BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inEnglish Class 6 Button10

 

 English Class 6

Go down 
AuthorMessage
Tom Cruise




Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 32
Location : pondicherry

English Class 6 Empty
PostSubject: English Class 6   English Class 6 Icon_minitimeTue Jul 27, 2010 4:26 am

ஆங்கில பாடப் பயிற்சி 6 (Grammar Patterns)
நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். இன்று ஒரு பெயர்ச் சொல்லை "Noun" உதாரணமாக எடுத்து, அதை 32 வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்யப் போகின்றோம்.

இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
"பெயர்ச்சொல்" என்பது குறிப்பாக பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவை பல்வேறு வகைகள் உள்ளன.

பெயர்சொற்களின் வகைகள் (Types of Nouns)பார்க்கவும்.

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

மேலுள்ள வாக்கியத்தைப் பாருங்கள், அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயர். அதாவது "சர்மிலன்" என்பது ஒரு பெயர்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் பெயர் சொல்லை வைத்து, சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், இருந்திருப்பார், இருக்கலாம், இருந்திருக்கலாம், இருக்கவேண்டும், இருந்திருக்கவேண்டும் என்றெல்லாம் எத்தனையோ விதமாகத் தமிழில் பேசுகின்றோம் அல்லவா! அதேப் போன்றே ஆங்கிலத்திலும் ஒரு பெயர்ச்சொல்லை உதாரணமாக எடுத்து 32 விதமான வாக்கியங்களாக இந்த கிரமர் பெட்டனில் மாற்றப்படுகிறது.

பெயர்சொல்லுக்குப் பதிலாக சுட்டுப்பெயரைப் பயன்படுத்தியும் இந்த கிரமர் பெட்டனைப் பயிற்சி செய்யலாம்.

ஒருவரின் அல்லது ஒன்றின் பெயரைக் குறிப்பிடாமல் அவன், அவர், இவன், அவள், இவள், அது, இது என்பதெல்லாம் சுட்டுப்பெயர்களாகும். எனவே இந்த கிரமர் பெட்டர்னில் "சர்மிலன்" எனும் பெயர்சொல்லுக்குப் பதிலாக "அவர்" எனும் சுட்டுப்பெயரைப் பயன்படுத்தி பயிற்சி செய்வோம். (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி) நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யலாம்.
இது மிகவும் இலகுவான ஒரு பயிற்சி முறையாகும்.

Grammar Patterns 4...

Practice the following Grammar Patterns daily.

1. He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி. (மனேஜர்)

2. He can be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டும்.

15. He should be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே (இருக்க) வேண்டும்.

16. He ought to be a Manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.

18. He needn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a Manager.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a Manager.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகக் கூடாது.

24. He shouldn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது.

28. He should have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

29. He ought to have been a Manager.
அவருக்கு எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

32. He being a Manager, he knows the work.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில் அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:
மேலே நாம் பயிற்சி செய்தது போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக மாற்றி எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She is a domestic helper.
அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண்.

Karunanithi is a Chief Minister.
கருணாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஒரு தலமை நிறைவேற்று அதிகாரி ஹொங்கொங்கின்.

குறிப்பு:

உதாரணம் "is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து, மற்றைய வாக்கியங்களையும் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும் இடங்களை நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.
Back to top Go down
 
English Class 6
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» English Class 14
» English Class 24
» English Class 8
» English Class 25
» English class 9

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: