BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inதூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? Button10

 

 தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? Empty
PostSubject: தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?   தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா? Icon_minitimeWed May 12, 2010 12:29 pm

தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?



தூக்கமின்மை எனப்படும் நோய் ஆங்கிலத்திலே insomnia எனப்படுகிறது.இது வயதானவர்களினிடையே

காணப்படும் ஒரு பொதுவான பிரச் சினை யாகும்.நான்கு வெவ்வேறு விதமான முறைக ளிலே இந்த நோய் வெளிக்காட்டப்படலாம்...

*படுக்கையில் கிடந்தாலும் நித்தி ரைக்கு செல்ல முடியாமை *அடிக்கடி நித்திரை குழம்புதல் *சரியான அளவு தூங்காமல் அ

திகாலையிலேயே எழுந்துவிடல் *நித்திரை கொண்டாலும் திருப்தியான நித்திரையின்மை

இந்தப் பிரச்சினை வேறு விதமான நோய்களோடு கலந்து காணப்படலாம். உதாரணமாக மன நோய்கள், நோவினை ஏற்படுத்தும் நோய்கள் போன்றவை. இவ்வாறு வேறு விதமான நோய்களோடு இருப்பவர்களுக்கு இந்த நித்திரையின்மை பிரச்சினை ஏற்படுமானால் இது வெறுமனே அந்த மன நோயாலோ அல்லது மற்றைய நோயினால் ஏற்படும் நித்திரையின்மை என்று விட்டு விடாமல் , நித்திரையின்மை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள்...வயது முதிந்தவர்கள் பெண்கள் விவாகரத்துப் பெற்றவர்கள் துணை இழந்து தனிமையில் இருப்பவர்கள் புகைப் பிடிப்பவர்கள் அதிகம் கோப்பி குடிப்பவர்கள் அதிகம் மது அருந்துபவர்கள் சில குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்பவர்கள்

இதற்கான தீர்வு என்ன ?

முதலாவதாக இந்தப் பிரச்சினை வேறு நோய்களோடு சேர்ந்து அல்லது வேறு நோய்களினால் (மன நோய் உட்பட) ஏற் படுமானால் அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு சரியான மருந்தளிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

சரியான தூக்கப் பழக்கத்தை மேற்கொள்ளுவது எப்படி!? ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லுவதற்கும் எழும்புவதற்குமான நேரத்தை ஒழுங்காக வரையறுத்துக் கொள்ளுங்கள் ஒழுங்கான உடற்பயிற்சி (இரவை அண்டிய நேரத்தில் தவிர்க்கவும்)பகல் நேரத்தில் பிரகாசமான வெளிச் சத்திலே இருக்கப் பழகுங்கள்.

இரவிலே பிரகாசமான வெளிச்சத்தை தவிருங்கள் நித்திரைக்குச் செல்லுவதற்கு முந்திய .. மணி நேரத்தில் அதிகம் கனமான சாப் பாடுகளை தவிருங்கள் தூங்கும் அறையை இருளாகவும், அமைதியாகவும், சுத்தமாகவும் வைத்திருங்கள் புகை மற்றும் குடியை தவிர்த்து விடுங்கள் நித்திரைக்கு முன் மனதை சாந்தப் படுத்தும் விடயங்களில் ஈடுபடுங்கள் மேற்சொன்ன வழிமுறைகளுக்கு

அடுத்ததாக உங்கள் நித்திரைப் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மாற்றப்பட வேண்டிய நித்திரைப் பழக்க பயிற்சி முறை...

படுக்கைக்கு சென்று சில நிமிடங்களில் தூங்க முடியவில்லை என்றால் உடனேயே அறையை விட்டு வெளியேறி, நித்திரை எண்ணத்தை விட்டு உங்க ளுக்கு பிடித்த வேறு ஏதாவது ஒன்றை செய்யுங்கள்(வாசித்தல் போன்றவை)

இவ்வாறு உங்களுக்கு பிடித்த வேலையை செய்யும் போது மீண்டும் படுக்கைக்குச் செல்லுங்கள். அவ்வாறு படுக்கைக்குச் சென்று மீண்டும் தூங்க முடியாவிட்டால் சில நிமிடங்களில் படுக்கையை விட்டு எழுந்து உங்களுக்கு பிடித்த வேறு வேலையில் கவனம் செலுத்துங்கள்.

படுக்கைக்கு சென்று சில நிமிடங்க ளிலே தூக்கம் வரும் வரை இதை திரும் பத் திரும்ப செய்யுங்கள். முக்கியமாக பகல் நேரத்தில் தூங்கு வதை தவிருங்கள். இப்படியும் உங்களால் இந்தப் பிரச்சி னைக்குத் தீர்வு காண முடியாவிட்டால் வைத்தியரை நாடி மருந்துகளை உட் கொள்ள வேண்டும்.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா?
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: HEALTH & BEAUTY SPECIAL-
Jump to: