BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Button10

 

 ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Empty
PostSubject: ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?   ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Icon_minitimeWed May 26, 2010 4:58 pm

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் ஒரு முறையேனும் உபயோகிக்கும் வார்த்தை "ஒவ்வாமை" (Allergy). இது ஏற்படுவதற்கான காரணங்களையும் அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகளையும் நாம் இங்கு காண்போமா?

எப்படி ஏற்படுகிறது?

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை ஆங்கிலத்தில் allergen (or) antigen என்றழைக்கின்றனர். இந்த அலர்ஜென் தோல் மூலமாக நேரடியாகவோ, இதர உடல் உறுப்புகளின் மூலமாகவோ உடம்பினுள் சென்றடைந்ததும், இரத்த ஓட்டத்தின் மூலமாக திசுக்களைச் சென்றடையும். நம் உடம்பின் எந்த பாகமும் ஒவ்வாமையினால் தாக்கப்படலாம்.

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியப் பொருட்கள் :

தூசு, மகரந்தம், அழகு சாதனப் பொருட்கள், விலங்குகளின் முடி, விஷச் செடிகள், மருந்து வகைகள், தடுப்பூசிகள் மற்றும் பலவகையான உணவுப் பொருட்கள். உணவுப் பொருட்களில் தோடம் பழங்கள் (oranges), செம்புற்று பழங்கள் (Strawberries), பால், முட்டை, கோதுமை, மீன், கடல் வாழ் உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் தக்காளி அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை. வெப்பம், குளிர், சூரிய ஒளி போன்ற இயற்கை் சூழ்நிலைகளும் ஒவ்வாமைக்குக் காரணிகளாக அமைகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட உணவுவகைகள் அதிகமாக உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அவ்வாறு சுத்திகரிக்கப்படும் பொருட்கள் பலவேறு ரசாயனங்கள் மிகுந்து காணப்படுவதே இதன் காரணமாகும்.

உணர்ச்சி வசப்படுதல் மற்றும் உளவியல் அழுத்தம் காரணங்களாலும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


ஒவ்வாமையினால் ஏற்படும் தொல்லைகள் :

தலைவலி, மைக்ரெய்ன் (migraine), தலைசுற்றல், நமைச்சல், மனஅழுத்தம், மனக்கவலை, காய்ச்சல், சளி, வயிற்றுபோக்கு, வாந்தி, முகம் மற்றும் கண்கள் வீங்குதல், ஆஸ்துமா போன்றவை ஒவ்வாமை ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விதமாக தாக்கும் தன்மை கொண்டவை.



ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

1. 500 ml கேரட் சாறு மட்டுமாக அல்லது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி, இம்மூன்று காய்கறிச் சாறுகளின்கலவை ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த உதவும்
இம்மூன்று காய்கறிச் சாறுக அளவு விகிதம் கீழ்கண்டவாறு அமையவேண்டும் :
500 ml - கேரட் சாறு
100 ml - பீட்ரூட் சாறு
100 ml - வெள்ளரிக்காய் சாறு

தினமும் ஒருமுறை கேரட் சாறோ அல்லது மூன்று காய்கறிகளின் சாறின் கலவையையோ அருந்துவதன் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாம்.

பலவகையான உணவுப் பொருட்கள், அஜீரணக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் உட்கொள்ளுதல் மூலமாகப் போக்கலாம். வாழைப்பழத்தின் மூலமாக ஒவ்வாமைக்குள்ளாவோர் இதனைத்தவிர்ப்பது நன்று!

2. வைட்டமின்கள் A, C, E சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாமென்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், கேரட், காலிப்ளவர், சோளம், வெள்ளரி, வெங்காயம், பச்சைப்பட்டாணி, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் C நிறைந்துள்ளது.

வைட்டமின் A நிறைந்துள்ளவை தர்பூசணி, மாம்பழம், கேரட், பச்சைப்பட்டாணி, பீட்ருட் மற்றும் பூசணிக்காய் ஆகும்.

3. நிறைய குடிநீர் அருந்துதல் மூலம் மற்றும் ரசாயன முறைகளில் பக்குவப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

4. நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

5. B-complex மாத்திரைகளை உட்கொள்ளுதல் மூலமாகவும்
ஒவ்வாமையைத்தவிர்க்கலாம். B-complex மாத்திரைகள் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

6. நம் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் மூலமும் ஒவ்வாமை ஏற்படுதலைத் தவிர்க்கலாம்.

7. பூண்டு ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாக உதவுகின்றது. ஆஸ்துமாவின் ஆரம்ப நாட்களில் அவதிப்படுபவர்கள், பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்தப்பின் அருந்துவதால் நல்ல நிவாரணம் பெற முடியும்.

8. பால் அல்லது குடிநீருடனோ அல்லது தனியாகவோ தேனை அருந்துவதால் சுவாசம் சீர்பட்டு ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா கோளாறு நீங்கும்.

9. வெளியில் சென்று வந்தவுடன் நன்றாக குளிப்பதால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

****
Back to top Go down
chinu

chinu


Posts : 49
Points : 91
Join date : 2010-05-18
Age : 34
Location : INDIA

ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Empty
PostSubject: Re: ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?   ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Icon_minitimeWed May 26, 2010 5:29 pm

APIDIYA LUKS SOLLAVEYELLA


ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Smilin10


ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Funny_10


UNAKU KULIKARTHNAVE ALLERGY AHAHAHA

DNT TAKE BATH LUKS


ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? Lust_c10

CHINA MUKI SAPPA FIGURE HAHAHA


ஒவ்வாமையைப் போக்குவது எப்படி? 35funn11



ne thon vadivelu thangachi ahahah
Back to top Go down
 
ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~இது எப்படி இருக்கு?~~
» எப்படி அழைப்பேன்?
» கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
» கோபத்தைக் களைவது எப்படி?
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: