BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inயாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  Button10

 

 யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  Empty
PostSubject: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...    யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  Icon_minitimeMon Apr 11, 2011 7:18 am

யாருக்கும் மெஜாரிட்டி இல்லை... ஜூ வி பகீர்... திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...



அரசியல் தட்ப வெட்பம், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி சீரான நிலையில் இல்லை. ஆளும் கட்சிக்கான எதிர்ப்போ... எதிர்க் கட்சிக்கான ஆதரவோ... தொகுதிக்குத் தொகுதி, மாவட்டத்துக்கு மாவட்டம் மாறியபடியே இருந்தது. அதாவது 1996 சட்டமன்றத் தேர்தலிலோ, 2004 நாடாளுமன்றத் தேர்தலின்போதோ இருந்த ஒரே சீரான அலை இம்முறை இல்லை... இது இரண்டாவது!



யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  A19z




வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பணம் மிக மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. பணம் கொடுத்தால்தான் ஜெயிக்கலாம் என்று பெரும்பாலான வேட்பாளர்கள் நினைப்பதும், பணம் கொடுத்தால் கொடுத்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று பெரும்பாலான வாக்காளர்கள் நினைப்பதுமான மனோபாவம் அனைத்துத் தொகுதியிலும் வெளிப்படையான விஷயமாக இருக்கிறது. மக்கள் மனசை பணம் படைத்தவர் மாற்றலாம் என்ற விதி... மூன்றாவது சிக்கல்!


கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் (ஏப்ரல் 6, 7) இந்தத் தேர்தல் நிலவரங்களை அறிய நமது நிருபர் படை முயன்றது. மகுடம் யாருக்கு என்பது மே 13-ம் தேதிதான் தெளிவாகத் தெரியும். ஆனாலும் மகுடத்தை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் யார் முன்னே போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஜூ.வி-யின் இந்தத் தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல் உங்களுக்கு கலங்கரை விளக்கமாகக் காட்டும்.


யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  A20rv



நமக்குக் கிடைத்துள்ள எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனித்து ஆட்சியை அமைக்கத் தேவையான மந்திர எண் 118 கிடைக்காது என்பதே இன்றைய நிலவரம். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக்கொண்ட கட்சியாக அ.தி.மு.க. வரும் என்றே தெரிகிறது. அவர்கள் கூட்டணி ஆட்சியை அமைப்​பதற்கான சூழ்​நிலையே உருவாகும்​போல!

தேர்தலுக்கு இன்னமும் 6 நாட்கள் இருக்கும் சூழலில் 3 காரணங்கள் நாம் இதுவரை எடுத்த முன்னணி நிலவரத்தில், மாற்றங்கள் ஏற்படுத்தும் சக்தி படைத்தவை!

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளையும் மீறி, (அல்லது அவர்கள் தங்களைத் தாங்களே இறுக்கம் தளர்த்திக்கொண்டால்!) நினைத்த தொகுதி​களில் எண்ணிவைத்த பணத்தை விநியோகிக்க முடிந்தாலோ...

'மன சாட்சிப்படி வாக்களியுங்கள்’ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தது. தமிழகத்தில் பரவலாக 48 தொகுதிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி ம.தி.மு.க-வுக்கு இருப்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டது.

இந்தக் கட்சியினருக்கு கருணாநிதி என்றால் எட்டிக் காய்தான். ஆனால், சமீபத்திய கடுப்பு ஜெயலலிதா மீதே அதிகமாக இருக்கிறது. மன வேதனை ஜெயலலிதா மீதான கோபமாக மாறினாலோ....

கருணாநிதியும் ஜெயலலிதாவும் தங்களது கடைசி அஸ்திரமாகப் பயன்படுத்தப்​போகும் லாஸ்ட் புல்லட் தாக்குதலைப் பொறுத்தோ...
இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்​கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...
இது நமக்கான தேர்தல். யாரோ 234 பேரை எம்.எல்.ஏ.க்களாக ஆக்க... எந்தக் கட்சியையோ ஆட்சியில் அமர்த்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழா அல்ல இது.

இதில் நாம் பார்வையாளர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் பங்கேற்பாளர். நம்மைக் காக்க இருக்கும் ஜனநாயகத் தேவதையை நாமே உருவாக்கப்போகிறோம். படைப்புக் கடவுளுக்கு இருக்கும் வலிமை நமக்கும் உண்டு. அதை நிரூபிக்கும் நாள் ஏப்ரல் 13...
வாக்களிக்க மறவாதீர்கள்!




இளம் வாக்காளர்கள் யார் பக்கம்?

1. 2ஜி ஊழல் விவகாரம் மற்றவர்களைவிட இளைஞர்களிடமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், தி.மு.க. ஊழல் மலிந்த கட்சி என்ற எண்ணம் அழுத்தமாகப் பதிந்து இருக்கிறது. அதனால், இளம் வாக்காளர்கள் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

2. தே.மு.தி.க. மீது இளம் வாக்காளர்களுக்கு இருந்த ஈர்ப்பு கடந்த சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்பட்டது. இந்த முறை சிறு சலசலப்பு இருந்தாலும், இன்னமும் விஜயகாந்த் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள்.

3. வைகோ தேர்தலைப் புறக்கணித்து இருப்பது, இளைஞர்களிடம் ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், அவர்களது வாக்கு அ.தி.மு.க. அணிக்கு எதிராகவும், தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் மாறலாம்.

4. திரைப்படத் துறையில் கருணாநிதியின் குடும்ப ஆளுமையால் விஜய் பட்ட துயரமும், அஜீத் மிரட்டப்பட்ட விவகாரமும் அவர்களின் ரசிகர்களையும் பாதித்து இருப்பது தி.மு.க-வுக்குப் பாதகம்.

5. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

6. பெரும்பாலான இளைஞர்களுக்கு 'ஜெயலலிதாவின் பழைய ஆட்சியைப்பற்றித் தெரியவில்லை!

7. கருணாநிதிக்கு வயதாகிவிட்டது என்கிறார்கள்!

8. படித்து நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்களுக்கு, சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.

9. 'ஒரு சர்வாதிகாரி வரணும்... அவர் நல்லவரா இருக்கணும்’ என்று புதுத் தத்துவம் சொல்கிறார்கள்.

10. 'நிச்சயம் வாக்களிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார்கள்!


யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...  A21wu








Back to top Go down
 
யாருக்கும் மெஜாரிட்டி இல்லை...... ஜூ வி பகீர்... ...திமுக ,அதிமுக திகில்... பரபரப்பு சர்வே ரிப்போர்ட்...
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை.
» அமரர் கல்கியின் படைப்புகள் - பொன்னியின் செல்வன்
» திகில் காதல் கதை....
» ~~ கல்கியின் பொன்னியின் செல்வன் ~~ 6. பூங்குழலியின் திகில்
» இதயத்தில் மட்டும் நீ இல்லை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: