BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதிருட்டு மாங்காய் –(ஹேக்கிங்} Button10

 

 திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்}

Go down 
AuthorMessage
Fathima

Fathima


Posts : 999
Points : 1988
Join date : 2010-03-10
Age : 39
Location : srilanka

திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்} Empty
PostSubject: திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்}   திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்} Icon_minitimeSat Mar 27, 2010 1:34 pm

எனக்கும் ஹேக்கிங் என்கிற வார்த்தையை தவிர வேறு எதுவும் பெரிதாகத் தெரியாது எனக்கு அந்த மெசேஜ் வரும் வரை. கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென ஒரு மெசேஜ் என் மானிட்டரில் தெரிந்தது ‘Hi’ என்று. அதைத் தொடர்ந்து வரிசையாக மெசேஜ்கள் வெறும் Dialog Box ஆக ஓப்பனாகிக்கொண்டிருந்தது. ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அந்த மெசேஜிற்கு பதில் சொல்லாமல் அதை க்ளோஸ் செய்தால் சிஸ்டமே ஷட் டவுன் ஆனது. எதுவும் செய்யாமல் சிஸ்ட்த்தை அப்படியே போட்டுவிட்டு உட்கார்ந்திருந்தேன் சற்று நேரம் கழித்து எனது லேப்டாப்பை எடுத்து அதில் ஹேக்கிங் பற்றி தேடினேன். அப்படி படிக்கும்போது நமது கம்ப்யூட்டரில் இருக்கும் Ports பற்றி தெரியவந்தது. அதாவது நமது கம்ப்யூட்டரில் இருந்து ஒரு தகவலை அனுப்புவதோ பெறுவதோ இந்த போர்ட் மூலமாகத்தான் நடக்கும். Port என்பது ஒரு கதவு போன்று என்று கூறலாம் ஒரு சிஸ்ட்த்தில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும் அதில் இந்த போர்ட் இந்த விஷத்திற்கு என்று ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருக்கும். அதாவது மெயில் பயன்படுத்துவதற்கு இந்த போர்ட்கள் வெப்சைட்டிற்கு இந்த போர்ட்டுகள் என்று IANA(Internet Assigned Numbers Authority) என்னும் அமைப்பு allocate செய்திருக்கும். அந்த போர்ட்கள் போக மீதமுள்ள போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும். அப்படி ஒரு ஒரு போர்ட் வழியாகத்தான் அவன் என்னை ஹேக் பண்ணியிருந்தான். நான் நெட்டில் கிடைத்த தகவல்களை வைத்து அவன் எந்த போர்ட் வழியாக என்னை தொடர்பு கொள்கிறான் என்பதை ஸ்கேன் செய்து கண்டுபிடித்தேன். பின்னர் அந்த போர்ட்டை க்ளோஸ் செய்தேன். நான் அவ்வாறு க்ளோஸ் செய்த பின்புதான் அந்த மெசேஜ்கள் வருவது நின்றன.

இவன் எப்படி என் சிஸ்ட்த்தை கண்டுபிடிச்சு ஹேக் செய்தான் என்றால் மிக எளிது. ஏதாவது ஒரு மெயிலை எனக்கு அவன் அனுப்பி இருக்க வேண்டும் நான் அதை திறந்தாலோ அல்லது அந்த மெயிலில் இருந்த லிங்கை கிளிக் பண்ணியிருந்தாலோ என்னுடைய IP அட்ரஸ் பற்றிய தகவல் அவனுக்கு போய் சேர்ந்திருக்கும் அதன் பின் அவன் என்னுடைய சிஸ்டத்திற்கு ஒரு Hook போட்டிருக்க வேண்டும் அதாவது அவனுக்கு விசுவாசமாக வேலை செய்யக்கூடிய ஒரு சின்ன ப்ரோக்ராம். அந்த ப்ரோக்ராமை இயக்குவதன் மூலம் நான என் கம்ப்யூட்டரில் என்ன செய்கிறேன். என் கம்ப்யூட்டரில் நான் என்னன்ன தகவல்களை வைத்திருக்கிறேன் என அனைத்தையும் அவனால் தெரிந்து கொள்ள முடியும் தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவனால் அதை எடுக்கவும் முடியும்.

இதுவரை நான் கூறியதனைத்தும் மிகச்சிறிய அளவிலான ஹேக்கிங்தான். ஹேக்கிங்கில் வகைகள் உண்டு

• வொயிட் ஹேட்(White hat)
Ethical hacking என்றும் இதைச் சொல்வார்கள். இந்த வகை ஹேக்கர்களால் நன்மைதான் ஏற்படும். ஒரு கம்பெனி உருவாக்கிய செக்யூரிட்டி சிஸ்ட்த்தை இவர்கள் உடைத்துக்காட்டுவார்கள். அவ்வாறு செய்யும்போது அந்த சிஸ்டத்தில் இருக்கும் ஓட்டைகளை கவனித்து அந்த நிறுவனம் சரி செய்யும். இவர்கள் பெரிய பெரிய கம்பெனிகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இவர்களே தனியாகவும் கன்சல்டன்சி போன்றும் நடத்துவார்கள். (திருடனுக்கு மரியாதையும் சன்மானமும் கொடுக்கும் ஒரே உன்னதமான உலகம் வலைஉலகம் தான்)


• க்ரே ஹேட்(grey hat)
இவர்களுக்கு ஓரளவு எதிக்ஸ் இருக்கும். சில சமயம் இவர்கள் Legal hacking செய்வார்கள் சில சமயம் illegal hacking செய்வார்கள்.

• பிளாக் ஹேட்(black)
இவர்கள்தான் வில்லன்கள் அனுமதி இல்லாமல் அடுத்தவருடைய செக்யூரிட்டி சிஸ்ட்த்திற்குள் புகுந்து அதை சிதைத்துவிட்டு வருவது, மற்றவர்களுடைய அடையாளங்களை திருடுவது, தகவல்களை திருடுவது என அத்தனை வேலைகளையும் செய்பவர்கள். இவர்களை க்ராக்கர்(Cracker) என்று அழைப்பார்கள். இவர்கள்தான் கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பி விடுவதும். மற்ற நாடுகளின் மிலிட்டரி சிஸ்ட்த்திற்குள் புகுந்து ராணுவ ரகசியங்களை திருடுவது போன்ற வேலைகளையும் இவர்கள் செய்வார்கள்.


• ஸ்கிரிப்ட் கிட்டி(Script Kiddie)
இவர்கள் ஹேக்கிங்கில் நிபுணர்கள் கிடையாது. நெட்டில் கிடைக்கும் ஆட்டோமேட்டட் டூல்களை வைத்துக்கொண்டு சில்லறை சில்லறையாக ஹேக்கிங் செய்வது. இந்த வகையில்தான் நான் மேலே சொன்னவை வரும். இவர்கள் இதை ஒரு விளையாட்டாக பொழுதுபோக்காக செய்பவர்கள் இதனால் பெரிய அளவில் எந்த தீங்கும் ஏற்படாது.

நம் கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை இவர்களிடம் காவு கொடுக்காமல் எப்படி காப்பது என்றால் அதற்கு ஒரே வழி முடிந்தவரை நாம் விழிப்புடன் இருப்பதுதான் நமக்கு வரும் இ-மெயில்கள், சாட் அழைப்புகள் ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டும் சந்தேகப்படும்படியான லிங்க்களை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் தகவல்கள், க்ரெடிட் கார்டு தகவல்களை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். இப்படி இருப்பதால் முழுமையாக ஹேக்கிங்கை தவிர்த்துவிடமுடியுமா என்று கேட்டால் முடியாது. என்ன செய்ய திருட்டு மாங்காய்க்குத்தான் ருசி அதிகம்.

ஹேக்கிங்கான தமிழ் சொல் என்ன தோழர்களே?
இப்போதைக்கு “திருட்டு மாங்காய் அல்லது புறங்கைத் தேன்” என வைத்துக் கொள்வோமா?
Back to top Go down
 
திருட்டு மாங்காய் –(ஹேக்கிங்}
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» சிவகாமியின் சபதம்
» மாங்காய் சாதம்
» மாங்காய் இனிப்பு பச்சடி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: