BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமொழிகளின் செல்வாக்கு! Button10

 

 மொழிகளின் செல்வாக்கு!

Go down 
2 posters
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மொழிகளின் செல்வாக்கு! Empty
PostSubject: மொழிகளின் செல்வாக்கு!   மொழிகளின் செல்வாக்கு! Icon_minitimeSat Jul 24, 2010 6:53 pm

உலகெங்கிலும் உள்ள மொழிகளுள் செல்வாக்கானவை எவை?

இந்தக் கேள்விக்கான விடையை இணைய தளங்களில் தேடிய பொழுது பல வியப்பான தகவல்கள் கிடைத்தன. அதைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கட்டுரை.

சரி.. செல்வாக்கான மொழிகள் என்று எப்படி வரிசைப்படுத்துகிறார்கள்?

முதன்மை மொழியாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை

இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை

அலுவலக மொழியாக உள்ள நாடுகளின் மக்கள் தொகை

அந்த மொழியைப் பயன்படுத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தின் நிலை

வர்த்தகம், அறிவியல், வெளியுறவு போன்ற துறைகளில் மொழியின் பயன்பாடு

உலக அளவில் இலக்கியத்துறையில் அந்த மொழியின் நிலை

ஐ.நா. போன்ற அமைப்பில் அம்மொழியின் நிலை போன்றவற்றை அளவுகோலாகக் கொண்டு மொழிகளில் செல்வாக்கை கணக்கிடுகிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள பெரும்பாலான அளவுகோல்களில் ஆங்கிலம் முன்னிலையில் உள்ளதால் ஆங்கிலம் உலகின் செல்வாக்கான மொழியாகிறது.

உலகெங்கிலும் பயன்பாட்டிலுள்ள மொழிகளுள் 10 செல்வாக்கான மொழிகள் என்ற பட்டியல் கீழே வருமாறு:
1. ஆங்கிலம்
2. பிரெஞ்சு
3. ஸ்பேனிஷ்
4. ரஷ்ய மொழி
5. அரபி
6. சீன மொழி
7. ஜெருமன்
8. ஜப்பானிய மொழி
9. போர்த்துகீசிய மொழி
10. இந்தி.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பேனிஷ், ஜெருமன், போர்த்துகீஷ் போன்ற ஐரோப்பிய மொழிகள், ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றன. அரபி மொழி மத்திய கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், ரஷ்ய மொழி முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளன.

ஜப்பானிய மொழியை இந்தியை விடவும் குறைவானவர்களே பேசினாலும், அது இந்தியை விட செல்வாக்கான மொழியாக உள்ளதைக் காணலம். அதற்குக் காரணம் வர்த்தகம், அறிவியல், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் பயன்படுத்துவதே காரணம். மேலும் இந்த மொழியைப் பயன்படுத்தும் ஜப்பானின் பொருளாதார மேன்மையும் மொழியின் செல்வாக்கிற்குக் காரணம் எனலாம். இதனாலேயே ஒரே ஒரு நாட்டில் பயன்பட்டாலும் நம் கல்லூரிகளிலும் ஜப்பானிய மொழி கற்பிக்கப்படுவதைக் காணலாம்.

ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளை சில வருடங்கள் வரை பயன்படுத்தாமல் இருந்த சீனர்களும், மேற்கத்திய தொழில்துறை வரவுகளாலும், அறிவியல் தொடர்புகளாலும் ஆங்கிலத்தை படிக்கவும் பேசவும் ஆரம்பித்துள்ளனர்.

கிரேக்க நாட்டில், ஒரு கொரிய வர்த்தக நிபுனர் பிரேசிலைச் சேர்த்தவருடன் பேச வேண்டுமென்றால் ஆங்கிலத்தையே பயன்படுத்தும் நிலை வந்துள்ளது. கிரேக்க நாட்டிலோ, கொரியாவிலோ, பிரேசிலிலோ ஆங்கிலம் அலுவல் மொழி கிடையாது. ஆங்கிலத்திற்குக் கிரேக்க மொழி அளவிற்கு வரலாற்றுச் சிறப்போ இலக்கியச் சிறப்போ கிடையாது. ஆனாலும் ஆங்கிலத்தின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இவை யாவும் எதைச் சுட்டுகின்றன?

செல்வாக்கான மொழிகள் மேலும் செல்வாக்கடையும் என்பதையும், ஒரு மொழி செல்வாக்கான நிலையை அடைய வேண்டுமென்றால் இலக்கியச் சிறப்பு மட்டுமல்லாமல் பெரும்பாலான துறைகளிலும் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுட்டுகின்றன.

இதை அப்படியே நம் நாட்டில் பயன்பாட்டிலுள்ள மொழிகளைப் பார்த்தால் ஆங்கிலமும், இந்தியும் மிகவும் செல்வாக்கான மொழிகள் எனலாம். பெரும்பாலான மாநிலங்களில் பேச்சு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இவ்விரு மொழிகளும் இருப்பது நாம் அறிந்ததே!

2007ல் நடந்த எட்டாவது உலக இந்தி மாநாட்டின் முக்கிய குறிக்கோள்களில் இந்தியை சர்வதேச மொழியாகவும், ஐ.நா.வின் அலுவல் மொழியாகவும் அறிவித்தல், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களிலும் இந்தித்துறையைத் துவங்குதல், வெளிநாடு வாழ் இந்தியர்களில் பிரதான மொழியாக இந்தியைப் பயன்படுத்துதல், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியைப் பயன்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

இந்திய மொழியொன்று ஐ.நா.சபையில் பயன்படுத்தப்படுவது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதம் கொள்ளும் நிகழ்வே. அதே சமயம், அவரவர் தாய்மொழிக்கு உரிய அங்கிகாரம் கிடைக்காவிட்டால் நன்றாகவா இருக்கும்?

பாராளுமன்றத்தின் கேள்வி நேரத்தில், துறை சார்ந்த அமைச்சர்கள் இந்தி, ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் (தமிழில்) பதிலளிக்கக்கூடாது என்று கூறியது வருந்தத்தக்கது. 198 நாடுகளைச் சார்ந்தவர்கள் இருக்கும் அவையில் இந்தியில் பேச வேண்டுமென்று விரும்பும் பொழுது, தாய்நாட்டுப் பாராளுமன்றத்தில் தாய்மொழியில் பதிலளிக்கக்கூடாது என்பதை என்னவென்று சொல்ல?

தமிழ் போன்ற மொழிகள் செல்வாக்கை இழக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ் போன்ற மொழிகளைப் படிப்பதோடு நிற்காமல் அலுவல், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் வெகுவான பயன்படுத்தத் துவங்க வேண்டும். இதனை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் கடினமானதாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் இன்றியமையாததே...

அதுவே செல்வாக்கான மொழிகளுள் தமிழையும் சேர்க்க முடியும்!
Back to top Go down
Priyamudan




Posts : 227
Points : 490
Join date : 2010-03-14

மொழிகளின் செல்வாக்கு! Empty
PostSubject: Re: மொழிகளின் செல்வாக்கு!   மொழிகளின் செல்வாக்கு! Icon_minitimeSun Jul 25, 2010 7:37 am



நன்றி லக்சு.. உங்கள் பதிவுக்க்கு,

இந்த உலகில் மூத்த மொழி எம் மொழி செம்மொழி

விரைவில் முன் வரிசைக்கு வரும்

இந்திய பாரளுமன்றத்திலும் பதில் அளிக்கும்

ஏன் ஒரு நாள் இந்த இந்தியாவையே ஆழும்.

நாம் வ்நம்மிடையே உள்ள இன உனர்வை பின்பற்றும் போது

இவையாவும் நனவாகும்.

- பிரியமுடன்
Back to top Go down
 
மொழிகளின் செல்வாக்கு!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: