BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGalleryCalendarFAQSearchMemberlistUsergroupsRegisterLog in“வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்  Button10

Share
 

 “வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator


Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 37

“வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்  Empty
PostSubject: “வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்    “வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்  Icon_minitimeSat Feb 18, 2012 5:23 am

இன்ஜினியரிங்" - இந்த ஒரு வார்த்தை தமிழ் நாட்டுல இருக்க பாதி
பேரோட தூக்கத்த கெடுத்திருச்சு ... இன்ஜினியரிங் படுச்சா மாசத்துக்கு
50000 , ஒரு லட்சம்னு சம்பளம் வாங்குலாம்னு நெனச்சு பெத்தவங்க
இன்ஜினியரிங் சேர்த்து விடறாங்க . சிலர் அவ்ளோவ் சம்பளம் வாங்கவும்
செய்றாங்க ஆனா அப்படி வாங்குறவங்க இன்ஜினியரிங் படுச்சவங்கள்ள 10%
பேரு மட்டும்தான் .. மீதி இருகவங்கள பாதி பேரு கெடச்ச வேலைக்கு 6000
இல்ல 7000துக்கு வேலைக்கு போய்டுறாங்க.., ஆனா சிலபேரு நடுச்சா
ஹீரோதான்க்ர மாதிரி நமக்கு நல்ல வேலை கிடைக்கும்னு நம்பிகிட்டு
வாழ்கையவே தொளசிட்றாங்க .. இப்ப நா இன்ஜினியரிங் முடுச்சு ஒரு
வருருஷமாச்சு வீட்ல இவ்ளோவ்நாளா மறைமுகமா சொன்னவங்க இப்ப தண்டசோருனு
நேராவே சொல்லி திட்ட ஆரம்பிச்சுடாங்க . அம்பதூர்ல ராக்கி தியேடெற்கு
பின்னாடி ஒரு பார்க் இருக்கு அந்த பார்கோட காம்பௌன்ட் செவத்துல
ஒக்காந்துதான் தினமும் சாயந்திரம் நாட்டு நடப்பையும், மத்தவங்க
காதலையும், இண்டர்வியுல நடந்த காமெடிகளையும் , பஜ்ஜி சாப்டு கிட்டே
ரோட்ல போற வர பொண்ணுங்கள பாத்து கிட்டே பேசிக்கிட்டு இருப்போம் ...
அந்த பஜ்ஜி வாங்குறதுக்கு தினமும் வீட்ல இருந்து 10 ருபாய்
வாங்குறதுக்கு வீட்ல தினமும் பெரிய சண்டையே போட வேண்டியிருக்கும் ..
நாங்க 7 பேரு அங்க தினமும் தவறாம அட்டெண்டன்ஸ் போடுவோம் .. ஆனா
கொஞ்ச கொஞ்சமா ஒவ்வொருத்தனுக்கும் வேலை கெடச்சு போக ஆரம்பிச்சானுங்க
.. ஒவ்வொருத்தனும் வேலை கெடச்சா அவன் மத்தவங்களுக்கு ராக்கி
தியேடெர்ல ஒரு படம் அப்பறம் நைட்டு பிரியாணின்னு ஒரு பெரிய திரீட்டே
வைக்கணும் .. ஒவ்வொருத்தனும் வேலை கிடசிருச்சுனு சொல்லும்போதும்
என்னதான் அவனுக்காக சந்தோஷ பட்டாலும் மனசுல ஒரு ஓரத்துல சின்ன
பயமும் நாம இன்னும் வேலைக்கு போகலேன்னு கவலையும் வரும் ..

இப்ப கடைசியா நானும் என்னோட இன்னொரு நண்பனும் மட்டும்
சாயந்திரம் பார்க்கு வருவோம் .. என்னோட எதிர் காலத்த நெனச்சு எனக்கு
ரொம்ப பயம் வந்துச்சு , ஆனா அத வெளிய காட்டிக்காம எப்படியாவது இந்த
மாசத்துக்குள்ள வேலைக்கு போகணும்னு முடிவு செஞ்சு எவ்ளோவ் சின்ன
வேலையா இருந்தாலும் பரவா இல்லைன்னு எல்லா கம்பெனி இண்டெர்வீவ்க்கும்
போனேன் ஆனா ஒன்னு ஓவர் qualifiednu சொன்னாங்க இல்ல காலேஜ்
முடுச்சு ஒரு வருஷமா என்ன பண்ணிங்கன்னு கேட்பாங்க .. சொந்த காரங்க ,
பக்கத்துக்கு வீட்டுகாரனுங்கயாரு வீட்டுக்கு வந்தாலும் அவங்க என்ன
பார்த்து கேட்குற முதல் வார்த்தை என்ன பண்றனுதான் அந்த வார்த்தை
ஒவ்வொரு வாட்டி கேட்கும்போதும் எனக்கே என் மேல கோவம் வரும், எங்க
வீட்ல சும்மா இருப்பாங்களா, அவங்களும் என்ன திட்டிதீர்பாங்க .. வேலை
கிடைக்கலன்னு தெரிஞ்சா உடனே மத்தவங்க உன்னோட resume என்னோட மெயில்கு
ஃபார்வார்டு பண்ணுனு சொல்லுவாங்க, அப்படி அவங்க சொல்லும்போது இவங்க
மூலமா ஏதாவது ஒரு வேலை கிடைசிடும்னு ஒரு சின்ன சந்தோஷம் வரும்
ஆனா அதுக்கப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த பதிளும் வராது ,
அவங்களுக்கு போன் பண்ணி என்னாச்சுனு கேட்கறதுக்கு என்னோட தன்மானமும்
ஒத்துழைக்காது அப்ப நா அனுபவிக்கிற வலி ரொம்ப பெருசு .. அன்னகி
பார்க்கு வந்ததும் என்னோட நண்பன் சொன்னத கேட்ட உடனே எனக்கு என்னோட
மூணாவது செமெஸ்டெர்ல 4 சப்ஜெக்ட்ல அர்ரிஏர் விழுந்தப்ப ஏற்பட்ட
அதிர்ச்சிய விட பெரிய அதிர்ச்சியா இருந்துருச்சு அவனுக்கும் கடைசியா
வேலை கிடைச்சிருச்சுனு சொன்னான் .. அன்னகி நைட்டு பெட்ல படுத்தேன்
நைட் மூளுக்க தூக்கம் வரவே இல்ல .. மேல fanaiye பாத்து கிட்டு
இருந்தேன் கன்னத்துல ஏதோ அறிகிற மாதிரி இருந்தது தொட்டு பார்த்தப்ப
என் கண்ணுல இருந்து தண்ணி வந்திருந்தது .......

அப்பறம் ஒரு நாள் நா வண்டலூர் ஜூ பக்கதுல இருந்த zentech
கம்பெனில இன்டர்வியூ அட்டென்ட் பண்ண போனேன் ., எனக்கு முன்னாடி
வெள்ளையா ஃபுல் ஷேவ் பண்ணி எண்ணவச்சு முடிய படிய வாரி நெத்தில
குங்குமம் வச்சு டென்ஸோனோட ஒருத்தன் உட்காந்திருந்தான் அவனுக்கு
பக்கதுல ரெட் கலர் சுடிதார்ல வெள்ளையா ஒரு பொண்ணும் உட்காந்திருந்தா
கொஞ்ச நேரத்துல கூட்டம் அதிகமாகிடுச்சு , இனிமேல் எனக்கு இங்க வேலை
கிடைக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன் .. இன்டர்வியூ முடுஞ்சு வெளிய
வந்த அந்த தயிர் சாதம் ரொம்ப டென்ஸோன்ளா ஏதோ திட்டிகிட்டு போனான்
.. அதுகப்புரம் அந்த பொண்ணும் வெளிய வந்து ரிசல்ட் எப்பனு கூட
கேட்காம வேகமா வெளிய போய்டா .. என் பெயர கூப்ட உடனே உள்ள போனேன் ..
நறைய இன்டர்வியூ அட்டென்ட் பண்ணதால இன்டர்வியூ பயமெல்லாம் போய்டுச்சு
அவங்களும் எனக்கு தெரிஞ்ச கேள்வியா கேட்டாங்க இது வரைக்கும் நா
இவ்ளோவ் நல்லா பதில் சொன்னதே இல்ல .. எப்படியும் இங்க வேலை கிடைக்க
அதிக சான்ஸே இருக்குனு நெனச்சுகிட்டு வெளிய வந்து அங்க இருந்தவர்ட
ரிசல்ட் எப்ப தெரயும்னு கேட்டேன் இன்னிக்கு 4 மணிக்கு போன் பண்ணி
கேளுங்கன்னு ஆஃபிஸ் போனே no. தந்தாங்க .. நானும் வாங்கிட்டு வெளிய
வந்தேன் மணி மதியம் 2மணி பக்கதுல இருந்த ஹோட்டெல சாப்டுட்டு அங்க
இருந்த 70A பஸ்ல முன்னாடி ஏறுனே அங்க லேடீஸ் சீட்ல ஒரு பொண்ணு
புளு சுடிதார்ல ஹெட் செட்ட மாட்டி இருந்தா , நா ஏற்ன உடனே என்ன
பார்த்தா நானும் அவள பாத்துட்டு கடைசி ரௌக்கு முன்னாடி இருந்த சீட்ல
உட்காந்தேன் எனக்கு பின்னாடி ஒரு காதல் ஜோடி சத்தமா பேசிட்டு
இருந்தாங்க நா வந்து உட்காந்தபுரம் சத்தமே இல்லாம பேசிகிட்டே
இருந்தாங்க .. முன்னாடி உட்காந்திருந்த அந்த பொண்ணு திரும்பி பாத்தா
நானும் அவள பாத்தேன் . நா பாக்குறத பார்த்த உடனே வேற எங்கயோ
பாக்குற மாதிரி பாத்துட்டு திரும்பிட்டா ...

கொஞ்ச நேரத்துல பஸ் எடுத்தாங்க என் பக்கதுல ஒரு வயதானவர்
உட்கார்ந்தார் .. போக போக கூடம் அதிகமாகிகிடே போச்சு அவ இன்னொரு
வாடி திரும்புவாலானு அடிகடி அவள பாத்தேன் ஆனா அவ திரும்பவே இல்ல ..
பஸ்ல எங்க பாத்தாலும் காதல் ஜோடின்களோட பேரா கல்வெட்டு மாதிரி
எழுதி இருந்துச்சு .. கொஞ்ச நேரத்துல என் பக்கதுல இருந்தவரு
உலகத்தையே மறந்து தூங்க ஆரம்பிச்சாரு தூங்கி என்னோட தோள்மேல
விழுந்தாரு .. அது என்னமோ தெரில என்னதான் வீட்ல a.c போட்டு
படுத்தாலும் வராத தூக்கம் பஸ்ல போகும் போது அவ்ளோவ் அருமையா தூக்கம்
வரும் .. மத்ய நேரம் வெயில் வேற மூஞ்சில அடுசுச்சு .. அவர தோள்மேல
இருந்து தள்ளி விட்டேன் இன்னொருவாட்டி மேல விழுந்தா திட்டீரனும்னு
நெனச்சேன் . ஹெட் செட்ல பாட்டு கேட்டுகிட்டே முன்னாடி இருந்த சீட்ல
கை வச்சு இளைய ராஜா பாட்ட போட்டு கண்ணா மூடி கேட்டுகிட்டே வந்தேன்
… மனுஷன் என்னமா பாட்டு போடிருகாயான் என்று மனதில் தோன்றியது
..............................

அவ என்ன திரும்பி பாகுராலானு அடிகடி எந்திருச்சு பாத்தேன் ஆனா
அவ பாக்கவே இல்ல . மணி 4 ஆனதும் பஸ்ல இருந்தே அந்த கம்பனிக்கு போன்
பண்ணி காலைல நடந்த interview ரிசல்ட் கேட்டேன் .. என்னோட பேர
கேட்டவங்க ஒரு நிமிஷம் wait பண்ணுங்கனு சொன்னாங்க .. என்னதான் normala
இருக்க மாதிரி நடுசாலும் அந்த சில நொடிகள் மிகவும் அவஸ்தையான ஒன்று
.. கண்ணை மூடி பொறுமையா wait பண்ணுனேன் .. Hello congradulation sir
நீங்க செலக்ட் ஆகிடிங்கனு சொன்னாங்க .. அந்த செகண்ட் என்னோட சந்தோஷத
அடக்க முடியாம பல்ல கடுசிக்கிட்டு பெரு மூச்சு விட்டேன் .. இந்த
வார்த்தைய கேட்குறதுக்கு எவ்ளோவ் நாள் காத்து கிட்டு இருந்தோம்னு
தோனுச்சு .. Thank you எப்ப join பண்ணும்னு கேட்டேன் .. உங்க வீட்டுக்கு
letter வரும்னு சொன்னாங்க மறுபடியும் thanksnu சொல்லிடு வச்சுட்டேன்
....

போன் கட் பண்ணிட்டு வெளிய பாத்து சிரிச்சிகிட்டே வந்தேன் அந்த
வயதானவர் மறுபடியும் என் மேல் சாய்ந்தார் ஆனால் இப்போலோது எனக்கு
கோபம் வரவில்லை அது எனக்கு ஒரு தொந்தரவாகவே தெரியவில்லை .. என்னோட
அம்மாவுக்கு போன் பண்ணி சொல்லணும் என்னோட friendsuku போன் பண்ணி
சொல்லனும்னு தோனுச்சு ஆனால் சொல்லல அந்த சந்தோஷமான தருனத்த நா
மட்டும் ரசிச்சிட்டு இருந்தேன் .. உலகத்துலேயே நாதான் சந்தோஷமா
இருக்குற மாதிரி தோனுச்சு .. பஸ் அம்பத்தூர் ஸ்டாப்கு வந்துச்சு ..
பஸ்ல இருந்து கீழ இறங்கி எங்க வீட்டுக்கு நடந்து போனேன் அப்ப
திடீர்னு என்ன excuse me நு ஒரு பொண்ணு கூப்ட மாதிரி தோனுச்சு ..
திரும்பி பார்த்தப்ப அந்த பஸ்ல இருந்த பொண்ணு கைல என்னோட ஹெட்
செட்ட வச்சுகிட்டு என்ன பாத்து நடந்து வந்தா .. உங்க ஹெட்செட்
பாக்கெட் ல இருந்து கீழ விளுந்த்ருசுனு சொல்லி குடுத்தா .. Thanksnu
சொல்லிடு வாங்கிகிட்டேன் .. அவ சிரிச்சிட்டு முன்னாடி நடந்து போனா .
நானும் அவ பின்னாடியே நடந்து போனேன் அவ ஒரு pancard குடுக்குற கடை
குள்ள போனா அந்த கடைக்கு நா எங்க அப்பாவுக்கு pan card
வாங்குறதுக்கு ஒரு தடவ போய் இருக்கேன் .. ஸ்வீட் கடைல மைசூர் பாக்கு
வாங்கிட்டு சந்தோஷமா வீட்டுக்கு போனேன் .. அடுத்தநாள் அந்த கடை
பக்கமா போகும்போது அவ chairla உட்காந்திருந்தா .. என்ன பாத்து
சிரிச்சா நானும் சிரிச்சிட்டு போய்டேன் .. காலைல அவளோட அப்பா அந்த
கடைல இருந்தாரு . ஈவினிங் டைம் ல மட்டும் அவ இருப்பா ..அடுத்து எங்க
அம்மாவ pancard வாங்க சொல்லி அடம்பிடிச்சு அந்த கடைக்கு போனேன் அவ
என்ன பார்த்து ஒரு வித ஆச்சர்யத்துடன் என்ன என்று கேட்டால் .. Pan
card வாங்கனும்னு சொன்னேன் . . Form எடுத்து குடுத்தா .. அடுத்தநாள்
form fil up பண்ணிட்டு கொண்டு போய் கொடுத்தேன் ...

Pancard உங்க அம்மாவுக்கா நா உங்களுக்குனு நெனச்சேன் என்றால் ..
நா எதுவும் பேசாமல் சிரித்தேன் .. உட்காருங்கன்னு சொல்லி chaira என்
பக்கம் தள்ளுனா .. நானும் உட்காந்தேன் அவ பில் ready பண்ணிட்டு
இருந்தா .. பில் டைப் பண்ணிகிட்டே என்ன பன்றிங்கனு கேட்டா .. ஒரு
வருஷமா அந்த வார்த்தைய கேட்டாலே கடுப்பா இருக்கும் முதல் முறையா
அந்த கேள்விக்கு சந்தோஷமா zentechnu ஒரு கம்பெனில technical adminu
சொன்னேன் .. இன்னும் அந்த கம்பெனில இருந்து எனக்கு call lettere வரல
இருந்தாலும் தெயர்யமா சொல்லிட்டேன் .. அவளும் பில்லா குடுத்தா
100rubaai pay பண்ணிட்டு வந்தேன் .. Pan card எப்ப வரும்னு கேட்டேன்
அவ ஒரு வாரத்துல வந்துரும்னு சொல்லிட்டு அந்த கடையோட விசிடிங் கார்ட
குடுத்தா .. Dailyum அந்த கடைக்கு போன் பண்ணி அவ குரலை கேப்பேன் .
ஒரு வாரம் கலுச்சு அவ கடைக்கு போய் இன்னும் pan card வரலேன்னு
கேட்டேன் .. Wait பண்ணுங்க sir இன்னும் ரெண்டு மூணு நாள்ல வந்துரும்னு
சொன்னா .. Pan cardum வந்துச்சு .. ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவ
கடைக்கு போனேன் .. என்னை பார்த்த உடன் சிரித்து கொண்டே இன்னும் pan
card வரலயான்னு கேட்டா .. வந்துடுச்சு இப்ப என்னோட அண்ணனுக்கு pan
card வாங்கணும் அதான் என்றேன் .. அவள் சிரித்துகொண்டே formai
குடுத்தால் .. நானும் வாங்கி கொண்டு சிரித்து விட்டு சென்றேன் ..
அடுத்தநாள் சென்ற போது அவளுடைய அப்பாவும் அங்கு இருந்தார் .. என்னை
பார்த்து அவள் சிறியதாக சிரித்து விட்டு formai வாங்கிகொண்டு billai
type செய்து கொடுத்தால் .. அவள் எதுவும் பேசவில்லை .. 100 ருபாய்
குடுத்தபோது வாங்கிகொண்டு அவளுடைய அப்பாவுக்கு தெரியாமல் சின்னதாக
சிரித்தால் .. நானும் billa வாங்கி விட்டு சென்றேன் .. அடுத்த வாரம்
அந்த பக்கம் போகும் போது கடையில் அவள் மட்டும் இருப்பதை பார்த்தேன்
....

சிறிது நேரம் யோசித்து விட்டு கடைக்குள் சென்றேன் .. என்னை
பார்த்த அவள் இது வரை இல்லாமல் மிகவும் சந்தோஷமாக அவளுடைய பெரிய
கண்களில் என்ன என்று கேட்டால் .. எனக்கு pan card வாங்கணும் அதான்
என்றேன் .. அவள் சிரிப்பை அடக்க முடியாமல் என்னை பார்த்து சத்தமாக
சிரித்து விட்டால் .. எனக்கும் சிரிப்பு வந்து விட்டது .. மூன்று
formgalai எடுத்து தந்தாள் .. என்ன மூணு இருக்குனு கேட்டேன் ..
உங்களுக்கு தேவ படும்னு சொன்னால் .. தேவ படும்போது வந்து
வாங்கிக்கிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு formai குடுத்தேன் ..
அவளும் சிரித்துக்கொண்டே formai வாங்கி கொண்டால் .. அவளுக்கும் என்னை
பிடிதிரிக்கு என்று புரிந்தது .. Oru greeting cardai வாங்கி கொண்டு
அதை அந்த formil வைத்து குடுக்கலாம் என்று முடிவு செய்து அடுத்தநாள்
எடுத்து சென்றேன் .. என்னை பார்த்த உடன் வெட்கம் கலந்த சிரிப்புடன்
உள்ளே வர சொன்னால் .. Formai குடுத்தேன் .. அவள் billai ரெடி செய்து
தந்தாள் .. வாங்கிகொண்டு வெளியே வந்தேன் .. ஒரு வேல அவ cardai பாகலேனா
என்ன பண்றது என்று யோசித்து கொண்டே வந்தேன் .. அப்போலோது அந்த
billil இருந்து ஒரு பேப்பர் கீழே விழுந்தது .. அந்த பேப்பரில் i love
u nu எழுதி அவளோட phone no. கீழ எழுதி இருந்தது .. உடனே என்னுடைய
போனில் இருந்து அவளுக்கு போன் செய்தேன் .. போனை எடுத்தவள் hello
என்றால் . Formai பார்த்தியா என்றேன் இப்பதான் பார்த்தேன் என்றால் ...
யாரோ சத்தமாக horn அடித்து கொண்டே இருந்தார்கள் யாரோ என்னை முன்னாடி
தள்ளியதுபோல் உணர்ந்தேன் .. பொறம்போக்கு கண்ணுதெர்ல கம்மனாட்டி என்று
கேட்டது .. எழுந்து பார்த்தபோது பஸ்சில் எனக்கு பக்கத்தில்
உட்கார்ந்திருக்கும் அந்த பெரியவர் வேகமாக சென்ற அந்த ஆட்டோ டிரைவரை
பார்த்து திட்டிக்கொண்டு இருந்தார் பஸ்சில் இருந்த மற்றவர்களும்
திட்டினர் ... அவளும் அதே இடத்தில உட்காந்து பாட்டு கேட்டு கொண்டே
இருந்தால் ...

Cha கனவா கருமம் இந்த மாதிரி நல்ல விஷயம்லாம் நமக்கு கனுவுலதான்
நாடாகும் போல என்று நினைத்தேன் .மணி 4.15 ஆனது அந்த companyku
ஃபோன் செய்து என்னோட பேர சொல்லி ரிசல்ட் என்னனு கேட்டேன் .. Sorry
sir நீங்க செலக்ட் ஆகல .. All the best for ur futurenu சொல்லிட்டு போன்
கட் பண்ணிடாங்க .. பஸ்ல இருந்து கீழ குதிசிடலாம் போல இருந்தது ..
வெளியே பார்த்துக்கொண்டே வந்தேன் .. உலகத்துலேயே நாந்தான் அதிச்டமே
இல்லாதவனு தோனுச்சு .. இனி என்ன செய்ய போறேன் என்னோட வாழ்க்கையே
அவ்ளோவ்தானு தோனுச்சு .. என்னோட ஸ்டாப் வந்தது கீழ இறங்கி நடந்தேன்
எல்லா questionukum நல்லாதான் answer பண்ணேன் அப்பறமும் ஏன் reject
பண்ணாங்க .. எப்படியும் இந்த வேலை கிடைசிடும்னு நெனச்சேன் ..
இதுக்குமேல என்ன பன்றதுனே புரியாம நடந்து போனேன் .. என்னோட போன்
ringtone கேட்டுச்சு எடுத்து பாரதப ஏதோ landline no. மாதிரி
இருந்துச்சு .. எவனோ சொந்தகாரந்தன் போன் பண்ணி வேலை கிடைகலயானு
வேருபெதபோரானு நெனச்சுகிட்டே போன் attend பண்ணேன் .. Hello குமார் ah?
nu கேட்டாங்க .. ஆமா நீங்க யாரு என்றேன் .. ஸார் போன மாசம் giteco pvt
ltd la இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிங்கள உங்கள செலக்ட் பண்ணி
இருக்கோம் உங்க அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் வீட்டுக்கு அனுப்பி
இருக்கோம் என்றான் ... எனக்கு நட்பது கனவா நினைவானே தெரியல ..
நிஜம்தான் போனை கட் பண்ணி விட்டு சில நொடிகள் அந்த இடத்துலேயே
நின்னுகிட்டு இருந்தேன் .. giteco companylalam என்ன எப்படியும் செலக்ட்
பண்ண மாட்டான்கனே முடிவு பண்ணி அந்த result பதியே யோசிக்கலா ..
zentech companyla என்ன ஏன் reject பண்ணான்கனே எனக்கு புரியல இப்ப
இந்த companyla ஏன் select பண்ணான்கனும் புரியல ... ஒன்னு மட்டும்
புரிஞ்சுச்சு “வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும் ”

பொதுவா நம்ம வாழ்க்கைல நடக்குற மிகவும் சந்தோஷமான தருணங்கள் நாம
எதிர் பாக்காத இடத்துலயும் எதிர் பாக்காத நேரதுலயும்தான் வரும் ..
சந்தோஷமா சிரித்துகொண்டே நடக்க தொடங்குனேன் .. ஒரு வழியா இனிமேல்
என்ன பாத்து யாராச்சு என்ன பண்றனு கேட்டா இப்ப என்கிட்ட ஒரு பதில்
இருக்கு .. என்னோட அம்மாவுக்கு போன் பண்ணி சொன்னேன் அவங்களும்
ரொம்ப சந்தோஷ பட்டாங்க நம்மளோட சந்தோஷத மத்தவங்க கிட்ட சொல்லும்போது
அது ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்பதான் புருஞ்சுகிடேன் .. யாரோ
excuse me nu கூப்ட மாதிரி தோனுச்சு திரும்பி பாத்தப்ப பஸ்ல
உட்காந்திருந்த அதே பொண்ணு ... head set என்னோட பாக்கெட்ல இருக்கானு
தொட்டு பாத்தேன் என்கிட்டதான் இருந்துச்சு .. என்னடா கனவுல நடந்த
மாதிரியே இருக்குனு நெனச்சேன் .. ஆனால் வேற ஒருத்தன் கிட்ட பேசிட்டு
இருந்தா அப்பதான் அவ என்ன excuse me nu கூப்பிடலnu புருஞ்சுச்சு ...
நா என்னோட கனவுல நடந்தத நெனச்சேன் எனக்கே தெரியாமல் என்னுடையே
உதடோரத்தில் ஒரு சிறிய புன்னகை அந்த பெண்ணை மறுபடியும் ஒரு முறை
திரும்பி பார்த்துவிட்டு .. பேக்கரிஇல் மைசூர் பாகு வாங்கிகொண்டு
சந்தோஷமா வீட்டுக்கு
போனேன்..........................................................................................................................

- கிஷோர் குமார்

Back to top Go down
View user profile
 
“வாழ்க்கை தன்னோட வழிய தேடிக்கும்
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: