BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம் Button10

 

 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம்

Go down 
AuthorMessage
NaviNesh

NaviNesh


Posts : 249
Points : 572
Join date : 2010-05-24
Age : 35
Location : The Little World Of Cuties

2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம் Empty
PostSubject: 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம்   2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம் Icon_minitimeMon Jun 27, 2011 1:03 pm

திண்டுக்கல், ஜூன். 27-
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளமான நாடாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் பேசினார்.

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களை சார்ந்து வாழ்வதால் இந்தியாவின் உண்மையான வளர்ச்சி கிராமப்புற வளங்களை மையமாக கொண்டே இருக்கிறது. இதுவே வளமான இந்தியா 2020-ம் ஆண்டின் முக்கிய அம்சமாகும். கிராமப்புறங்களில் கல்வி தரத்தை மேம்படுத்திடவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் முதலில் அதற்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதனை புரா திட்டம் மூலம் செய்யலாம். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புறங்களிலேயே நகரங்களில் கிடைக்கும் எல்லா வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என்பதே.

4 விதமான இணைப்புகள் அவசியம். முதல் இணைப்பு கிராமங்கள் சாலைகள் மூலம் இணைப்பு போக்குவரத்து, 2-வது தகவல் தொடர்பு இணைப்பு, 3-வது அறிவு சார்ந்த இணைப்பு, இந்த 3 இணைப்புகளையும் ஒருங்கிணைத்தால் 4-வது பொருளாதார இணைப்பு உருவாகும். தமிழக அரசு `புரா' திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்து இருப்பது இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழம். இந்த முடிவு கிராமப்புறத்தை மட்டுமல்ல அனைத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளையும், தொழில்முனைவோர்களையும், விவசாயிகளையும், சுயஉதவிக்குழுக்களையும், இளைஞர்களையும் ஒருங்கிணைத்து ஒரு சமூக பொருளாதார மற்றும் அறிவியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும். 2020-க்குள் வளர்ந்த இந்தியாவை நாம் படைக்கவேண்டும் என்றால் நம் மாநிலம் ஒவ்வொன்றும் வளரவேண்டும்.

கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். சுத்தமான தண்ணீ­ர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்றவேண்டும். தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் வேறுபாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய நாடாக மாற்றவேண்டும். ஒரு பொறுப்பான வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக மாற்றவேண்டும்.

தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறது. அதில் 2-வது விவசாய புரட்சி திட்டம், வெண்மை புரட்சி திட்டம், உணவு பதப்படுத்தும் மதிப்பு கூட்டும் பூங்காக்கள், பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு சிறப்பு திட்டம், எத்தனால் பயோ எரிசக்தி உற்பத்திக்கு சிறப்பு கரும்பு வளர்ப்பு திட்டம், சோலார் மற்றும் மரபுசாரா மின்சார உற்பத்தி திட்டங்கள் சிறு, குறு மற்றும் பெருந்தொழில் மேம்பாடு, கல்வி, மருத்துவம், நதிநீர், அடிப்படை கட்டமைப்பு, புரா திட்டத்தின் மூலம் நீடித்த கிராமப்புற மேம்பாடு, பசுமை வீடுகள் திட்டம் போன்ற அனைத்து துறைகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து தமிழகத்தின் ஒட்டு மொத்த ஒருங்கிணைந்த நீடித்த தன்னிறைவு பெற்ற வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்புத்திட்டங்களை உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.



2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம் 2735e823
NaviNesh
Be cool N Be simple

Back to top Go down
 
2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளமான நாடாக மாற்ற வேண்டும்: அப்துல்கலாம்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» புதிய இந்தியாவை உருவாக்குங்கள்
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» விளைவை மாற்ற செயலை மாற்றுங்கள்!
» மனதில் உறுதி வேண்டும்
» யார் மாற வேண்டும்?

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: