BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Button10

 

 தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........

Go down 
4 posters
AuthorMessage
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Empty
PostSubject: தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........   தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Icon_minitimeWed Jul 21, 2010 9:20 pm

நண்பர்களே நான் சமீபத்தில் இதை ஒரு வலை தளத்தில் படித்தேன் படிக்கும் பொழுதே தேள் கொட்டுவது போன்ற உணர்வு ,படித்து முடித்ததும் ஒரு பெரிய சாட்டை அடி வாங்கிய உணர்வு பின்னர் தான் புரிந்து கொண்டேன் நம்மை போன்றவர்களுக்கு இந்த சாட்டை அடி தேவை தான் என்பது. ஆம் தமிழர்களாகிய நாம் மாற்று மொழியில் மோகம் கொண்டு நம் தமிழை மறந்து விட்டோம் என்பதை புரிந்து கொண்டு என்னை போன்று எத்தனையோ பேருக்கு இது உதவும் என்று இதை இங்கே தருகிறேன் இது நண்பர் ஆதித்தன் என்பவரால் உருவாக்கப்பட்டது . நீங்களும் படிங்கள் படித்தபின் உங்கள் நண்பர்களிடமுன் இதைப்பற்றி கூறுங்கள்.

பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று. அது அவசியமானதும் கூட.
ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது.

தடுமாறும் தமிழினம்!


தமிழறிஞர்கள், கவிஞர்களால் மட்டுமே தமிழ் வாழும் என்ற நிலை மாறி, இன்று உலகெலாம் பரந்து வாழுகின்ற அனைத்து தமிழர்களின் பங்களிப்பை எதிர்பார்த்து தமிழின் எதிர்காலம் நிற்கிறது. ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தக் கடப்பாடு இருக்கிறது. கிட்டத்தட்டஒன்பது கோடித்தமிழர்களில் இந்த நிலையைப்பற்றிச் சிந்திக்கின்றவர்களே மிகக்குறைவு என்பதே வருந்தத்தக்க உண்மை!

தமிழினத்தின் இன்றைய நிலையெண்ணி விம்மிக் கொதிக்கின்ற நெஞ்சங்களுக்கொரு ஆறுதலாக, தமிழை தம் உயிரென நேசிக்கின்ற மென்பொருளியலாளர்கள், இயக்குனர்கள், அறிவியலாளர்கள் போன்றவர்களின் வெளிவருகையும் அவர்களின் உணர்வார்ந்த செயற்பாடுகளும் தமிழின் எதிர்கால இருப்புக்கு அத்திவாரம் போட்டிருக்கின்றன. ஆனால் அத்திவாரங்கள் மாத்திரமே கட்டிடங்கள் ஆக முடியாது. உலகத்தமிழர் ஒவ்வொருவருக்கும் தமிழ் வளர்க்கும் பங்கு இருக்கின்றது.

மென்பொருளியலாளர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டுதிறனுடன் மென்பொருட்கள் அமைப்பதாலோ, இயக்குனர்கள் தமிழர்தம் பண்பாட்டுக் கோலங்களை திரையோவியங்கள் ஆக்குவதாலோ, அறிவியலாளர்கள் விஞ்ஞானக்கருத்துக்களை தமிழுக்குள் கொணர்வதனாலோ
உடனடியாக எதிர்காலப் பாதையின் மீதுள்ள முட்கள் அகற்றப்பட மாட்டாது.
வாழும் தமிழர்களின் அன்றாடவாழ்க்கைக்குள் தமிழ் நிராகரிக்கப்படுமாயின்
மேற்சொன்ன மொழிவளர்ச்சிப்பணிகளால் எந்தப்பயனும் இல்லை. பிற நாகரிக மோகங்களால் கட்டுண்டு கிடக்கின்ற பெரும்பான்மைத் தமிழர்சமுதாயம், தானே தன்னைக்கட்டிக்கொண்ட தளை அறுத்து மீளாவிடின், தமிழை ஓர் இருண்ட பாதைக்கு கைகாட்டி விடுகின்ற துரோகத்தனதுக்கு உடந்தையாகிப் போகக்கூடும்.

"என்ர பேத்தி இங்கிலீஸில வலு திறம்! தமிழ் கதைக்கிறதே இல்லை!" என்று பெருமை பேசுகிற எத்தனையோ (கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து, முந்தோன்றிய) 'மூத்த' தமிழ்க்குடிமக்களை நான் வெள்ளவத்தைக்குள் கண்டிருக்கிறேன். எங்கேயாவது விருந்துக்கு போன இடங்களில் "அங்கிளுக்கு இங்கிலீஷ்ல றைம் சொல்லிக்காட்டுங்கோ!" என்று பிஞ்சுகளுக்கு அறிவுறுத்துவதில் பெருமைகொள்கின்ற பெற்றோர்களை பார்த்திருக்கிறேன்.
குரக்கன் புட்டையும் இட்டலிதோசையையும் மறுதலித்து, 'பீசா'வுக்காகவும் 'பர்கர்'க்காகவும் ஒற்றைக்காலில் நின்று அழுதுகுழறி ஊரைக்கூட்டும் வருங்காலத்தமிழர்களின் கொள்கைப்பிடிப்புணர்வை அநுபவித்திருக்கிறேன்.
எந்த அளவுக்கு பிறமொழிக்கலாசாரம் எம்மிடையே ஊறிப்போய்க்கிடக்கின்றதென்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.

வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் பொழுது, நெஞ்சம் வெந்துபோகிறது. தமிழுக்குள் வந்து கலந்த, இருபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் மலையாளம் உருவாகி சேரநாட்டுத்தமிழர்கள் நம்மிடமிருந்து பிரிந்து மலையாளிகளானார்கள். ஐம்பது சதவிகித சமஸ்கிருதத்தினால் கன்னடர்கள் உருவாகி, பொன்னி நதியாம் காவிரியை தம்முடமை என்றார்கள். எழுபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் தெலுங்கு பிறந்து ஆந்திரர்களாய் அந்நியப்பட்டார்கள். ஆக, இந்த வேற்றுமொழி ஊடுருவல்
இல்லாது போயிருப்பின், இன்றைய காலத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து கோடிபேர்களைக்கொண்டதாய், தமிழ்ச்சமுதாயம் திகழ்ந்திருக்கும். இன்று சாதாரணவிடயமாக கருதப்படும் மொழிஊடுருவலினால், எத்தனை கோடி தமிழ்ச்சகோதரர்களை இழந்திருக்கின்றோம் என ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள். காலத்தின் கரங்களால் இதே கதை மீண்டும் எழுதப்படலாம். இந்தப்போக்கு தொடர்ந்திடின், மீண்டும் ஒரு சமுதாய இழப்பை எம்மினம் எதிர்நோக்கும். எந்தச்சூழ்நிலையிலும் நம்முடைய இழப்புகளுக்கு நாம்தான் காரணமாயிருக்கிறோம்.

வடமொழிகூடக் கலவாத இனிய தமிழ்ப்பெயர்களை குழந்தைகளுக்கு பெற்றவர்கள் வைக்கவெண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்க, ஆங்கிலத்தில் தொடங்கி கிரேக்கமொழி வரை அலசி, அர்த்தம் தெரியாத கவர்ச்சிச்சொற்களை பெயரென்று இட்டுமகிழ்கின்ற பெற்றோர்பெருந்தகைகளை நோக்கி என் சுட்டுவிரல் குற்றம் சாட்டுகிறது. பிஞ்சுப்பருவத்திலேயே தமிழர்தம் பண்பாட்டுக்கோலங்களில் இருந்து குழந்தைகளை அந்நியப்படுத்தி, பிறநாகரிக அடிமைமோகம் ஊட்டுகிற நீங்கள், எந்த உரிமையை வைத்துக்கொண்டு உங்களை தமிழர்களாய் அடையாளப்படுத்திக்கொள்கின்றீர்கள்?

பிறமொழியறிவுத்தேடல் பிழையன்று. அது அவசியமானதும் கூட.
ஆனால் பிறமொழி நாகரிகத்தினுள் அழுந்திப்போய், தன்னிலை மறத்தலே கண்டிக்கத்தக்கது. எந்தவொரு செயலும் பதியப்பட்டு நாளைய வரலாறாகக்கூடிய இன்றைய காலகட்டத்தில், தம் நிலை மறந்த தமிழர்களின் வாழ்வு, வருங்காலத்தினருக்கு ஒரு தவறான முன்னுதாரணமாய் போய் விடக்கூடாது என்ற அச்சம் வேர் விட்டு வளர்கிறது.

தமிழ்மறந்து வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் மூலமாக, எதிர்காலத்தில், மாபெரும் பழமைப்பாரம்பரியம் மிக்க தமிழினத்திலிருந்து விலகல் உற்று அனாதைகளாக எம் இரத்தச்சொந்தங்கள் அலைவதற்கு உடன்படுகின்ற, அந்தக் கயமைத்தனத்தை கொன்றொழித்து, விட்ட பிழைகளைத் திருத்துவதற்காய் என் இருகை கூப்பி உங்கள் அனைவரையும் வேண்டி அழைக்கின்றேன். எட்டப்பராய்ப் போவதும், எழுந்திங்கு வருவதும் உங்கள் கையில்!!!


Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Empty
PostSubject: Re: தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........   தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Icon_minitimeThu Jul 22, 2010 6:05 am

வரலாற்றின் பக்கங்களை திரும்பிப்பார்க்கும் பொழுது, நெஞ்சம் வெந்துபோகிறது. தமிழுக்குள் வந்து கலந்த, இருபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் மலையாளம் உருவாகி சேரநாட்டுத்தமிழர்கள் நம்மிடமிருந்து பிரிந்து மலையாளிகளானார்கள். ஐம்பது சதவிகித சமஸ்கிருதத்தினால் கன்னடர்கள் உருவாகி, பொன்னி நதியாம் காவிரியை தம்முடமை என்றார்கள். எழுபத்தைந்து சதவிகித சமஸ்கிருதத்தினால் தெலுங்கு பிறந்து ஆந்திரர்களாய் அந்நியப்பட்டார்கள். ஆக, இந்த வேற்றுமொழி ஊடுருவல்
இல்லாது போயிருப்பின், இன்றைய காலத்தில் ஏறக்குறைய இருபத்தைந்து கோடிபேர்களைக்கொண்டதாய், தமிழ்ச்சமுதாயம் திகழ்ந்திருக்கும். இன்று சாதாரணவிடயமாக கருதப்படும் மொழிஊடுருவலினால், எத்தனை கோடி தமிழ்ச்சகோதரர்களை இழந்திருக்கின்றோம் என ஒருகணம் சிந்தித்துப்பாருங்கள்.

தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... U611


NICE TOPIC THANKS FOR THIS NAVINESH.
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Empty
PostSubject: Re: தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........   தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Icon_minitimeThu Jul 22, 2010 6:28 am

அன்பு தோழரே!

யாவும் உண்மையே!?

தமிழினம் தடுமாறவில்லை

தமிழன் தடம் மாறுகிறான்..

தடம் மாறுவதால் ஏற்படும் தடுமாற்றமே இது.

- ப்ரியமுடன்
Back to top Go down
GoodPayan

GoodPayan


Posts : 167
Points : 235
Join date : 2010-06-30
Age : 39
Location : Chennai

தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Empty
PostSubject: தடுமாற்றம் சரி செய்யப்படும்.   தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Icon_minitimeThu Jul 22, 2010 10:25 am

நண்பனே நவி..
உனது ஆதங்கம் நியாயமானது. உணர்வுப் பூர்வமானது.
தமிழர்களாகிய நாம் வெட்கித் தலைகுனியத் தான் வேண்டும்.
ஆனால் நமது தலை குனிவிற்கு நமது முந்தைய தமிழ் சமுதாயமே
காரணம். நடந்ததை பற்றிப் பேசிப் பயன் ஏதும் இல்லை. நாம்
தலை நிமிர்வதுற்குரிய முயற்சிகளை மேற்கொண்டே ஆக
வேண்டும். இணையம் தமிழ் வளர்க்க உதவும் மிகப் பெரிய
கருவி. நமது தலை முறைத் தமிழர்கள், உலகின் பல்வேறு
பகுதிகளில் பிரிந்திரிந்தாலும் தமிழிலே பேசிக் கொள்ள உதவுகிறது.

உதாரணம்: நமது BTC - இல் நாம் தமிழில் உலாவி மகிழ்கிரோமே..
நமக்கு முன்பிரிந்தவர்களால் நமது நண்பர்கள் சிலர் தமிழை மறந்து
இருந்தாலும், அவர்கள் பிழையுடன் பேசினாலும், தமிழில் பேச வேண்டும்
என்ற அவர்களின் ஆர்வம், என்னை சிலிர்ப்படைய வைக்கிறது. தவறாக
பேசுகிறோம் எனத் தெரிந்தே, மற்றவர்கள் நம்மை கேலி செய்வார்கள்
என்பதை பற்றி கவலைப்படாமல், தமிழ் பேசும் அழகை பார்க்கும் போது,
தமிழ் அவ்வளவு சீக்கிரம் அழிந்து விடாது என்றேத் தோன்றுகிறது.
நமது பெற்றோர்களும், தாத்தாக்களும் செய்த தவறுகள் தான் நமது நண்பர்கள் தமிழை மறந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் நிச்சயமாக தனது சந்ததியினருக்கு அதே துரோகத்தை செய்ய மாட்டார்கள் என்றே நம்புகிறேன். தமிழ் பேசத் தெரியாதவர்களும் தமிழ்ப் பாடல்களை பாடி மகிழ்வதும், நம்முடன் தமிழில் பேசி மகிழ்வதும், நமது தலைமுறைத் தமிழர்கள் தமிழை தடுமாற்றத்தில் இருந்து கரை ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கையை என்னுள் ஏற்படுத்துகிறது.

(நவி.. இங்கே சென்னையில் புது உத்தரவு. அனைத்துக் கடைகளின் பெயர்ப் பலகைகளும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்கின்றனர். இதுவரை எனக்கு தமிழில் தெரிந்திராதப் பலப் பெயர்களை நான் அறிந்து கொண்டேன். எடுத்துக் காட்டாக Icecream இக்கு தமிழில் பனிக் குழாம், hardwares - வன் பொருளகம், எனப் பல புதியப் பெயர்கள்.)
Back to top Go down
Sponsored content





தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Empty
PostSubject: Re: தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........   தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது........... Icon_minitime

Back to top Go down
 
தடுமாறும் தமிழினம்!.........படித்ததில் பிடித்தது...........
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது..
» படித்ததில் ….பிடித்தது .
» படித்ததில் பிடித்தது - 9
» படித்ததில் பிடித்தது

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: