BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inkavithaineram  Button10

 

 kavithaineram

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

kavithaineram  Empty
PostSubject: kavithaineram    kavithaineram  Icon_minitimeFri Nov 16, 2012 1:27 pm


கொலுசு பற்றிய நண்பர்களின் கவிதை


New dust :


இதய துடிப்பை விட என் காதில்..,
அதிகம் விழுந்த சத்தம்.,
உன் கொலுசின் சல் சல் சத்தம் !

பேர் சொல்லியும் திரும்பாதவன்,
என் ஊர் சொல்லியும் திருந்தாதவன்.,
சத்தமில்லாமல் சரண்டர் ஆனேன்.,
உன் கொலுசின் சத்தங்களில்..!


Karthis:


பூமிக்கே புல்லரிக்கும்
இவள் கொலுசொலி
கேட்டால்.[அடடா ஆச்சர்யகுறி.]


Macho:


உன் கொலுசு தான் என்னை குளிர வைக்கிறது
நீ நடந்து செல்லும் பொது சில் சில் என்று


Deepikakarthikeyan:


வெள்ளியில் கொலுசு தந்தையின் பரிசு நான் வரும் ஓசை கேட்க ...
தங்கத்தில் கொலுசு காதலனின் பரிசு
வரும் ஓசை அவர் காதுகளில்
மட்டுமே கேட்க



Awardcity:


காத்திருந்த காதலன்
கடற்கரை அலை ஓசை செவியை பிளக்க
என்னவளின் கால்
கொலுசின் ஓசை கேட்கிறது
கொஞ்சம் வழி விடுங்கள்
என்னவள் அவள் இல்லத்தில்
இருந்து வந்து கொண்டு
இருக்கிறாள் ...

Awardcity:


கொலுசு
செவி கேட்காதவருக்கு
பயன் படாத பொருள்
கொலுசு
ஆடவரை ஒரு நொடியில்
திரும்ப வைக்கும்
பொருள் கொலுசு
காதல் இல்லத்தின்
நுழைவு வாசல்
கொலுசு
உன் முதல் எழுத்தை
நிறுத்தி படித்தல் கொ
...லூசு
உன் ஒலியால் பலருக்கு


keerthana:


காலையில் அவள் போட்ட கோலத்தைவிட அழகாக இருந்தது ..அதை சுற்றி இருந்த அவளின் பாத சுவடுகள்
கோடை கால வெயிலில் உன் கொலுசு தன என்னை குளிர வைக்கிறது நீ நடந்து செல்லும் பொது சல் சல் என்று

mani_rs72:


ஒய்யார காலில் அட்டை போல ஒட்டிக்கொள்ளும் ஒரு செல்ல சிணுங்கள் பூனை போன்ற பதத்தை கவ்விக் கொண்ட இனிய
நாதம் பாவம் பல விடலை பையன்களின் தூக்கத்தை கெடுக்கும் எதிரி செதுக்கி எடுத்த சிற்பத்தின் கல்லில் ஒரு இனிய மதுர கீதம் நவீன மங்கைகள் மறந்து போன ஒரு ஆபரணம்

டிட்டோ :

மாட்டு மனி சத்தம் கேட்டா ஆத்தா என்ன எழுப்பிடுவா
காலை. கோலம் போட்ட வாசலில கொலுசு சத்தம் நான் கேட்க்க
அந்த சமைஞ்ச பொன்னு யாருனு பாக்க எம்மனசு துடிச்சுடுமே.

ஆத்தா வந்து சத்தம்போட மாமன்க்காரன் வந்துருக்கானு
என்கண்ணு மாமன விட்டுபுட்டு மாமன் பொன்ன தேடிடுமே.

நித்தம் நித்தம் அந்த சத்தம் எம்மனச கொன்னுபோட
என் மாமன் பொன்னு கொலுசு சத்தம் என் நெஞ்சுகுள்ள ஆட்டம் போட

அடியே கொலுசு போட்ட சிறுக்கி, கட்டி போடு எம்மனச உன்காலில் இறுக்கி !!


Mugil kutty:


பெற்று எடுத்தவர்கள் போட்டனர் என் கால்களில் கொலுசு ...காலம் முழுவதும் நான் பாதைமாறி போகாமல் இருக்க
ஓராயிரம் சத்தங்கள் கேட்ட பொழுதும் ஏதுமறியாமல் இருந்த நான் உன் கொலுசின் சதம் கேட்டு சங்கீதமாய்
உணர்ந்தேன்


anand100:

இசையினை உண்டாக்கும் எந்த ஒரு பொருளும் சொர்கத்தை அடைவது இல்லை என்னவளின் கொலுசை தவிர


Ramya:


உலகத்தையே சுற்றி பார்க்க உறுதுணையாக இருக்கும் கால்களுக்கு அழகினையும் மெருகினையும் தரும் ஆபரணம் அல்லவா கொலுசு கொலுசு சத்தம் கொலுசு சத்தம் கேட்டால் மனம் பரவசமாகும் ...காரணம் கொலுசு தானே என்னவளின் வரவை அறிவிக்கும் ஆகாசவாணி ....கொலுசு சத்தம் கேட்காவிட்டால் என் மனம் பித்தாகும்
கொலுசால் என்னவளின் பாதங்கள் அழகா இல்லை ...என்னவளின் பாதங்களால் கொலுசுக்கு அழகா ...இது எனக்கு புரியாத புதிர்
Back to top Go down
 
kavithaineram
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: