் ஆற்றல் விரயமாகும்.

முடிந்தளவு சீலிங் பேனை பயன்படுத்துதல் ஏசி பயன்பாட்டினைக் குறைக்க எளிய வழி. ஏசிக்கு பத்து ரூபாய் செலவாகிறதென்றால், மின்விசிறிக்கு முப்பது பைசா மட்டுமே செலவாகும். மின்விசிறியின் விசிறிகள் உலோகமாக இருக்கும் பட்சத்தில் 20% மின்னாற்றல் சேமிக்கப்படும்.

ஏசி மட்டும்தான் உங்களிடம் இருக்கிறதா? அப்படியெனில் 22 டிகிரிக்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு வெப்பநிலையும் 3-5% குறைந்த மின்னாற்றலை எடுத்துக் கொள்ளும். 25 டிகிரி செல்சியஸ் என அமைப்பதன் மூலம் மின்னாற்றல் மற்றும் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

உங்களின் புதிய அலுவலகத்தில் சென்ரலைஸ்டு (Centralised) ஏசியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து தேவைப்படும் இடங்களில் மட்டும் பயன்படும் வகையில் ஸ்பிலிட் ஏசி முறையைப் பயன்படுத்துங்கள். அலுவலகம் முழுவதும் ஏசி பயன்படுத்தப்படாமலும், வேலை நேரம் முடிந்தவுடன் ஏசியின் பயன்பாடு நிறுத்தப்படவும் உதவும் இந்த ஏற்பாடு. ஏசியின் பில்டரை சுத்தமாக வைத்துக் கொள்ளுவதால் மின்சாரச் செலவை குறைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கோட்டிங் முறையை ஜன்னலில் பயன்படுத்துவதால் குளிர்காற்று வெளியேறுவதைத் தடுக்கலாம். கதவு, ஜன்னல்களில் weather strips பயன்பாட்டால் காற்றுக் கசிவைத் தவிர்க்கலாம். பல கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி ஜன்னலைப் பயன்படுத்துவதால் ஏசியின் பயன்பாடு 40% குறையும்.

கீரின் மெஷெஸ் எனப்படும் சூரிய ஒளியைத் தடுக்கும் ஜன்னல் மற்றும் கதவுகளை அமைப்பதன் மூலம் நேரடியாக சூரிய ஒளி அதிக நேரம் உங்கள் வீட்டினுள் வருவதைத் தவிர்க்கலாம். அதன் மூலம் ஏசியின் பயன்பாடு குறையும். குளிர்காலங்களில் இத்தகைய ஜன்னல் மற்றும் கதவை எளிதில் கழற்ற முடிவதால் காலை நேரக் குளிரைக் குறைக்கவும், அதன் மூலம் ஹீட்டரின் பயன்பாட்டைக் குறைக்கவும் அது உதவும். டிரிப் ஈரிகேஷன்(drip irrigation) முறையின் மூலம் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கையில் வெப்பத்தைக் குறைக்க முடியும். பெரிய தொழில் நிறுவனங்களில் இத்தகைய முறை கடைபிடிக்கப்படுகிறது.

விளக்கு:

மடிக்கணினி உபயோகிக்கும் போது அதிக வெளிச்சம் தேவைப்படாததால் 40W, 60W விளக்குகளுக்குப் பதில் USB(5 V DC) விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

இரவு விளக்குகளுக்கு 0 W or LED விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

சூரிய ஒளி நேரடியாக படும் விதத்தில் உள்ள சுவர்களுக்கு மென்மையான நிறங்களால் வர்ணம் பூசுவதால் சூரிய ஒளியை எதிரொளிக்கச் செய்து செயற்கை விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

கணினி:

• பொதுவாக கணினி தன் இயக்கத்திற்கு அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்லை. கணினித் திரையே அதிக மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுகிறது. பாட்டுப் பிரியர்கள் மணிக்கணக்கில் மல்டிமீடியா கணினியில் பாட்டு கேட்டுக் கொண்டே தூங்குவதற்கு பதில் கணினித் தி¨ரையை மட்டும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டோ,10 நிமிடத்திற்கு கணினி பயன்படுத்தப்படவில்லையெனில் தானே நின்று விடுமாறு அமைத்துக் கொள்ளலாம்.

• நீங்கள் கணினியை ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரமே பயன்படுத்துகிறீர்கள் என்றால் UPSக்குப் போகும் மின்னிணைப்பை இரவு முழுவதும் நிறுத்தி வைக்கலாம். UPS மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 9 -15 வாட்ஸ் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

• எங்கேல்லாம் LCD திரையைப் பயன்படுத்த முடியுமோ அதைப் பயன்படுத்தி CRT(Cathode Ray Tubes) பயன்பாட்டைக் குறையுங்கள். கேம்ஸ் ஆர்வம் இல்லாதவர்கள் கிராபிக்ஸ் கார்டை கணினியில் பொருத்துவதைத் தவிருங்கள். குறிப்பாக திரவம் மூலம் குளிரூட்டப்படும் கணினியைத் தவிருங்கள்.

• தேவையில்லாத சேமிக்கும் கருவிகளாகிய ஃபிளாப்பி, பிளாஷ் டிரைவ் போன்றவற்றை கணினியிலிருந்து எடுத்து விடுங்கள்.

• கணினி stand by ல் இருக்கும் போது பயன்படுத்தப்படவில்லை எனில் automatic shut down முறையை செட் பண்ணுங்கள்.

• இரவு நேரங்களில் பெரிய ஃபைல்களை தரவிறக்கம் செய்யும் போது கணினித் திரையை மட்டும் turn-off செய்யுங்கள்.

• மடிக் கணினியின் பின்புற வெளிச்சத்தின் luminance அளவைக் குறைத்து வைப்பதால் மின்னாற்றல் சேமிக்கப்படும்.

• வயர்லெஸ் நெட்வொர்க் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் மட்டும் ஆன் செய்து மற்ற நேரங்களில் turn-off செய்து வையுங்கள்.

• ஒவ்வொரு முறை நீங்கள் மடிக்கணினியை சார்ஜ் செய்யும் போதும் உங்களின் AC Power card தொடக்கத்திலிருந்து சார்ஜ் ஆகும். சார்ஜ் முழுவதும் முடிந்தபிறகு கணினியை சார்ஜ் செய்யுங்கள்.

• கிராஃபிக்ஸ் மூலம் அதிகளவில் கேம்ஸ் விளையாடுவதில்லையெனில் டூல்ஸ் மூலம் integrated graphics முறையை பயன்படுத்துங்கள்.

• Power options - ல் balanced mode பயன்படுத்துவதால் processor வேலைத்திறன் அதிகரிக்கும்.

• உங்களின் மடிக்கணினியை வெப்பமற்ற பகுதியில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். முறையற்ற வெப்பம் மூலம் கணினியின் குளிரூட்டும் விசிறி அதிகம் சுற்றுவதால் அதிக ஆற்றல் செலவாகும்.

செல்லிடப்பேசி:

• செல்போன் சார்ஜர் ஒரு மணி நேரத்திற்கு 3 வாட்ஸ் மின்சாரத்தை பிளக்கில் இணைக்கப்பட்டுள்ளபோது பயன்படுத்தும். நடைமுறையில் செல் சார்ஜ் ஆகிவிட்டாலும் நாம் அதன் மின்னிணைப்பை நிறுத்துவதில்லை. அதை தவிர்ப்பதால் 3 வாட்ஸ் மின்சாரம் சேமிக்கப்படும்

• செல்போனை வீட்டில் சார்ஜ் செய்வதற்கு பதில் முடிந்தளவு உங்களின் காரிலேயே சார்ஜ் செய்யுங்கள்.

• இரவு முழுவதும் செல்போனை சார்ஜ் செய்வதால் ஃபோனிற்கும் கேடு, போனஸாய் மின்சாரமும் வீணாகும். எனவே அதைத் தவிருங்கள்.

கணினி உபயோகிக்கும் போது உங்களின் ஃபோனையும் USB port- ல் சார்ஜ் செய்யுங்கள். இதன் மூலம் கணினியின் PSU மூலம் வீணாகும் மின்சாரத்தை சேமிக்கலாம்.

மி‎ன்சார இழப்பு:

வீட்டு உபயோகத்தில் இரண்டாவது அதிக மின்சார இழப்பு மின் கசிவால் ஏற்படுகிறது. பழைய ஒயரிங், பாதுகாப்பற்ற இன்சுலேஷன், கான்கீரிட் மற்றும் டைல்ஸ் தளங்கள் போன்றவை மின்சாரம் எளிதில் கசிய வழிவகுக்கும். ELCB(Earth Leakage Circuit breaker) எனப்படும் கருவியைப் பயன்படுத்தி வீட்டில் எங்கு மின்கசிவு உள்ளது என்பதை மின்னியல் பொறியாளரால் எளிதில் கண்டறிய முடியும்.

சுருங்கச் சொல்லுவதனால், தேவையில்லாத இடங்களில் மின்சாரச் செலவு, பழைய அழுக்கடைந்த நிறுத்தப்படாத விளக்குகள், பழைய குளிர்சாதனப் பெட்டி, ஆள் இல்லாமலே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி, தொலைக்காட்சி போன்றவையே மின்சாரத் தட்டுப்பாட்டிற்கான மூலங்கள்.

உங்கள் வீட்டிலேயே உள்ள எனர்ஜி மீட்டர் மூலம் ஒரு நாளில் எப்போது அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என கண்டறிந்து அந்நேரப் பயன்பாட்டைக் குறைக்கலாம்.

மாற்றுவழிகள்:

மின்சாரம் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளுக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துவதும் சிறந்த வழியே. அதாவது மின்சாரத்தால் தண்ணீரை சூடாக்குவதற்கு பதில் சோலார் முறையிலோ, கேஸ் மூலமாகவோ தண்ணீரை சூடாக்கலாம். கணினியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை குறைப்பதன் மூலமும், குளிர்காலங்களில், குளிரும் இரவுகளில் குளிர்சாதனப் பெட்டியை நிறுத்துவதன் மூலமும் மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.

பொதுவான மி‎ன் சிக்கன முறைகள்:

இசையை மட்டும் கேட்கும் போது ஸ்பீக்கரில் போட்டு பக்கத்து வீட்டுக்காரரை வம்பிழுக்காமல் ஸ்டீரியோவில் (stereo) கேளுங்கள்.
வீட்டிலுள்ள டிவி, ரேடியோ, பிரிண்டர், ஸ்கேனர், ஸ்பீக்கர் போன்றவற்றை stand by mode- ல் வைக்காமல் முழுவதுமாய் மின்னிணைப்பைத் துண்டியுங்கள்.
உங்களின் மாத மின்சாரச் செலவை பரிசோதித்து, மின்சாரப் பயன்பாட்டை முடிந்தளவு குறைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
மின்விசிறிகளில் மின்ணணு ரெகுலேட்டரை உபயோகியுங்கள்
விளக்குகளில் 40 W டியூப் ¨லைட்டிற்கு பதில் 36 W மென்விளக்கைப் பயன்படுத்துங்கள்.
ஆடைகளை உலர்த்துவதற்கு விளக்கு பொருத்திகளையோ, ஒயரையோ பயன்படுத்தாதீர்கள்.
ஃப்யூஸ் போன விளக்கை மின் இணைப்பைத் துண்டித்த பின் மாற்றுங்கள்.
மின் விளக்குகளின் பயன்பாட்டைக் குறைக்க, சுவர்களுக்கு லைட் கலர் வர்ணம் பூசுங்கள்.
வாஷிங் மெஷின் மற்றும் டிரையரில் அதிகளவு மற்றும் குறைந்த அளவு ஆடைகளை போடுவதை விடுத்து எப்போதும் முழுமையான அளவு ஆடைகளையே துவைத்து உலர்த்துங்கள்.
கணினியில் எந்தவிதமான ஸ்க்ரீன் சேவர்ஸையும் பயன்படுத்தாமல் sleep mode பயன்படுத்துவதன் மூலம் 75% மின்சாரப் பயன்பாடு குறைக்கப்படும்.
குளிர்சாதனப் பெட்டியில் அளவுக்கு அதிகமாக பொருட்களை அடைக்காமலும், காற்றோட்டமாக இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
மூடாமல் எந்தவொரு உணவையும் குளிர்சாதப் பெட்டியில் வைக்காதீர்கள். அதனால் கம்பரஸரின் வேலைத்திறன் குறையாமல் இருக்கும்.
ஒரு வேளைக்கு தேவையான காய்கறிகள், இறைச்சி போன்றவற்றை ஒரே முறையில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுங்கள்.
உங்கள் வாட்டர் ஹீட்டரை 50 - 60 deg C -க்குள் ¨வைப்பதன் மூலம் தண்ணீர் சூடாக்கும் மின்சாரச் செலவை 10% குறைக்கலாம்.
டிஷ்வாஷரில் ஒருவேளை temperature booster இல்லையென்றால் 60 deg C பயன்படுத்துங்கள்.
வருடத்திற்கு ஒருமுறை ஒரு பக்கெட் தண்ணீரை ஹீட்டருக்கு அடியில் ஊற்றுவதால் அதன் அடிப்புற அழுக்குகள் நீக்கப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.
ஹீட்டருக்கும் அத்தண்ணீரை தரும் குழாய்க்கும் உள்ள தொலைவு குறைவாக இருந்தால், பைப்பின் வழியே சூடு வெளியேறுவதைத் தடுக்கலாம்.
சுடுதண்ணீர் வரும் குழாயை முறையாக உறை போட்டுப் பாதுகாப்பது நல்லது
அறையின் மூலையில் சுவர்களுக்கு அருகே விளக்குகளைப் பொருத்துவதன் மூலம் வெளிச்சம் அறையின் இரு சுவர்களிலும் பட்டு எதிரொளிக்கும்.
உங்களுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை சூடாக்குங்கள். அது டீ குடிக்கவோ, குளிக்கவோ எதற்காயினும்.
மின்வெட்டு இருக்கும் போது மட்டும் பிள்ளைகள், அக்கம் பக்கத்தாருடன் அரட்டை, பூங்கா போன்ற வெளியிடங்களுக்கு செல்லுவதை விடுத்து, தினமும் அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் உறவுகள் செழிப்பதுடன், மின்சாரத்தையும் மிச்சப்படுத்தி நாம் வாழ்வதற்கு இருக்கும் ஒரேயொரு பூமியையும் நலமுடன் வாழ வைக்கலாம். வெப்ப சுனாமியை வீழ்த்த உங்களால் முடிந்தளவு மின்சார சேமிப்பை செயல்படுத்துவதுடன், தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லுங்கள்.



[b]



THANKS:

நெல்லைச்சாரல்
Back to top Go down
 
மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிக்கனம் Vs கஞ்சத்தனம்
» மாற்றம் தேவை
» நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!
» ~~ யு.எஸ் விசா பெற தேவை நம்பிக்கையூட்டும் ...பதில்களே~~
» ~~ Tamil Story ~~ வாரத் தேவை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: