BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*எம்புட்டு கிளாமரானாலும் நடிப்பேன்! - பூனம் கவுர்*~*

Go down 
AuthorMessage
tamilkings88

avatar

Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 29
Location : Erode

PostSubject: *~*எம்புட்டு கிளாமரானாலும் நடிப்பேன்! - பூனம் கவுர்*~*   Sun Apr 10, 2011 2:14 am

எம்புட்டு கிளாமரானாலும் நடிப்பேன்! - பூனம் கவுர்





எண்கணிதப்படி தனது பெயரை நட்சத்திரா என மாற்றியிருக்கும் நடிகை பூனம் கவூர், 'பயணம்' படத்தை தொடர்ந்து நடிகர் கம் இயக்குநர் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் இரு நாயகியரில் ஒருவராக நடிக்கிறார். 'பயணம்' படத்தில் விமான பணிப்பெண்ணாக நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது. இன்று பலரும் என்னை பாராட்டுகிறார்கள் அந்த பாராட்டுக்கள் எல்லாம் டைரக்டர் ராதாமோகனையே சேரும், என்று கூறும் பூனம் கவூருக்கு கிராமத்துப் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாம். கிளாமராக நடிக்கச் சொன்னால் மறுக்க மாட்டேன். கதைக்கு தேவையென்றால் எவ்வளவு கிளாமராக வேண்டுமானாலும் நடிக்கத் தயார், என்று அதிரடியாக கிளாமர் சலுகை வழங்கும் பூனமுக்கு, அடுத்த படமான பிரபுதேவா படத்தில் பர்ஃபார்மன்ஸ் ரோலாம். படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் சமீரா ரெட்டிக்கு கிளாமர் ரோல். இரண்டாவது நாயகியாக நடிப்பது பற்றி பூனம் கூறுகையில், எனக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று ஆசைதான். இப்போதுதான் தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கேன். எடுத்த எடுப்பிலேயே விஜய் கூட எல்லாம் நடிக்கணும்னு ஆசைப்பட முடியாதில்லையா? ஒவ்வொரு அடியாகத்தான் எடுத்து வைக்கணும். முதலில் எனது நடிப்புத் திறமையை நிரூபிக்கிற மாதிரியான பாத்திரங்களில் நடிக்கணும். அதற்கு பிறகுதான் ஆடிப்பாடணும். அதேபோல இரண்டாவது நாயகியாக நடிக்க எந்த தயக்கமும் இல்லை. ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகும்போது அதில் எத்தனை ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அதில் நம்முடைய பாத்திரம் எந்தளவிற்கு வலிமையாக உள்ளது என்பதுதான் முக்கியம். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில், அந்தக் கதையின் போக்கை மாற்றுவதே என்னுடைய பாத்திரம்தான். வித்தியாசமான கதை என்பதால் ரசிகர்கள் மத்தியில் இன்னும் கூடுதல் மதிப்பு கிடைக்கும், என்றார். சந்தைக்கு வந்துட்டாலே கடை விரிச்சுத்தானே ஆகணும்!
Back to top Go down
View user profile
 
*~*எம்புட்டு கிளாமரானாலும் நடிப்பேன்! - பூனம் கவுர்*~*
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: