tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*வித்யா பாலனுக்கு மட்டும் ஸ்பெஷலா?!*~* Sun Apr 10, 2011 2:08 am | |
| வித்யா பாலனுக்கு மட்டும் ஸ்பெஷலா?! அடிப்படையாகவே ரஜினி ரசிகை வித்யா பாலன். 'ராணா' படத்தில் நடிக்க அழைத்த போது எவ்வித கண்டிஷனும் இல்லாமல், அதே நேரத்தில் சம்பளம் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எஸ் சொன்னாராம். இந்த நல்ல குணம் ரஜினிக்கு மட்டுமல்ல, அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் பிடித்திருந்தது. அதனால் படத்தில் வரும் இவரது கேரக்டரை இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக வருவது போல மாற்றி அமைக்க முடிவு செய்திருக்கிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட வித்யா பாலனும் நிறைய சந்தோஷப்படுகிறார். ஆனால் இப்படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகைகளுக்கு இது எப்படி மன அமைதியை தரும்? முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்களாம் இப்பவே. ஓ.ஹோ! இதுதான் விழாக்கால போனஸ் போலும்....! | |
|