BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 *~*'மார்கண்டேயன்'னாக அறிமுகமாகும் ஃபெப்ஸி விஜயன் மகன்!*~*

View previous topic View next topic Go down 
AuthorMessage
tamilkings88



Posts : 85
Points : 255
Join date : 2011-03-26
Age : 27
Location : Erode

PostSubject: *~*'மார்கண்டேயன்'னாக அறிமுகமாகும் ஃபெப்ஸி விஜயன் மகன்!*~*   Sun Apr 10, 2011 2:43 am

'மார்கண்டேயன்'னாக அறிமுகமாகும் ஃபெப்ஸி விஜயன் மகன்!






தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை இயக்குநராக பணியாற்றியிருக்கும் ஃபெப்ஸி விஜயன், அனைத்து ஹீரோக்களுக்கும் பிடித்த பேவரைட் ஃபைட் மாஸ்டர். இதுவரை ஃபைட் மாஸ்டராக பார்த்த ஃபெப்ஸி விஜயனை இனி இயக்குநராகவும் பார்க்கப்போகிறார்கள் தமிழ் ரசிகர்கள். தமிழியில் இவர் இயக்கும் முதல் படம் 'மார்கண்டேயன்' என்றாலும், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். வேற்று மொழியில் இயக்குநராக அறிமுகமானாலும், தாய்மொழியில் இயக்குநராக வேண்டும் என்ற விஜயனின் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. 'மார்கண்டேயன்' படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் ஃபெப்ஸி விஜயன், தனது மகன் சபரீஷை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்காக தாய்லாந்தில் ஒருவருடம் தங்கி அங்கு பிரபலமான வீர விளையாட்டான தாய் பாக்சிங்கை கற்றுகொண்ட சபரீஷின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியும், இதற்கு முன் வந்த ஆக்ஷன் படங்களுக்கு சவாலாக அமையும் விதத்தில் வந்திருக்கிறதாம். ஒரு காட்சியில் பைட் பண்ணும்போது சபரீஷுக்கு தீப்புண் பட்டு உடம்புல ஒரு பகுதியே வெந்து போச்சு. என் மகனா இருந்தாலும் அவருக்கு சல்யூட் அடிக்கிறேன். என்று கூறிய ஃபெப்ஸி விஜயன், இப்படத்திற்காக இதுவரை தமிழ் சினிமாவில் இடம்பெறாத லொக்கேஷன்களை தேடி பிடித்திருக்கிறார். இதில் ஹீரோயின்களாக பிங்கியும், நிவேதிதாவும் நடிக்கின்றனர். அதில் பிங்கி பாங்காங்கைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்க விளம்பர படங்கள் உள்ளிட்டவைகளில் நடித்திருக்கும் பிரபலமான மாடல். இவர்களுடன் சந்தானம், ஸ்ரீஹரி, எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுந்தர் சி.பாபு இசையமைத்திருக்கும் இப்படத்தின் கதை, திரைகக்தை, சண்டைப்பயிற்சி அமைத்து இயக்கி தயாரித்திருக்கிறார் ஃபெப்ஸி விஜயன். தமிழர்களுக்குத்தான் எந்த மூஞ்சியையும் பார்க்கும் சகிப்புத்தன்மை ஜாஸ்தினு நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறாரே இந்த குஸ்தி!
Back to top Go down
View user profile
 
*~*'மார்கண்டேயன்'னாக அறிமுகமாகும் ஃபெப்ஸி விஜயன் மகன்!*~*
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Cinema Special-
Jump to: