BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in*~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~* Button10

 

 *~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~*

Go down 
AuthorMessage
tamilkings88

tamilkings88


Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 35
Location : Erode

*~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~* Empty
PostSubject: *~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~*   *~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~* Icon_minitimeSun Apr 10, 2011 2:25 am

ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!



*~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~* Sharukh%20khan


4வது ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடரின் தொடக்க விழாவில் 'நாக்கமூக்க', 'அப்படிப் போடு' உள்ளிட்ட பாடல்களுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் டான்ஸ் ஆடப் போகிறார். சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 6 மணிக்கு 4வது ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு கண்கவர் விருந்து படைக்கவுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் ஷாருக்கான். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஓனரான ஷாருக், தொடக்க விழாவில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகிறார். இந்திப் பாடல்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ்ப் பாடல்களுக்கும் ஷாருக் இடுப்பசைக்கவுள்ளார். அவருடன் சேர்ந்து ஆடப் போவது தென்னிந்திய நடிகை ஸ்ரேயா. இவர்களுக்காக சில தமிழ்ப் பாடல்களை தேர்வு செய்துள்ளனர். உலகத் தமிழர்கள் அத்தனை பேரையும் படு வேகமாக சென்றடைந்த படு பாப்புலரான 'நாக்கமூக்க' பாடலுக்கு ஷாருக்கான் டான்ஸ் ஆடவுள்ளார். அதேபோல விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்றான 'அப்படிப் போடு போடு' பாடலுக்கும் ஷாருக் நடனமாடவுள்ளார். இது போக சில இந்திப் பாடல்களுக்கும் நடனமாடுகிறார் ஷாருக்கான். ஷாருக்கானுக்கான நடன வடிவமைப்பை கணேஷ் ஹெக்டே என்ற டான்ஸ் மாஸ்டர் கவனித்துள்ளார். தொடக்க விழாவை, சினியுக் நிறுவனத்துடன் இணைந்து விஸ்கிராப்ட் மேற்கொள்ளவுள்ளது. ஷாருக்கான் மைதானத்திற்குள் ராணுவ டாங்கில் அழைத்து வரப்படவுள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது. அப்போ! ஸ்டேடியமே அதிரப் போகுதுனு சொல்லுங்க......
Back to top Go down
 
*~*ஐபிஎல் தொடக்க விழாவில் இடுப்பசைக்கும் ஷாருக்!*~*
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகள் மாற்றத்துக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: