BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை! Button10

 

 ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை! Empty
PostSubject: ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!   ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை! Icon_minitimeTue Apr 06, 2010 11:25 pm

ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கையடக்க கம்ப்யூட்டரான ஐபேட் நேற்று விற்பனைக்கு வந்தது. ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட்களை விற்று சாதனை படைத்துள்ளது ஆப்பிள்.

மேலும், இந்த கம்ப்யூட்டருக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதிலும் பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

ஒரு மில்லியன் ஐபேட் அப்ளிகேஷன் சாப்ட்வேர் மற்றும் 2,50,000 எலக்ட்ரானிக் புத்தகங்கள் தரவிறக்கம் செய்துள்ளனர் வாடிக்கையாளர்கள்.

ஜூன் மாதத்துக்குள் 8.5 லட்சம் ஐபேட்கள் விற்க வேண்டும் என்பது ஆப்பிள் நிறுவன இலக்கு. ஆனால் இந்த வேகத்தில் ஐபேட்கள் விற்பனை தொடர்ந்தால், விற்பனை அளவு எங்கோ போய்விடும் என்கிறார்கள் எலெக்ட்ரானிக் சந்தை வல்லுநர்கள்.

ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபாட் போன்றவை இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது ஐபேட் எனப்படும் கையடக்க கம்ப்யூட்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இது போன்ற கம்ப்யூட்டரை வடிவமைத்து தோல்வி கண்ட நிலையில், ஆப்பிள் நிறுவனம் பெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
ஒரே நாளில் 3 லட்சம் ஐபேட் விற்பனை!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~உன்னை பார்த்த நாளில்~~
» இந்த நாளில் தமிழன் விழ்ந்தான் என்று வரலாற்றில் எழுதப்படக்கூடாது..

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY :: Latest Technology For You-
Jump to: