BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகனவுகள்-1 Button10

 

 கனவுகள்-1

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனவுகள்-1 Empty
PostSubject: கனவுகள்-1   கனவுகள்-1 Icon_minitimeThu Apr 29, 2010 3:16 pm

னவு என்றால் என்ன? ஏன், எப்போது, எப்படிக் காண்கிறோம்? கனவுகள் முக்கியமானவையா? அவற்றின் பலன்கள் என்ன? அவை எதிர்காலத்தை அறிவிக்கின்றனவா?

இதுபோன்ற பலவகைக் கேள்விகளுக்கு இக்கட்டுரையில் விடை காண்போம்.

கனவுகளை நாம் இரண்டு வகையில் பொருள் கொள்கிறோம். நம் எதிர்காலம், நமது லட்சியங்கள், அவைகளை அடைவதற்கான வழிமுறைகளை எண்ணிப் பார்ப்பதும் ஒருவகையான கனவுதான். இந்தக் கனவை நாம் விஷன் (vision) எனச் சொல்கிறோம். நமது அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களைக் காணச் சொன்னது 'சுபிட்சமான எதிர்கால இந்தியாவைப் பற்றிய காட்சியைத்தான்.'

மற்றொரு வகைக் கனவுகள்தாம் நாம் கண்ணை சிறிது அசந்தாலும் மூடிய கண்களுக்குள் படமாக ஓடுவது.

கனவுகள் என்றால் என்ன?

1. நாம் அசந்திருக்கும்போது நமது மூளை மிகக்குறைந்த அளவில் வேலை செய்யும் நேரங்களில் படக்காட்சிகள் போல நிகழ்வதுதான் கனவுகள் என்பது. அந்த நேரங்களில் வேறெந்த வெளித் தூண்டுதல்களும் மனதிற்குள் நுழைவதில்லை.

ஆமாம். நாம் தூங்கும்போது மட்டும் கனவு காண்பதில்லை. நம்மை மறந்து ஓய்வு நிலையில் விழிப்புடன் இருக்கும்போதுகூட ஏதோ காட்சிகள் நம் முன் விரிகின்றன. திடீரென ஏதோ கனவு கண்டோமே என்று திடுக்கிட்டு விழிக்கிறோம்.

இந்த மாதிரி ஓய்வாக இருக்கும்போது கனவு காண்பவர்கள் விழிப்புடன்தான் இருக்கிறார்கள் என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். இந்த நிகழ்வுகள் தூங்கும்போதுதான் கனவுகள் வரும் என்ற தவறான முடிவைத் தகர்க்கின்றன.

2. கனவு என்பது நாம் அனுபவிப்பது, உணர்வது. கனவில் நடப்பவைகள் அப்போது உண்மையாகவே நிகழ்வதைப் போலத் தோன்றுகின்றன. அப்போது நாம் நமது புலன்களைப் பயன்படுத்துகிறோம், பார்க்கிறோம், கேட்கிறோம்.

கனவுகளில் எப்போதுமே நாம் தான் கதாநாயகனாக இருப்போம். நமக்கு அல்லது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைத் தான் பெரும்பாலும் கனவு காண்கிறோம். பல சமயங்களில் நமது உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது திடுக்கிட்டு விழிக்கிறோம். அருகிலிருப்பவர்கள், 'என்னாயிற்று உனக்கு?'என்று கேட்குமளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம்

3. கனவு என்பது நம் அடுத்தநாள் நினைவில் நிற்பது. எனவே இதனைக் கனவு அனுபவத்தின் 'நினைவுகள்' என்றுகூடச் சொல்லலாம்.

4. கனவு என்பது நாம் வாய் மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ மற்றவர்களுக்குக் கொடுக்கும் ஒரு ரிப்போர்ட். கனவில் நாம் கண்ட நிகழ்ச்சியை வேறு யாரும் பார்க்கவும் முடியாது, கனவு காணும்போது நாம் நேரடியாகக் கனவை மற்றவர்களுக்கு விளக்கவும் முடியாது.

கனவைப்பற்றிய இந்த நான்கு செய்திகளையும் இணைத்து சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், "கனவு என்பது நாம் சாதாரணமாக அயர்ந்து இருக்கும் நிலையில் நம் மனக்கண்முன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு நினைவு" என்று சொல்லலாம்.

இன்னும் விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால் நாம் நம்மையும் சூழ்நிலையையும் மறந்திருக்கும் நிலையில் நமது மனதுக்குள் தானாகஅரங்கேறும் சின்ன நாடகங்கள் என்
றும் கூறலாம்.

THANKS:

நெல்லைச்சாரல்


Last edited by Fathima on Sun May 30, 2010 8:44 am; edited 2 times in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

கனவுகள்-1 Empty
PostSubject: கனவுகள்   கனவுகள்-1 Icon_minitimeThu Apr 29, 2010 3:20 pm

நாம் எப்போது கனவு காண்கிறோம்? அடிக்கடி கனவுகள் வருமா?

பொதுவாக பத்து வயதுக்குமேல் ஆன அனைவரும் ஒரு நாளைக்கு நாலிருந்து ஆறுமுறை தூக்க நிலையில், REM (Rapid Eye Movement) எனப்படும் துரிதமான கண்ணசைவு நேரங்களில் கனவு காண்கிறார்கள். இந்த துரிதக் கண்ணசைவு நேரங்களில் நாம் விழித்திருக்கும் நிலையைப் போலவே நமது மூளை இயங்குகிறது. ஆனால் மூளையின் எல்லாப் பகுதிகளும் இந்த நிலையில் இயங்குவதில்லை.

இந்த REM (தூங்க ஆரம்பிக்கும் வேளை) முன்னிரவில் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களும் பின்னிரவில் 30லிருந்து 34 நிமிஷங்களும் நீடிக்கின்றன. எனவே கனவு கிட்டத்தட்ட அரைமணி அளவுக்கு நீடிக்கலாம் எனத் தெரிகிறது.

துரிதக் கண்ணசைவு இல்லாத, மூளை சாதாரணமாக இயங்கத் துவங்கும் விடிகாலை நேரங்களிலும் கனவுகள் வருகின்றன என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் சாதாரணமாக நாம் 4லிருந்து 6முறை இரவில் கனவு காண்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் நாம் தூங்கும் நேரங்களில் மட்டும்தான் கனவுகள் வருகின்றன என்று தீர்மானமாகச் சொல்லமுடியாது. பகலில் சிலநேரங்களில் நாம் விழித்திருக்கும்போதுகூட அசந்த நிலையில் நம்மைச் சுற்றி இருப்பதை மறந்திருக்கும்போது கூடப் பகல் கனவுகள் வருகின்றன.

ஓரளவு இருண்ட அறையில் இருவரை அமரவைத்து அவர்களிடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் அவர்கள் விழித்திருந்த நிலையிலும் மனதில் என்ன தோன்றுகின்றன என்று ஆய்வு செய்தபோது இந்த உண்மை நிரூபணம் செய்யப்பட்டது.

நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவைகளையும் மறந்த சூழ்நிலையில் மூளை குறிப்பிட்ட அளவு செயல்பாட்டுடன் இருக்கும்போது எந்த நேரத்திலும் கனவு காணலாம் எனத் தெரிகிறது. பத்துவயதுக்குக் குறைவானவர்கள் துரிதக் கண்ணசைவுகளின்போது 20 சதவிகித நேரங்களில்தான் கனவு காண்கிறார்களாம்.

முடிவாக, நாம் துரிதக்கண்ணசைவு நேரங்களிலோ அல்லது கண்ணசைவு இல்லாத நேரங்களிலோ, விழிப்பு நிலையிலோ கனவு காண்கிறோம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் கட்டாயம் கனவு காணவேண்டும் என்பதும் இல்லை. அந்த நேரங்களில் கனவுகள் வராமல்கூட இருக்கலாம்.

கனவுகள் முக்கியமானவையா?

நிச்சயமாக அப்படி ஒன்றும் முக்கியமானவை அல்ல. நம்மில் பலர் ஏதாவது கனவு கண்டால் அதைப்பற்றியே பேசி விவரித்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சிலர் தங்களுக்கு வரும் கனவுகளை லட்சியம் செய்வதில்லை.

கனவுகளுக்குக் கொடுக்கப்படும் கவனம் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனி மனிதனுக்கும் வேறுபடுகிறது. கனவு காணாவிட்டால் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்படுமா என்று கேட்டால் அதற்கு ஒன்றும் ஆதாரம் இல்லை.

நாம் காணும் எல்லா கனவுகளுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

இந்தக்கேள்விக்கு ஆமாம் அல்லது இல்லை என்று நிச்சயமாகக் கூறமுடியாது. சிலர் கனவுகளுக்கு உள்ளர்த்தம் இருக்கிறது என்று சொல்வார்கள். நம்மால் அது இல்லை என்று உறுதியாகக் கூறமுடியாது.

சில கனவுகள் உருவகமாக அல்லது அறிகுறியாக ஏதாவது செய்தியைச் சொல்லலாம். ஆனால் நம் கனவுகளில் பெரும்பாலானவை, வழக்கமாக நம் நினைவில் பதிந்த, வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள்தான் பலருக்கு கனவுகளாகத் திரும்பத் திரும்ப வருகின்றன. இது மிகவும் சகஜமான நிகழ்ச்சி. இதற்கு தனி அர்த்தம் ஏதும் கிடையாது.

அதேபோல் நம்மில் பலர் யாரோ நம்மைத் துரத்துவதுபோலக் கனவு காண்கிறோம். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் உங்களைப்போல பெரும்பாலானவர்கள் இதே மாதிரி கனவுகளைக்
காண்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு ஓரளவு ஆறுதலாய் இருக்கும்!

கனவு காணுவதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன?

நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன. இதைத் தொடர்ச்சி அனுமானம் என்று சொல்கிறார்கள். பரீட்சைக்குப் போகும்போது 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.

எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள். (டூயட் கூடப் பாடலாம்!)

அடுத்து எழும் கேள்வி, போதை மருந்துகள் கனவுகளைத் தூண்டுமா என்பது.

'தூண்டும்' என்று சொல்ல முடியாவிட்டாலும் அவைகள் கனவுகளைப் பயமானதாகவும், விரிவாகவும் ஆக்குகின்றன என்று சொல்லலாம். எல்.டோபா என்ற மருந்தைப் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்தபோது இந்த உண்மை அறியப்பட்டது.

ஆனாலும், போதை மருந்துகளுக்கும் கனவுகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய முழுமையான ஆய்வு இதுவரை நடைபெறவில்லை.

யாரெல்லாம் கனவு காண்கிறார்கள்?

மிருகங்கள் கனவு காணுமா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் இல்லை. ஆய்வில் சொல்ல முடிவதெல்லாம் மிருகங்களுக்கும் விரைவுக் கண்ணசைவுகள் இருக்கின்றன என்பதுதான். இந்தக் கண்ணசைவு நேரங்களில் நமக்குப் பெரும்பாலும் கனவுகள் வருகின்றன.

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் இனம் எல்லாவற்றிற்கும் இந்த விரைவுக் கண்ணசைவுகள் உண்டு. ஆனால் இதை மட்டும் வைத்து அவைகள் கனவு காண்கின்றன என்று உறுதிப்படுத்த முடியாது. மனிதர்களுக்கும் இந்த மாதிரியான நேரங்களில் கனவு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை அல்லவா!

அடுத்து எழும் வினா, கண்பார்வையில்லாதவர்கள் கனவு காண்பார்களா? அவர்கள் கனவுகள் எப்படியிருக்கும்?

நாம் காணும் கனவுகள் நேரில் நடப்பதைப்போல அவ்வளவு தெளிவாகவும், விரிவாகவும் இருப்பதுதான் இந்த சந்தேகத்திற்குக் காரணம். நிச்சயம் கண்பார்வை இல்லாதவர்களும் கனவு காண்கிறார்கள்.

குழந்தைகள் காணும் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்?

தூக்கப் பரிசோதனை செய்தபோது அவர்கள் அடிக்கடி கனவு காண்பதில்லை மற்றும் அவர்கள் காணும் கனவுகள் சுவாரசியமற்றதாக, உப்புச் சப்பில்லாதவையாகவே அமைகின்றன என அறிய முடிந்தது.

ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள்.

கனவுகள் ஏன் நினைவில் நிற்பதில்லை?

நாம் தூக்க நிலையில் கனவு காண்பதால் அந்தக் கனவிற்கு அப்போது அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது கிட்டத்தட்டப் பழக்கமானவர்கள் காரை டிரைவ் செய்து கொண்டுபோவது போலத்தான். மனம் எங்கேயோ இருந்தாலும் அனிச்சையாக செயல் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் நாம் நமது கனவுகளில் 95 லிருந்து 99 சதவிகிதம் வரை நினைவில் வைக்க முடிவதில்லை.


கனவுகள் நினைவில் நின்றால் அதற்குக் காரணம்?

கனவுகளின் மேல் தனி விருப்பமுள்ளவர்கள் கனவுகளை நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்.

சிலருக்கு கனவில் வந்ததுபோல் நிஜ வாழ்விலும் நடந்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியே அவர்களுக்குக் கனவுகளை நினைவில் வைத்துக்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கிறது.

கனவுகளின் மேல் ஆர்வமும் கனவுகளை நினைவில் வைத்துக் கொள்வதற்கான தூண்டுகோலுமே சிலர் கனவுகளை மறக்காமல் இருக்கக் காரணமாக இருக்கலாம். சில சமயங்களில், அவர்கள் கனவுகளை நினைவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று மனதுக்குள் தீர்மானம் செய்துகொண்டவர்களாக இருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு சமயம் அவர்கள் கண்ட கனவு பலித்திருக்கலாம், அல்லது ரொம்ப சுவாரசியமானதாக இருந்திருக்கக் கூடும்.

கனவுகளை நினைவில் வைத்துக் கொள்ளும் பலரிடமிருந்து சேகரித்த விவரங்கள் இந்தச் செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன.

முரண்பாடு ஏன்?

சிலர் கனவுகளை அதிகமாக நினைவு வைத்துக்கொள்வதற்கும் அதற்கு மாறாக சிலர் கனவுகளை நினைவிலேயே வைத்துக் கொள்ளாமல் போவதற்கும் அவர்களுள் ஏற்படும் ரசாயனத் தடுமாற்றங்கள் காரணமாக இருக்கலாம். சில மருந்துகள் மூலம் ஒருவர் காணும் கனவைத் துல்லியமாக நினைவில் வைக்கமுடிகிறது எனச் சோதனையில் கண்டிருக்கிறார்கள்.

ஒன்றுமே நினைவில்லை என்று சொல்லுபவர்களுக்கு வரும் கனவுகளே குறைவாக இருக்கலாம், அல்லது கனவு வராமலே கூட இருக்கலாம். துரிதக் கண்ணசைவு நேரங்களில் ஒருவர் நாலு அல்லது ஐந்து முறை கனவு காண்கிறார்கள் என்று சொல்லும்போது இது எப்படி சாத்தியம் எனத் தோன்றலாம்.

ஆனால் இந்தக் கனவுகளைப் பற்றி 1950-60களில் ஆராய்ச்சி செய்தவர்கள் அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிட்டார்களோ, போதுமானவர்களிடமிருந்து சரியான தகவல்களைச் சேர்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் கற்பனைத்திறன் குறைவானவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் சிலர் குறைவாகக் கனவு காண்கிறார்கள், ஒரு சிலர் கனவுகளே காண்பதில்லை என்ற கருத்து வலுப்படுகிறது.

சிலருக்கு மூளையில் சில குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் அழற்சி கூட கனவு காணும் திறன் இல்லாமல் போவதற்குக் காரணமாக இருக்கிறது. இவர்களுக்கு எல்லோரையும் போல அயர்ந்த நித்திரைக்கு முன்னால் ஏற்படும் துரிதக் கண்ணசைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் கனவு காண்பதில்லை. இதனால் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை, மன
உறுதியானவர்களாகவே இருக்கிறார்கள்.

சின்னக் குழந்தைகள் பெரியவர்களைப்போல அவ்வளவு கனவுகள் காண்பதில்லை. குழந்தைகள் தூக்கத்தில் ஏதாவது பேசுவதைப்பார்த்து அவர்கள் கனவு கண்டு பேசுகிறார்கள் என நினைக்கிறோம். அது சும்மா, தூக்கத்தில் உளறும் உளறல்கள்தான்.

கனவுகள் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்கின்றனவா?

கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.

கனவு காணும்போதே இறப்பது சாத்தியமா என்றால் நிச்சயமாக இல்லை. சாவதுபோல் கனவு கண்டால் அது நிச்சயம் நடக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக் கதை. உண்மையில் அதுமாதிரியான கனவுகள் சுகமான அனுபவங்களாக அமைகின்றன.

கனவுகளைப் பற்றிய பல ஆராய்ச்சிகள், கனவுகளுக்குப் பலன் பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் பல சந்தேகங்கள் தீர்க்கப்படாமலே
இருக்கின்றன.
Back to top Go down
 
கனவுகள்-1
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» காணாமல் போன கனவுகள்!
» *~*யாரையும் நோகாத கனவுகள்..*~*

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: