tamilkings88
Posts : 85 Points : 255 Join date : 2011-03-26 Age : 35 Location : Erode
| Subject: *~*ஷங்கருக்கே ஆப்பு வச்ச ஆண்டனி!*~* Sun Apr 10, 2011 2:22 am | |
| ஷங்கருக்கே ஆப்பு வச்ச ஆண்டனி! ஆஹா ஒஹோன்னு பாராட்டுவாரு என்று எதிர்பார்த்து ஆண்டனியிடம் போவோம். அவர் படத்தை பார்த்துட்டு, ஹ்ம்ம் என்று ஒரு வார்த்தையில்தான் வெளிப்படுத்துவார் தனது விமர்சனத்தை. பிடிச்சிருந்தால்தான் இப்படி. பிடிக்கலைன்னா அப்படியே எடுத்து கையில் கொடுத்து அனுப்பி விடுவார். இப்படி கோடம்பாக்கத்தில் பல இயக்குநர்கள் எடிட்டர் ஆண்டனி பற்றி ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். இது புகழ்ச்சியா, இகழ்ச்சியா என்பதே தெரியாமல் தலையை பிய்த்துக்கொள்வார்கள் கேட்பவர்கள். அப்படிதான் நாம் சொல்லப் போகிற இந்த செய்தியும்... கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை அவசரம் அவசரமாக அழைத்தாராம் டைரக்டர் ஷங்கர். 'நண்பன்' படப்பிடிப்பை டேராடூனில் முடித்துவிட்டு திரும்பினாரல்லவா? அந்த காட்சிகளை எடிட் செய்ய வேண்டும் என்பதால்தான் இந்த அழைப்பு. அந்த நேரத்தில் 'வானம்' எடிட்டிங்கில் இருந்தாராம் ஆண்டனி. திரும்ப திரும்ப ஷங்கர் அழைக்க, 'ஸாரி சார். என்னால இப்ப வர முடியாது. வேணும்னா வேற எடிட்டரை வச்சுக்கோங்க' என்று ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாராம் ஆண்டனி. அதிர்ந்து போயிருக்கிறது ஷங்கர் வட்டாரம்! செய்யும் தொழிலே தெய்வம்... தெய்வத்துக்கு முன்னாடி காஸ்ட்லி பக்தன்கூட கால் தூசிதான்! | |
|