BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமுட்டை முருங்கைக்கீரை பொறியல் Button10

 

 முட்டை முருங்கைக்கீரை பொறியல்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

முட்டை முருங்கைக்கீரை பொறியல் Empty
PostSubject: முட்டை முருங்கைக்கீரை பொறியல்   முட்டை முருங்கைக்கீரை பொறியல் Icon_minitimeMon Mar 15, 2010 7:38 am

மு‌‌ட்டை சே‌ர்‌த்து முரு‌ங்கை‌க் ‌கீரை பொ‌றிய‌ல் செ‌ய்து பா‌ர்‌த்‌திரு‌க்‌கி‌ன்‌றீ‌ர்களா? ‌ம்‌ம்‌ம் செ‌ய்யு‌ம் முறையை அ‌ளி‌க்‌கிறோ‌ம். செ‌ய்து பா‌‌ர்‌த்து ரு‌சியு‌ங்க‌ள்.

தேவையான பொருள்கள்:

முருங்கைக்கீரை - இரண்டு கட்டு
வெங்காயம் - நான்கு
காய்ந்தமிளகாய் - ஆறு
பூண்டு - நான்கு ப‌ல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கடலை பருப்பு - இரண்டு தே‌க்கர‌ண்டி
உளுத்தம் பருப்பு - இரண்டு தே‌க்கர‌ண்டி
முட்டை - 4

செய்யு‌ம் முறை:

முரு‌ங்கை‌க் ‌கீரையை சு‌த்த‌ம் செ‌ய்து ந‌ன்கு அல‌‌சி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போ‌‌டவு‌ம். ‌பி‌ன்பு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போ‌ட்டு தா‌ளி‌க்கவு‌ம்.

பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவு‌ம். ‌பி‌ன்பு அல‌சி வை‌த்‌திரு‌க்கு‌ம் முரு‌ங்கை‌க் ‌கீரையை‌ப் போடவு‌ம். பூண்டு தட்டி போட்டு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.

முட்டைகளை உடைத்து அடித்து வைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றி வெந்து வந்ததும் அடித்து வைத்திருக்கும் முட்டைகளை ஊற்றி ஒரு நிமிடம் வைத்து பிறகு கிளறி விடவும்.

கீரையுடன் முட்டையும் கலந்து வரும் வரை கிளறி இறக்கவும். சூடாக சாப்பி‌ட்டா‌ல் சுவை அருமையாக இருக்கும்.
Back to top Go down
 
முட்டை முருங்கைக்கீரை பொறியல்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» முருங்கைக்கீரை முட்டை பொரியல்
» முட்டை பக்கோடா
» கீரை முட்டை பொரியல்
» இடியாப்ப முட்டை ஆம்லெட்
» கார்லிக் முட்டை வறுவல்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: