BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inசெட்டிநாட்டு மட்டன் பிரியாணி Button10

 

 செட்டிநாட்டு மட்டன் பிரியாணி

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

செட்டிநாட்டு மட்டன் பிரியாணி Empty
PostSubject: செட்டிநாட்டு மட்டன் பிரியாணி   செட்டிநாட்டு மட்டன் பிரியாணி Icon_minitimeTue Mar 16, 2010 2:07 pm

தேவையான பொருட்கள்

சீரக சம்பா அரிசி - 3 கப்,
மட்டன் - 1/2 கி,
இஞ்சி - 50 கிராம்,
பூண்டு - 25 பல்,
பெரிய வெங்காயம் - 4,
சின்ன வெங்காயம் - 15,
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 4,
கிராம்பு - 4,
பட்டை - 4 துண்டு,
ஜாதிக்காய் - பாதி,
ஏலக்காய் - 4,
மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1 மூடி,
முந்திரி - 10,
தயிர் - 1/2 கப்,
எலுமிச்சம்பழம் - 1 மூடி,
புதினா - 1 கட்டு,
மல்லி - 1 கட்டு,
நெய் - 1/2 கப்,
எண்ணெய் - 1/2 கப்.
தாளிக்கத்தேவையானவை

கிராம்பு - 3,
பட்டை - 3 சிறிய துண்டு,
ஏலக்காய் - 3,
பிரிஞ்சி இலை - 1,
சோம்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை

மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாகமிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்தபிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால்எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரிசேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள்போட்டு வதக்கவும்.
5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.
Back to top Go down
 
செட்டிநாட்டு மட்டன் பிரியாணி
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சுவையான மட்டன் பிரியாணி
» மட்டன் கட்லெட்
» இறால் பிரியாணி
» மீன் கட்லெட்
» ஓட்ஸ் சூபி பிரியாணி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: