BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Button10

 

  துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா !

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 41

 துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Empty
PostSubject: துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா !    துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Icon_minitimeFri Jan 20, 2012 7:44 am

துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா !

ஒரு கிரிக்கொட் வீராங்கனையின் சுயசரிதை
அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியின் வைஸ் கேப்டன், துர்கா தாஸ். 42 வயதில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்வதுடன், அமெரிக்க பெண்கள் கிரிக்கெட் அணியை முதல்முறையாக உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்குள் நுழைய வைத்த துர்கா தாஸ், அக்மார்க் தமிழ்ப் பெண்!





கிரிக்கெட் வீராங்கனை மட்டும் அல்ல... தொழிலதிபர், கோல்ஃப் வீரர், சாஃப்ட்வேர் இன்ஜி னீயர் என துர்காவுக்குப் பன்முகங்கள் உண்டு. இந்த சாதனைப் பெண்ணின் வாழ்க்கைப் பயணம்... சோதனைகள், வேதனைகள், அதிரடித் திருப்பங்கள் என்று அனைத்தும் நிறைந்த ஒரு சாதனைக் காவியம்! நிதானமான பேச்சும், லயமான குரலும்... இடைமறிக்காமல் துர்காவின் பேச்சைக் கேட்க வைக்கிறது...

''என் வாழ்க்கையை 13, 13 வருடங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். சென்னைதான் சொந்த ஊர். எங்கள் குடும்பம் வசதியான குடும்பம். தாத்தா ரவி, பல பத்திரிகைகளில் அட்டைப் படம் வரைந்த பிரபல ஓவியர். அப்பா தாஸ், விளம்பர ஏஜென்சி வைத்திருந்தார். கோ-ஆப்டெக்ஸ் பட்டாம்பூச்சி லோகோவை டிசைன் செய்தது அப்பாதான்.சின்ன வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வமாக, ஜூனியர் கிரிக்கெட் வீராங்கனையாக விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய 13 வயதில், அப்பாவுக்கு பெரிய ஆக்ஸிடென்ட். தொழில் நஷ்டப்பட, சிகிச்சைக்காக பணம் எல்லாம் கரைய, மிகவும் நொடித்துப் போனோம்.
நிலைமையை சரிசெய்ய, 13 வயதிலேயே பெசன்ட் நகரில், துர்கா தாஸ் என்பதைக் குறிக்கும் வகையில் 'டிடி ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையை நம்பிக்கையோடும், துணிச்சலோடும் ஆரம்பித்தேன். கலாஷேத்ரா காலனி யில்தான் வீடு. காலையில் எழுந்ததும் சைக்கிளை எடுத்துக் கொண்டு, நுங்கம்பாக்கத்துக்கு கிரிக்கெட் கோச்சிங் செல்வேன். பிறகு பள்ளிக்கூடம் சென்றுவிட்டு, சாயங்காலம் கடைக்கு வந்துவிடுவேன். என் கடை, மெள்ள சிட்டியில் பிரபலமாக, குடும்பம் கஷ்டத்தில் இருந்து மீண்டது. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரி அணி, சென்னை பல்கலைக்கழக அணி, அகில இந்திய பல்கலைக்கழகங்கள் அணி என்று எல்லாவற்றுக்கும் அடுத்தடுத்து கேப்டன் பொறுப்பேற்றேன். கிரிக்கெட் என்னை உயரங் களுக்குக் கொண்டு சென்றது. தென் ஆப்ரிக்காவில் 1986-ம் வருடம் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாட தகுதி பெற்றும், அந்நாட்டின் இனவெறிக் கொள்கை காரணமாக போட்டியை இந்தியா புறக்கணிக்க, அந்த வாய்ப்பு ஈடேறவில்லை.

இதற்கிடையில், கல்லூரியில் படிக்கும்போதே நான் ஆரம்பித்த 'டிடி அட்வர்டைசிங் கம்பெனி’ மூலமாக, நிறைய விளம்பரங்கள் செய்துகொடுத்தேன். அந்த பிஸினஸ் வெற்றி முகத்தில் இருக்க, மீண்டும் சோதனை. அடுத்த 13-வது வருடம்... அதாவது என்னுடைய 26-வது வயதில் அப்பா இறந்துவிட்டார். கூடவே... எனக்கு பிரெய்ன் ட்யூமர் என்பதும் தெரியவர, இரட்டை இடி'' என்று இடைவெளி விட்டவர், தொடர்ந்தார்.''ஆபரேஷன் செய்யவில்லை என்றால், பார்வை பறிபோய்விடும் என்றார்கள். 'பறிபோகும்போது சிகிச்சைக்கு வருகிறேன்' என்று சொல்லிவிட்டேன். ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் ஒரு ஸ்கேன், கண் பரிசோதனை செய்து ஆயுளை உறுதிப்படுத்திக் கொண்டு, தைரியமாக என் வேலைகளைக் கவனித்தேன். ஆனால், நண்பர்கள், உறவினர்களின் பரிதாபப் பார்வையை சகிக்க தைரியமில்லாமல் அமெரிக்கா போய்விட்டேன்.அங்கே... வீட்டு வேலை செய்தேன். ஒரு மணி நேரம் பாத்திரம் கழுவி, வீட்டைச் சுத்தம் செய்தால்... 5 டாலர் சம்பளம் தருவார்கள். கஷ்டமாக இருந்தாலும், 'நீ பாவம்’ என்று என்னைச் சுற்றிய கண்களில் இருந்து தப்பித்த சுதந்திரம், அந்தக் கஷ்டங்களைச் சிறிதாக்கியது. ஒன்றரை வருடம் இப்படி வீட்டு வேலை, பெட்ரோல் பங்க் வேலை, வெயிட்டர் வேலை... என்று ஓட்டிவிட்டு, சென்னை திரும்பினேன். என் ஆரோக்கியத்தை அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

ஊட்டியில் நடந்த கோல்ஃப் போட்டியில், 'லஷ்மி மில்ஸ்’ அதிபர் ராஜகோபாலைச் சந்தித்தபோது, 'உன் விளம்பர கம்பெனியை நீ ஏன் மறுபடியும் ஆரம்பிக்கக் கூடாது?’ என்று உற்சாகப்படுத்தியவர், ஒரு விளம்பரம் செய்து தரச்சொல்லி, ஐம்பது லட்ச ரூபாய்க்கு செக் எழுதி கைகளில் தந்தார். என் செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பித்தது. 'புரூக் பாண்ட்’ விளம்பரத்தில் ஆரம்பித்து, நிறைய டாப் விளம்பரங்கள் செய்தேன்.
இந்த நேரத்தில் வாழ்க்கையில் இன்னொரு அற்புதமும் நடந்தது. வழக்கம்போல் ஸ்கேன் செய்தபோது, என் மூளையில் கட்டி இருந்த தடயமே இல்லை! டாக்டர்களாலேயே நம்பமுடியவில்லை. பிரெய்ன் ட்யூமருக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதபோதும் கட்டி காணாமல்போனது, கடவுள் என் வாழ்க்கையில் நடத்திய அற்புதம்; என் தன்னம்பிக்கைக்குத் தந்த பரிசு; மெடிட்டேஷனும், யோகாவும் செய்த பலன்.


மீண்டும் 1996-ம் வருடம் அமெரிக்கா சென்றேன். இம்முறை வீட்டுவேலை செய்யும் பெண்ணாக அல்ல... தொழிலதிபராக! கிடைத்த அனுபவங்கள், லாபங்களை முதலீடாக போட்டு, 'இனோவா சொல்யூஷன்ஸ்’, 'இன் சைட்’ என்று ஏழு கம்பெனிகளை சொந்தமாக ஆரம்பித்தேன். ஒவ்வொன்றும் நல்ல நிலைக்கு வளர்ந்தவுடன், அதை பெரிய கம்பெனிகளுக்கு விற்று, லாபம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்நிலையில்... மூன்றாவது 13 வந்தது. அதாவது... 39 வயதில் திரும்பவும் அடி. கூட இருந்த நண்பர்களே ஏமாற்ற, தொழிலில் ஏகப்பட்ட நஷ்டம். அதையெல்லாம் ஈஸியாக சமாளித்து புதிதாக கம்பெனி துவங்க முடிவெடுத்தேன்.


இந்தச் சூழலில்தான், 'அமெரிக்காவில் பெண்கள் கிரிக்கெட் அணி ஆரம்பிக்கப் போறாங்க. நீ ஏன் அந்த டீம்ல விளையாடக் கூடாது..?’ என்று தோழி ஒருத்தி கேட்டாள். வாழ்க்கை சுழற்றிய வேகத்தில், நான் ஒரு கிரிக்கெட்டர் என்பதையே வெகுநாள் கழித்து உணர்ந்த நாள் அது. ஆனால், என் உடம்பு அதிக எடையில் இருந்ததுடன், பிராக்டீஸே இல்லாமல் இருந்ததால் தயங்கினேன். முயன்று பார்ப்போமே என்று கிரவுண்டில் இறங்கினேன். என் ஆட்டத்தைப் பார்த்து, அமெரிக்க அணிக்கு வைஸ் கேப்டனாக்கி அங்கீகரித்தார்கள். டீமில் இருந்த பெண்களுக்கு என் வயதில் பாதிதான். நல்ல புரிதலை உருவாக்கி, டீம் ஸ்பிரிட்டுடன் விளையாடினோம். கனடாவை 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோற்கடித்து வெற்றி பெற்றபோது, அமெரிக்காவே என்னைக் கொண்டாடியது...''

- ஒரு 'பவர் பேக்டு’ குட்டி சுயசரிதை கேட்டதுபோல் இருந்தது, துர்கா தாஸ் முடித்தபோது!

பெண் என்கிற சக்தி நினைத்தால், சாதிக்க முடியாத அற்புதங்கள் ஏதுமில்லை என்பதற்கான இன்னொரு கண்கண்ட உதாரணமாகவே தெரிந்தார்... துர்கா தாஸ்.

 துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Blog-post_8946 துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Blog-post_8946 துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Blog-post_8946[img][/img] துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா ! Valli_1000[url=PASU]PASU[/url]
Back to top Go down
 
துரத்தி வரும் விதி.... விரட்டி அடிக்கும் துர்கா !
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உறவு வரும், பிரிவு வரும்..........
» வெற்றிக்கு முன் வரும் தடைகள்!
» 80/20 விதி
» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு
» தானம் செய்வதால் வரும் பலன்கள்.

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: