BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inலெமூரியா கண்டம் Button10

 

 லெமூரியா கண்டம்

Go down 
4 posters
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:33 am

2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.

இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்…

கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த “செனாசாயிக்’ என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான “மயேசென்’ யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.
“லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.

இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது “கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்’ எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.

அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் “பாங்கியா’வுக்கு “அனைத்துலகு’ என்று பொருள்.

இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.

இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.

தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!

ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.
கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.
ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.
“”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)
“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)
இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.
ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.
“தடநீர்க்குமரி’ என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. “நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. “நீர் மலிவான்’ என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.
லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது
நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.


THANKS:

இரா.கு.பா
லசுப்பிரமணியன்


Last edited by Fathima on Thu May 20, 2010 2:38 pm; edited 2 times in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: எங்கே லெமூரியா/ குமரிக்கண்டம் ?   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:38 am

"லெமூரியா" என கூகிலில் தேட ஆரம்பித்ததுமே லெமூரியாவின் இருப்பிடம்( இருந்த இடம்) தொடர்பான முரண்பாடுமிக்க தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன. அதாவது "மூ" எனும் பெயருடன் பசுபிக் சமுத்திரத்தில் காணப்பட்ட கண்டமே லெமூரியா என பொருள்படும் வகையில் தகவல்கள் காணப்படுகின்றன. அதே வேளை சில படங்கள் இந்து சமுத்திரத்தில் இருந்த கண்டம்தான் "லெமூரியா" என கூறுகின்றன. இங்கு நானும் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய கண்டம் பற்றியே எழுதவுள்ளேன். காரணம், உலக வரைபடத்தில் காணப்படும் வடஅமெரிக்க தென்னமெரிக்க கண்டங்கள் இலகுவாக அப்பிரிக்க ஐரொப்பிய கண்டங்களுடன் இனைக்க கூடிய வாறு காணப்படுகின்றன. (கற்பனை செய்து பாருங்கள், தென் அமெரிக்காவின் வலப்பக்கத்திலுள்ள கூர்ப்பகுதி ஆபிரிக்காவின் இடப்பக்கத்திலுள்ள குழிந்த பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும். அதே வேளை ஆபிரிக்காவின் இடப்பக்க முனைப்பகுதி வட தென் அமெரிக்க கண்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியுடன் பொருந்தக்கூடியதாக இருக்கும்.) ஆகவே, என்னை பொறுத்த வரையில் இவ் இடைப்பட்ட பகுதியில் கண்டம் இருந்திருக்க சாத்தியமில்லை. ( அவுஸ்ரேலியாக்கண்டத்தை ஆபிரிக்கா அல்லது ஆசியா கண்டத்துடன் பொருத்தி பார்ப்பது கச்சிதமானதாக இல்லை)






இன்னொரு காரணமாக, பூமியுடன் ஒரு பாரிய விண்கல் மோதிய போது பசுபிக் சமுத்திரத்தில் இருந்து பிளவுபட்டு போன ஒரு பகுதியே காலப்போக்கில் ஈர்ப்பு விசையின் காரண‌மாக சந்திரனாக உரு மாறியதாக விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவிவருகிறது. சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் சில கணிமங்கள் பசுபிக் சமுத்திரத்திலும் உள்ளனவாம். ( இது பூமியில் உயிரினம் தோன்ற முன்னர் ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இன்னொரு சாரார் இவ் மோதலே டைனோசரின் அழிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் மனித சமுதாயம் அப்போது தோன்றி இருக்கவில்லை என்பது தெளிவு.) பதிவு நீளமாகுகிறது மற்றைய ஆச்சரிய தகவல்களை பின்னர்
பார்க்கலாம்..


Last edited by Fathima on Thu May 20, 2010 2:38 pm; edited 3 times in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:39 am

லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.




ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)



இனி "லெமூரியா" எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன...
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))

கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்...

அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்... அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய "ஸீஸோ" விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.

(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)



இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது... ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)

சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின்
முறுகல் தான்!
.jpg]LAMORRIYA


Last edited by Fathima on Thu May 20, 2010 1:26 pm; edited 1 time in total
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: லெமூரிய தமிழர்கள்...   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:40 am

குமரிக்கண்டம் தொடர்பான பதிவு எழுத முன்னர், நான் அது தொடர்பான ஒரு ஃப்லாஸ் விளம்பரம் போட்டு இருந்தேன். அதில், "தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு..." என்று ஒரு வசனத்தையும் இணைத்து இருந்தேன். அதன் நோக்கம் லெமூரியா கண்டத்துடன் தமிழரின் வரலாற்றையும் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே.
அதன்படி இன்று அந்த ஒப்பீட்டை கொஞ்சம் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்...
இதில் எழுதப்போகும் பல விடையங்கள் நான் வாசித்து; சரியாக இருக்க‌லாமென நம்பும் விடையங்களே.... சிலது நான் இப்படி இருந்து இருக்கலாம் என்று நினைப்பவை... ஆகவே, எதுவும் நூறு வீதம் நம்பத்தக்கது இல்லை.
நீங்களும் உங்களுக்கு தோன்றுபவற்றை கொமென்ட்ஸில் போடுங்கள். அப்போதுதான் இந்த பதிவு கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும். Smile .

இந்த பதிவு எழுதும் போது பல சம்பவங்கள், இந்துக்களின் புராண நூல்களை அடிப்படையாக கொண்டே இருக்கும். ( நான் இந்து என்பதால் அவை பற்றிதான் எனக்கு தெரியும்.) இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய வேறு மத நூல்கள் அல்லது கோட்பாடுகள் தெரிந்திருந்தால் எழுதவும். Smile .
---------------------------------------------------------------------------------

நூறு... இருனூறு வருடங்களுக்கு முன்னர் கூட, உலகின்...முக்கியமாக ஐரோப்பிய நாடுகளின் சட்டங்கள், தொழில்நுட்ப நுட்பங்கள் என்பன‌ இலத்தீன் மொழியிலேயே இருந்தது. ( ஐரோப்பிய நாடுகளில் பேசப்பட்டுவரும் மொழிகள் பல கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்டதாகும்.)
இதற்கான காரணம்... குளூக்குறி (?) ( இரகசிய மொழி) / மறை மொழியில் சட்டங்கள் இருக்கவேண்டும் என்பதற்காகவேயாகும்.
காந்தியடிகள் சட்டம் படித்தபோது கூட, ஸ்பெசலாக கிரேக்க மொழியை கற்க பயிற்சி எடுத்து இருந்தாராம்.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,
சமஸ்கிரத மொழிக்கும் தமிழுக்கும் இடையிலான ஒரு தொடர்ப்பை காட்டுவதற்கே.

குமரிக்கண்டத்தில்...


தொழில் நுட்பம், ஆட்சிமுறைகள் என்பன வளர்ச்சியடைந்த போது... அதை ஒரு குறிப்பிட்ட மக்கள் மத்தியில் மட்டும் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வருவதற்கு; அன்றைய நடைமுறையிலிருந்த மொழியைவிட இன்னொரு இரகசிய மொழி தேவைப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டதே இந்த சமஸ்கிரத மொழியாக இருக்கலாம். ( நன்றி : குமரி மைந்தன்). ஆனால், துரதிஸ்டவசமாக வரலாற்று சம்பவங்கள் கூட சமஸ்கிரத மொழியில் மட்டுமே எழுதப்பட்டதனால் அங்கு பேசப்பட்ட மொழி தொடர்பான சான்றுகள் இல்லாமல் போய்விட்டன. காரணம், மேல்மட்ட மக்களிடையே இந்த இரகசிய மொழி ஒரு தனி மொழியாக உருவாக தொடங்கியமையால் அவர்களால் எழுதப்படும் வரலாற்று குறிப்புகளும் அவ்மொழியிலேயே எழுதப்பட்டு விட்டது.

இன்று கூட உலகில் பேசப்பட்டு வரும் பல மொழிகளில் தமிழ் மொழியின் தன்மையும், அவ் அவ் மொழிகளின் பின்வந்த சொற்களில் சமஸ்கிரதத்தின் தன்மையும் காணப்படுகின்றனவாம்.
அடுத்து, உலகில் எழுத்து உரு இல்லாமல் பேச்சு வழக்கில் மட்டும் இருந்துவரும் மொழிகள் தமிழ் உச்சரிப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றனவாம்.

அதனால், குமரிக்கண்ட வரலாற்று சம்பவங்களும், தமிழ் மொழியின் தொன்மையான வரலாறுகளும் சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்ட நூல்களிலேயே உள்ளன. முக்கியமாக வேத நூல்களாக கருதப்படும்... இருக்கு, யசூர்,சாமம் முதலிய நூல்களில் குமரிக்கண்ட வரலாறே கதைகளாக கூறப்பட்டுள்ளன என கருதப்படுகிறது.

மகாபாரதம் குமரிக்கண்டத்தில் நடந்த ஒரு வரலாற்று சம்பவம். ( இது சம்பந்தமாக நான் ஏற்கனவே இந்த லெமூரியா தொடர்பதிவுகளில் கூறியிருந்தேன். )

அது சம்பந்தமாக மேலதிகமாக நான் தெரிந்துகொண்ட தகவல்களை இதில் குறிப்பிடுகிறேன்...


மகாபாரதம்...
பாம்பை தமது இலட்சனையாக கொண்ட ஒரு குழுவுக்கும், பருந்தை இலட்சனையாக கொண்ட இன்னொரு குழுவுக்குமிடையே நடந்த உண்மையான ஒரு போரேயாகும். பிற்காலங்களில் இந்த வரலாற்றை பதிவு செய்யும் போது... இது போன்ற ஓர் போர் இன்னொரு முறை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திற்காக பல இடைச்செருகல்களுடன் ஒரு குழுவை முதன்மையான குழுவாக காட்டி... மக்களுக்கு நீதியை/ நற்கருத்துகளை புகுத்தி ஒரு போர் வெறியற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்டு இருக்கலாம். ( துரதிஸ்ட வசமாக தொழில் நுட்ப முறைகளும் மறைக்கப்பட்டு இருக்கலாம். :\ )


டெனிக்கன் எனும் பிரபல ஆராச்சியாலர் தனது நூலில் (chariots of god ) கொண்டவானம் எனும் பகுதியை அழிப்பதற்கு கண்ணனும் அர்ச்சுனனும் பயன்படுத்திய சாதனங்கள் இன்றைய அணுவாயுதத்துக்கு நிகரானது என்பதை ஒப்பிட்டுக்காட்டி இருக்கிறாராம். நாகசாகியில் போடப்பட்ட அணு குண்டுடனும் அதன் அழிவுகளுடனும் ஒப்பிட்டுள்ளாராம்.
அசுவத்தாமன் வீசிய ஒரு சாதனம் கருவிலிருந்த குழந்தைகளை கூட அழித்தது என சமஸ்கிரத நூல்களில் குறிப்புக்கள் இரு
க்கின்றனவாம்.
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: எங்கே லெமூரியர்/குமரி இனத்தவர்?   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:43 am

இது லெமூரியா பற்றிய மூன்றாவது பதிவு. முன்னைய இரு பதிவுகளுக்கும் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தமையை இட்டு மகிழ்ச்சியாக உள்ளது. போனபதிவில் ஆரம்பிக்கப்பட்ட விடையத்தை (எவ்வாறு அழிந்தது லெமூரியா?) சொல்லாமலே பதிவை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. ஒரு அனிமேஷ‌னுடன் விளக்குவதாக கூறியிருந்தேன். சில காரணங்களால் இன்னமும் செய்து முடிக்க முடியவில்லை. ஆனால் எப்படியும் இன்று வார்த்தைகளால் விளக்குவது என்டு முடிவெடுத்துள்ளேன். இங்குள்ள படத்தை அவதானிக்கவும் குமரிக்கண்டம் இருந்ததாக நான் கூறும் இடத்தின் மத்தியில் 4 புவித்தட்டுக்கள் ஒன்றுடனொன்று இனைந்திருப்பதை அவதானிக்க முடியும். இந்த நான்கு தட்டுக்களிலும் ஏற்பட்ட எதிர் எதிர் திசைகளிலான அசைவே குமரிக்கண்டம் பிளவு பட்டு நீரினுள் மூள்கிப்போக காரண‌மாக இருக்கும். இங்கு முக்கியமாக நோக்க வேண்டிய இன்னொரு விடையம் என்னவென்றால் இத்தட்டுக்கள் விலகியது என்பதை விட நான்கும் உள்னோக்கி குவிந்தது என்பதே ஏற்றுக்கொள்ளத்தக்கது.



இலங்கை, மடகஸ்கார் போன்ற நாடுகள் உன்மையில் குமரிக்கண்டத்தை சேர்ந்த நாடுகளே! இவை குமரிக்கண்டத்தின் எல்லைப்பகுதிகளில் காண‌ப்பட்ட மலைப்பிரதேச நாடுகளாகும். என‌வேதான் லெமூரியா மூழ்கியபோதும் இவ் நாடுகள் தப்பிபிழைத்துள்ளன. ( இதை, தட்டுக்கள் உள்னோக்கி குவிந்துள்ளன என்பதற்கான ஒரு சான்றாக கொள்ள முடியும்). இங்கு "இந்த நான்கு தட்டுக்களும் திடீரென ஒரே நாளில் தமது மாற்றத்தை வெளிப்படுத்தி இருக்குமா?" எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு ஒரே நாளில் நடைபெற்றிருப்பதற்கு புவியியலில் சாத்தியமில்லை. "அப்படியானால் அங்கு வாழ்ந்த உயிரினங்கள் எங்கே? அவை பிறபகுதிகளுக்கு குடிபெயரவில்லையா?" எனும் தொடர் கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக அங்கிருந்த மனித சமுதாயம் எங்கே? எனும் ஒரு பெரிய கேள்வி எழுகிறது. ( இங்கு, மனித சாமுதாயத்தின் தொட்டிலாக லெமூரியா கருதப்படுவது நினைவுகூறத்தக்கது.) இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் "பொரிக்ஷா" எனும் ரஷ்ஷிய சிறுவன், தான் ஒரு காலத்தில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாகவும்; அப்போது அடிக்கடி தான் பூமிக்கு வந்து போய் இருப்பதாகவும்; பூமியில் குமரிக்கண்டபகுதியில் அறிவில் மேம்பட்ட 9 அடி உயரம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்தார்கள் என‌வும் கூறியுள்ளான். சிறுவனின் உண்மைத்தன்மை இன்னும் ஆறியப்படவில்லை. ஆனால், எமது புராணங்களில் 9 அடி மனிதர்களை பற்றி பல பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அரக்கர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்).



அத்துடன் பரிமாண வழர்ச்சி படியை பார்க்கும் போது சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு படி காணாமல் போயுள்ளது. ( இது பரிமாண கொள்கையின் தந்தையான சார்ல்ஸ் டாவினால் ஏத்துக்கொள்ளப்பட்ட கருத்து.) இப்போது சமீபத்தில் சீன ஆய்வாளர்களால் இந்தோனேஷிய பகுதியில் ஒரு வித்தியாசமான எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது நியான்டர்தார்ஸ் களினுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ----------------------------------------------------------------------------------------
யார் இந்த நியான்டர்தார்ஸ்? மேலும் பல உண்மையான வியப்புக்களுடன் அடுத்த பகுதியில் சந்திப்போம். இது ஒரு கலந்துரையாடல் உங்களது கருத்துக்கள் தேவைப்படுகின்றது. தவறுகள்
இருப்பின் சுட்டிக
்காட்டவும்.


Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா?   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:44 am

போன பதிவில் நியான்டர்தார்ஸ் பற்றி ஆரம்பித்திருந்தேன். அது லெமூரியா காலத்துக்கு முட்பட்டது எனும் உண்மைத்தகவலை "பித்தன் வாக்கு" என்பவர் சுட்டிக்காட்டியிருந்தார். நான் ஒரு சிறு காரணம் இருப்பதாக கூறியிருந்தேன்.

சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்... இனக்கலப்பு நடந்திருக்கலாம்... (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))


ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்...

நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்...??? அது பிறகு...)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.


மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்...)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)

அங்கு வாழ்ந்தவர்கள் யாவர்? அவர்களின் அறிவு எவ்வாறானது? அவர்கள் பேசிய மொழி என்ன? இன்னும் வியப்பான மறுக்கப்படும் உண்மைகள் வரும் பதிவுகளில் காத்த
ிருக்கின்றன...
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா?   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:46 am

லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது...
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் "திருநெல்வேலி" எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ "தின்ன வேலி" என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.

இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)


ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.

தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. ...)


எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் "லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது" என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.

பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான "ஃபை"(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!

அவர்கள் எவ்வாறு அவ் அறிவை பெற்றனர்? மேலும் வியத்தகு சம்பவங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்...
----------------------------------------------------------------------------
-------------
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: இவர்கள் லெமூரிய(குமரி) குடிகளா?   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:47 am

நான் இங்கு எழுதும் போது... இப்படி இருக்கலாம் என்று தான் பொதுவாக எழுதுகிறேன். நிச்சயமான, நிரூபிக்கப்பட்ட விடையங்கள் வரும் போது அடைப்புகுறியினுள் குறிப்பிட்டு வருகின்றேன். அதனால்... தவறுகள் இருக்க சந்தர்ப்பம் அதிகம். தவறுகளை சுட்டிக்காட்டவும்...

போன பதிவில் லெமூரியர்களின் தொழில் நுட்ப அறிவை பார்ப்பதாக கூறியிருந்தேன்... இன்று அதை பற்றி சற்று ஆராயலாம்.
-----------------------------------------------------------------------------------------


ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்... அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்... லெமூரியாவின் பேரழிவின் பின்னர்...அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.

(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை... பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)

பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே... லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)


(யார் இந்த ஏலியன்ஸ்? பிறகு பார்க்கலாம்... நீங்கள் விரும்பினால் இத்தொடரிலேயே பார்க்கலாம்.)

மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது... சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது "அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்" எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)

இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே... எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.


அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.


இன்னொரு விடையம்... உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே... இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது... அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
-----------------------------------------------------------------------------------------
இனி...
மாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.

நாட்காட்டி வியக்கத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்
துள்ளது....
Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: லெமூரியாவும் (தமிழ்) கலண்டரும்   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:50 am

இது லெமூரியா தொடர்பான 7 வது பதிவு. நீண்ட நாட்களுக்கு பிறகு லெமூரியா பதிவு இடுகின்றேன்... போனபதிவில் நான் திராவிடம் பற்றி கதைத்து இருந்தமைக்கும், புராணங்களை லெமூரியாவுடன் இணைத்து எழுதி இருந்தமைக்கும் பித்தன் வாக்கு ( என்னை எழுத ஊக்கு வித்து வருபவர்) என்பவரிடமிருந்து சில கண்டனங்கள் எழுந்து இருந்தது. முக்கியமாக காலம் தொடர்பான கருத்து வேற்றுமைகள் காணப்பட்டன.
---------------------------------------------------------------------------------------

அவரின் கருத்தின் படி, இராமாயணம் முதலிய புராணங்கள்(?) கி.மு 2000 ஆண்டளவில் நடந்து இருக்கலாம் என்பதாகும்.
ஆனால், என்னால் இதை முற்றாக ஏற்று கொள்ள முடியவில்லை. காரணம், நமது இதிகாசங்கள் (?) களில் காலம் தொடர்பாக பெருசாக அலட்டிக்கொண்டதாக தெரியவில்லை.
ஆனால், நான் ஆறிந்த வகையில்...
மகாபாரதத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் காலம் கூறக்கூடியதாக இருக்கிறது.

1. பீமன்(?) பல்லை விளக்கியவாறே தர்மரிடம் சென்று " இன்று கலியுகம் ஆரம்பித்து விட்டதாம்..." என கூறுகிறார்.
அதற்கு, தர்மர் " உன்னை பார்க்கவே விளங்குது..." என கூறுவதாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது. இது மகாபாரத வரலாறு கலியுகத்திற்கு முந்தைய யுகத்தில் நடந்து இருக்கிறது என்பதற்கு சான்றாக கொள்ளலாம்.
( எனினும் இதுவும் இட்டுகட்ட பட்ட ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், காலங்கள் தொடர்பாக பெரும்பாலான இடங்களில் கூறப்பட வில்லை என் பதால் இட்டு கட்ட படவில்லை எனவும் கொள்ளலாம்.)

2. 2ம் சம்பவம்... திடமாக என்னால் கூறமுடியாது. நன்றாக தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.
மாகாபாரத யுத்தம் சூரிய கிரகமும், சனி கிரகமும் ஒரே யோசிய பெட்டியினுள் நிற்கும் போது நடந்ததாக கூறப்பட்டுள்ளது. ( நகுல சகோதரர்கள் கூறுவது போன்று சம்பவம் உள்ளதாக்கும்.)

5000 ஆண்டுகளுக்கு முன்னர் லெமூரியா இருந்திருப்பின்... நிச்சயமாக லெமூரிய மக்களின் எச்சங்கள் கண்டு பிடிக்க பட்டு இருக்கும். மாபெரும் கடற்கோல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்து இருக்கும்... என்பதே பலரால் ஏற்று கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், 5000 வருடத்திற்கு முன்னர் அவ் அழிவு ஏற்பட்டு இருப்பின் நிச்சயமாக புவியியல் ரீதியாக அதன் பாதிப்பு இன்றும் தெரிய கூடிய வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு நடந்து இருப்பின் "அலெக்ஸ்ஸான்டர் கொன்றதேவ்"இன் ஆராய்ச்சியாளர்கள் இந்து சமுத்திரத்தில் மேற் கொண்ட ஆராச்சியில் ஒரு சிறு படிமம் ஆவது கிடைத்து இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு நடக்க வில்லை.

எனவே, இராமாயணம், மகாபாரதம் முதலியன 2000 ஆண்டுக்கு உட்பட்டவை என்பதை ஏற்றுகொள்ள முடியாதுள்ளது.
---------------------------------------------------------------------------------------


இன்று... நீண்ட நாட்டளாக நான் அடுத்து வரும் என கூறிவந்த லெமூரிய/குமரி மக்களின் கலண்டர் தொடர்பான சில விடையங்களை பதிவிடலாம் என நினைக்கின்றேன். ( கலண்டர் தொடர்பான விடையங்களை முதலில் பார்த்து விட்டு... பின்னர் எமது புராணத்துக்கும் (?) லெமூரியாவிற்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்வோம்...)

இன்று எவ்வாறு "கிறீன் விச்" எனும் இடம் சர்வதேச நியம நேரமாக‌ (0) தொழிற்படுகிறதோ... அவ்வாறே லெமூரியர்காலத்தில் ஒரு இடம் இருந்துள்ளது. அது இலங்கையில் இருந்த ஒரு இடமாக இருக்க சந்தர்ப்பம் உள்ளது.

காரணம்...

நமது காப்பியங்களின் படி 3 இலங்கை இருந்ததாக கூறப்படுகிறது. ( இது நான் ஏற்கனவே கூறி இருந்த மதுரை தொடர்பான சம்பவங்களுடன் ஒத்து போக கூடியது. அதாவது வெவ்வேறு அழிவுகளின் போது... இடம் காலத்துக்கு காலம் மாற்றப்பட்டுள்ளது... இதன் படி பார்க்கையில் தற்போதைய இலங்கை உண்மை இலங்கையின் எஞ்சிய பகுதியே என்பது தெளிவாகின்றது... இது தொடர்பாக முந்தைய பகுதிகளில் ஏற்கனவே கூறியுள்ளேன்.)

தென்னிலங்கை... இது இராவணனின் தலை நகரம்...
நிரட்ச இலங்கை... இது 0 பாகை புவி அச்ச கோட்டில் ( நில நடு கோடு ) உள்ளது... ( இவை தொடர்பான தகவல்கள் ஐப்பெருங்காப்பியங்களில் உள்ளனவாம் \\\குமரி மந்தன் குறிப்பு\\\ )
இதை தான் மாயனின் சூரிய சித்தார்ந்தம் எனும் நூல் லங்கா புரி என கூறுகிறது.
லங்காபுரி... ரோமபுரி...சித்தபுரி...பத்திராசுவம் எனும் நான்கு... முக்கிய பெரும் நகரங்களும்... ஒன்றுக்கொன்று 90 பாகையில் மேற்காக அமைந்து இருந்ததாக குறிப்புகள் உள்ளன.

இந்த நில நடு இலங்கையே முன்னைய காலங்களில் நாடுகளின் நேரங்களை கணிக்கவும் ( இன்றைய கிரீன் விச்)... ஆண்டு கலண்டரை உருவாக்கவும் மைய புள்ளியாக இருந்து இருக்கின்றது.


பண்டைய காலங்களில் 5 வகையான கலண்டர்கள் பாவணையில் இருந்து இருக்கிறது... அதில் 2 வகையானது நீண்டகாலம் நிலைத்து நின்றுள்ளது... (1. நிலா ஆண்டு முறை. 2. சூரிய ஆண்டு முறை.)

5 வகையான ஆண்டு முறைகள் இருந்தமையாலேயே... பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு... என வெவ்வேறு... பண்டிகைகளாக கொண்டாடும் முறை நிலவி வந்துள்ளது. ( இன்றும் நிலவுகிறது...)

இதில்... இன்றைய ஆண்டு முறையை மிகவும் ஒத்த தாக இருந்தது... சூரிய ஆண்டு + சந்திர ஆண்டு முறையே...

அதாவது...

சூரியன் தன்னை தானே... அண்னளவாக சுற்ற 25 1/3 நாள் எடுக்கும்... அதே வேளை பூமியும் சுற்றுவதால் புவியில் இருந்து பார்க்க 27 1/3 நாட்கள் போன்று தோன்றும்... சூரியனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கரும்புள்ளி ஒவ்வொரு 27 1/3 நாளுக்கும் ஒருக்கா புவியை நோக்கி வருகிறது... ( புவியின் காந்த புலத்தை பாதிக்க தக்கது...)
இதை அடிப்படையாக கொண்டே 27 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டன.
ஒரு பெளர்ணமி நாளில் நிலவுக்கு பின்னர் இருக்கும் நட்சத்திரம்.... அடுத்த பெளர்ணமியில் வருவதில்லை...
அடுத்து அதே நட்சத்திரம் வர 12 மாதங்கள் எடுக்கும்... ( வர எடுக்கும் காலத்தை கொண்டே இந்த 12 என்பது கணிக்கப்பட்டது.... தற்போது 10 எவ்வாறு ஒரு அடியாகாக பயண்படுகிறதோ... அவ்வாறே... முன்னர்... 12 பயன்பட்டுள்ளது.... ( முன்னைய அளவு முறைகளை பார்க்கவும்... அனைத்தும் 12 ஐ அடியாக கொண்டுள்ளது...))
இந்த 12 மாதங்களையும் கணிப்பதற்காகவே ( நினைவு வச்சுக்கொள்ளவே) 12 இராசிகள் எனும் நட்சத்திர உருவ முறை பாவனைக்கு வந்தது. ( வேறு காரணங்களும் இருக்கு... அது இந்த தலைப்புக்கு பொருத்த மற்றது.)


இதை கணித்த முறை மிகவும் வியப்பானது... காரணம்... அந்த காலத்தில் எவ்வாறு இவ்வளவு தெளிவாக கணிப்பிட முடிந்தது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது...

இந்த ஆண்டு முறை பற்றி மிக விரிவாக குமரிமைந்தன் என்பவர் பதிவிட்டுள்ளார்....

16 ம் நூற்றாண்டில்... போப் கிரகெரி... என்பவராலேயே... இன்றைய ஜனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாக கொண்டாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுக்கு முன்னர் லெமூரிய கலண்டர் படி தை 1 ( இன்றைய ஜனவரி 14) தான் ஆண்டின் தொடக்க நாளாக இருந்தது. ( இது வரலாற்று உண்மை!!??)

மதம் அற்ற தமிழர்களின் முறையை பின்பற்றுவதை விரும்பாத... காரணத்தாலேயே... கிரகெரி... ஆண்டு முறையை மாற்றி அமைத்து
இருந்தார்...


THANKS:

VALAA
KAM

Back to top Go down
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeMon May 17, 2010 7:51 am

. மேலும் பல... சுவாரஷ்யமான விடையங்கள் இருக்கின்றன...............................................





flower flower lol! lol! lol! lol!
Back to top Go down
karthis

karthis


Posts : 151
Points : 270
Join date : 2010-03-11
Age : 43
Location : chennai

லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeWed May 19, 2010 1:14 pm

லெமூரியா கண்டம் புகைப்படம் - Lemuria Image

இலங்கை இந்தியாவுடன் இணைந்திருந்தது என்பதற்கு பெரிய சான்றுகள் அவசியமே இல்லை. அங்குள்ள யானைகளே சாட்சி. யானைகள் கடல் தாண்டுவதில்லை. அவை நிலப்பிராணிகள். மேலும் சேது அணை என்பதை இப்போதும் செய்மதி மூலம் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆயின் லெமூரியா என்று சொல்லும் இவ்வளவு பெரிய நிலப்பரப்பு (படத்தில்
காட்டப்பட்டது போல்) கடலில் மூழ்கியது என்று நம்புவதற்கு எந்த அறிவியல்
சான்றும் கிடையாது. ஏறக்குறைய ஆப்பிரிக்கா அளவிலான ஒரு கண்டம் கடலில்
மூழ்குகிறது என்றால் உலகம் அழிந்துவிட்டது என்று பொருள். லெமூரியாவை
மட்டும் அப்படியே கடலில் ஆழ்த்தும் தனி சக்திகள் என்று ஏதுமில்லை.
இலக்கியச் சான்றுகளை மட்டும் வைத்துப் பேசுவது என்றால் அது சில வட்டங்கள்
கொண்ட சிறு நிலப்பரப்பு அழிந்திருக்கலாம். அல்லது தமிழர்களின்
நினைவிலிருக்கும் நிலப்பரப்பு இந்திய கண்டத்தில் இல்லாமல் வேறு எங்காவது
இருக்கலாம். பின் குடியேறிய நிலப்பரப்பாக இந்தியாவிலிருக்கலாம்.
ஐரோப்பியர்கள் அமெரிக்கா போன போது அங்கும் பழைய நகரங்களின் பெயர்களையே இட்டார்கள் (உம்.யார்க் (நியூயார்க), லண்டன்). ஆஸ்திரேலியா என்பது இங்கிலாந்தின் நகல்!
Back to top Go down
dubaisurya

dubaisurya


Posts : 117
Points : 279
Join date : 2010-03-09
Age : 44

லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeSun May 23, 2010 11:16 am

hi fathima & karthis.. congrats.. google la first page la first aah vanthirukku.. intha lemuria topic.. super ma.. thx a lot

this topic link in google is : click here to access this topic in google
Back to top Go down
http://www.besttamilchat.com
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitimeSun May 23, 2010 12:24 pm

AKKA super google la unga article tan 1st la eruku ,im soooo happy akka



லெமூரியா கண்டம் 0211011
Back to top Go down
Sponsored content





லெமூரியா கண்டம் Empty
PostSubject: Re: லெமூரியா கண்டம்   லெமூரியா கண்டம் Icon_minitime

Back to top Go down
 
லெமூரியா கண்டம்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: