BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகுரூப் டேட்டிங் Button10

 

 குரூப் டேட்டிங்

Go down 
AuthorMessage
kulandai




Posts : 8
Points : 24
Join date : 2011-06-09
Age : 42

குரூப் டேட்டிங் Empty
PostSubject: குரூப் டேட்டிங்   குரூப் டேட்டிங் Icon_minitimeSat Jul 23, 2011 5:59 am

நம்மூரில் ஜாதகம் பார்த்து, சாதி, சனம் பார்த்து பிள்ளை & பெண் கொடுப்பதும் வாங்குவதும் நடக்கும். பல காலமாக நம்மூர் திருமணங்கள் இப்படித்தான் நடக்கின்றன. மேற்கத்திய நாடுகளிலும் அப்படித்தான். ஆனால், ஒரேயொரு சின்ன வித்தியாசம். அங்கு ஜாதகமே டேட்டிங்தான்.
என்ன... தியரி, பிராக்டிக்கல் எல்லாம் இந்த டேட்டிங்கில் உண்டு. இந்த கலாசார சமாச்சாரம் இப்போது இந்தியாவிலும் கொடிகட்டிப் பறக்கிறது. டேட்டிங்கின் அடுத்த கட்டம், உண்மையில் டும்டும்தான். ஆனால், மேற்கத்திய நாடுகளில், டேட்டிங் முடிந்ததும் பரஸ்பரம் பிடித்திருந்தால்தான்
கல்யாணம், குடித்தனம். இதற்கு தாலி கட்டிக் கொள்ள வேண்டாம்; மோதிரம் மாற்ற வேண்டாம். இப்படியான உறவுக்குத்தான் ‘லிவ் இன் அரேஞ்மென்ட்’ என்று பெயர்.

ஆறு மாதங்களோ அல்லது சில ஆண்டுகளோ குடித்தனம் நடத்திய பின், போரடித்து விட்டாலோ, புதிதாக வேறொருவர் கிடைத்து விட்டாலோ பிரிந்து விடலாம். இந்த டேட்டிங், முழு அளவில் இந்தியாவில் நுழையா விட்டாலும், பாதி கிணறு தாண்டி விட்டது. அதாவது லிவ் இன் அரேஞ்ச்மென்ட் வரை வந்தாகி விட்டது. அதாவது, தாலிகட்டாத தம்பதியான இவர்களுக்குள் பிரச்னை வந்தால், ‘தாலி கட்டா மனைவிக்கு’ இந்தக் கணவன் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கோர்ட் சொல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டது.

குரூப் டேட்டிங்

ஒரு பெண் & ஒரு ஆண் சேர்ந்து நடத்துவதுதான் டேட்டிங். அப்படியிருக்க அதென்ன ‘குரூப் டேட்டிங்’ என்று தோன்றுகிறதா வேறொன்றுமில்லை. குரூப் குரூப்பாக நைட் கிளப், ஹோட்டல் என்று வெளியிடங்களில் சுற்றி எப்படி வேண்டுமானாலும் ஜாலியாக இருப்பது... நல்லவேளையாக இந்தியாவில் இந்தக் கன்றாவி இன்னும் தலைதூக்கவில்லை. குரூப் டேட்டிங் தொடர்பாக சில வெப்சைட்கள் உள்ளன. ஆனால், வெளிநாட்டு வெப்சைட்களில் செக்ஸ் அடிப்படையாக வைத்து நடத்தப்படுவது போல் இந்த இந்திய வெப்சைட்கள் நடத்தப்படவில்லை. இந்திய கலாசாரத்துக்கு தகுந்தபடி மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

கோம்பா... கோடோ... நன்பா...

இவை ஜப்பானிய வார்த்தைகள். கோம்பா என்பது ஆண், பெண்கள் சேர்ந்த ஒரு கிளப், கூட்டம், பிரிவு. கோடோ என்பது, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டவர்கள் ஜோடி சேர்ந்து ஹோட்டல், நைட் கிளப் என்று ஆட்டம் பாட்டத்தில் திளைப்பது; நன்பா என்பது, நைட் பார்ட்டியை தாண்டிய உள்ளார்ந்த நட்பு நீள்வது. அதன் தொடர்ச்சியாக புரிதல்... கூடல் என்று செக்ஸார்த்தமாக மூழ்கி விடுவது.

ஜப்பானில்தான் குரூப் டேட்டிங் முதன் முதலில் ஆரம்பித்தது. பின்னர் அமெரிக்கா, பிரிட்டன் என்று எல்லா நாடுகளுக்கும் பரவி, இதோ நம் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்று காத்திருக்கிறது. இங்குதான் ஆரம்பம்டேட்டிங் என்றால் ‘பிளைண்ட் டேட்’ என்றும் ஓர் அர்த்தம் உண்டு. அதாவது, காதலுக்கு கண்ணில்லை என்பார்களே... அதுமாதிரி. எனவே எச்சரிக்கையாக இருப்பதை பொறுத்தே ஆபத்திலிருந்து தப்பிப்பது இருக்கிறது. இப்போதைக்கு இந்தியாவில் ஆர்குட், பேஸ்புக்கில் ஆரம்பித்து ப்ளிக்கர், ஐபிலிம், ப்ளாக்கர் டாட் காம் போன்றவை எல்லாம் யூத்களுக்கு தீனி போடுகின்றன. எனவே இந்த சோஷியல் நெட்வோர்க் இடங்களில்தான் டேட்டிங்குக்கான விதைகளும் ஆரம்பமாகின்றன.

டேட்டிங், குரூப் டேட்டிங்... ஆகியவை கத்தி மாதிரி. கேக், பழங்களையும் வெட்டலாம். ஆட்களை குத்தவும் செய்யலாம். அது, பயன்படுத்துபவர்களை
பொருத்திருக்கிறது.
Back to top Go down
 
குரூப் டேட்டிங்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS-
Jump to: