BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகோல்டன் சிக்கின் Button10

 

 கோல்டன் சிக்கின்

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

கோல்டன் சிக்கின் Empty
PostSubject: கோல்டன் சிக்கின்   கோல்டன் சிக்கின் Icon_minitimeWed Mar 17, 2010 8:39 am

கோல்டன் சிக்கின் மிக மிக சுவையானதும் சத்துகள் உடையதுமாகும்.

தேவையான பொருட்கள்

* கோழி - 1 கிலோ
* எலுமிச்சம்பழம்(தேசிக்காய்) - 2
* தக்காளி - 3
* பால் - 2 கப்
* எண்ணைய் - தேவையானளவு
* இஞ்சி - 1 துண்டு
* உள்ளி(பூண்டு) - 6 பல்
* முட்டை - 3
* கோன்பிளவர் - 2 மேசைக்கரண்டி
* பட்டர் - 2 மேசைக்கரண்டி
* மிளகாய்த்தூள் - தேவையானளவு
* மிளகுத்தூள் - தேவையானளவு
* உப்பு - தேவையானளவு

செய்முறை

* (1)கோழியை சுத்தம் செய்து விரும்பியளவில் வெட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* (2)இஞ்சி,உள்ளி(பூண்டு)அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
* (3)கோழி உள்ள பாத்திரத்தில் அரைத்த(இஞ்சி,உள்ளி (பூண்டு))விழுது,உப்பு,தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழசாறு) ஆகியவற்றை போடவும்.
* (4)அதன் பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்.
* (5)இதை 1 மணித்தியாலம் ஊறவைக்கவும்.
* (கோழித்துண்டுகள் பெரிய அளவில் இருத்தால் முள்ளுகரண்டியாள் கொஞ்சம் குற்றி விடவும்).
* (6)அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து வைக்கவும்.
* (7)மற்றைய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்து வைக்கவும்.
* (Coolஇன்னொருபாத்திரத்தில் தக்காளிப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
* (9)அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதை சூடாக்கவும் அது சூடானதும் அதில் பட்டரை போடவும்.
* (10 அது உருகிய பின்பு அதில் கோன்பிளவரை போடவும்.
* (11)அது லேசாக சிவக்கும் வரை வறுக்கவும்.
* (12) அதன் பின்பு அதனுடன் பாலை சேர்த்து தடிப்பாக வரும் வரை கிளரவும்.
* (13)அதன் பின்பு இக்கலவைய அடுப்பிலிருந்து இறக்கி இதை ஆறவிடவும்.
* (14)முட்டைமஞ்சல்கரு,உப்பு,மிளகுத்தூள்,மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அதை ஆறிய கலவையுடன் சேர்க்கவும்.
* (15)இவையாவற்றையும் கோழித்துண்டுகளுடன் சேர்த்து பிரட்டவும்.
* (16)இன்னொருபாத்திரத்தில் முட்டை வெள்ளைகருவை நன்றாக அடித்து அதில் கலவையாவும் பிரட்டிய கோழித்துண்டுகளை ஒவ்வொன்றாக நனைக்கவும்.
* (17) அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதை சூடாக்கவும் அது சூடானதும் அதில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
* (18)சூடான எண்ணையில் முட்டை வெள்ளைகரு பிரட்டிய கோழித்துண்டுகளை போட்டு பொரித் தெடுக்கவும்.
* (19)அதன் பின்பு இதை ஒரு கண்ணாடித்தட்டில் அடுக்கி வெட்டிய தக்காளித்துண்டுகளை அதன் மேலே பரப்பி அதை மேலே முட்டை வெள்ளை கருவை ஊற்றி அதை மைக்கிறோவே அவனில் வைத்து (10 - 15)நிமிடங்கள் பேக்பண்ணவும்.
* (20)அதன் பின்பு அதை எடுத்து கொத்தமல்லி இலை நறுக்கி போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
Back to top Go down
 
கோல்டன் சிக்கின்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: