BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஇந்த வார கவிதை துளிகள்  Button10

 

 இந்த வார கவிதை துளிகள்

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

இந்த வார கவிதை துளிகள்  Empty
PostSubject: இந்த வார கவிதை துளிகள்    இந்த வார கவிதை துளிகள்  Icon_minitimeWed Jul 04, 2012 5:40 am

இந்த வார கவிதை துளிகள் உங்கள் பார்வைக்கு

சோபனா:

உன் அதிர்ஷ்டமாக நான் இருப்பேன் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அல்லது கொடுத்தால்


அன்புசெல்வி :


வாய்ப்புக்காக காத்திருப்போர் பட்டியலை
அதிர்ஷ்டம் திரும்பிக்கூடப் பார்பதில்லை!
வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வோருக்கு
அதிருஷ்டமும் அருகில் நிற்கும்…
வாய்ப்பை பயன்படுத்தி வாழ்கையில் முன்னேறு !!!
அதிர்ஷ்டம் இல்லையென அங்கலைக்காதே!
விடாமுயற்சி இருந்தாலே வெற்றி எனும்
அதிர்ஷ்டம் விரைவில் வந்துசேரும் !!!


Devdas:


கிடைத்த வாய்ப்புகளில்தோற்று போனதை
எண்ணி வருந்தாமல், கிடைக்க இருக்கும்
வாய்ப்பில் வெற்றியடைய உழைக்கவேண்டும்.
வெற்றியில் அகந்தையடையாமல் அடக்கத்தோடு செயலாற்ற
வேண்டும். செயலில் முனைப்பும்,
திறமையும், உழைப்பும், நம்பிக்கையும்
செலுத்தி வந்தால் வாய்ப்புகளை நாம் தேட வேண்டாம்
அனைத்து நொடிகளும் நமக்கு
வெற்றி வாய்ப்பை தேடி தரும்.



Pattasu:


வாய்ப்பு தரும் நிறுவங்களில்,
வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
வாய்ப்பு தேடும் பலருள் ஒருவராக விண்ணப்பிக்க
வாய்ப்பு தரும், வேலை வாய்ப்பு அலுவலகம் முன், என் நிலையை பதிய வாய்ப்பு தேடி நிற்கும்
வேலையில்லா பட்டதாரி நான்


Pattasu:


பல மணி நேரம் உழைத்து
முன்னேற்றத்தை எதிர் நோக்கி
அமர்ந்திருந்த நேரத்தில்,
ஒரு அழைப்பு முன்னால் அமர்ந்திருந்தவரின்
அலைபேசியை சிணுங்க செய்து
இரண்டே நிமிட கலந்துரையாடலுக்கு
பிறகு பறிபோனது என் வாய்ப்பு.



Pattasu:


வாய்ப்பு இருந்தால்.............
இணையதள நண்பர்களை
நேரில் பார்த்த கணம்
வார்த்தைகள் மௌனித்து
கண்ணீர் மாலைகள்
மட்டுமே பரிசாக பரிமாறப்படும்.



Pattasu:


சோர்வை அகற்றி,
தோல்வியை கற்றுக்கொள்ளும்
வாய்ப்பாக கருதி,
தொலைநோக்கு சிந்தனையுடன்
நம்பிக்கையுடன் கூடிய முயற்சி எடுத்தால்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு
அடியும் வாய்ப்பே
அனைத்தும் வெற்றிக்கு வழியே!

new_dust:


கற்றோருக்கும், கல்வி விட்டோருக்கும்
ஏங்கி தவிப்போருக்கும் , சுமைகளை தாங்கி தகிப்போருக்கும், இறைவன் கொடுக்கும் மதிப்பு , அவர்தம் வாழ்வில் கிடைக்கும் வாய்ப்பு !!


new_dust:

மனித உடற்குறை அறியாது ..,
வாழ்க்கை ஏற்ற தாழ்வு தெரியாது ..,
சமுதாய ஜாதி கொள்கை புரியாது .,
அனைத்து உள்ள கதவுகளையும் .,
உயிரின் வாசல்களையும் .,
ஒரு முறையேனும் தட்டும் .,
திருநிறை தான் வாய்ப்பு !!


அருணேஷ் :


எந்த காதல் ஜோடிக்கும் கிடைக்காத
வாய்ப்பு மணிக்கு ஒரு முறை முத்தமிடும்
அதிர்ஷ்டம் பெற்ற நாங்கள் தான் --கடிகார முட்கள்




Ok_Ok:


நீ பேச நானும்
நான் பேச நீயும்
காத்திருந்தோம்
வாய்பிற்காக...




Ok_Ok:

ஒரு வாய்ப்பு கொடு..
உன் குரல் கேட்பதற்காக அல்ல..
எங்கள் செவியை காக்க...அதனால்
தயவு செய்து ஒலிவாங்கியை விடு...




அதிர்ஷ்டம் அணியும் மோதிரத்தில் அல்ல
இனியும் வெல்வோம் என்ற
நம்பிக்கையில் ...ok ok



KrupaIyer:


Luck is a blink, not a chunck!

Luck is kick, Not a Pick!!

Luck is a buck, not like a druck!

You are Lucky if back is your luck!!


Jack:


வாய்ப்பு !!!
வாக்கியங்களின் தொகுப்பு -
கவிதைஎனும் வாய்ப்பு - நல்
கவிதைகளின் சிறப்பு
காதல் எனும் வாய்ப்பு !


காற்று மேகத்துடன் காதல்
மழை பெறும் வாய்ப்பு
கணவன் மனைவியின் காதல் -நல்ல
மழலையின் வாய்ப்பு !

: சிற்பியின் செதுக்கல் - ஒரு
சிலையின் வாய்ப்பு
சிந்தனையின் சொற்கள் - நல்
எண்ணங்கள் ஈடேற வாய்ப்பு !

கண்ணில் உறக்கம் - கண்
இமை தரும் வாய்ப்பு
கன்னத்தின் சிவப்பு - நல்
வெட்கத்தின் வாய்ப்பு !
காற்றின் கலந்துரையாடல் -
இசைக்கருவியின் வாய்ப்பு - கவிஞர்
கண்ணதாசன் வரிகள் - அந்த
இசைக்கொரு வாய்ப்பு !.

மூளையின் முயற்சி -
முன்னேற வாய்ப்பு - அதில்
நுணுக்கங்களின் தொகுப்பு -
கணினியின் வாய்ப்பு

ஆண் பெண்ணுக்கொரு வாய்ப்பு -
நல்ல பெண் ஆணுக்கொரு வாய்ப்பு
கணவன் மனைவிக்கொரு வாய்ப்பு - நல்
மனைவி கணவனுக்கு வாய்ப்பு

எனக்குநீ உனக்கு நான்
என்பதொரு அழைப்பு - அதுதான்
உன் திருமண வாய்ப்பு -
மறந்துவிடாதே - மனிதா
அனைத்துமந்த இறைவனின் படைப்பு ...


Back to top Go down
 
இந்த வார கவிதை துளிகள்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  இந்த வார கவிதை துளிகள்
» சிந்தனை துளிகள்
» அதிசய தகவல் துளிகள்
» இந்த மண் எங்களின் சொந்த மண்
» யார் இந்த தேவதை யார் இந்த தேவதை....

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: BTC ANNOUNCEMENT & WISHES-
Jump to: