BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inAbout Karunanithi Button10

 

 About Karunanithi

Go down 
2 posters
AuthorMessage
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

About Karunanithi Empty
PostSubject: About Karunanithi   About Karunanithi Icon_minitimeMon Mar 29, 2010 12:09 am

இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி


தா.பாண்டியன் என்னவோ… தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கை வாங்கி சொத்து குவித்ததாக மீடியாவில் காட்டி என்னவோ பெரிதாக சாதித்து விட்டதாக ….காட்டும் ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து..பட்டியல்..எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியின்
பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.
இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.
பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.
இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

மதுரை நாமகரணம் மாறுகிறது_-இனி அழகிரி மாவட்டம்
அண்ணன் அழகிரி வெற்றி பெற்றதால் இனி மதுரை என்ற நாமகரணம் மாற்றப்பட்டு அழகிரியார் மாவட்டம் என்று அழைக்க உள்ளதாக அழகிரி
இன்றைய மதுரையின் நாடாளுமன்ற வேட்பாளாராக திமுக சார்பில் கருணாநிதியின் செல்லப்பிள்ளை மு.க. அழகிரி நிறுத்தப்பட்டுள்ளார். மதுரை முரசொலி அலுவலகத்தை கவனித்துக் கொள்ள நீ தான் சரியான ஆள் என்று சொல்லி அழகிரியை, கருணாநிதி ரயிலேற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். இந்த சம்பவம் நடந்த ஆண்டு 1980. அழகிரியின் கையில் அப்போது இருந்த தொகை ரூ.81 ஆயிரம். அழகிரி வந்த உடனே ஆட்டம கண்ட மதுரையின் முரசொலி பதிப்பு சில மாதங்களிலேயே மூடுவிழா கண்டது. இனி சென்னைக்கு போவதும் கடினம். அங்கு ஏற்கனவே ஏராளமான வாரிசுகள் கலைஞரை சுற்றி கும்மியடிக்கும் போது, தானும் கூட்டத்தோடு கோயிந்தா போடுவது ஆகாது என்று நினைத்த அழகிரி, மதுரையிலேயே காலூன்ற முடிவு செய்கிறார்.
இதற்கடுத்து தனது சொத்து சேர்க்கும் படலத்தைதொடங்குகிறார். கருணாநிதி எப்போதெல்லாம் முதலைமச்சர் பதவியில் இருந்தாரோ…அப்பொழுதெல்லாம் மு.க.அழகிரி தென்மாவட்டங்களின் நிழல் முதலமைச்சராக இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறையினர், அதிகாரிகள் ஆகியோரை ஆட்டிப்படைத்து சொத்துக்களை மெல்ல குவிக்கிறார். சென்னையிலிருந்து தன்னந்தனியாக ரயிலேறிய அழகிரி, ஒரு கட்டத்தில் தமிழக தென்மாவட்டங்களின் அதிபதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
1980 ல், மதுரை திருநகர் 5 வது ஸ்டாப்பில் உள்ள குமாரசாமி என்ற வக்கீ்ல் வீட்டில், பக்தஜனசபையை சேர்ந்த தியாகராசன் என்பவர் அழகிரியை குடிஅமர்த்துகிறார். அழகிரிக்கு டி.எஸ்.பி சண்முகநாதன் என்ற போலீஸ் அதிகாரி துணையாக பாதுகாப்புக்கு இருக்கிறார். ஒரு ஆண்டு கழித்து சதுரிய நாராயணன் பிலிம்ஸ் வீட்டிற்கு பின்புறம் அழகிரி குடியேறுகிறார். பின்னர் 1987 ல் மதுரை டி.வி.எஸ் நகரின் அருகில் உள்ள அழகப்பன் நகரில் வந்து குடியேறுகிறார். இந்த பகுதி தான் தனது குடும்பத்துடன் வாசம் செய்ய ஏற்ற பகுதி என்று முடிவெடுக்கிறார். உடனே, சென்னையில் தனது பெயரில் தனது தந்தையார் கருணாநிதி வாங்கிப் போட்டிருந்த வீட்டை, நடிகர் சரண்ராஜிடம் 9 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டு மதுரை சத்யசாய் நகரில் 4 ஏ என்ற கதவு எண் உள்ள வீட்டை வாங்குகிறார். இந்த வீட்டை கருப்பசாமி என்பவர் மூலமாக மதுரை அரசரடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்கிறார்கள். இப்போது அழகிரி குடியிருக்கும் அந்த வீட்டின் அப்போதை விலை 4.5 லட்சம் ரூபாய். அந்த வீட்டின் தரைதளம் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதனை விலைக்கு வாங்கிய பின்னர் சுமார் 5 கோடி ரூபாய் செலவழித்து வீட்டை நவீன வசதிகளுடன் புதுப்பிக்கிறார். இருந்தாலும், வாங்கிய வீடு போதுமான புழக்கத்திற்கு வசதியாக இடம் இல்லாமல் இருக்கிறது. என்ன செய்வது என்று சிந்தித்த அழகிரி, அக்கம்பக்கத்தில் யாரையாவது வீட்டை காலி செய்ய வைத்தால் மட்டுமே தனது வீட்டை விஸ்தரிக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார். அப்போது கண்ணில்படுகிறது அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு அப்பாவி பிராமண பெண்ணின் வீடு. அதனை வாங்க நினைக்கிறார். பூர்வீக வீடான அதனை தர அந்த பிராமண பெண் மறுக்கிறார். பிறகென்ன..அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான் கதை தான். பாவம்.தலைதெறித்து வீட்டை காலி செய்கிறார் அந்தபிராமண பெண். அழகிரியின் வீடு விஸ்தாரமாகிறது. இதற்கடுத்து தனது வீட்டுக்கு அருகிலேயே செட்டில் விளையாட ஒரு இடம் வேண்டும் (1996 ம் ஆண்டு) என்று நினைக்கிறார். உடனே சத்யசாய் நகரில் ஒருவரிடம் இருந்த 12 செண்ட் நிலத்தை மிரட்டி ஒட வைத்து வாங்கி விடுகிறார். இந்த மூன்று சொத்துக்களையும் தனது மனைவி காந்தி அழகிரி பெயரில் வாங்கி சுகபோகமாக வாழ தொடங்குகிறார். இது மட்டுமா.. எதிர்காலத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் வந்தால், வீட்டுக்குள்ளேயே அனைத்து வசதிகளும் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது வீட்டின் பின்புறம் இருந்த 3 ஏக்கர் நிலத்தை, செண்ட் 3 ஆயிரம் என்ற விலையில் தனது மகள் கயல்விழி பெயரில் வாங்கி வைக்கிறார். இதுதவிர மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள சட்டக்கல்லூரி விடுதி அருகில் உள்ள 1 ஏக்கர் காலி இடத்தையும் அழகிரியின் 2 வது மகள அஞ்சுகத்தின் பெயரில் வாங்குகிறார். இது தவிர மதுரையை ஒட்டியுள்ள செழிப்பான தோப்பு பகுதிகள் அழகிரியின் கண்ணில் படுகின்றன. இதில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள விக்கிரமங்கலம் என்ற இடத்தில் 5 ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி அங்கு ஆடம்பர பங்களா, நீச்சல் குளம் கட்டி்யிருக்கிறார். இது மு.க.அழகிரியின் மாமனார் காராளன் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. இந்த இடம், அழகிரியின் மாமனார் காராளன் தன்னிடமிருந்த முந்திரி தோப்பை, திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி எம்.எல்.ஏ ஜோதிகண்ணனிடம் விற்றுவிட்டு, வி்க்கிரமங்கலத்தில் உள்ள இந்த தென்னந்தோப்பை வாங்குவதாக கணக்கு காட்டப்படுகிறது. இந்ததோப்பில் உள்ள தென்னை உள்பட மரங்களுக்கு மண் நிரப்புவதற்காக அரசு டிராக்டர்களும், அதிகாரிகளும் பயன்படுத்தப்படுகின்றனர். அழகிரி மகன் தயாநிதிக்கு மட்டும் சொத்து இல்லாமல் போகுமா? அழகர் கோயில் செல்லும வழியில் உள்ள கள்ளந்திரி என்ற இடத்தில், அழகிரியின் மகன் தயாநிதி பெயரில் ஒரு தென்னந்தோப்பும், பூவந்தி என்ற இடத்தில் தோடடமும், தோப்புகளும் வாங்கி போடப்பட்டுள்ளன. இது தவிர தென்மாவட்டங்களில் குறிப்பாக, திண்டுக்கல், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தான் அதிக அளவில் தோப்புகளும், பண்ணை வீடுகளும் இருக்கின்றன. கொடைக்கானலில் பல கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களாக்கள், கட்டப்பட்டுள்ளன. கலைஞர் ஐயா உளியின் ஓசை கதையை இங்கு உட்கார்ந்து சிந்தித்து தான் எழுதினார். கொடைக்கானல் திமுக பிரமுகர் மாயன் வீட்டுக்கு மேற்கில் எட்டு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, இந்த இடத்தை பாராமரிக்க சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்ய்பட்டிருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். அழகிரி இரண்டாவது மகள் அஞசுக செல்வி மற்றும் அவரது கணவர் விவேக் பெயரில் கோடிக்கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவும் போதாது என்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ள கடைகள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து அங்கு சிறுவர்களை சீரழிக்கும் வீடியோ கேம்ஸ் கடைகளை நடத்தி வருகிறார்.காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் தனது மனைவி காந்திக்கு பட்டுபுடவை விற்கும் கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார். இது தவிர பினாமிகள் பெயரில், ( மதுரை தங்கமயில் ஜுவல்லரிக்காரர்கள், அழகிரியின் வீட்டுக்கு காய்கறி வாங்கிவரும் பொட்டுசுரேஷ், தாய்மூகாம்பிகை திருமணமகால் நடத்தும் சேதுராமன், வீட்டுக்கு பணி செய்ய வந்து மர்மமான முறையில் இறந்து போன வழக்கில்குற்றவாளியான நாகேஷ்) உள்பட பினாமிகளின் பெயரில் பல ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இது தவிர அசையும் சொத்துக்களாக பல லட்சம் மதிப்புள்ள லேண்ட்ரோவர் கார் உள்பட ஏராளமான கார்கள் உள்ளன. வெறும் 81 ஆயிரத்துடன் மதுரைக்கு வந்த அழகிரியின் இன்றைய சொத்து மதிப்பை பார்த்து மதுரை மக்கள் மயங்கி விழாத குறை தான்.
இது வரை சும்மா வெட்டி செய்திகளாக எழுதி அழுதது போய்விட்டது.முதல் முதலாக பாண்டு மாதிரி செய்தி எழுதியச்சு
Back to top Go down
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

About Karunanithi Empty
PostSubject: Re: About Karunanithi   About Karunanithi Icon_minitimeTue Apr 06, 2010 5:00 pm

vasu nalla sonnige ana namma enna pannaumgaratha sollave ellaye neege Very Happy
Back to top Go down
 
About Karunanithi
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» உலக செம்மொழி மாநாடு பாடல்[மு.கருணாநிதி]-ஏ.ஆர்.ரகுமான்=Tamil Semmozhi Maanadu Song[M.Karunanithi]-AR Rahman

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: GENERAL, POLITICS,CINEMA & SPORTS :: Politics special-
Jump to: