BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inபாரத ரத்னா விருது பெற்றோர் Button10

 

 பாரத ரத்னா விருது பெற்றோர்

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

பாரத ரத்னா விருது பெற்றோர் Empty
PostSubject: பாரத ரத்னா விருது பெற்றோர்   பாரத ரத்னா விருது பெற்றோர் Icon_minitimeThu May 27, 2010 4:22 pm

பாரத ரத்னா இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளில் மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் மரியாதைக்குரியோர் பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது. தற்போது பாரத ரத்னா பதக்கத்தில் அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத் தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கபார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரரும் முதல் இந்திய கல்வி அமைச்சருமான அபுல் கலாம் ஆசாத்துக்கு முதலில் விருது வழங்கப்பட்ட போது, விருது வழங்கும் குழுவில் அவர் இருந்ததால், அவர் விருதை ஏற்க மறுத்து விட்டார். ஆனால் பின்னர் 1992 ஆம் ஆண்டு அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

விருது பெற்றோர் பட்டியல்
1. முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975) 1954 - இரண்டாவது குடியரசுத்தலைவர், முதல் துணை குடியரசுத் தலைவர், தத்துவ ஞானி - தமிழ்நாடு

2. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972) 1954 - கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

3. முனைவர். சி. வி. ராமன் (1888-1970) 1954 - நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி - தமிழ்நாடு

4. முனைவர். பக்வான் தாஸ் (1869-1958) 1955 - இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

5. முனைவர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா (1861-1962) 1955 - கட்டிட பொறியாளர், அணை நிர்மானித்தவர், மைசூர் ராஜ்யத்தின் திவான் - கர்நாடகா

6. ஜவகர்லால் நேரு (1889 -1964) 1955 - முதல் பிரதம மந்திரி, சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர் - உத்தர பிரதேசம்

7. கோவிந்த வல்லப பந்த் (1887-1961) 1957 - சுதந்திர போராட்ட வீரர், உள்துறை அமைச்சர் - உத்தர பிரதேசம் (தற்போது உத்தராகாண்ட்)

8. முனைவர். தொண்டோ கேசவே கார்வே (1858-1962) 1958 - கல்வியாளர், சமூக சேவகர், பிறந்த நூறாவது ஆண்டில் விருது வழங்கப்பட்டது - மகாராஷ்டிரா

9. முனைவர். பிதன் சந்திர ராய் (1882-1962) 1961 - மருத்துவர், அரசியல்வாதி - முன்னாள் மேற்கு வங்க முதல்வர் - மேற்கு வங்கம்

10. புருஷோத்தம் தாஸ் டண்டன் (1882-1962) 1961 - சுதந்திர போராட்ட வீரர், கல்வியாளர் - உத்தர பிரதேசம்

11. முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963) 1962 - முதல் குடியரசுத் தலைவர், சுதந்திர போராட்ட வீரர் - பீகார்

12. முனைவர். ஜாகீர் ஹுசைன் (1897-1969) 1963 - முன்னாள் குடியரசுத் தலைவர் - ஆந்திர பிரதேசம்

13. முனைவர். பாண்டுரங்க வாமன் கானே (1880-1972) 1963 - சமஸ்கிருத அறிஞர் - மஹாராஷ்டிரா

14. லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966) 1966 - இரண்டாவது பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - உத்தர பிரதேசம்

15. இந்திரா காந்தி (1917-1984) 1971 - முன்னாள் பிரதமர் - உத்தர பிரதேசம்

16. வி.வி. கிரி (1894-1980) 1975 - முன்னாள் குடியரசுத் தலைவர், தொழிற்சங்க தலைவர் - ஒரிசா

17. கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975) 1976 - சுதந்திர போராட்ட வீரர் - முன்னாள் தமிழக முதல்வர் - தமிழ்நாடு

18. ஆக்னஸ் தெரேசா போஜாக்ஸ்யூ (அன்னை தெரேசா) (1910-1997) 1980 - 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் - சமுக சேவையாளர் - மேற்கு வங்கம்

19. ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982) 1983 - சமூக சீர்திருத்தவாதி, சுதந்திர போராட்ட வீரர் - மகாராஷ்டிரா

20. கான் அப்துல் கபார் கான் (எல்லை காந்தி) (1890-1988) 1987 - முதல்முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - சுதந்திர போராட்ட வீரர்- பாகிஸ்தான்

21. எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987) 1988 - முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் - தமிழ்நாடு

22. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) 1990 - இந்திய அரசியல் சட்ட சிற்பி, சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார நிபுணர் - மகாராஷ்டிரா

23. நெல்சன் மண்டேலா (b 1918) 1990 - இரண்டாம் முறையாக இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு விருது - இனவெறி எதிர்ப்பு இயக்க தலைவர் - தென் ஆப்பிரிக்கா

24. ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991) 1991 - முன்னாள் பிரதமர் - புதுதில்லி

25. சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950) 1991 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய உள்துறை அமைச்சர் - குஜராத்

26. மொரார்ஜி தேசாய் (1896-1995) 1991 - முன்னாள் பிரதமர், சுதந்திர போராட்ட வீரர் - குஜராத்

27. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958) 1992 - சுதந்திர போராட்ட வீரர், முதல் இந்திய கல்வி அமைச்சர் - மேற்கு வங்கம்

28. ஜே. ஆர். டி. டாடா (1904-1993) 1992 - தொழில் அதிபர் - மகாராஷ்டிரா

29. சத்யஜித் ராய் (1922-1992) 1992 - திரைப்பட இயக்குனர் - மேற்கு வங்கம்

30. ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931) 1997 - முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி - தமிழ்நாடு

31. குல்சாரிலால் நந்தா (1898-1998) 1997 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் பிரதமர் - பஞ்சாப்

32. அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996) 1997 - சுதந்திர போராட்ட வீரர் - மேற்கு வங்கம்

33. எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004) 1998 - கர்நாடக சங்கீத பாடகி - தமிழ்நாடு

34. சி. சுப்ரமணியம் (1910-2000) 1998 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் இந்திய விவசாய அமைச்சர், பசுமைப் புரட்சியின் தந்தை - தமிழ்நாடு

35. ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979) 1998 - சுதந்திர போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி - பீகார்

36. ரவி சங்கர் (b 1920) 1999 - சிதார் கலைஞர் - உத்தர பிரதேசம்

37. அமர்த்தியா சென் (b 1933) 1999 - பொருளாதார நோபல் பரிசு வென்றவர் - மேற்கு வங்கம்

38. கோபிநாத் பர்தோலி (b 1927) 1999 - சுதந்திர போராட்ட வீரர், முன்னாள் அசாம் முதல்வர் - அசாம்

39. பிஸ்மில்லா கான் (1916 - 2006) 2001 - செனாய் இசை கலைஞர் - பீகார்

40. லதா மங்கேஷ்கர் (பி 1929) 2001 - பாடகி - மகாராஷ்டிரா

41. பீம்சென் ஜோஷி (பி 1922) 2008 - ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர்
- கர்நாடகா






THNKAS:


CHENNI LIBRARY
Back to top Go down
 
பாரத ரத்னா விருது பெற்றோர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பாரத நாடு பாரதியார்
» YENAKKU PIDITHA BHARATHI KAVITHAIGAL...............

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: