BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 Health Tips

View previous topic View next topic Go down 
AuthorMessage
Tom Cruise



Posts : 149
Points : 448
Join date : 2010-06-30
Age : 24
Location : pondicherry

PostSubject: Health Tips   Tue Jul 27, 2010 5:12 am

ஒல்லியானவர்கள் குண்டாக:
* பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, உடல் எடை அதிகரிக்கும்.
* சாம்பல் பூசணிக்காயை, மூன்று மாதம், தொடர்ந்து உண்டு வர, இளைத்த உடல் பெருகும்.
* நாள்தோறும் இரவு சாப்பிட்டு உறங்க செல்வதற்கு முன், உலர்த்தி பொடி செய்த நெல் லிக்காய் தூளைப் பாலில் கலந்து குடித்து வந்தால், 40 நாட்களில், சதை பிடிப்பு கூடுதலாகும்.
* உடல் மெலிவாக இருப்பவர்கள், எள் ளால் தயாரிக்கப்படும் தின்பண்டங் களை சாப்பிட்டு வர, சதை பிடிக்கும்.
* தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.

தினமும் ஊரவச்ச கொண்டைக்கடலை 10 - 20 காலையில்ச ப்பிட்டால் ஒரெ மாதத்தில் gundaagi விடலாம்.

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும் திராட்சைப் பழம் உதவுகிறது.
உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சையை விட 8 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது.
`
தொடர்ந்து உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும்.
உடலின் எடை அதிகரிக்க - தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் எடை கூடும். உடல் பருமனாக – பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டு வரலாம். மெலிந்த உடல் பெருக்கமடைய – கடலை, நேந்திரம்,...





குழ‌ந்தை‌ப் பேறு‌க்கு மு‌க்‌கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ஆ‌ண்மை‌த் த‌ன்மை குறைபா‌ட்டி‌ற்காக, எ‌த்தனையோ மரு‌த்துவ‌ர்க‌ளையு‌ம், பொ‌ய் ‌பிர‌ச்சார‌ங்களை ந‌ம்‌பியு‌ம் கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள். இய‌ற்கை முறை‌யி‌ல், எ‌ந்த ‌பி‌ன் ‌விளைவுகளு‌ம் இ‌ன்‌றி ந‌ல்ல ‌சி‌கி‌ச்சை ந‌ம்‌மிடமே உ‌ள்ளது.

உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (உ‌ண்மையான தே‌ன்) ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.

பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து, ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள்.

தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3 பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு, சிறிது வெந்நீர் அருந்துங்கள்.

இதேபோல், இரவிலு‌ம் உணவு சாப்பிட்ட பின்னர் 12 பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு, வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள்.

இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை ச‌க்‌தி பெருகி‌ விடும்.













ஓஷோ வழிமுறை




நாம் அனைவரும் மிகவும் அதிகமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படக் காரணங்கள் நம்முள்ளே தோன்றும் எண்ணங்களும், அதன் விளைவாக ஏற்படும் முரண்பாடுகளே.

நம் மனதிற்கு அமைதியளிப்பதன் மூலமாகவே மன அழுத்தத்தைப் போக்க முடியும். ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது அமைதியைக் கடைபிடித்தல் நன்று.

நம்முள்ளே தோன்றும் எண்ணங்களை நிறுத்த முடியாது. அவ்வாறு தோன்றும் எண்ணங்களுடன் போரிடுவதை விடுத்து, மூ‎ன்றாம் நிலையில் இருந்து ஏற்படும் எண்ணங்களைக் கவனித்தல் வேண்டும். இதற்கு ஓஷோ அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

பற்றற்ற நிலை

எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஒரு நாளில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களுள் எழும் எண்ணங்களில் பங்குபெறாமல், இருவர் பேசும் உரையாடலைக் கேட்பது போல இருங்கள். உங்களுள் ஏற்படும் எண்ணங்களை தவிர்க்காமல், எதிர்க்காமல் உங்கள் எண்ணங்கள் வெளிப்பட முழு சுதந்திரம் அளியுங்கள்.

மனோவேகம்

பல காலங்களாக உங்கள் உள்ளத்தில் சேர்ந்துள்ள அனைத்து விதமான எண்ணங்களும் இதன் மூலமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்ற உங்கள் மனதிற்கு நீங்கள் சுதந்திரம் அளித்திருக்க மாட்டீர்கள். இது நம் எல்லோரிடமும் காணப்படுகின்ற இயல்பான ஒரு குணம். அவ்வாறான சுதந்திரத்தை உங்கள் எண்ணங்களுக்கு அளிக்கும் போது, அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து அவை வெளிப்படும்.

அமைதியாக உட்கார்ந்து அவைகளைக் கவனியுங்கள். அவ்வாறு வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.

எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் தனித்திருக்கும் போது உங்களுள் ஏற்படும் எண்ணங்களை உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிப் பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் மேல் உங்களுக்கிருக்கும் பயம் மற்றும் அவநம்பிக்கை நீங்கும். மேலும் எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளப் பழகுவீர்கள். எண்ணங்களை நடுநிலையிலிருந்து உணர முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம்.









அமைதி என்பதற்குப் பல பொருள்கள் தமிழில் உள்ளன எனினும் இக் கட்டுரையில் இது போர், பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தபட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். பன்னாட்டு மட்டத்தில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். குடிசார் ஒழுங்கின்மை இல்லாதநிலை எனவும் இதனை வரையறுப்பது உண்டு. தனிப்பட்டவர்கள் சார்பிலும் அமைதி என்னும் சொல் பயன்படுகிறது. இது, வன்முறைசாராத வாழ்வு என்னும் கருத்துருவுடன் தொடர்புள்ளது. இங்கே பிற மனிதருடனான தொடர்புகளும் மதிப்பு, நீதி, நல்லெண்ணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றன. இதே புரிதலின் அடிப்படையில், ஒருவர் தனது சொந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைதி பெறுதல் என்ற ஒரு நிலையும் உண்டு. இது மன அமைதி அல்லது நிம்மதி என்பதோடு தொடர்புபட்டது. பல வழிகளிலும், அமைதி என்பதன் அடிப்படையான பொருளில், முரண்பாடுகளின் மூலங்களாகப் பாதுகாப்பின்மை, [சமூகநீதியின்மை]], பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பன சுட்டிக்காட்டப்படுகின்றன. அமைதி என்பது முரண்பாடுகளின் முடிவைக் குறிக்கும் ஒரு இலட்சிய நிலை எனலாம்.

மகாத்மா காந்தியின் கூற்றுப்படி, ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.


உண்மையான அன்பு
இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.

அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?

என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.

எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.

இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.

ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?

உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.

இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?
Back to top Go down
View user profile
 
Health Tips
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: