BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inAbout Baby Habits Button10

 

 About Baby Habits

Go down 
AuthorMessage
vasulav

vasulav


Posts : 117
Points : 332
Join date : 2010-03-13
Age : 40
Location : Singapore

About Baby Habits Empty
PostSubject: About Baby Habits   About Baby Habits Icon_minitimeWed Apr 21, 2010 1:29 am

குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கையை
வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று
உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.
மூன்று வயது வரை இந்த பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய அவசியமில்லை. தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்தப் பழக்கம்
ஏற்பட்டு விடுகிறது. இதனால் கவலை அடைய வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட வயதில் இந்தப் பழக்கம் மாறிவிடும். நான்கு வயது வரை
இந்தப் பழக்கம் நீடித்தால் குழந்தை நல சிறப்பு மருத்துவரிடம் காட்டி சிகிச்சை பெறுவது நல்லது
பெற்றோரிடம் தேவையான அன்பு, பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவை கிடைக்காதபோது விரல் சூப்பும் பழக்கம் அதிகமாக இருக்கும். ஐந்து, ஆறு
வயதில் இந்த பழக்கம் இருந்தாலும் மன நெருக்கடி மற்றும் அதிக கோபம் வரும். கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி
வீசுவார்கள்.இவர்களிடம் அதிகமாக அன்பு செலுத்தி அரவணைத்தால் மட்டுமே விரல் சூப்பும் பழக்கம் மாறும். நான்கு வயது முதல் 14 வயது
வரை விரல் சூப்பும் குழந்தைளுக்கு உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
டி.வி. பார்க்கும்போது விரல் சூப்பும் பழக்கம் அதிகம் என்பதும் உண்மைதான். குழந்தைகளின் கவனம் முழுவதும் டி.வி.க்குள் போய்விடுவதால்.
தங்களை அறியாமலேயே அந்த பழக்கத்தைக் கையாளுகின்றனர். இதனால் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது தனியாக பார்க்க விடாமல்
பெற்றோர் துணையாக இருப்பது நல்லது. மேலும் குழந்தைகள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி மாற்றுவது?
விரல் சூப்பும் குழந்தையிடம் அந்த பழக்கத்தை மாற்றுவதற்காக பெரிய பிரச்சினைகளை செய்ய வேண்டாம். வயது வந்த குழந்தைகளை, விரல்
சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுமாறு கட்டாயப் படுத்துவதோ அல்லது அவர்களை அடிப்பதோ, உடலில் சூடு போடுவதோ கூடவே கூடாது.
4 வயதுக்கு மேல் அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவர்களை திருத்தலாம். அல்லது நிறைய அன்பு செலுத்தி அவர்களாகவே அந்த
பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு விரல்களுக்கு வேலை கொடுக்கும் விதமாக அவர்களை விளையாட வைக்கலாம்.
எதையாவது எழுதச் சொல்லலாம் அல்லது ஓவியம் வரைய வைக்கலாம். இப்படி கை விரல்களுக்கு வேலை கொடுத்தால் விரல் சூப்பும்
பழக்கத்தை தன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள் குழந்தைகள். அதேபோல், தூங்கும்போது அவர்கள் கையில் பொம்மையை
கொடுத்தால், அந்த பொம்மையை பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்தும்போது விரல் சூப்புவதை மறப்பார்கள்.


ஆமாம் உண்டு. இவற்றைச் சற்று விவரமாகப் பார்ப்போம்.
i)சிறுநீரகக் கல்லுக்கு ரீனல் கால்குலி (Renal Calculi) என்று பெயர். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகிறது. இதன் காரணம் என்ன என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ஹார்மோன்களின் சமச்சீர் இன்மை, சிறுநீரகத்தொற்று (Infections) சிறுநீரகத்தில் அதிக உப்பு, வைட்டமின் ஏ குறைவு, பாராதைராய்டு அதிகமாகச் சுரத்தல், பரம்பரை மரபணுக்கோளாறு இப்படிப் பல.
ii. இந்த சிறுநீரகக் கற்களில் யூரிக் அமிலம், கால்சியம் ஆக்ஸலேட் (Calcium Oxalate), கால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate) போன்றவையும் இன்னும் சில பொருட்களும் கலந்திருக்கின்றன.
iii. இது சிறுநீரகப்பகுதியில் மிகுந்த வலியை ஏற்படுத்தும். இது சிறுநீர்ப் பாதையை (Urether) அடைத்துவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும். சிறுநீர் வெளியேறாது. இது பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். இதைத்தவிர, இந்தக் கற்கள் சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பை போன்றவற்றின் உட்புறத்தில் புண்களை உண்டாக்கி தொற்றுக்கிருமிகள் எளிதாக வேலை செய்ய உதவுகின்றன.
iv.இதற்கு இப்பொழுது பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. முக்கியமாக அல்ட்ரா ஒலி முறை (Ultra Sound Method) கற்களின் அளவைப் பொறுத்து அவற்றைத் தூள் தூளாக்கி வெளியே கொண்டுவந்துவிடுகிறார்கள். அறுவை சிகிச்சை எதுவும் தேவை இல்லை! சிறுநீர்க்கற்கள் பெரிய அளவில் இருந்தால் அறுவை சிகிச்சை தேவை.
நீங்கள் செய்யவேண்டியது, சிறுநீரகத்தில் சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் டாக்டரை உடனே பார்க்கவேண்டும். மற்றவற்றை டாக்டர் பார்த்துக்கொள்வார்!
சிலபேருக்கு, கற்களை ஒரு தடவை அகற்றினாலும், அது மீண்டும், மீண்டும் வரலாம். இதற்கு பாரா தைராய்டுவைப் பரிசோதிக்க வேண்டும். நீரை நிறைய அருந்தவேண்டும்.
Back to top Go down
 
About Baby Habits
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
»  Baby Boy or Baby Girl???
» ~~Few Bad Habits That Are Good For You~~
» ~~Sleeping Habits~~
» 10 habits of a loving couple
» FORMING GOOD HABITS

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: TAMIL SONGS-
Jump to: