BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in[b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b] Button10

 

 [b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b]

Go down 
AuthorMessage
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

[b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b] Empty
PostSubject: [b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b]   [b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b] Icon_minitimeMon Jun 28, 2010 4:47 am

நம்மில் பெரும்பாலோருக்கு குளவியை நன்றாகவே தெரியும். நம்வீடுகளில் மண் வீடு கட்டுமே .. அதுதானே..! அந்த குளவி மண் வீடு கட்டினால், வீட்டில் குழந்தை பிறக்கும் என்றுகூட சொல்வார்களே.. அந்த குளவிதான் இது பட்டாம் பூச்சி இனத்தை சேர்ந்ததாக இருந்தாலும் கூட, இது தேனீயும் அல்ல, எறும்பும் அல்ல. பயிர்களை சாப்பிடும், பூச்சிகளை குளவி வேட்டையாடும்.சூழல் மண்டலத்தின் நெருங்கிய நண்பன்தான் குளவி.இவை துருவப் பிரதேசம் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழ்கின்றன. இதன் எடை 1 கிராமுக்கும் குறைவே. வாழ்நாள் 12-22 நாட்களே.

குளவி இனத்தில்,சுமார், 100,000௦௦௦ இனங்கள் உள்ளன. பெரும்பாலும் இவை ஒட்டுண்ணிகளாகவே இருக்கின்றன. சில குளவிகள் தனியாகவும், சில கூட்டு சமூக வாழ்க்கையும் நடத்துகின்றன. பெரும்பாலும் இவை கூடு கட்டுவதில்லை. ஆனால் சில குளவிகள் அற்புதமாக வீட்டை கட்டுகின்றன. குளவிகளுக்கு, எறும்புகள் போலவே, கூட்டுக் கண்கள உண்டு.குளவிகள், கம்பளிப் புழுவாய் இருக்கும் போது ஒட்டுண்ணியாகவும், வளர்ந்து முதிர்ந்த பருவத்தில் தேன் மற்றும் மகரந்தத்தை உண்பவர்களாகவும் இருக்கின்றன. சமூக குளவிகள், சர்வபட்சிணிகள். எதை வேண்டுமானாலும், போட்டு தள்ளும்.சில குளவிகள் ஆச்சரியமான பழக்கம் , வழக்கம், உடையவை.இதில் மஞ்சள் சட்டைகாரன் என்ற குளவி, இறந்த விலங்குகளை தன் குஞ்சான கம்பளிபுழுவுக்கு பொறுக்கி வந்து தரும்.சில இனங்களில், கம்பளிப் புழு தன் உடலில் இருந்து, தேன் போல ஒரு சுரப்பை முதிர்ந்த குளவிக்குத் தரும்.மஞ்சள் சட்டைக்காரன் குளவி, தன் குஞ்சு கம்பளிக்கு, தேனீக்களின் கூட்டிலிருந்து தேனைத் திருடிவந்து கொடுக்கும் .
பெரும்பாலான சமூக குளவிகள், பேப்பர் கூடுதான் கட்டு கின்றன.குளவியின் இனம் மற்றும் இருக்கும் இடம் பொறுத்தே கூடுகள் கட்டப் படுகின்றன. இவை மரத்திலோ, பொந்திலோ, தரையில் உள்ள பள்ளங்களிலோதான் தங்களின் கூட்டை கட்டுகின்றன. இவைகளுக்கு, தேனீக்கள் போல, மெழுகு சுரக்கும் சுரப்பி கிடையாது. இவை மரத்தின் கூழிலிருந்து, பேப்பரை உற்பத்தி செய்கின்றன. ,இவை, சிதைந்து போன மரங்களிலிருந்து,மரத்தூளைக் கொண்டு வரும்.அதனை தன் பற்களால் கடித்து மென்மையாக்கும். பின் தனது எச்சிலை அதில் நன்றாக கலந்து கொண்டு, நிறைய அறைகளுள்ள கூட்டை உருவாக்கும் .கூட்டை முதலில் ராணிதான் கட்டத் துவங்கும். ஒரு வாதுமை அளவுக்கு கூடு வந்ததும், அதனைப் பின்பு வேலைக்காரர்கள் /பணியாட்கள் கையில் இப்பொறுப்பு ஒப்படைக்கப் படும். நிறைய அறைகள் உள்ள கூடவே இது இருக்கும்.ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு முட்டை பத்திரமாக வைக்கப்படும். பின்னர் அதன் வாயில் மூடப்படும்.இப்படியே, அடுக்குக்கு மேல் அடுக்காக மாடி கட்டி முட்டையை ராணி குளவி இடும். கூடு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அதனை வைத்து அதில் எத்தனை பெண் வலைக்கரர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியும்.ஒரு கூட்டில் பல ஆயிரம் பெண் பணியாட்களும், ஒரே ஒரு ராணி குளவியும் இருக்கும்.

கூடுகட்டும் குளவிகள், சுமார் 1 100 வகைகள் உள்ளன. குளவிகள், இணைதேடுவதற்காக பறக்காது..பருவம் வந்த இளைய ராணியுடன், ஆண் இணையும். அதன் பின் பெண்ணின்வயிற்றிலுள்ள ஒரு பந்து போன்ற அமைப்பில், ராணி ஆணின் விந்து செல்களை சேமித்து வைத்திருக்கும்..எனவே, ஒவ்வொரு முறை முட்டையிடும்போதும்.சேமித்து வைத்துள்ள விந்தே, முட்டையுடன் இணைந்து, பெண் குளவிகள் உருவாகின்றன. இதில் கருவுற்ற முட்டைகளும், கருவுறாத முட்டைகளும் இருக்கின்றன. ஆனால் கருவுற்ற முட்டையிலிருந்து, பணிப்பெண்ணும், கருவுறாத முட்டையிலிருந்து, ஆணும் உருவாகின்றன. , பல முட்டைகளிலிருந்து, கரு உருவாக்க முடியாத மலட்டு குளவிகளேப பிறக்கின்றன.



சரி..சரி அது அங்கே கூடு கட்டட்டும்.. வங்க நாம BTCல வீடு கட்டுவோம்.

- ப்ரியமுடன்
Back to top Go down
 
[b]பேப்பர் .கூடு கட்டும் குளவி..[/b]
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆகாயத்தில் தொட்டில் கட்டும்......
»  ~~ Tamil Story ~~ வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு.....
» களை கட்டும் கணவன் – மனைவி கலாட்டா

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: