BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in

Share | 
 

 நண்டு மசாலா

View previous topic View next topic Go down 
AuthorMessage
lakshana



Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 29
Location : india, tamil nadu

PostSubject: நண்டு மசாலா   Sat Dec 10, 2011 3:11 am



நண்டு - 1 கிலோ
தேங்காய் பால்- ஒரு கப்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மிளகுதூள்- அரை ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
பிரிஞ்சி-1


நண்டை மேல் ஓடு நீக்கி இரண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி மட்டும் வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி சேர்க்கவும். பட்டை முறிந்து வந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் வெங்காயம்,உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின்னர் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசம் (நெடி) போனதும் தக்காளியை பிசைந்து/நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்

எண்ணெய் பிரிந்து ஓரத்தில் வரும் ஸ்டேஜில் நண்டை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். மசாலா அனைத்திலும் ஒட்டியவுடன் தேங்காய் பாலை சேர்த்து வேகவிடவும்.

15 நிமிடங்கள் லோ ப்ளேமில் வேக வைத்த பின் மிளகுதூளை சேர்த்து 5 நிமிடம் ஹை ப்ளேமில் நீர் வற்ற கிளறி பின்னர் இறக்கவும்.

சுவையான நண்டு மசாலா தயார். கிரேவியின் அளவு அவரவர் விருப்பத்திற்கு தகுந்தது போல் மாற்றிக்கொள்ளலாம். அதிகமாக வற்ற விடாமல் குழம்பாகவும் உபயோகிக்கலாம். சாம்பார், ரசம் உடனும் வெறும் மசாலவை சாதத்தில் பினைந்தும் சாப்பிடலாம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், 1 வருடம் பூர்த்தியாகாத குழந்தைகளை தவிர மற்ற அனைவரும் சாப்பிட கூடியது. சளி வந்தா ஒடனே நண்ட வாங்கி சாப்பிடுங்க....... டாக்டர்க்கு கொடுக்க வேண்டிய பணம் மிச்சம் :-)
Back to top Go down
View user profile
 
நண்டு மசாலா
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: COOK RECIPE SPECIAL & HOME TIPS-
Jump to: